போர்ப் பயிற்சியில் செழுமைப் படுத்தப்பட்ட படையே செம்படை. மன்னர், பட்டத்தரசியார், இளவல், இளவரசியர் ஆகியோரின் உடலுக்கோ, உயிருக்கோ சிறிதளவும் தீங்கு விளைந்துவிடாதவாறு, தங்களது விழியைப்போல் இப்படையினர் பாதுகாப்பார்கள். ஒருவேளை மன்னவனுக்கோ, மன்னவர் குடும்பத்திற்கோ ஏதேனும் தீங்கு நேர்ந்துவிட்டால் தங்கள் உயிரையே மாய்த்துக்கொள்வார்கள்.
இச்செம்படை வீரர்கள், போர்க் காலங்களில் மன்னவன் செல்லும் பட்டத்து யானையைச் சுற்றிலும் விழிப்புடன் சூழ்ந்திருந்து பாதுகாப்பார்கள். மன்னவன் பயன்படுத்தும் பட்டத்து யானையானது குட்டியாக இருந்த காலத்தில், மன்னர் நடந்து விளையாடும் வயதிலிருந்தே, அவருடன் பழகி விளையாடும்படி, இருவருக்குமான நெருங்கிய நட்புடன், இருவருக்கும் சேர்த்தே குருமடத்தார் பயிற்சியளிப்பார்கள்.
அந்தக்குட்டி யானையைப் பிறர் நெருங்கி அணுகாதவாறு பார்த்துக்கொள்வர். மன்னவன் வளரவளர யானையும் வளர்ந்துவரும்.
இவ்வாறு குருகுலத்தில் பயிற்சிதரும் யானைகளை பலவகையாகப் பகுத்து வைத்துள்ளனர். பட்டத்து யானை, போர்புரியும் யானைகள், காட்டையழித்து சீர்படுத்தும் யானைகள், விவசாயத்திற்குப் பயன்படுத்தும் யானைகள், கோவில் திருவிழாக்களில் பயன்படுத்தப்படும் யானைகள் என பலவகைப் பயன்பாட்டிற்கு, அவற்றின் குணங்களையும் உருவ அமைப்பினையும் வைத்துப் பிரித்துவளர்த்தனர்.
இவற்றில் பட்டத்து யானைகளுக்கு அறிவுநுட்பம், ஞாபகத்திறன், உடல்வலிமை, எதைக்கண்டும் அஞ்சாமை, உடல் உயரம் ஆகியவற்றில் உச்சபட்ச வளர்ச்சியடையும் அளவுக்கு, தனிப்பட்ட முறையில் இளவலோடு சேர்ந்தே பயிற்சிதருவர். இப்பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளர்கள், பல வெற்றிப் போர்களில் பங்கெடுத்தவர்களாகவும், பயிற்சிதருவதில் வல்லவர்களாகவும் இருப்பர். இதில் அனுபவச்செறிவு மிக்கவர்களைக்கொண்டு, யானையின் திறமையானது அவ்வப்போது சோதிக்கப்படும். மன்னவருக்கு சிக்கலான தருணங்களிலெல்லாம் அவரைக் காப்பாற்றும் உத்திகள் கற்றுத் தரப்படும்.
