இளவலின் பிடி தளரத்தளர அவனது அம்மான் மகளின் பிடி இறுகி யது. தனக்குதான் அப்பொற்பெட்டகம் வேண்டுமென அதையெடுத்துத் தன் இரு கைகளாலும் நெஞ்சோடு அணைத் துக்கொண்டாள். அதைத் தனக்கெனக் கேட்டதால் ஏற்படும் விளைவுகள் என்னவென்றே உணராதவளாக இருந் தாள். சிறுதேர் உருட்டி விளையாடும் சிறுபருவத்திலிருந்தே இளவலின் பொருட்களைத் தனக்கென எடுத்துக் கொள்ளும் பழக்க முடையவளாக இருந்த வள், தற்போது அவளது செய்கையால் இளவ லின் இல்லற வாழ்க்கை யையும் தனக்கென எடுத்துக்கொள்கி றாள் என்பதை அறியாதவளாய் இதைச் செய்தாள்.
அதைக்கண்ட இளவலின் தாய்க் கும் தாய்மாமனுக்கும் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியை இந்நிகழ்வு ஏற்படுத்தியது.
மீனாட்சி திருக்கல்யாணமே சித்திரைத் திருவிழா!
ஆதி சங்ககாலத் தமிழகத்தில் குறிஞ்சி (மலையும் மலைசார்ந்த பகுதியும்), முல்லை (காடும் காடுசார்ந்த பகுதியும்), நெய்தல் (கடலும் கடல்சார்ந்த பகுதியும்) நிலங்களில் தலைவன்- தலைவி திருமணங்கள், பெரும்பா லும் களவியல்மூலம் நடந்ததாக சங்க இலக்கியங்கள் பதிவுசெய்துள்ளன. ஆனால், மருதநில (வயலும் வயல்சார்ந்த பகுதியும்) மக்கள் பண்பட்ட நகர நாகரிகத்தை உடையவர்களாக இருந்த மையால், கற்பியல் ஒழுக்க நெறிகளுக்கு முக்கியத் துவம் அளித்துவந்தனர்.
இதனால் மருதநில மன்னர்கள், தங்களுக்கு இணையாக இருக்கும் அரசகுலப் பெண்களைப் பெண்கேட்டுத் திருமணம் செய்யும் முறைகளை அதிக மாகப் பின்பற்றிவந்தனர்.
இதற்கு உதாரணமாக கன்னியா குமரி அருகே, சங்கத் தமிழ்ப் புலவர் ஔவையாரின் பள்ளிப்படை சமாதி இருப்பதாகக் கூறப்படும் "முப்பந்தல்' என்னும் இடத்தில் சேர, சோழ, பாண்டியர் மற்றும் பிற இனக்குழு மன்னர்கள் யாவரும் கூடி, தங்களுக்குள் பெண் கேட்டு, பெண் எடுக்கும் பழக்கத்தை வைத்திருந்தனர் என்பது, இன்றுவரை வாய் மொழித் தகவலாக உள்ளது. இவ்வாறு, இருவீட்டார் சம்மதத்துடன் நடக்கும் திருமணங்கள் பலநாள் சடங்குகளை உள்ளடக்கியதாகவும், அது பெரும் திருவிழா வாகக் கொண்டாடப்பட்டதாகவும் இருந் துள்ளன. இத்திருமண நிகழ்வுகளே தொன்று தொட்டு நினைவுகொள்ளும்விதமாக, மதுரையில் இன்றுவரையிலும் கொண்டாடப் பட்டுவரும் மீனாட்சி திருக்கல்யாணத் திருவிழாவானது, பல நாள் சடங்குகளோடு நடத்தப்பட்டுவருகிறது.
பாண்டியன், மருதநிலத் தலைவனாக இருந்தமையால்தான் மதுரையில் மட்டுமே இச்சடங்கு முறைகளோடு சார்ந்த திருமண திருவிழாவாக, சித்திரைத் திருவிழா கொண் டாடப்பட்டுவருகிறது. ஆகவே, தமிழ் மன்னர்களது திருமணங்கள் களவியல் வாயிலாகவும், கற்பியல் வாயிலாகவும் நடந்து வந்துள்ளன என்பதை அறியமுடிகிறது.
இயல், இசை, நாடக வடிவில் வள்ளி திருமணம்!
சங்க காலத்தில் ஒரு தலைவன், தலைவிக்கு இடைப்பட்ட அக வாழ்வியலை ஐந்து பிரிவு களாக, அவர்கள் வாழும் நில வகைகளை அடிப்படையாகக் கொண்டே பிரித்துள்ளனர். இந்தப் பிரிவுகளை அகத்திணைகள் எனக் கூறுகின்றனர்.
