புராணம் என்பது புராதனம். அதாவது பழைமையானது என்பதாகும். வேதங்களில் கூறப்பட்ட பொருட்களை எளிதில் தெரிந்துகொள்ள புராணங்கள் சிறந்த உதவியாக இருக்கின்றன. சமூக வாழ்வின் சில அடிப்படைத் தத்துவங்கள் புராணங்களில் கிடைக்கின்றன. புராணங்கள் யாவும் நமது முன்னோர்கள் நமக்கு கொடுத்துவிட்டு சென்ற மானுட வாழ்வியலில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளாகும்.

வேத வியாச மகரிஷிகளால் செய்யப்பெற்ற மகாபுராணங்கள் 18 ஆகும்.

1. பிரம்ம புராணம்.

2. பதும புராணம்.

3. விஷ்ணு புராணம்.

4. சிவ புராணம்.

5. பாகவத புராணம்.

6. நாரதீய புராணம்.

7. மார்க்கண்டேய புராணம்.

8. ஆக்னேய புராணம்.

9. பவிஷ்ய புராணம்.

10. பிரம்ம வைவந்த புராணம்.

11. லிங்க புராணம்.

12. வராக புராணம்.

13. ஸ்கந்த புராணம்.

14. வாமன புராணம்.

15. கௌமார புராணம்.

16. மச்ச புராணம்.

17. கருட புராணம்.

18. பிருமாண்ட புராணம்.

இந்த 18 புராணங்களில் காணப்படும் குணங்கள் மூன்று வகைப்படும்.

1. சிவனின் சிறப்பைக் கூறுவது தாமஸப் புராணம்.

2. பிரம்ம தேவனின் சிறப்பைக் கூறுவது இராசத புராணம்.

3. விஷ்ணுவின் சிறப்பைக் கூறுவது சாத்துவிகப் புராணம்.

மகாபுராணங்களுக்குத் துணையாக உப புராணங்கள், அதிபுராணங்கள் என்று ஒவ்வொன்றும் பதினெட்டு புராணங்கள் உள்ளன உபபுராணங்கள் முறையே:

ss

1. சனற்குமார புராணம்.

2. காந்த புராணம்.

3. நந்தி புராணம்.

4. நாரத புராணம்.

5. மாணவ புராணம்.

6. பிருமாண்ட புராணம்.

7. காளி புராணம்.

8. சாம்ப புராணம்.

9. சிவ தரும புராணம்.

10. துர்வாச புராணம்.

11. நரசிம்ம புராணம்.

12. கபில புராணம்.

13. ஔசந புராணம்.

14. வருண புராணம்.

15. மகேசுர புராணம்.

16. கௌமார புராணம்.

17. மாரீச புராணம்.

18. நாரதீய புராணம்.

அதிபுராணங்கள் 18 முறையே:

1. பார்க்கவ புராணம்.

2. முத்தல புராணம்.

3. விநாயக புராணம்.

4. ஆதி புராணம்.

5. மகா புராணம்.

6. தேவியின் சரித விரிவு.

7. கார்க்கப் புராணம்.

8. கல்கி புராணம்.

9. கிருஷ்ணாவதாரக்கதை.

10. வாகிஷ்டம்.

11. பசுபதி புராணம்.

12. விருத்தருமம்.

13. பிருகத் நாரத தீபம்.

14. பிஷ்யோத்தரம்.

15. பிருத்வாமணம்

16. சிவதருமோத்திரம்

17. பரானந்தம்

18. பிருகத்மாத்யைம்.

மேற்கண்ட புராணங்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு சமயப் பிரிவி னரால் எழுதப்பட்டவை. இவை தவிர தமிழில் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, இராமாயணம், மகாபாரதம் மற்றும் திருக் கோவில்களின் தலபுராணம் போன்றவையும் இதிகாச புராணங்களில் சேர்க்கப்படுகின்றன.

இந்த பதினெட்டு புராணங்களில் பத்து புராணங்கள் மகேஸ்வரனைப் பற்றியும், நான்கு விஷ்ணுவைப் பற்றியும் இரண்டு பிரம்மாவைப் பற்றியும், ஒன்று அக்னியைப் பற்றியும், ஒன்று சூரியனைப் பற்றியும் கூறப் பட்டுள்ளன.

