அரசுப்பள்ளி ஆசிரியர்களின் மகனாகப் பிறந்து, இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக கேரள மாநிலத்தில் சிறப்பாகப் பணியாற்றியவர் ஞான ராஜசேகரன், ஐ.ஏ.எஸ். எழுதுவதிலும் திரைப்படங்களை இயக்குவதிலும் ஆர்வத்துடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். நவீன நாடகங்களை எழுதி மேடையேற்றியவர். திரைப்படத் தணிக்கைக் குழு அதிகாரி என பன்முகங்களுடன் செயல்பட்டவர். எதைச் செய்தாலும் அது மக்களுக்கும் சமுதாயத்திற்கும் நல்ல பயனை விளைவிக்க வேண்டும் எனும் உறுதிப்பாட்டுடன் செயலாற்றிவரும் மேனாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான அவருடன் இனிய உதயம் இதழுக்காக நடைபெற்ற சிறப்பு உரையாடலிது. இனி, வாசகர்களுக்காக...
தாங்கள் பிறந்த ஊர், உடன்பிறந்தோர் பற்றி...
என்னுடைய ஊர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளிகொண்டா. பெற்றோர் இருவரும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள். நான்கு ஆண்களும் நான்கு பெண்களும் நிறைந்த குடும்பம். நான்தான் மூத்தவன். என் தந்தையார் ஒரு விந்தை மனிதர். பள்ளியில் பணிபுரிந்த சக ஆசிரியர் ஒருவர் நான் சிறுவனாக இருந்தபோது என் பாதங்களைப் பார்த்து, “இது விசேஷமான பாதம். புத்தனைப் போல் சிந்தனையாளனாவான்” என்று சொன்னதினாலேயோ என்னவோ, பிற ஏழு குழந்தைகளிடம் காட்டாத நம்பிக்கையையும் மரியாதையையும் காட்டி என்னை வளர்த்தார், என் தந்தை. பிறர் அனைவரும் ‘சாதாரண வாத்தியார்’ வீட்டுக் குழந்தைகளாக வளர, நான் மட்டும் அதீத சுதந்திரத்துடனும் தன்னிச்சையுடனும் ‘ராஜ’குமாரனாக வளர்க்கப்பட்டேன்.
தங்களது பள்ளிக்காலப் பசுமையான நினைவுகள் ஏதேனுமுண்டா..?
நான் முன்பே சொன்னபடி நான் விரும்பிய விதத்தில் சுதந்திர சிறுவனாக அலைந்துதிரிந்தது எனது பள்ளிக் காலத்தில்தான். என் சுற்றுப்புறத்தில் நடைபெறும் நாடகம், சினிமா, திருவிழா, நடனம் என ஒன்றையும் நான் விட்டுவைத்ததில்லை.
அந்தக் காலத்தில் சினிமா, ஊர்சுற்றல் செய்பவர்கள் படிப்பில் மிகவும் பின்தங்கி இருப்பார்கள். இதை அப்போதே நான் புரிந்துகொண்டு படிப்பில் நல்ல மார்க்குகள் வாங்கினேன். ஏனென்றால் சினிமா, டிராமா என்று ஊர் சுற்றினாலும் யாரும் நம்மை குறை சொல்லமாட்டார்கள் அல்லவா?