தலைவன், தலைவிக்கிடையே உருவாகும் முதல் காதல் அனுபவங் களையும், அவற்றால் ஏற்படும் இன்ப உணர்வு களைப்பற்றிக் கூறும் பாடல் பதிவுகளையும் குறிஞ் சித் திணை எனக் குறிப்பிட்டனர். அவை, தன் வாழ்வின் இறுதிவரையிலும் மறக்க முடியாத இன்ப அனுபவங்களைப் பெற்றதாகத் திகழும்.
இவற்றை, தெய்வத் திருமண வழிபாட்டு முறைகளில் வெளிப்படையாகக் காட்டினர்.
உதாரணமாக, களவியல் முறையில் குறிஞ்சி நிலத்தில் நடந்த திருமண விழாவாக முருகன்- வள்ளி திருமண விழா, அதனைச் சார்ந்த இயல், இசை, நாடக வடிவில் வள்ளித் திருமணம் என இன்றுவரை கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல், மருதநிலத் தலைவ னாக முருகப்பெருமானின் கற்பியல் திருமண நிகழ்வாக, திருப்பரங்குன்றத்தில் தெய்வானையோடு சேர்ந்த திருமண விழா இன்றுவரையிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
ஆதிகாலத் தமிழ்ப் பேரரசர்களின் திருமணத்தின்போது, என்னென்ன சடங்குகள் நடந்தனவோ, அத்தனையையும் தெய்வத் திருமண விழாவில் நடத்திவந்த வேளையில், காலப்போக்கில் அதில் ஆரிய கலாச்சாரங்களை உட்புகுத்தி, தற்போது சில மாறுபாடுகளை ஏற்படுத்தி விட்டனர். பல்லவர் காலத்திலும் பின்னா ளில் நாயக்க மன்னர்களின் ஆட்சிக் காலத்திலும்தான், அதிக மாற்றங்களை உடையதாக இவை மாறின.
இசையாக மாறிய மன உணர்வுகள்!
காதல் வாழ்வியலை குறிஞ்சித் திணையாகவும், அதில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளால் ஏற்படும் மன உணர்வுகளை துறைகளாக வும் பிரித்தனர். ஒவ்வொரு துறையிலும் ஏற்படும் மன உணர்வு களை அனைவரும் உணரும் வண்ணம் இசையாக மாற்றி, பாணர்கள் இசைத்து, மக்களை யும் மன்னர்களையும் மகிழ்ச்சிப் படுத்தினர். அவர்களை, கடந்த கால நினைவுகளில் மீண்டும் திளைக்கச் செய்தனர்.
இவ்வாறு அவர்களால் உருவாக்கப்பட்ட இசைக் குறிப்பு களுக்கு குறிஞ்சிப்பண் எனப் பெயரிட்டனர். இவற்றை வாசிக் கப் பயன்படுத்திய தந்தி அல்லது நரம்பிசைக்கருவிக்கு குறிஞ்சி யாழ் எனப் பெயரிட்டனர்.
பாணர்கள் இப்பண்ணை வாய்ப் பாட்டாகப் பாட, அதற்கேற்றாற்போல் குறிஞ்சியாழை பெண்டிர்கள் தங்கள் நீண்ட விரல்களால் நயம்சேர்த்து மீட்டுவர். இவ்வாறு விரல்களால் இசை மீட்டுபவர்களை விரலியர் எனப் பெயரிட்டு அழைத்தனர். இந்த இசைக் குறிப்புகளுக்கு ஏற்றாற்போல் கவிகளை உருவாக்குபவர்களுக்கு புலவர்கள் என்று பெயர். ஆதித் தமிழர்கள் ஆண்- பெண் பேதமற்று, இந்தப் புலமைத்துவத்தைக் கற்றுணர்ந்தவர்களாக இருந்தனர். மன்னர் களும் இதனைத் தெளிவுறக் கற்றவர்களாக இருந்தனர்.
குழந்தைகளுக்கு யாப்பிலக்கணம்!
ஒரு திணையில் பல்வேறுபட்ட துறைகளும், அவற்றை மனதால் உணர்ந்து அனுபவிக்க பல்வேறுபட்ட தமிழ்ப் பண்களும் உருவாக்கப்பட்டு, அவற்றை மறந்துவிடாமல் இருப்பதற்கு ஒரு வரையறுக்கப்பட்ட இலக்கணத்தையும் தமிழறிஞர்கள் உருவாக்கித் தந்தனர். இந்தத் தமிழிசை இலக்கணக் குறிப்புகளை யாப்பிலக்கணம் என பெயரிட்டு அழைத்தனர்.
