சென்னை விமான நிலையத்தில் விஐபி மூவ்மெண்ட்ஸ் பி.ஆர்.ஓ ஆக கடந்த 26 வருடங்களாக நல்ல பெயர், புகழுடன் பணி ஆற்றிவரும் "ஏர்போர்ட் சுரேஷ்' என்று அனைவராலும் அன்போடு அழைக்கப் படும், பார்ப்பதற்கு தமிழ் டிவி சீரியல் நடிகர்போல் அழகு டன் பொலிவுடன் காணப்படும் சுரேஷ் அவர்களை சென்னை தாம்பரம் சோலையூர் இல்லத்தில் அவரது மனைவி பத்மபிரியா, ஒரே புதல்வர் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவரும் வெங்கட் ஷியாம் சுந்தர் மூவரும் பயபக்தியுடன் தங்கள் இல்ல பூஜையறையில் சாமி கும்பிட்டபிறகு சந்தித்து சுரேஷ் அவர்களிடம் பேசினோம்.

தங்கள்மூலம் வாழ்வில் எந்தெந்த தெய்வங்கள் எப்படி யெல்லாம் சோதனை நேரங்களில் அற்புதங்கள் நிகழ்த்தி காப்பாற்றி வாழ்வில் ஏற்றங்கள் தந்தது என்பதை விவரமாக பக்தி மெய்சிலிர்க்க உணர்ச்சி பொங்க கூறினார் ஏர்போர்ட் சுரேஷ்..

"எங்கள் குலதெய்வம் திருமுல்லை வாயில் பச்சையம்மன். கஷ்டங்களை அகற்றி காப்பாற்றிய இஷ்ட தெய்வமாக எங்கள் வீட்டு வாசலில் சிறுகோவில் போல் நாங்கள் அமைத்துள்ள விநாயகர், எங்கள் இல்ல பூஜையறை யிலுள்ள திருப்பதி வெங்கடாஜலபதி, முருகப்பெருமான், ஆஞ்சனேயர் என்று மேலும் பல தெய்வங்களை சொல்லிக் கொண்டே போகலாம். மதுரை பாண்டி முனியாண்டி என் மனைவியின் குலதெய்வம்.

aa

Advertisment

என் மனைவி பத்மபிரியா கடுமையாக தெய்வ விரதங்களை பல வருடங்களாகக் கடைப்பிடித்துவருபவர். எல்லா தெய்வங்களின் விஷேச நாட்களிலும் விரதம் இருந்துவருகிறார். ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு விரதம் இருப்பார். புரட்டாசி மாத சனிக் கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருப்பார். சிவ பெருமானுக்கு பிரதோஷ நாட்களிலும் முருகப் பெருமானுக்கு கிருத்திகை நாட்களிலும் விரதம் இருந்து வழிபட்டு வருகிறார். நான் பணிக்கு செல்வதால் அமாவாசை விரதம் மட்டும் கடைபிடித்து வருகிறேன்.

எங்கள் மகன் பதினைந்தாவது வயதில் திடீரென்று தண்ணீர் குடித்தால்கூட வாந்தி எடுத்து எந்த சாப்பாடும் சாப்பிடாமல் பட்டினியாக இருந்து படாதபாடு பட்டான். பல மருத்துவர்களிடம் காண்பித்தும், பல சிகிச்சைகள் தரப்பட்டும் அவன் சாப்பிடவே இல்லை. நானும் என் மனைவியும் பெரும் அதிர்ச்சியில் இதனால் மனம் உடைந்து போனோம். என் மனைவி, மகனுடன் ஒவ்வொரு வியாழன் அன்றும் கௌரிப்பாக்கம் சீரடி சாய்பாபா கோவில் மற்றும் என் மகன் படித்த பள்ளியின் அருகில் இருந்த சீரடி சாய்பாபா கோவில்சென்று பல வாரங்கள் மனம் உருக கண்ணீருடன் பிரார்த்தனை செய்ததால், சீரடி சாய்பாபாவின் அற்புத அருளால் என் மகன் மீண்டும் நல்லபடியாக சாப்பிட ஆரம்பித்து இப்போது இயல்பாக செயல்பட்டு கல்லூரி சென்று படித்துவருகிறான்.

எங்கள் மகனை சாப்பிட வைத்த சாய்பாபா அருள் கருணையை எங்களால் என்றுமே மறக்கமுடியாது. இப்போதும் நன்றியுடன் சீரடி சாய்பாபாவை வணங்கி வருகிறோம்.

Advertisment

நாங்கள் மூவரும் அமரர்கள் ஆகிவிட்ட எனது மற்றும் என் மனைவியின் பெற்றோர்களை வணங்கவும் தினமும் தவறுவதில்லை. அவர்களின் ஆசியும் எங்களை காவல் தெய்வங்களாக காப்பாற்றிவருகிறது.

என் மனைவியின் தீவிர தெய்வபக்தி பல நேரங்களில் பல விபத்துக்களில் இருந்து என்னை காப்பாற்றி உள்ளது.