பள்ளிக்காலத்தில் என்னை வெகுவாக கவர்ந்த ஆளுமை சிவாஜிகணேசன். அவரது திரைப்படங்களைத் தவறாமல் பார்ப்பது மட்டுமின்றி அவரது வசன உச்சரிப்புகளை ஒஙஒபஆபஊ செய்து (குறிப்பாக வீரபாண்டிய கட்டபொம்மன், சாக்ரடீஸ், சேரன் செங்குட்டுவன் முதலானவை) எங்கள் ஊர் நிகழ்ச்சிகளில் மேடையேறி நடித்து பேர் வாங்கலானேன். ‘கட்டபொம்மன்’ என்றுகூட என்னைக் கூப்பிட்டார்கள். என் வாழ்வில் சினிமா ஒரு டஆநநஒஞச ஆவதற்கான காரணமும் அதுதான். ஏதாவது ஒரு துறையில் சாதிக்கவேண்டும் என்கிற வெறி அப்போது எனக்கிருந்தது. அதனால் நான் இறங்காத துறைகளே இல்லை என்று சொல்லலாம். நானும் என் நண்பரும் சேர்ந்து கையெழுத்து பத்திரிகை நடத்தினோம். நான் டிசைனிங்கிலும் படங்கள் வரைவதிலும் மிகுந்த ஈடுபாடு காட்டினேன். கவிதை, கட்டுரைகள் எழுதினேன். என் நண்பர் கேள்வி-பதில் எழுதுவார். தெருக்கூத்து நாடகங்களில் நடித்தேன். மதம் பற்றி ஆராய்வதைக்கூட நான் விட்டுவைக்கவில்லை. ஒரு புத்த பிக்குவுடன் இரண்டு நாள் விவாதம் செய்யவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. எனது இன்றைய டஊதநஞசஆகஒபவ இன் உருவாக்கத்தில் பெரிய பங்கு வகித்தது என் பள்ளிக்காலம் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
பள்ளிக்காலத்தில் வகுப்புகள் இல்லாத சமயங்களில் ஊர் சுற்றிய தால் எனக்கு மிகப் பெரிய நன்மை கிடைத் தது. ஏராளமான மனிதர்கள் எனக்கு பழக்கமானார்கள். மனிதர்களை நேசிக்க வும், மனிதாபிமானத் தோடு பழகவும் நான் கற்றுக் கொண்டேன்.
தாங்கள் ஐஏஎஸ் அதிகாரியானது விருப்பமா... அல்லது திருப்பமா..?
என் அப்போதைய விருப்பம்; சினிமா இயக்குநராவது.
ஆனால் நடந்த திருப் பம், என் கனவுகளை நனவாக்க பெரிதும் ஆதரவு தந்துகொண்டி ருந்த என் தந்தை அகால மரணமடைந்தது;
அவரது உங்ஹற்ட் ரண்ள்ட் நான் ஐ.ஏ.எஸ். ஆகவேண்டும் என்பது. அவர் இறந்த பிறகு எனது அம்மா சொல்லித் தான் தெரியவந்தது. எனது தந்தை தனது ஆசையை மறைத்துக்கொண்டு, என் சினிமா இயக்குநர் ஆசைக்கு எல்லா ஆதரவும் தந்த பெருந்தன்மையை நினைத்து நான் உணர்ச்சிவசப்பட்டேன். அதற்கு நன்றிக்கடனா கவே நான் ஐ.ஏ.எஸ். எழுதினேன்.
சிறுவயதில் பார்த்த திரைப்படங்களில் இப்போதும் உங்களால் மறக்க முடியாத படங்கள் எவை?
பள்ளி கல்லூரி காலங்களில் நான் பார்த்து இன்றுவரை மறக்க முடியாத படங்கள் பல. சிலவற்றை நினைவுகூர்கிறேன்:
பராசக்தி, வீரபாண்டிய கட்டபொம்மன், காதலிக்க நேரமில்லை, தில்லானா மோகனாம் பாள், பலே பாண்டியா...
மலையாளம்: நிர்மால்யம், குட்டியேடத்தி
வங்காளம்: பதேர்பஞ்சாலி, சிமபத்தா
ஆங்கிலம்: இழ்ண்க்ங் ஜ்ர்ழ்ங் இப்ஹஸ்ரீந், நஹய்க் டங்க்ஷக்ஷப்ங்ள், உண்ஹப் ங ச்ர்ழ் ஙன்ழ்க்ங்ழ்
கேரளாவில் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி யாகப் பணியாற்றிய அனுபவம் எப்படி யிருந்தது?
மனதுக்கு மகிழ்ச்சி தரும் விதத்தில் இருந் தது. நிர்வாகத்திலும் அரசியலிலும் கேரளா தனித்தன்மையுடன் விளங்குகிற ஒரு மாநிலமாகும். அந்த தனித்தன்மை, என் இயல்புக்கு மிகவும் பொருந்துவதாக அமைந்திருந்ததால் என்னால் அங்கே நன்றாக செயல்பட முடிந்தது. மனிதாபி மான செயல்பாட்டை யும், நல்ல கலை முயற்சி களையும் பெரிதும் ஆதரிக்கின்ற மாநில மாக கேரளா இருந்த தால்தான் அரசுப்பணியில் இருந்துகொண்டே என்னால் சினிமாக்கள் எடுக்கமுடிந்தது. அதைப் போலவே அங்கே நடைமுறையில் இருக்கிற அரசியல் சூழ்நிலையினால் நல்ல அதிகாரி என்கிற பெயரும் எடுக்கமுடிந்தது.