இப்பயிற்சியில் செம்படைத் தலைவரும் சேர்ந்தே பயிற்சி பெறுவார். போர்க் காலங்களில் இவர்தான் யானையைச் செலுத்தும் பாகனாக இருந்து, மன்னவனுக்கு நெருக்கமாக போர்முடியும் காலம்வரை இருப்பார். இவர், பெரும்பாலும் மன்னவனின் தாய்மாமனுடைய தலைமகனாகவே இருப்பார். ஒரு செம்படைத் தலைவனின் தலைமகனுடைய தலைமகன் என்ற முறையிலேயே செம்படைத் தலைவர்கள் பட்டமேற்பார்கள். இவ்வாறாக, ஒரு செம்படைத் தலைவனின் தலைமகனது பதின்வயது நிறைந்த பருவத்தில், யாருடைய உயிரைக் காக்க இருக்கின்றானோ அவரது- அதாவது பட்டத்து மன்னவனின் அரச சின்னத்தை, அவனது முதுகில் பச்சை குத்திக்கொள்வான். பிறகு, அவன் மன்னவனுக்கான செம்படைத் தலைவனாகப் பதவியேற்கும் நிகழ்வு ஒரு பெருவிழாவாக நடைபெறும். அந்நிகழ்வு, போர் தெய்வமான கொற்றவை தெய்வத்தின் முன்பாக நடைபெறும். அத்தருணத்தில், அவன் தனது வாளால் தன் இடது கையில் கீறி ரத்தம் வழியும்போது, அதனைக் கொற்றவையின் நெற்றியில் வழிந்தோடவிட்டு, ஒரு சூளுரை செய்வான். "என் உயிரைக் கொடுத்து எம் மன்னவனின் உயிரைக் காப்பேன்.
அவரது நிழலுக்குள் இருக்கும் நிழலாக இருப்பேன். என் உயிருக்குள் இருக்கும் உயிராக மன்னவனின் உயிரை நேசிப்பேன்'' என்பான். இச்சூளுரை நிகழ்த்தும்போது, செம்படையைச் சேர்ந்த அனைவருமே, கொற்றவையின் முன்பிருக்கும் மன்னவனைச் சூழ்ந்து, தங்களது ரத்தத்துளிகளை மன்னவனின் பாதங்களில் வார்த்து சூளுரை ஏற்பர். ஆகவே, மன்னவன் செல்லும் பயணத்தின்போதும், போருக்குச் செல்லும்போதும், மன்னவனின் பட்டத்து யானையைச் சூழ்ந்து இச்செம்படை வீரர்கள் இருப்பர்.
சிறுவயதுமுதல் இளவலோடு குட்டி யானையை வளர்த்து வந்தமையால், அக் குழந்தையின் குரல்கேட்டு அடிபணியும்படி உணர்த்திவருவார்கள். குருகுலத்தில் யானைகளை அவற்றின் அங்க அமைப்பைக்கொண்டு பலவகையாகப் பகுத்துக் கூறியுள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/elephant_12.jpg)
அவை பின்வருமாறு:
களிறு: முழுமையாக, உடல் முழுமை யும் கருமை நிறத்துடனும் முரட்டு சுபாவத் துடனும் உள்ள யானைகளை சங்க காலத் தமிழர்கள் களிறு எனப் பெயரிட்ட ழைத்தனர். இவ்வகை யானகளை, கோட்டைக் கதவுகளை முட்டி உடைக்க வும், காட்டு யானைகளைப் பிடித்து வரவும் பயன்படுத்தினர்.
புகர்முகம்: முகத்தில் மட்டும் வெண் புள்ளிகளோ, வெம்மையோ படர்ந்திருந் தால், அவ்வகை யானைகளை புகர்முகம் என்றழைத்தனர். இவற்றை, அரண்மனைக் கும் கோவில் திருவிழாக்களுக்கும், ஆறுகளிலிருந்தும் காவல் கிணறுகளிலிருந்தும், குடிநீர்க் குடங்களை சுமந்துவரப் பயன்படுத்தினர்.
கயவாய்: பெரிய அகன்ற வாயை உடையதும், அகன்ற, ஆனால் குட்டையான தந்தங்களை உடையதுமான யானைகளைக் கயவாய் என அழைத்தனர். இவற்றை பெரிய கட்டுமரங்களை வெட்டி இழுத்துவருவதற் கும், பெரிய கோவில் தேர்களை முட்டி நகர்த் துவதற்கும், கோவில் மற்றும் அரண்மனை கட்டுமானப் பணிகளின்போது நீண்ட கற்களை முட்டி உருட்டுவதற்கும் பயன் படுத்தினர்.