தலைசிறந்த புராணமாக கருட புராணம், அக்னி புராணம், நாரத புராணம் கருதப் படுகின்றன. புராணங்கள் எல்லாம் கி.பி. 600 ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட வையாகும்.

இப்புராணங்களில் அரச நீதி, ஜோதிடம், ஆயுர்வேதம், தர்மசாஸ்திரம், மகாமந்திரங் கள், வைதீக பூஜை முறைகள், விரத மகிமை கள், மீண்டும் பிறவாமை, ஞானம், பக்தி, யோகம், வேதங்கள், வேதாந்த கருத்துகள், தேவியின் மகிமை, சிற்பக் கலைகள், தீவுகள், கடல், மலை, நதிகள், பகவானுடைய அவதாரக் கதைகள், மூதாதையர்களுக்கு நன்றி தெரிவித்தல், என்று எல்லாவிதமான மனித ஒழுக்கமுறைகள் பற்றி முழுமையாகத் தெரிவிக்கப் பட்டுள்ளன.

பொதுவாக இன்றைய நவீன காலத்தில் மக்கள் இதையெல்லாம் கேட்பது மில்லை; படிப்பதுமில்லை. இதில் உள்ளவற்றைத் தெரிந்துகொள்ளவும் விருப்பமில்லை. இருந்தா லும் கோவில், பொது இடங் களில் பாமர மக்கள் தெரிந்துகொள்ளும் பொருட்டு, ஆங்காங்கே ஆன்மிக சொற்பொழிவு கள், பக்திக் கதைகள், மகாமந்திரங்கள், பூஜைகள் நடைபெற்றுகொண்டு தான் இருக்கின்றன. என்ன நடந்து என்ன பயன்? மக்கள் ஒருசிலரே இதில் கலந்துகொள்கின்றனர்.

பக்தி குறைந்துவிட்டது. பல தரப்பட்ட குற்றங் கள் மலிந்துவிட்டது. பணம் ஒன்றையே குறிக் கோளாகக்கொண்டு, பணம் ஈட்டுவதிலேயே கவனமாக இருக்கின்றனர். பணத்தின் முன்னே நீயென்ன? நானென்ன? கடவுள் என்ன? "போடா போ' என்று போகின்றனர்.

மணிக்கணக்காக கைபேசி, தொலைக் காட்சி, கணினி என்று பொழுதைக் கழிக் கின்றனர். இவற்றில் எல்லாம் எதிர்மறைகள் எத்தனையோ காட்டப்படுகின்றன. இவைகளை இரவு- பகல் பாராமல் பார்த்துக் கேட்டு இன்புறும் இவர்கள், இதே நவீன இயந்திரங்களில் காட்டப்படும் தெய்வீக விஷயங்களைப் புறக்கணித்து விடுகின்றனர்.

இன்றைய காலகட்டத்தில் தெய்வீக சிந்தனை கள் குறைந்து தவறான வழிகளில் பயணிக் கிறார்கள்.

புராணங்களில் கூறப்பட்ட நல்ல கருத்து களை தொலைக்காட்சியில் வரும் "சீரியல்கள்' சொல்லாது. "பிக்பாஸ்' போன்ற இன்னும் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் பகவத் விஷயங்களைக் காட்டாது. மாறாக எதிர்மறைச் செயல்கள், செய்திகள் என்று ஏராளமாக உள்ளவற்றைக் காட்டுகின்றன.

தயவுசெய்து நன் மக்களே புராணங் களைப் படியுங் கள். அதில் சொல்லப் பட்ட இறைபக்தி, ஞானம், யோகம், வேதம், வேதாந்த கருத்துகளைத் தெரிந்து அவற்றை வாழ்க்கையில் கடைப் பிடியுங்கள். நல்ல ஆச்சாரம், தெய்வ பக்தி, பொது அமைதி, தன்னலமின்மை, தன்னம்பிக்கை, நாட்டுப்பற்று முதலிய பண்புகளையும் நம் பண்பாடு, கலாசாரம் போன்றவற்றையும் அறிந்து தெரிந்து நடந்துகொள்ளுங்கள்.

நாடு நலமாக இருந்தால் நாம் நலமாக இருக்கலாம். தெய்வமும், தெய்வபக்தியும் ஒருபோதும் நமக்கு தீங்கு செய்யாது; மறந்து விடாதீர்கள்.