தாய் மாயம்மாள் என்னும் அபூர்வப் பெண் சித்தர் குறித்து இந்த இதழில் காண்போம்.

இவர் கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியில் வாழ்ந்தவர். பிறந்த இடம் நேபாளம் என்று சிலர் கூறுகிறார்கள். அவரது முகத்தோற்றமும் அவ்வாறுதான் உள்ளது. முதன்முத-ல் 1920-ஆம் ஆண்டில்தான் இவரை கன்னியாகுமரி பகுதியில் பார்த்ததாகக் குறிப்பிடுகிறார் கள். அதற்கு முன்னர் அவர் எங்கிருந்தார்- இங்கு எப்படி வந்தார் என்னும் விவரங் களெல்லாம் யாருக்கும் தெரிய வில்லை. பெரும்பாலும் கண்களை மூடியபடி கடற்கரையில் அமர்ந்திருப்பாராம். அங்கேயே படுத்துறங்வாராம். வெகு சாதாரணமான ஆடையையே அணிந் திருப்பார். அவர் கண்களைத் திறந்து பார்க்கும்போது, அவர் பார்வையில் படுபவர்களுக்கு மிகப்பெரிய பாக்கியம் கிடைக்குமென்பது அப்பகுதியிலிருந்த மக்களின் நம்பிக்கையாக இருந்தது.

சாதாரணமாகப் பார்க்கும் போது அவர் ஆணா- பெண்ணா என்பதுகூட தெரியாது. பொது வாகவே சில சித்தர்கள், ஞானி களைப் பார்க்கும்போது ஆண்பாலா பெண்பாலா என்று அறிந்துகொள்ளமுடியாது. சிலர் மூன்றாம் பாலினத்தவர்கள் போலவும் இருப்பார்கள். இத்தகைய ஒரு தோற்றத்தில்தான் இந்த அம்மையார் இருந்திருக்கிறார்.

Advertisment

rr

அவருடன் எப்பொழுதும் நான்கு நாய்கள் சுற்றிக்கொண்டிருக்குமாம். சித்திரைமாதக் கடும் வெயிலிலும் சுடுமணலில் வெறுங்காலுடன் சாதாரணமாக நடந்துசெல்வாராம். வெய்யிலில் பாறையின்மீது படுத்திருப்பாராம். கடலில் ஒதுங்கும் குப்பைகளை அள்ளிவந்து கைகளால் தேய்க்க, அவை தீப்பிடித்து எரியுமாம். இதைப் பலரும் பார்த்திருக்கி றார்கள்.

மிக அரிதாக, யாராவது ஏதேனும் கொடுத்தால் சற்று உண்பாரம். இவரைப் பற்றித் தெரிந்துகொள்ள எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன் 1980-களில் சென்றிருக்கிறார். (அவர் எழுதிய கட்டுரை சில ஆண்டுகளுக்குமுன் 'ஓம்' இதழில் பிரசுர மானது.)

மாயம்மாள் கடலில் சுமார் 30, 40 கிலோமீட்டர்கள் செல்வாராம். நீந்திச் செல்கிறாரா- நடந்துசெல்கிறாரா- உள்நீச்சல்மூலம் செல்கிறாரா என்பது தெரியாது. ஆனால் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் இவரைப் பார்த்திருக்கிறார்கள். ஏதோ படகிலிருந்து தவறிவிழுந்து தத்தளிக்கிறார் என்றெண்ணி, "அம்மா, வந்து படகில் ஏறிக் கொள்ளுங்கள்" என்று கூப்பிட்டிருக்கிறார்கள். அவரோ சைகைமூலம் 'ஒன்றுமில்லை; நீங்கள் செல்லுங்கள்' என்று சொல்லியிருக்கிறார். மீனவர்கள் கரைக்கு வந்து சேர்ந்தபோது இவர் ஒரு பாறைமீது அமர்ந்து சிரித்துக் கொண்டிருந்தாராம். இதைப் பல மீனவர்களும் கூறியிருக்கின்றனர்.

மாயம்மா எப்போதாவது ஊருக் குள் சென்று, அங்குள்ள ஏதாவதொரு உணவகத்திலுள்ள பண்டங்களை- இட்லியோ வடையோ- தானே எடுத்து சிறிது உண்டுவிட்டு, தன்னுடன் வரும் நாய்களுக்கும் போடுவாராம். இதை யாரும் தடுப்பதில்லை. ஏனென்றால், அவ்வாறு அவர் எந்தக் கடையில் பொருளை எடுக்கி றாரோ, அந்தக் கடையின் உரிமையாளர் மிக விரைவில் மேலும் இரண்டு மூன்று கடைகள் திறக்குமளவுக்கு பொருளாதார முன்னேற்றம் கண்டுவிடுவாராம். இதனால் 'மாயம்மா நம் கடைக்கு வரமாட்டாரா- வீட்டுக்கு வரமாட்டாரா' என்று மக்கள் ஏங்குவார்களாம்.