பிடி: ஒரு கைப்பிடி அல்லது இரு கைப் பிடியளவு நீளம் மட்டுமே உடைய தந்தங் களைக்கொண்ட பெண் யானைகளுக்குப் பிடி என்று பெயர். இவற்றை, நாட்டு யானை களின் இனப்பெருக்கத்திற்கும், அரச குடும்பத்துப் பெண் பிள்ளைகளை சுமந்துவருவதற்கும், விவசாய வேலைகளில் நெற்போர் அடிப்பதற்கும், பெருங்கால்வாய் மண்திரள் உருவாக்குவதற்கும் பயன் படுத்தினர்.
வேழம்: இவை காடுகளில் மூங்கில் களையும், யானைப் புற்களையும் மட்டுமே விரும்பியுண்ணும் பழக்கமுடையவை. இவற்றின் தந்தங்கள் நீண்ட மூங்கிலைப் போல் சீராகவும் கூர்மையுடையதாகவும் இருக்கும். இவ்வகை யானைகளுக்கு வேழம் என்று பெயர். இவற்றிற்கு போர்க் காலங்களில் எதிரிகளின் உடலைக் குத்திக்கிழிப்பதற்கு பயிற்சி தரப்படும். இவை கொம்புகள் கூர்மையாகச் சீவப்பட்டு, குத்தும் தன்மையுடைய கூரிய உலோகக் கவசங்கள் பொருத்தப்பட்டு, போருக்கு அனுப்பப்பட்டன.
ஒருத்தல்: மிகமிக அதிக வலிமை யையும், அகன்ற முதுகினையும், புத்திக் கூர்மையையும், முரட்டுத்தனமும், எதைக் கண்டும் மிரளாத தன்மையையுமுடைய யானைக்கு ஒருத்தல் என்று பெயர். காட்டு யானைகளை விரட்டுவதற்கும், கானகங்களின் வழியே செல்லும் பெருவழிப் பாதைகளில் பயணம் செய்யும்போதும், இவற்றின் முதுகில் பெரிய வீடுபோன்ற மரத்தால் அல்லது கல் மூங்கிலால் செய்யப் பட்ட அம்பாரியின்மீது நான்கு அல்லது ஐந்து நபர்கள் உட்கார்ந்து மழைக் காலங்களில் பாதுகாப்பாக செல்வதற்கும் பயன்படுத்துவர். இவ்வகை யானைகள் இடி, மின்னல், மழைபோன்ற இயற்கை சீற்றங்களுக்கு அஞ்சாது. மேலும் புலி, சிங்கம், கழுதைப் புலிகளுக்கும் அஞ்சாமல், அவற்றை விரட்டியடிக்கும் தன்மை யுடையவை.
கயமுனி: இவ்வகை யானைகள் அதிக சினம் கொண்டவை. தன்னைத் துன்புறுத்திய வர்களை, பல நாட்களானாலும் நினைவில் வைத்திருந்து, தாக்கிப் பழிதீர்க்கும் குணமுடையவை. தன்னைத் தொடர்ந்து துன்புறுத்தினால் யானைப் பாகனைக்கூட விடாது. எனவே, கோட்டைக்குள்ளேயோ, நகரங்களுக்குள்ளேயோ, மக்கள் நெருக்க முள்ள திருவிழா நடைபெறும் இடங் களுக்கோ இவ்வகை யானைகளை விட மாட்டார்கள். போர்க் காலங்களில் சுமை தூக்கிகளாக கோட்டைக்கு வெளியேதான் பயன்படுத்துவார்கள்.