திரைப்படங்களை இயக்கவேண்டுமென்ற உந்துதலை எப்போது பெற்றீர்கள்?
நான் பள்ளிப்பருவத்தில் ஏதாவது ஒரு துறையில் தனித்துவத்துடன் வர வேண்டும் என்கிற துடிப்பு இருந்ததாகச் சொன்னேன் அல்லவா?
பல துறைகளிலும் எனக்கு ஈடுபாடும் திறமை யும் ஓரளவுக்கு இருந்தது உண்மை. நடிப்பு, கதை எழுதுதல், நாடகம், கவிதை, ஓவியம், பாடல் எழுதுதல்.... இப்படி பலவற்றிலும் ஈடுபட்டி ருந்தேன். கல்லூரிக்கு வந்தவுடன் மாற்றங்கள் வரத்தொடங்கின. ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், புதுமைப்பித்தன் போன்றவர்களின் எழுத்துக்களை வாசிக்கத் தொடங்கிய பிறகு, என்னிடமிருந்த கதை எழுதும் திறமையைப் பற்றிய நம்பிக்கை குறையத் தொடங்கியது. ஓவியத்தைப் பொருத்தவரை பார்த்து வரைதல் ஒரு திறமை என்று சொல்லலாமேயன்றி தனியாக என்னை உயரத்துக்கு கொண்டுபோகிற ஒன்றில்லை என்று உணர்ந்தேன். பலவிதமான கூட்டல் கழித்தலுக்குப்பின் நான் ஒரு முடிவுக்கு வந்தேன்.
எனது திறமைகள் அனைத்திற்கும் பங்களிப்பு வடிகாலாக அமையும் துறை டஊதஎஞதஙஒசஏ ஆதபந என்கிற முடிவுக்கு வந்தேன். நாடகம், சினிமா, இயக்கம் இவைதான் நான் கவனம் செலுத்தவேண்டிய துறை என்று முடிவெடுத்து அவை சம்பந்தப்பட்ட புத்தகங்களைப் படிப்பதும் ஆராய்வதுமாக எனது ஓய்வு நேரங்களைச் செலவழித்தேன்.
எங்கள் கல்லூரியில் ‘பைத்தியங்கள் பலவிதம்’ என்ற பெயரில் நாடகம் ஒன்றை எழுதி இயக்கி, ஸ்டேஜ் செய்தேன். சக மாணவர்கள் மத்தியில் மிகவும் பாராட்டுப் பெற்ற நாடகமாக அது மாறியது. தமிழ்நாட்டளவில் கல்லூரிகளுக்கு இடையிலான நாடகப்போட்டியில் மாநிலத்திலேயே சிறந்த நாடகமாக அது தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்றது. நண்பர்கள் மத்தியில் ‘டைரக்டர்’ என்கிற பெயரை அது எனக்கு வாங்கித் தந்தது. அதில் கிடைத்த உற்சாகத்தில் ஏழு நாடகங்களுக்கு மேலாக எழுதி இயக்கி மேடையேற்றினேன். சினிமாவிலும் என்னால் இயங்கமுடியும் என்கிற நம்பிக்கையை இந்த நாடக அனுபவங்கள் எனக்கு தந்தன.
இந்த உணர்வுகள் முற்றித்தான் பட்டப் படிப்பு முடிந்ததும், சென்னை அரசு பிலிம் இன்ஸ்டிட் யூட்டில் இயக்குநர் படிப்பில் சேர்ந்ததும், அங்கே பாடத்திட்டங்கள் சிறப்பாக இல்லாதது கண்டு மூன்று மாதங்களில் வெளியேறி, மாநிலக் கல்லூரியில் எம்.எஸ்ஸி., படிக்கத் தொடங்கினேன்.
