"உயிர்.' ஒவ்வொரு உடலிலும் இந்த உயிர் இருக்கிறது. ஆனால் உருவம் இல்லாதது. இந்த உயிருக்கு உருவம் கொடுப்பது உடல். சிலபேர் சொல்வார்கள். "இந்த வீட்டை நான் கஷ்டப்பட்டு வாங்கினேன். நான் கஷ்டப் பட்டுப் படித்தேன். அதனால் தேர்ச்சிபெற்றேன். நான் கஷ்டப்பட்டு இந்த குடும்பத்தை நடத் திக்கொண்டிருக்கிறேன்'' என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் யாரும் "கஷ்டப்பட்டு இந்த உயிரைப் பெற்றுக்கொண்டேன்'' என்று சொல்கிறார்களா? என்றால் அப்படி யாரும் சொல்வதில்லை. ஏனென்றால் இது இறைவ னால் நமக்கு இலவசமாகக் கொடுக்கப்பட்ட பரிசு. எதையும் இலவசமாகப் பெற்றால் அதை யாரும் மதிக்கமாட்டார்கள்.

aa

ஒருவர் தனது நண்பருக்கு ஒரு புத்தகத்தை இலவசமாகப் படிக்கக் கொடுத்து படித்துப் பார்க்கச் சொன்னார். நண்பரும் அதை வாங்கிக்கொண்டுபோனார். ஆனால் படிக்கவுமில்லை. ஏன்? அதைப் பிரித்துக்கூட பார்க்கவில்லை. அப்படியே தூக்கிப் போட்டு விட்டார். அதேசமயம் அவர் ஒவ்வொரு நாளும் செய்தித்தாளை காசு கொடுத்து வாங்குவார். அதைப் படித்து முடித்துவிட்டு பத்திரப்படுத்தி வைப்பார். கொஞ்ச நாட்களுக்குப்பிறகு மொத்தமாக எல்லா வற்றையும் பழைய பேப்பர் வியாபாரிக்கு விலைக்குப் போட்டுவிட்டு காசு பார்ப்பார். அந்த இலவசமாக் கிடைத்த புத்தகத்தையும் விலைக்குப் போட்டுவிடுவார். புத்தகம் இலவசமாகக் கிடைத்ததால் அதை ஒதுக்கி விட்டார். அதேசமயம் செய்தித்தாளை காசு கொடுத்து வாங்கியதால் அதைப் பத்திரப் படுத்திக்கொண்டார். ஆக இலவசமாகக் கிடைப்பதை யாரும் மதிப்பதில்லை. அப்படித் தான் இந்த உயிரும், உடலும் இலவசமாகக் கிடைத்ததால் இதை யாரும் மதிப்பதில்லை.

இந்த உடல் இருக்கிறதே இது ஒரு இயந்திரம். பிறந்ததுமுதல் இறக்கும்வரை இந்த இதயம் துடித்துக்கொண்டே இருக்கிறது. அதேபோல் மூச்சுக்காற்றும் உள்ளே போவதும் வருவதுமாக இயங்கிக் கொண்டே இருக்கிறது. எதை சாப்பிட்டா லும் வயிறு ஜீரணித்துவிடுகிறது. சிறுநீரும், மலமும் தானாக வெளியேறி விடுகிறது. இந்த இயக்கங்களில் ஒன்று சரியாக அதன் வேலையைச் செய்யாவிட்டால் மனிதன் ஆடிப்போகிறான். எனவே இந்த உடலைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். எப்படியெல்லாம் இந்த உடலை வளர்க்க வேண்டும் என்பதற்கு வேத சாஸ்திரங்கள் ஒவ்வொருன்றும் வெகுவாக சொல்லி இருக்கின்றன. ஆனால் அதையெல்லாம் யார் தெரிந்துகொள்கிறார்கள். அல்லது கடைப்பிடிக்கிறார்கள்.

Advertisment

இந்த உடம்பு ஒரு கோவிலைப் போன்றது.

"தேஹோதேவாலய: ப்ரக்தோஜீவ ப்ரோக்தோ ஸநாதன'' என்கிறது வேதம்.