நான் செல்லும் டூவீலர், கார் விபத்தில் பலத்த சேதம் அடைந்தது உண்டு. ஆனால் நான் மட்டும் சிறு காயங்களுடன் உயிர் தப்பிவிடுவேன். இதில் வியப்பான விஷயம் என்னவென்றால் நான் விபத்தில் சிக்கிய தகவல் என் மனைவிக்கு தெரிந்ததும் என் மனைவி சிறிதுகூட பதட்டமோ, பயமோ, அழுததுகூட கிடையாது. "நான் வேண்டும் தெய்வங்கள் என் கணவரை காப்பாற்றிவிடும்' என்று உறுதியாக கூறிவிட்டு எங்கள் இல்ல பணிகளை செய்ய துவங்கிவிடுவார்.

எனவே விபத்தில் இருந்து என் உயிரை காப்பாற்றிய தெய்வங்களுக்கு நன்றி கூறும்வகையில் எனது மற்றும் என் மனைவியின் குலதெய்வ கோவில் களுக்கும், மற்ற கோவில்களுக்கும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மூவரும் சென்று சாமி கும்பிட்டு வணங்கி வந்துவிடுவோம்.

என் மனைவியின் அக்கா லால்குடி பக்கம் அரண் மனைமேடு என்ற கிராமத்தில் இருக்கிறார். என் மனைவி ஒருசமயம் அக்கா வீட்டிற்கு செல்லும்போது பாத்ரூமில் தடுக்கி விழுந்துவிட்டார். கால் இரண்டிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிட்டது. இனி நடக்கவே பல மாதங்கள் ஆகுமே என்று நடுங்கிப் போனோம். என் மனைவியின் அக்கா சிறிதும் சஞ்சலமின்றி எங்கள் அரண்மனைமேடு காளியம்மனுக்கு புடவை சாத்துவதாக பிரார்த்தனை செய்துகொள். எந்த எலும்பு முறிவும் இல்லாமல் தனது அபார அருள் சக்தியால் காப்பாற்றி விடுவாள் என்று ஆவேசம் வந்து அருள்வாக்கு கூறினார். நாங்களும் அப்படியே காளி ஆத்தாவுக்கு வேண்டிக் கொண்டோம். சென்னை திரும்பி டாக்டரிடம் காண்பித்தபோது எலும்பு முறிவு ஏதுமில்லை என்று ஸ்கேன் செய்து கூறி வலி மாத்திரைகள் மட்டும் தந்து அனுப்பிவிட்டார். என் மனைவியின் அக்கா கிராமத்து காளியம்மன் அற்புத சக்தியை அற்புத அருளை நினைத்து மெய்சிலிர்த்து போனோம். நிச்சயம் ஐந்து லட்சம், பத்து லட்சம் செலவு செய்துதான் ஆபரேஷன் செய்துதான் எலும்பு முறிவை சரிசெய்ய முடியும் என்று பயந்துகொண்டு இருந்ததற்கு எந்தவித செலவும் இல்லாமல் அந்த கிராமத்து காளியம்மன் என் மனைவியை காப்பாற்றியதை எப்படி எங்களால் மறக்கமுடியும். அந்த கிராமத்து காளியம்மன் கோவிலுக்கு சில வாரங்கள் கழித்து சென்று புடவை காணிக்கையை வேண்டிய பிரார்த்தனைப்படி செய்துமுடித்து மனநிறைவோடு மகிழ்ச்சியோடு திரும்பினோம்.

என் மனைவி எங்கள் திருமணத்திற்குபிறகு இருமுடி கட்டி மேல்மருவத்தூர் சென்று மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி அருளையும், அருள்மிகு பங்காரு அடிகளார் அருளையும், அந்த கோவிலில் குடியிருக்கும் அதர்வண பத்திரகாளி அம்மன் அருளையும் பரிபூரணமாக வேண்டி வந்ததால் எங்களுக்கு மகன் பிறந்தான். எனவே, மேல்மருவத்தூர் தெய்வங்களின் அற்புதமான அருள் சக்திகளையும் எங்களால் என்றுமே மறக்கமுடியாது.

இப்போது எங்கள் தெய்வ பிரார்த்தனை என் மனைவி குடும்ப தலைவியாக பல பணிகளை நல்லபடியாக தொடரவும் எங்கள் மகன் படிப்பில் உயர்ந்ததற்கும் படித்துமுடித்து நல்ல வேலையில் சேர்ந்து நிறைய சம்பாதித்து வாழ்வில் உயர்ந்து நானும், என் மனைவியும் பெருமைப்படவும் எனது ஏர்போர்ட் பணியில் நான் மேலும் பல சிறப்புகளை பெறவேண்டும் என்பதுதான். எங்கள் வாழ்வில் ஆரோக்கியம், சந்தோஷம், ஐஸ்வர்யம், முன்னேற்றம் என்று ஏற்றம் தந்துவரும் எல்லா தெய்வங் கள் கோவில்களுக்கும் சென்று நன்றி கூற விரும்புகிறோம்.'

"ஏர்போர்ட் சுரேஷ்' அவர் மனைவி, மகனுடன் ஏற்றமிகு எதிர்கால வாழ்வை தெய்வங்கள் அருளோடு தொடர்ந்து பெற வாழ்த்தி விடைபெற்றோம்.

பேட்டி படங்கள்: விஜயாகண்ணன்