இந்த யாப்பிலக்கணம் முழுவதுமே இசைக்குறிப்புகள்தான். இதையறியாமல், இன்றைய ஆய்வாளர்கள் பலர், தமிழிசைக் குறிப்புகள் எங்கேனும் இருக்கிறதா என மலைக் குகைகளிலும் பாறைகளிலும் தேடியலைகின்றனர்.
யாப்பிலக்கணத்தில் இருந்து தமிழ்ப் பண்களை, ஆதித் தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தினந்தோறும் கற்றுக்கொடுத்து வந்தனர். மருதநில நகர நாகரிகத்தில் இதற்கென ஆசிரியர்கள் இருந்தனர்.
அவர்களைத்தான் தற்போது இசை வேளாளர்கள் என்று அழைக்கின்றனர். இவ்வாறு தமிழ்ப் பண்களை மறக்காமல் இருப்பதற்காகவே, "ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்' என ஔவை கூறியுள்ளார். இங்கு "ஓதல்' என்றால் பண்ணிசைத்தல் என்று பொருள். இவ்வாறு ஒவ்வொரு திணைக்குமுள்ள துறைகள் சார்ந்த பண்களில் பயிற்சிபெற்ற பின்னரே, இலக்கண முறைப்படி சரியாக அசைகள் போட்டுக் கவிகள் எழுதமுடியும் என்பது ஆதித் தமிழ் மரபு.
இவ்வாறு சங்கப் புலவர்கள் யாவரும் தாங்கள் பயின்ற பண்களில் தெளிவுறக் கவிகள் படைக்கும் வல்லுநர்களாக விளங்கியுள்ள னர். எடுத்துக்காட்டாக, "குறிஞ்சிக்கு கபிலர்' என கபிலரைப் புகழ்வதிலிருந்து, குறிஞ்சித் திணையிலுள்ள துறைகள் சார்ந்த பண்களில் சிறந்த தேர்ச்சி பெற்றவராக கபிலர் இருந்துள்ளார் என்பது தெளிவாகிறது.
தமிழ்ப் பண்கள் புகட்டிய இல்லற தர்மம்!
இது அரண்மனைகளில் மட்டுமல்லாது கோவில்களிலும் இசைக்கப்பட்டது. இவ்விசையைக் கேட்கும் மக்களுக்கு நாகரிகமான முறையில் இல்லற தர்மங்களை உணர்த்தினர். நடனங்களின் வாயிலாகவும் இல்லறமென்றால் எப்படியிருக்க வேண்டுமென காட்டினர். இதனால்தான், "கோவிலில்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' எனக் கூறப்பட்டது. மேலும், இல்லற வாழ்வினில் தலைவனுக்கும் தலைவிக்குமிடையே உருவாகும் கூடல், ஊடல், இருத்தல், இரங்கல், பிரிந்து வாடுதல் போன்றவற்றால் ஏற்படும் மனப்பாங்கிற்கு ஏற்றாற்போல் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை போன்ற திணைகளாகப் பகுத்து, அவற்றுக் குள் பல துறைகளை உணர்த்தும் பண்களை தமிழினம் நன்குணர்ந்து உருவாக்கியிருந்தது.
பின்னாளில் இவை வேற்றுநில மன்னர் களின் படையெடுப்பாலும், ஆட்சி மாற்றத் தாலும் பிறமொழித் தாக்கத்தைப் பெற்று, தன்நிலை இயல்பில் திரிபடைந்துள்ளது. உதாரணமாக, தற்காலத்தில் தமிழ்நாட்டில் கர்நாடக சங்கீதத்தை உயிர்ப்பித்ததால், தமிழ்ப் பண்கள் நலிவடைந்து வருகின்றன. இது இன்றுவரையிலும் கோவில்களில் மட்டும் தமிழ் ஓதுவார்களால் உயிர்கொடுக்கப்பட்டு வருகிறது. இதனை, சிறந்த தமிழிசை ஆய்வாளர்கள்மூலம் மீட்டெடுத்தால், மீண்டும் மிக உயரிய நிலையை அடைந்து, தமிழ் உள்ளங்களோடு உறவாடி மகிழும்.
இவ்வளவு பெருமைவாய்ந்த ஆதித் தமிழ்ப் பண்களின் ஏழுவகை சுரங்களை யும், 23 வகை சுருதிகளையும் இளவலின் நெஞ்சத்தில் அம்மான் மகள் வாசித்தாள்.
இளவலின் திருமணச் சடங்குகளுடன் பிரவேசிப்போம்- வரும் இதழில்...
தொடர்புக்கு: 99445 64856
தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்