சென்னை, சிட்லப்பாக்கத்தில், 2019-ஆம் ஆண்டு முதல் மிக வித்தியாசமான முறைகளில் குழந்தைகளை ஆர்வமுடன் படிக்க வைத்துவரும் ஸ்ரீ பிருந்தாவன் கிண்டர்கார்டன், மாறுபட்ட முறையில் மனதில் பதிய வைக்கும் குழந்தைகளுக்கான கல்விப் பயிற்சியை ஆசிரியைகளுக்கு தரும் "இன்டலக்ட் மாண்டிசரி அகாடமி' மற்றும் அலுவலகம் செல்லும் பெற்றோர்களின் குழந்தைகளை கவனிக்கும் "Day Care' ஆகிய மூன்றிலும் முத்திரை பதித்து நடத்திவரும் இயக்குநர் திருமதி. ரூபினா M.Sc.,B.Ed.,M.Philஅவர்களைச் சந்தித்தோம்.

கம்பீரமான- உயரமான தோற்றம், கணீர் குரல், கனிவான பேச்சுடன் நம்மை பாசத்துடன் வரவேற்ற திருமதி. ரூபினா பர்வீன்...

aa

தான் தெய்வ நம்பிக்கை அதிகமுள்ள அம்மன் பூஜை... அம்மன் அலங்காரம் என அனுதினமும் அதிகாலை தனது இல்ல பூஜையறையில் தவறாமல் பூஜைசெய்து வருவதாகவும், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் மட்டுமன்றி தனது பள்ளியில் படிக்கும் அத்தனை குழந்தைகüன் ஆரோக்கிய உடல் நலனுக்கும், நல்ல படிப்பிற்கும், சுறுசுறுப்பிற் கும், அவர்களது பெற்றோர் மற்றும், தனது பள்ளி பணியாளர்கள் அனைவரது நல் வாழ்விற்கும் மனதார ஒரு மணிநேரம் சிறப்பு பூஜைகள் செய்து வணங்கியபிறகே தனது பள்ளிக்கு தினமும் செல்வதாக பக்திமயமாக கூறிய ரூபினாவிடம் நமது கேள்விகளை கேட்கத் துவங்கினோம்.

அம்மன் அருளால் உங்கள் ஸ்ரீ பிருந்தாவன் கிண்டர் கார்டன் மூலம் கல்வி போதிக்கும் வித்தியாசமான சாதனைகள் பற்றி விளக்கமாக சொல்லுங்களேன்?

Advertisment

நான் பிறந்த ஊர் உடுமலைபேட்டை. அப்பா ஜாபர் அலி, அம்மா கதீஜா என்ற கலாவதி. உடன்பிறந்த ஒரே சகோதரி சகானா.

கணவர் ஸ்ரீகாந்த், இரண்டு மகள்கள். ஷாமினி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பேஷன் டிசைனிங் படிக்கிறார். ஷாதனா பள்ளியில் கிளாஸ் லெவன்த் படிக்கிறார். நான் உடுமலை பேட்டையில் பள்ளிப்படிப்பு முடித்து சென்னையில் கல்லூரியில் இ.நஸ்ரீ கம்ப்யூட்டர் சயின்ஸ், என் பெரியப்பா சுப்பு கிருஷ்ணன், பெரியம்மா லலிதா இருவரின் என்றுமே மறக்க முடியாத அன்பான அரவணைப்பில் படித்து முடித்தேன்.

திருமணமானபிறகு தனியார் நிறுவனத் தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றும் என் கணவர் ஸ்ரீகாந்த் என்னை ங.நஸ்ரீ., ங.டட்ண்ப்.,இ.ஊக்., படிக்கவைத்து இந்த ஸ்ரீபிருந்தாவன் கிண்டர் கார்டன் துவங்க ஊக்குவித்து இப்போதும் பள்ளி வளர்ச்சிக்கு பல வழிகளிலும் உதவி வருகிறார்.

Advertisment

எங்கள் பள்ளியில் இப்போது 75 குழந்தை கள் படிக்கிறார்கள். மற்ற கிண்டர்கார்டன் பள்ளிகளில் பார்க்க முடியாத பல சிறப்பு அம்சங்கள் இங்கே உள்ளது.