வெளித் தோற்றத்தில் மிகவும் சாமானியமானவராக- மனநிலை பிறழ்ந் தவர்போல- அதிகம் பேசாதவராக அவர் தென்பட்டாலும், அவரது உள்தோற்றமென்று இருக்கிறதல்லவா? நமது உள்ளுறுப்புகளை- அதன் ஆற்றலை வைத்துதான் உயிர்மெய் எழுத்துகளென்று 18 எழுத்துகளை உருவாக்கினர். அதற்கு அகத்தியர் முதலான சித்தர்கள் பதினெட்டு மூலிகைகளைக் கண்டறிந்தனர். அதுபோல, இவரது உள்ளுக்குள் இருக்கும் ஆற்றலை மக்கள் அறிந்துகொள்ளும் சம்பவம் ஒன்று நடந்தது.

Advertisment

rr

அனேகமாக 1930- ஆம் ஆண்டாக இருக்க லாம். பொதுவாக கன்னியாகுமரிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். அவ்வாறு வந்த ஒரு பேருந்தில் நாயொன்று அடிபட்டுவிட்டது. வயிறுகிழிந்து குட லெல்லாம் வெளியே வந்துவிட்டது. ஈனஸ்வரத் தில் அழுதபடி உயிருக்குப் போராடியது அந்த நாய். அனைவரும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, மாயம்மா கூட்டத்தை விலக்கிக்கொண்டு வந்தார். நாயருகே அமர்ந்து அதன் சரிந்த குடலையெல்லாம் எடுத்து வயிற்றுக்குள் திணித்தார். பின்னர் கிழிந்துகிடந்த தோலை ஒன்றுசேர்த்து, தரையிலிருந்த மண்ணையெடுத்து மேலே பூசிவிட்டார். நாயைத் தூக்கி மடியில் வைத்து தலையைத் தடவி ஆசுவாசப்படுத்தினார். சற்றுநேரம் பேரமைதி! நாய் மெல்ல கண்களைத் திறந்தது. வாலை ஆட்டியது. கொஞ்ச நேரத்தில் விபத்துக்கு முன்பிருந்த இயல்பான நிலைக்குத் திரும்பிவிட்டது. சுற்றியிருந்த அனைவரும் அதிசயித்து நின்றனர்.

இது எவ்வாறு நடந்தது? அந்த கன்னியாகுமரி அன்னையே இவருக்குள் வந்து இந்த அற்புதத்தைச் செய்தாரா அல்லது ஹடயோகம் போன்ற யோகக் கலையைப் பயின்று, தொட்டால் குணமாக்கும் சக்தி இவருக்குள் இருந்ததா? இது யாருக்கும் தெரியாத ரகசியம். ஆனாலும் மேற்படி சம்பவம் பலராலும் நேரடியாக பார்க்கப்பட்ட கண்கண்ட சாட்சி. இதன்பிறகே அந்த அம்மையாரை தரிசிக்க பலரும் வரத்தொடங்கினர்.

ஒருவருக்கு தீராத வயிற்று வலி.

அவர் மாயம்மாவிடம் வந்து தன் வேதனையைச் சொன்னார். அப்போது அம்மையார் யாரோ கொடுத்த உணவை சிறிது அருந்திக்கொண்டிருந்தார்.

அந்த உணவிலிருந்து ஒரு பிடியை அந்த நபருக்குக் கொடுத்தார். வந்தவரின் தீராத பிணி தீர்ந்தது.

இதேபோல இன்னொருவர் வந்தார். அவருக்கு வித்தியாசமான பிரச்சினை. 'இன்னும் ஒரு வாரத்தில் நான் இறந்து விடுவேன்' என்று தன் மரணபயத்தைக் கூறினார். அவருக்கு என்ன நோய்- ஒரு வாரத்தில் மரணமென்று சொன்னவர் யார் என்பதுபோன்ற விவரங்கள் தெரியவில்லை.. ஆனால் அவர் தன்னைக் காப்பாற்றவேண்டுமென்று மாயம்மாவை சரணடைந்தார். அப்போது மாயம்மா, மணலில் கிடந்த ஒரு கம்பியை எடுத்து அந்த நபரின் தொடையில் குத்தினார்.

இதுவே மரணகண்டத்தில் இருந்தவருக்கு மருந்து! அதன்பின்னர் அவர் அஞ்சியபடி எதுவும் நடக்கவில்லை. நெடுநாள் வாழ்ந்தார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம்- மாயம்மா கம்பியில் குத்தினாரல்லவா? அதன் சுவடுகூட அந்த நபரின் தொடையிலில்லை.

இத்தகைய மாயம்மாவின் அற்புதங்கள் இந்தியா முழுவதும் பரவியது. இந்திராகாந்தி அம்மையார், ஜனாதிபதி வி.வி. கிரி, ஜெயில்சிங் போன்றவர்கள் எல்லாம் இவரைவந்து பார்த்துவிட்டுச் சென்றுள்ளனர். இசைஞானி இளையராஜா கேட்டுக்கொண்டதற்கிணங்க, அவரது வீட்டிற்கு வந்து சில மணிநேரம் தங்கிச் சென்றதாகவும் தகவலுண்டு.