கல்லூரி படிப்பின்போது சினிமா இயக்குநராக வேண்டும் என்கிற உந்துதல் தோன்றினாலும் இயக்குநராகும் தகுதி எனக்கு வந்ததாக நான் கருதியது மும்பையில்தான்.
எம்.எஸ்ஸி., படித்து முடித்தவுடன் எனக்கு மத்திய அரசுப்பணி மும்பையில் கிடைத்தது. நாம் நமது மாநிலத்திலிருந்து வெளியேறி வேறொரு மாநிலத்தில் பணிபுரியும்போதுதான் நம்மைப் பற்றி ஞஇஓஊஈபஒயஊ-ஆக ஆராய்வதற்கு வாய்ப்பு கிடைக்கும். நம்மிடம் நாம் இருப்பதாகக் கருதும் திறமைகள் உண்மையில் சிறப்பாக இருக்கிறதா என்றெல் லாம் மறுபரிசீலனை செய்யத் தொடங்கினேன்.
மும்பையில் ஏராளமான வெளிநாட்டுப் படங் களைப் (பிலிம் சொசைட்டிகள் மூலம்) பார்த்தேன். மராட்டிய நாடகங்களைத் தவறாமல் பார்க்கத் தொடங்கினேன். அதுவரை சினிமா, நாடகம் குறித்த எனது பார்வைகள் எல்லாம் மாறி விட்டன.
நவீன நாடகங்களை எழுதினேன். நானே இயக்கி மேடையேற்றவும் செய்தேன். உஒதஊஈபஞதஒஆக ஈஞசபதஞக ஞயஊத ஙஊஉஒமங என்பதற்கான அர்த்தத்தை உணர்ந்தேன். இந்த அனுபவம்தான் தமிழ் சினிமா வில் யாரிடமும் உதவியாளராகப் பணிபுரியாமலேயே முதல் படத்தை என்னால் இயக்கமுடியும் என்கிற நம்பிக்கையை என்னிடம் பற்ற வைத்தது.
தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’ நாவலைப் படமாக்க வேண்டுமென்ற எண்ணம் எதனால் உண்டானது?
சிறுவயது முதல் தமிழ் கமர்ஷியல் சினிமாவை கண்டு பலவற்றை ரசித்து வளர்ந்தவன் நான். கல்லூரிக் காலத்தில் மலையாள, வங்காள கலைப்படங்களைக் கண்டு மகிழவும் செய்தேன். மும்பை சென்ற பிறகு அகிரா குரோசேவா, பெர்க்மேன், டேவிட் லீன் போன்றோரின் உலகப் புகழ்பெற்ற படங்களைப் பார்க்கத் தொடங்கியதும் நான் உண்மையில் குழம்பித்தான் போனேன். நாம் படம் எடுத்தால் என்ன மாதிரி படம் எடுப்பது? கலைக்குப் பிரதானம் கொடுத்து சுவாரசியம் பற்றி கவலைப்படாமல் கலைப்படமாக எடுப்பதா? கமர்ஷியல் ஆக ஜெயிக்கிற படம் எடுப்பதா? இந்த இரண்டு ஊலபதஊஙஊ-களுக்கும் போகாமல், பார்க்க வருகிறவர்களுக்கு சுவாரசியம் குறையாமல் தரமான ஒரு திரைப்படத்தை நாம் எடுத்தால் என்ன என்று தோன்றியது.
60-களில் இலக்கியவாதிகளுக்கும் சாதாரண வாசகர்களுக்கும் மிகவும் பிடித்த நாவல் தி.ஜா-வின் ‘மோகமுள்’. அதைப் படமாக எடுத்தால் தரமாகவும் இருக்கும்; சுவாரசியமாகவும் இருக்கும் என்ற முடிவோடுதான் ‘மோகமுள்’ளைத் திரைப்படமாக எடுக்கத் துணிந்தேன்.
‘மோகமுள்’ திரைப்படத்திற்காக இந்திராகாந்தி தேசிய விருதினைப் பெற்ற கணத்தை எப்படி உணர்ந்தீர்கள்?