ஒரு டீச்சருக்கு 12 குழந்தைகள் என்று 75 குழந்தைகளுக்கும் ஆசிரியைகள் கல்வி அளித்துவருகிறார்கள். கேர் டேக்கர்கள் குழந்தைகள் குறித்த நேரத்தில் தண்ணீர் குடிக்கவும், ரெஸ்ட்ரூம் செல்லவும் உதவி வருகிறார்கள்.

கழிப்பறை சுத்தமாக பராமரிக்கப்படுவது எங்கள் பள்ளியின் குறிப்பிட்ட சிறப்பாகும். சுகாதாரம் இல்லையென்றால் பெண் குழந்தைகளுக்கு யூரின் இன்பெக்ஷன் வந்து விடும். எனவே குழந்தைகளின் உடல்நலம், மனநலம் சிறிதும் பாதிக்காமல் அவர்கள் எப்போதும் கலகலப்பாக சிரித்த முகத்துடன் மற்ற குழந்தைகளுடன் ஒற்றுமையாக பழகி மகிழ சிறப்பு கவனம் செலுத்திவருகிறோம்.

பல நர்சரி பள்ளிகளில் காற்றோட்டம் இல்லாத சிறிய அறைகளில் பல குழந்தை களை அடைத்து வைப்பதாக பெற்றோர்கள் எங்களிடம் கூறியது உண்டு.

எங்கள் பள்ளி கிருஷ்ண பரமாத்மா ஓடி ஆடி விளையாடிய பிருந்தாவனம்போல் விசாலமான பெரிய வகுப்பு அறைகளுடன், பள்ளியை சுற்றிலும் பலா மரங்கள், தென்னை மரங்கள், சீத்தாபழ மரங்கள், பப்பாளி மரங்கள் என காற்றோட்டமாகவும், அதோடு உடல்நலனுக்கு உதவும் துளசி செடிகüன் காற்றும் எங்கள் பள்ளிக் குழந்தைகள்மீது படுவதால் அவர்கள் எல்லாரும் எப்போதும் குதூகலமாக இருக்கிறார்கள்.

பள்ளி ஆண்டு விழா, ஸ்போர்ட்ஸ் டே என சிறப்பாக நடத்தி பள்ளிக் குழந்தை களையும், பெற்றோர்களையும் மகிழ வைத்து வருகிறோம். குறிப்பாக விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறும் குழந்தைகளுக்கு முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு எனத் தராமல் பங்குபெறும் அத்தனை குழந்தைகளுக்கும் விருதுகளை தந்துவருகி றோம்.

பள்ளியை சுற்றி ஆற்றுமணல் நிரப்பி அதில் வெறுங்காலுடன் குழந்தைகளை ஓடி விளையாட செய்து கால்களுக்கும், உடலுக்கும் மூளைக்கும் சுறுசுறுப்பு உண்டாகச் செய்கிறோம்.

டீச்சர்கள் நர்சரி ரைம்ஸ் பாடி ஆடி குழந்தைகளுக்கும் பயிற்சி தந்து அவர் களை ஆனந்தம் அடைய செய்கிறோம். குறிப்பாக குழந்தைகளின் பிறந்தநாளன்று ஸ்வீட், சாக்லேட்டுகளுக்குப் பதிலாக க்ரேயான்ஸ், பொம்மைகள் போன்ற பரிசுகள் மற்றும் ஆரோக்கியமான கடலைமிட்டாய், சுண்டல்கள், கெமிக்கல் கலப்பில்லாத இயற்கை உணவுகள் என தருகிறோம். இதற்கு பெற்றோர் களின் வரவேற்பும் இருக்கிறது.

நான் மாண்டிசரி கல்வி என்ற சிறப்பு பயிற்சி பெற்றிருப்பதால், எங்கள் பள்ளி டீச்சர்களுக்கும் அந்த பயிற்சியை தந்துவிடுவதால் குழந்தைகள் மனதில் கல்வி கற்கும் திறன் அதிகரிக்கிறது. அவர்கள் வேலைகளை பிறர் உதவியின்றி அவர்களே செய்துகொள்ளும் நல்ல பழக்கமும் வந்துவிடுகிறது.''

பெற்றோர்களுக்கு உங்களின் ஆலோசனைகள் என்ன?