பொதுவாக 1920-ஆம் ஆண்டுவாக்கில்தான் இவர் கன்னியாகுமரி பகுதியில் தென்பட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால் அதற்கு முன்பே சுவாமி விவேகானந்தர் 1890-களில் இங்கு வந்து மாயம்மாவை சந்தித்ததாகவும், அவரிடம் யோகக் கலைகளைக் கற்றுக் கொண்டதாகவும் செய்தியுண்டு. இந்த அம்மையார் ஒரு மர்மமாகவும் மாயமாகவும் இருந்ததால்தான் இவருக்கு மாயம்மா என்று மக்கள் பெயரிட்டிருக்கின்றனர்.

அவரது இயற்பெயர் என்னவென்று யாருக்கும் தெரியாது. சுமார் அறுநூற்று ஐம்பது ஆண்டுகள் இவர் வாழ்ந்ததாகச் சொல்வர்.

இந்த வாழ்நாள் வருடங்கள் சற்று முன்பின்னாக இருக்கலாம். எனது சித்தப்பா தேவராஜ் என்பவர், சாமி பொன்னம் பலம் என்பவரைப் பற்றிக் கூறியிருக்கிறார். சேலத்தைச் சேர்ந்த அவர் சுமார் 250 ஆண்டுகள் வாழ்ந்தவர். 1985-ல் அவருக்கு 250-ஆவது வயது நடக்கும்போது என் சிற்றப்பா அவரைப் பார்த்திருக்கிறார். தான் சிறுவயதில் 1940-களில் பார்த்தபோது எந்த தோற்றத்தில் இருந்தாரோ அப்படியே 1985-லும் இருந்ததாகத் தெரிவித்தார். சாமி பொன்னம்பலம், தந்தை பெரியாரின் தாத்தாவுடன் பழகியவர். அப்படியென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு சித்தர் கள் சில மூலிகை ரகசியங்களை அறிந்திருந்த னர். பரம ரகசியமான அது சிலருக்கே தெரியும். அது இவருக்கும் தெரிந்திருக்கலாம். நான் மக்கள்திலகம் எம்ஜிஆர் நீண்டகாலம் வாழவேண்டும் எனும் ஆவலில் சாமி பொன்னம்பலத்தை சந்திக்கவைக்க முயன்றேன். அது கைகூடாமல் போய் விட்டது.

இப்படி கண்ணுக்குத் தெரிந்த சாட்சியாக சாமி பொன்னம்பலம் என்பவர் 250 ஆண்டுகள் வாழ்ந்தபோது, மாயம்மா ஏன் நானூறு, ஐந்நூறு ஆண்டுகள் வாழ்ந்திருக்கக் கூடாது எனும் கேள்வி எழுகிறது.

தாய் மாயம்மாள் தன் இறுதிக்காலம் நெருங்குவதை உணர்ந்தார். அப்போது அவருடன் இருந்த ராஜேந்திரன் என்பவரிடம் சைகைமூலம் இந்த விவரத்தைக் கூறி, தான் சமாதியடைய விரும்பும் இடத்தையும் கூறினார். அது 1986-ஆம் ஆண்டு நடந்தது. ராஜேந்திரன் சேலமருகே அம்மையார் குறிப்பிட்டுக் காட்டிய இடத்திற்கு அழைத்து வந்தார். அது பொட்டல்காடாக அப்போது இருந்தது. அங்கு ஒரு கொட்டகை அமைத்துத் தங்கினார். அம்மையார் சேலம் சென்ற நேரம், ஓராண்டு காலம் அங்கு மழையே பெய்ய வில்லை. மக்களெல்லாம் 'இந்த அம்மையார் வந்த தால்தான் மழை பொய்த்துப் போனது' என்று கூறி, அவரை ஊரிலிருந்து வெளியேற்று மாறு ராஜேந்திரனிடம் கூறினர். இந்த விவரத்தை ராஜேந்திரன் மாயம்மாவி டம் சொல்லி வருந்திய போது, மாயம்மா ஏதும் பேச வில்லை. ஆனால் அன்றி ரவே கடும் மழை பொழிந்தது.

அந்த வருடத்திற்குத் தேவைப் படுமளவு நீர் ஏரி, குளம், கிணறுகளில் நிரம்பியது. உடனே மக்கள் 'மாயம்மா சேலத்திலேயே இருக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டனர்.

இறுதியாக மாயம்மா 9-2-1992 அன்று சமாதியடைந்தார். இறந்தபின்பும் அவரது உடல் உயிர்ப்புடன் இருந்ததாக உடனிருந்தவர்கள் தெரிவித்தனர். அவரது சமாதி சேலம், சின்ன கொல்லம்பட்டி, சாந்தி நகரில் உள்ளது.

திருவொற்றியூரிலுள்ள பைரவர் சித்தர் போல இன்னும் மாயம்மா வாழ்வதாகச் சொல்கின்றனர். இவற்றையெல்லாம் ஆராய்ந்து பார்க்கும்போது நம் அறிவுக்குப் புலப்படாத விஷயமாகத்தான் உள்ளது. ஆனால் இந்த ஆன்மிக மண்ணில் இத்தகைய அதிசயங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன!

(அதிசயங்கள் தொடரும்)