‘மோகமுள்’ நாவலை - அதன் ஆன்மாவை நஷ்டமடையச் செய்யாமல் - முடிந்தவரை திரையில் கொண்டுவரவேண்டும் என்கிற ஒரே லட்சியத்தோடு மட்டும் நான் செயல்பட்டேன். ஆனால் மோகமுள் தயாரிப்பில் எங்களுக்கு ஏற்பட்ட பொருளாதார பிரச்சினைகளால் அதைப் பூர்த்தி செய்து முடிக்க மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. காலதாமதம் ஏற்பட்டதால் மேலும் பல பிரச்சினைகள் நடிக- நடிகையர் தொழில்நுட்ப வல்லுநர்கள் மீண்டும் கிடைப்பது பிரச்சினையாக இருந்தது.
ஒருவழியாக படத்தை வெளியிட முயற்சித்த போது வியாபார உலகம் கைவிரித்தது. இலக்கிய வாதிகளைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. அவர்கள் மௌனம் காத்தார்கள்.
அப்போதுதான் வானத்திலிருந்து வந்த வெளிச்சம்போல இந்திராகாந்தி விருதைப் பற்றிய அறிவிப்பு வந்தது. எழுத்தாளர் சிவசங்கரிதான் எனக்கு டெல்லியிலிருந்து அழைத்துச் சொன்னார்கள்.
இன்று ‘மோகமுள்’ திரைப்படத்தைப் பாராட்டுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அமெரிக்க தமிழ் ரசிகர்கள் சிலர் மோகமுள் ஒரு ஈமகப படம் என்று சொல்லி, படம் வெளிவந்து 25 வருடம் ஆனதை என்னோடு சேர்ந்து கொண்டாடினார்கள்.
வில்லன் நடிகராக அறியப்பட்ட நாசரை, கதை நாயகனாக்கி முகம் எனும் படத்தை இயக்குவதற்கு உங்கள் மனம் துணிந்தது எப்படி?
எனது நாடகப் பின்னணி காரணமாக எதஊசஈஐ உதஆஙஆ டைப்பில் ஒரு ஊலடஊதஒஙஊசபஆக திரைப்படத்தை எடுத்துப் பார்த்தால் என்ன என்று தோன்றியது. தமிழ்நாட்டு அரசியலில் முகம் வகிக்கும் இடத்தை வைத்து பின்னப்பட்ட கதை அது. அதன் மைய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் நடிகருக்கு நடிப்பில் மிகப் பெரிய தஆசஏஊ அவசியம். அதற்கு நாசரைவிட பொருத்தமானவர் யார் இருக்கமுடியும்? என்னைப் பொறுத்தவரை நடிகர் எத்தகைய ஆளுமை என்பது முக்கியமே தவிர வில்லனா, கதாநாயகனா என்பதல்ல. ‘முகம்’ வெறும் 12 நாட்களில் குறைந்த பொருட்செலவில் எடுத்த படம்.
தமிழகத்தைவிட கேரளாவில் இந்தப் படம் பெரிதாக ரசிக்கப்பட்டது. நான் எடுத்த படங்களிலே சிறந்த படம் இதுதான் என்று கருதுவோர் சிலரும் அங்கே இருக்கிறார்கள்.
நவீன நாடகங்களையும் (வயிறு, மரபு, பாடலிபுத்திரம்)
எழுதி, அவற்றை நூலாகவும் வெளியிட்டு இருக்கிறீர்கள். அது பற்றி...
மராட்டிய, இந்தி நவீன நாடகங்களின் தாக்கத்தில் நான் எழுதிய நவீன நாடகங்கள் இவை. ‘வயிறு’ மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தமிழ், கன்னடம், மலையாளம், குஜராத்தி, இந்தி மொழி களில் அரங்கேற்றப்பட்டது. ‘மரபு’ மூன்று முறை மும்பையில் என் இயக்கத்தில் மேடையேற்றப் பட்டது. நான் எழுதிய நாடகங்களில் சிறப்பானதாக நான் கருதும் ‘பாடலிபுத்திரம்’ நாடகம், இதுவரை மேடையேறாததில் எனக்கு வருத்தமுண்டு.
பாரதியின் வாழ்க்கையைப் படமாக்கிட பலரும் முயற்சித்து கைவிட்ட நிலையில், நீங்கள் அதை வெற்றி கரமாகச் சாதித்தது எப்படி..?