குழந்தைகள் கையில் "மொபைல்' தரக்கூடாது. டிவி பார்க்க வைத்து சாப்பாடு ஊட்டக்கூடாது. ஸ்பூனால் குழந்தைகளுக்கு உணவு தராமல் தரையில் அமர்ந்து சம்மணம் போடவைத்து, மடியில் டவல் விரித்து சுத்தமான கையால் சாப்பிடப் பழக வேண்டும். குழந்தைகளோடு நிறைய பேசவேண்டும். அவர்கள் அடம்பிடித்து கேட்பதை எல்லாம் வாங்கி தரக்கூடாது. "சஞ' சொல்லி பழக்க வேண்டும். பார்க் அழைத்துச்சென்று குழந்தைகளை "சறுக்கு மரம்' கண்ணாமூச்சி விளையாட்டு போன்றவற்றை எங்களைபோல் விளையாட வைக்க வேண்டும்.''

அம்மன் அருளால் நீங்கள் சந்தித்த நல்ல வற்றையும், ஆபத்தில் உயிர் பிழைத்ததையும் பற்றிக் கூறுங்கள்?

"என்னைச் சுற்றி இருப்பவர்களும் உடனிருப்பவர்ககளும் நல்ல மனதுடன் உழைப்பாளிகளாக இருப்பதே அம்மன் அருளால்தானே! என் தாய் ஆசிரியை என்பதால் எனக்கும் கல்விப்பணிமீது ஆர்வம் வந்ததும் அம்மன் அருள்தானே. 25 வருடங்களாக கல்லூரி படிக்கும்போது துவங்கி இன்றுவரை எனது உயிர் தோழி களாகப் பழகிவரும் பாசமான சவிதா, அபுனிசா, ராதிகா என மூவரைத் தந்த அம்மன் அருளை நான் என்னவென்று சொல்வேன். என் இரு பெண்களும் குழந்தைகளாக இருந்தபோது எனக்கு முடக்குவாதம் வந்து நடக்க முடியாமல் சிகிச்சையில் இருந்தபோது அம்மன் வடிவில் வந்து உடனிருந்து உதவிய உஷா, பிரியா இருவரையும் நான் என்றும் நன்றியுடன் நினைக்கிறேன். சென்ற வருடம் ஆட்டோவில் பள்ளிக் குழந்தைகளுக்கு சாப்பாடு கொண்டுவரும்போது ஆட்டோ திடீர் என்று தலைகுப்புறக் கவிழ்ந்தது. கை, காலில் பலத்த அடிபட்டு மீண்டும் நான் உயிர் பிழைத்தது தினமும் நான் மனமுருக வேண்டும் அம்மன்களின் அருளால்தானே?

சமீபத்தில் என் கணவருக்கு "புட் பாய்ஸன்' ஆகி அவர் தகுந்த சிகிச்சையில் உடல்நலம் பெற்றது அன்னை தெய்வங்களின் மெய் சிலிர்க்க வைக்கும் அற்புத அருளால்தானே?

ஆண்டவன்போல் அப்பா வழிகாட்டியது, வீர தீர்க்கமுடன் பிரச்சினைகளை தைரிய மாக எதிர்கொள்ள தெய்வம்போல் ஆலோ சனை அறிவுரை கூறி என்னைப் பக்குவப் படுத்தியது, திறமைசாலி ஆக்கியது தெய்வம் ஆகிவிட்ட என் தந்தை ஜாபர் அலிதானே?

இந்த நர்சரி பள்ளியை துவக்கி வைத்து ஆதரவுதந்து, அறிவுரைகள் வழங்கிவரும் சென்னை சென்மார்க்ஸ் பள்ளித் தாளாளர் பிரின்ஸ் பாபு ராஜேந்திரன் அவர்களின் சகோதர பாசம் கிடைத்தது அம்மனின் அற்புதத்தால்தானே?

திருமதி ரூபினா பர்வீன், அம்மனின் அருளோடு அவரது எதிர்கால லட்சியமான ஹையர் செகண்டரி ஸ்கூல் துவங்க மனமார வாழ்த்தி, அவரது ஸ்ரீ பிருந்தாவன் கின்டர்கார்டன் மென்மேலும் குழந்தைகள் உயர்வடைய உளமார வாழ்த்தி விடை பெற்றோம்.

தொடர்புக்கு: 95512 69990, 88257 29455