"குருர் ப்ரம்ஹா குருர் விஷ்ணு
குருர் தேவோ மஹேஸ்வர
குருஸ் ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம
ஸ்ரீ குருவே நம.'
பிரம்மா, விஷ்ணு மகேஸ்வரன் என்று கூறி, சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹார மூர்த்திகளாகச் சொல்கிறார்கள்.
ஒவ்வொருவரும் பிறவி எடுத்து, தம் கர்மாக்களை அனுபவிக்கிறார்கள். இந்த ஜீவன்களை, கர்மங்களி லிருந்து விடுவித்து மோட்ச பதத்தை தருவது நடராஜரின் குஞ்சிதபாதம். அதனால்தான் அந்த பதத்தை தூக்கிய திருவடி என்று மேன்மையாகக் கூறுகிறார் கள்.
நடராஜரின் நாட்டியத்திற்கு பஞ்சக்ருதிய பரமானந்த தாண்டவம் என்று பெயர். ஒரு கையில் அவர் பிடித்துக் கொண்டி ருக்கிற டமருகத்தின் சப்தத்தால் ஸ்ருஷ்டி உண்டாகிறது. அபய ஹஸ்தத்தினால் ஸ்திதி என்ற பரிபாலனம் செய்கிறார்.
இன்னொரு கையில் இருக்கும் அக்னியால் ஸம்ஹாரம் பண்ணுகிறார். முயலகனின் மேலே ஊன்றியிருக்கிற அவருடைய பாதத்தால் திரோதன க்ருத்யத்தை நடத்துகிறார். முடிவாக, குஞ்சிதபாதம் என்ற இடது திருவடியை தூக்கிக்காட்டி, இதை பிடித்துக்கொண்டால் அதுதான் மோஷா நுக்ரஹம் என்று தெரிவிக்கிறார்.
இத்தகைய பேரருள் தரும் சிவபெருமான் 108 தாண்டவங்கள் ஆடினார். சிவபெருமானின் நடனத்திற்கு தாண்டவம் என்று பெயர். இதனை நந்திதேவருக்கு கற்பித்தார். நந்திதேவர், பரதமுனிக்கு கற்பிக்க, அதன்மூலம் பரத நாட்டியம் உண்டாகியது.
சிவபெருமான் நடனம் ஆடுவதால்தான் இந்த உலகம் இயங்குகிறது என்றும், அனைத்து மக்களின் மாயையை நீக்கி, மோட்சம் கிடைப்பதற்காகவே சிவபெருமான் நடனம் ஆடுவதாக வேதங்கள் குறிப்பிடு கின்றன.
மேலும், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருள் ஆகிய ஐந்து தொழில்களையும் குறிக்கும்வண்ணம், ஆனந்த தாண்டவம், அசபா தாண்டவம், ஞான சுந்தர தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், பிரம தாண்டவம் என தாண்டவங்கள் உள்ளது.
நடராஜரின் நடனத்தால் சிறப்புபெற்ற திருத்தலங்கள் சிதம்பரம், மதுரை திருவாலங்காடு, திருநெல்வேலி, குற்றாலம் ஆகும். இது பொற்சபை, வெள்ளி சபை, ரத்தின சபை, தாமிர சபை, சித்திர சபை என அழைக்கப்படுகிறது.
நடராஜருக்கு ஒரு நாளைக்கு ஆறு முறையும், ஒரு வருடத்திற்கு 6 முறையும் அபிஷேகம் செய்யப்படும்.
ஆனி மாதம்- உத்திர நட்சத்திரம்
மார்கழி- திருவாதிரை
சித்திரை- திருவோணம்
ஆவணி- சதுர்த்தசி
புரட்டாசி- சதுர்த்தசி
மாசி- சதுர்த்தசி
என இந்த முக்கிய தினங்களில் அபிஷேகம் நடைபெறும். இந்த அபிஷேகங் களை காண முக்கோடி தேவர்களும் வருவதாக ஒரு ஐதீகம் உண்டு. அதுவும் ஆனி உத்திர அபிஷேகம் மிக விஷேசம். மா, பலா, வாழை மற்றும் அனைத் துக் கனிகள் வில்வதளம், பால், தயிர், பன்னீர், சந்தனம். மஞ்சள். கருப்பஞ்சாறு, வாசனைப்பொடி என அனேகவித பொருட்களைக்கொண்டு நடராஜருக்கு அபிஷேகம் நடக்கும். இதன்பொருட்டு, இது சார்ந்த பொருட்களை வழங்கும் போது, நமது தீவினை அகன்று, நிம்மதியும் செல்வமும் பெரும். சிவபெருமான் மனம் குளிரும்போது, நம்முடைய இல்லமும் வாழ்வும் பொலிவும் பெறும் என்பதில் ஐயமில்லை.
சிவபெருமான் ஒரு பிரம்படி வாங்கியபோது, உலக உயிர் மனிதர் அனைத்தும் அடி வாங்கியதாம். அது போல் சிவபெருமான், அந்த நடராஜர், அந்த ஆடலரசன், எம்பெருமான் மனம் குளிர்ந்தால், உலகமே மகிழ்ச்சி அடையும் அல்லவா!
ஆனி மாதம் 18-ஆம் தேதி, ஜூலை 2-ஆம் தேதி நடராஜர் அபிஷேகம் எனும் ஆனி திருமஞ்சனம் நடக்கிறது. அனைவரும் பங்குபெற்று, அவரின் அருள் பெறுவோம்.