நான் என் நண்பர்களிடம் சொல்வதுண்டு. நான் தற்செயலாகப் பாரதி என்கிற ஐண்ஞ்ட் பங்ய்ள்ண்ர்ய் மின்கம்பியைத் தொட்டுவிட்டேன். அதற்குப்பிறகு என்ன ஆனது என்று அறியேன்; அந்த மாபெரும் சக்தி என்னை ஆட்கொண்டுவிட்டது. அதில் கிடைத்த எல்லாப் புகழுக்கும் பாரதி ஒருவனே காரணம்.
‘பெரியார்’ திரைப் படத்திற்கு நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஆதரவு கிட்டியதா?
நான் எடுத்த படங்களில் வியாபார ரீதியில் அதிக லாபத்தை குவித்த படம் இது தான். எதிர்பாராத இடங் களில் எல்லாம் எனக் குப் பாராட்டு கிடைத் தது. திருப்பூரில் வேத பாடசாலையில் பயிலும் குடுமி வைத்த பிராமண இளைஞர்கள் நூறு பேர் படத்தைப் பார்த்துவிட்டு, போனில் அழைத்துப் பாராட் டினார்கள். டி.வி.எஸ். குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி படம் பார்த்துமுடித்ததும் என்னிடம் வந்து, “அக்கிரஹாரத்தில் நாங்கள் வளரும்போது பெரியாரைப் பற்றி கெட்டது மட்டுமே கேட்டு வளர்ந்தவள் நான். இன்று உங்கள் படத்தைப் பார்த்த போது இவ்வளவு உன்னத புருஷனா அவர்னு புரிஞ்சது. அவர் மட்டும் உயிரோடு இருந்தா, அவர் காலுல சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் பண்ணனும்னு தோணுச்சி!” என்று சொன்னார்.
திராவிடக் கழகத்துக்காரர்கள் சொன்னது; “பெரியார் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு 20 ஆயிரத்துக்கும் மேல இளைஞர்கள் நம்ம கட்சியில் மெம்பர் ஆகியிருக்காங்க” என்று.
இதைவிட ஒரு இயக்குநருக்கு என்ன வேண்டும்?
‘ராமானுஜன்’ படத்திற்கான வரவேற்பு குறித்து...
டதஞஎஊநநஒஞசஆககவ, நான் எல்லாவிதத்திலும் மனநிறைவோடு செய்த படம் இது. வெளிவந்தபோது பெரிய அளவில் மக்கள் வந்து பார்க்கவில்லை. ஆனால் உள்ளே வந்து பார்த்தவர்கள் வெகுவாகப் பாராட்டிய படம்.
சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் சுமார் 12,000 பேர் ஆசிரியர்களுடன் பார்த்து பாராட்டிய படம்.
இதை இந்தி டப்பிங் செய்து மகபதஆ எனும் மும்பை கம்பெனி வஞம பமஇஊ-இல் வெளி யிட்டது. அதை இது வரை 5 கோடிக்கும் மேல் பார்த்திருக்கிறார் கள். ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ தனது விமர் சனத்தில் ‘ராமானுஜன்’ தமிழ்ப் படம், ஹாலிவுட் டிலிருந்து ராமானுஜ னைப் பற்றி வெளிவந்த படத்தைவிட சிறப் பாக இருப்பதாகக் கூறியிருக்கிறது.
ஐந்தரை ஆண்டுகள் திரைப்பட தணிக்கை அதிகாரியாகவும் இருந் திருக்கிறீர்கள். அந்த அனுபவங்கள் குறித்து...
சினிமா இயக்குநராக இதுவரை 6 படங்களை நான் வெளியிட்டிருந்தாலும் சுமார் ஆயிரம் படங்களை சென்சார் செய்த அதிகாரியாக இருந்த போது சினிமா உலகத்தைப் பற்றி நான் அறிந்தது மிக அதிகம். தயாரிப்பாளர்கள் - இயக்குநர்களின் உண்மை முகங்கள், மக்கள் ரசனை, சினிமா வர்த்தகம் இவற்றைப்பற்றி எல்லாம் நுணுக்கமாக அறிந்துகொண்டேன். ஆனால் அறிந்தவை எல்லாம் பெருமைக்குரியவை என்று சொல்லிவிட முடியாது.
உங்களின் அனுபவங்களை ‘நேர்மை படும் பாடு’ என நூலாக எழுதும் எண்ணம் எதனால் ஏற்பட்டது?