அதாவது உடல் என்பது ஒரு ஆலயம். அந்த ஆலயத்துக்குள் இருக்கின்ற உயிரானது "ஈஸ்வர ஸ்வரூபம்.' அதாவது ஈஸ்வரன் என்ற இறைவன் இருக்குமிடம் எப்பொழுது நமது உடலுக்குள் இறைவன் இருக்கிறானோ, நாம் சில நல்ல ஒழுக்கங்களையும், தூய்மை யையும் கடைப்பிடிக்கவேண்டும். நாம் எப்படி ஒரு கோவிலுக்குள் செல்லும்போது சுத்தமாகச் செல்கிறோமோ அதுபோல நமது உடலையும் நாம் சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும். ஊசிப்போன பழைய உணவுகளை உண்ணக்கூடாது. மாமிசத்தைத் தவிர்ககவேண்டும். புகையிலை, பீடி, சிகரெட், மயக்க தரும் வாசனைப் பாக்கு, போதைப் பொருட்கள், மது அருந்துதல் போன்ற ஈனப்பழக்க வழக்கங்களை வைத்துக் கொள்ளக்கூடாது.

Advertisment

இதுதவிர ஆச்சார அனுஷ்டானங் களுடன் இருக்கவேண்டும். இந்த ஆச்சார அனுஷ்டாங்களுடன் முன்னோர்கள் சொல்லிவைத்த மந்திரத்தை ஓதி இறைவனை துதித்தால் அந்த மந்திரசக்தி நமது உடலில் பரவி நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கும். நோயற்ற வாழ்வு வாழலாம். செல்வச் செழிப்பு டன் இருக்கலாம்.

இந்த ஆச்சார அனுஷ்டானங்களை விடாமல் கடைப்பிடிப்பதால், "தேஜஸ்' என்று சொல்லக்கூடிய அபார சக்தி உடல் முழுவதும் பரவும். அவர்கள் தொடுகின்ற பொருட்களிலெல்லாம் அந்த மந்திர சக்தி படியும். அதனால் இவர்கள் அனாவசியமாக பிறர் தங்களைத் தொட அனுமதிக்கக்கூடாது. அப்படி தொடுவதால் அவர்களுடைய உடல்மீதான உள்ள மந்திர சக்தியை பாதிக்கும்.

அந்த மந்திர சக்தியின் மகிமை குறையும்.

ஆகவே இப்படிப்பட்டவர்களை சாதாரண மனிதர் தொடக்கூடாது. தூர நின்றே பேச வேண்டும். தூரமாக நின்றே அவர்களிட மிருந்து எந்தப் பொருளையும் பெறவேண்டும்.

இதற்கு "மடி' என்ற மற்றொரு பெயரும் உண்டு. ஏனென்றால் அவர் உடுத்துகின்ற உடையிலும் அந்த மந்திர சக்தி படிந்துவிடும். அதனால்தான் அவர்கள் உடுத்துகின்ற உடையைக்கூட அவர்களே துவைத்து, உலர்த்தி அவர்கள் உடுத்திக்கொள்வார்கள். இப்படி உடுத்தும் உடைகளுக்கு "மடித்துணி' என்று பெயர். இப்படி மடித்துணி உடுத்தி மந்திர ஜெபம் செய்துவரும் சாதகர்களைச் சாதாரண மனிதர்கள் தொடக் கூடாது என்பது சாஸ்திரம். அப்படித் தொட்டால் அவர்கள் சேர்த்துவைத்திருந்த மந்திர செறிவானது அசுத்தமாகி பாதிப்படைந்து அவரது மன ஓட்டத்தைப் பாதித்து, செயல்களில் குழப்பம் ஏற்படுத்திவிடும்.

மந்திர ஜெபம் பூஜை செய்பவர்கள் தங்களுடைய செயல்களின்மூலம் மிக உயர்ந்த இறைவனைப் பற்றி அறிந்து, தங்களது மனநிலையை சுலமாக அடைகிறார் கள். இதற்காகத்தான் ஆச்சாரங்களும், அனுஷ்டானங்களும் ஏற்படுத்தப்பட்டிருக் கிறது.

இதை சான்றோர்கள் உபதேசமாக சொல்லி இருக்கிறார்கள். சான்றோர்கள் என்றால் நல்லவர்கள், உத்தமமானவர்கள், தனிமனித ஒழுக்கத்தில் தலைசிறந்தவர்கள், உயர்ந்த குணங்களை தன்னகத்தே கொண்டவர்கள். சிறந்த சிந்தனையாளர்கள் என்று அர்த்தம். எல்லாவற்றையும்விட எந்த ஒரு நல்லத்துக்கும் சான்றாக இருந்து அதை நிலைநிறுத்தியவர்கள் என்பதால் இவர்களைச் சான்றோர் என்கிறோம்.

எனவே சான்றோர்கள் சொல்லிவிட்டுப் போனவற்றைக் கடைப்பிடித்து தனிமனித ஒழுக்கத்துடன் நாமும் வாழ்ந்து காட்டி இறைவன் அருளைப் பெறுவோம்.