கயந்தலை: மிகப்பெரிய வலிமை மிகுந்த தலையினை உடைய யானைகளுக்கு கயந்தலை என்று பெயர். கோட்டைக் கதவுகளை எதிரிகள் திறக்க முற்படும்போது, கதவுகளைத் திறக்கவிடாமல், கதவு களில் முட்டிநிற்பதற்கு இவை பயன் படுத்தப்பட்டன. பெரிய அளவிலான கட்டுமானங்கள் நடைபெறும்போது, அவை சரிந்து விழாமல் முட்டிநிறுத்தவும் பயன்படுத்தினர். கோவில் கோபுர கட்டுமானப் பணியின்போது இவை அதிகம் பயன்பட்டன. திருவிழாக்களின்போது, அகன்ற நெற்றியை அலங்கரித்து, முன் வரிசையில் ஊர்வலமாக வருவதற்கும் பயன்படுத்தினர்.
பொங்கடி: இவற்றின் கால்களும் பாதங்களும் அகன்று பெரியனவாக இருக்கும். இவை காடு மலைகளின் வழியே, இரண்டு தலைநகரங்களையோ அல்லது துறைமுகங்களையும் தலைநகரங்களையும் இணைக்கின்ற பெருவழிப் பாதைகளிலோ, இவற்றை சுமைதூக்கி நடக்கச் செய்வார் கள். இவை நடந்துசெல்லும் பாதைகளில் தேர்களும் ரதங்களும் குலுங்காமல் செல்லுமளவுக்கு பாதை சீராக அமையும்.
மதமா: அடிக்கடி மதம்கொள்ளும் யானைகளுக்கு மதமா என்று பெயர். எதிரிநாட்டு ஊர்களுக்குள் எல்லைதாண்டி விட்டுவிட்டு, எதிராளிகளைக் கலங்கடிக்கச் செய்வார்கள்.
உம்பல்: இவை மிக உயரமாகவும், மிக வலிமையாகவும், புத்திக் கூர்மை யுடனும் இருக்கும். இவ்வகை யானைகளையே பட்டத்து யானையாக ஆக்குவதற்கு பயிற்சியளிப்பார்கள். இது சோம்பலற்ற தன்மையுடையதாய் விளங்கும். மேலும், எத்தனை நாள் நடைப்பயணம் மேற்கொண்டாலும் தளர்வடையாமல் செல்லும். பெரிய மரங்களையும் எளிதாகப் பிடுங்கியெறியும் வல்லமையுடையதாக இருக்கும். எதிரிகளின் யானைகள் முட்டினா லும் அசையாமல் வலிமையாக நிற்கும். இவை, பிற யானைகளையும் தேர்களையும் எளிதாக முட்டிச் சாய்த்துவிடும். தன்மீதிருக்கும் தலைவனை யாரும் நெருங்கவிடாமல் சுழன்றடிக்கும். மிக விரைவாக ஓடி எதிரியைப் பிடித்துவிடும். ஆகையால், போர்களில் அரச குடும்பத்தினருக்கு இவ்வகை யானைகளுக்குப் பயிற்சிதந்து கொடுப்பார்கள்.
வாரணம்: வெண்ணிற மருப்புகளையும், கடல் இரைவதுபோல் பலவிதமான ஒலி களையும் எழுப்பும் தன்மையுடையவை. இது யானைப் பாகன்களோடு நன்றாகப் பழகி, அவர் களோடு பேசும். இதனால், பெரும்பாலும் கோவில் யானைகளாக நேர்த்திக்கடனுக்கு தானமாகக் கொடுப்பார்கள். புலவர்களுக்கும் தானமாகக் கொடுப்பார்கள். மங்கள கும்பக் குடங்கள் தூக்கி வரவேற்பு செய்ய பயன்படுத்து வார்கள். திருமணத்தின்போது மணமகன், மணமகள் போன்றோரை ஊர்வலமாகச் சுமந்துவர பயன்படுத்துவார்கள்.
மேலும் யானைகள் வலம்வரும்...
தொடர்புக்கு: 99445 64856
தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-12/elephant-t.jpg)