இந்திய ஆட்சிப்பணியில் பணிபுரியும்போது எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை அவ்வப் போது என் இணையர் டாக்டர் சகுந்தலா வுடன் பகிர்ந்துகொள்வது வழக்கமாக இருந்தது.
நான் பணியிலிருந்து ஓய்வுபெற்றவுடன் அந்த அனுபவங்களைப் புத்தகமாக எழுதி வெளியிட வேண்டும் என்று அவர் வற்புறுத்திக்கொண்டே இருந்தார். கேரளாவின் சூழ்நிலையும் நிர்வாகத்தில் எனது அணுகுமுறையும் வித்தியாசமாகவும் பிறருக்குப் பயனளிக்கும் விதமாகவும் இருக்கும் என்றும் சொன்னவர் அவர்தான்.
எழுத்தாளர், நாடக ஆசிரியர், இயக்குநர், இந்திய ஆட்சிப்பணி அதிகாரி... இவற்றுள் உங்களை ரொம்பவும் ஈர்த்த பொறுப்பு எது?
அதிகாரிகளாகப் பணிபுரியும் பலர் எழுத்தாளர்களாக இருக்கிறார்கள். பணிபுரியும்போது ஒருவராகவும் எழுதும்போது வேறு ஒருவராக இருப்பதை நான் பார்த்திருக்கி றேன். ஆனால், என் வாழ்க்கையில் சினிமா இயக்குநராகவும், ஆட்சிப் பணி அதிகாரியாகவும் ஒரே சமயத்தில் செயல்படுகிற அரிதான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இரண்டில் என்னை ஈர்த்த பொறுப்பு என்றால் இரண்டும்தான் என்றே நான் சொல்வேன். என்னால் இயன்றவரை நேர்மையாகவும் மனிதாபிமானமிக்கவனா கவே நான் செய்கிற அனைத்துப் பணிகளிலும் இயக்கி யிருக்கிறேன்.
நான் மாவட்ட ஆட்சித்தலைவராக இருக்கையில் ஞமப ஞஎ இஞல விதத்தில் சில காரியங்களைச் செய்துமுடித்தபோது கேரள முதல்வர் கருணாகரன் என்னிடம் சொல்வார்; “நீங்கள் ஒரு சினிமாகாரனா இருப்பதால்தான் இப்படி எல்லாம் யோசித்துச் செயல்பட முடிகிறது!” என்று.
நீங்கள் படமாக்க நினைத்து, இன்னமும் அது கைகூடாமல் இருக்கும் நாவல் அல்லது ஆளுமை யார்?
சினிமாவில் நாம் விரும்புவதெல்லாம் கைகூடாமல் போவதற்குப் பல உண்மை யான காரணங்கள் இருக்கின்றன. நான் அதற்காக வேதனைப்படுவதில்லை. காத்திருத்தல் ஒன்றுதான் ஒரே வழி. பாரதிக்கும், பெரியாருக்கும் நான் பல வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. வள்ளலார் சில ஆண்டுகளாகக் காத்துக்கொண்டிருக்கிறார்.
இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகத் தமிழ்நாட்டில் பணி யாற்றி இருக்கலாம் என்கிற ஆவல் எப்போதாவது வந்ததுண்டா..?
தமிழ்நாட்டில் பணிபுரிய வேண்டும் என்று ஐ.ஏ.எஸ்.ஸில் சேருவதற்குமுன் ஆசைப்பட்டதுண்டு. ஆனால் சேர்ந்தபின் கேரளாவைப்போல எனக்குப் பொருத்தமான மாநிலம் வேறொன்றிருக்க வாய்ப் பில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். பணியில் இருந்துகொண்டே ‘மோகமுள்’ படம் எடுக்க அனுமதி கோரியபோது கேரள கேபினட் எனக்கு அனுமதி வழங்கியது. இதெல்லாம் தமிழ்நாட்டில் கனவில்கூட நடக்குமென்று நான் நினைக்கவில்லை.
தற்போதைய தமிழ்த் திரைப்படங்களின் போக்கு உங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறதா..?
நிச்சயம் நம்பிக்கை அளிக்கவில்லை. சினிமா என்பது அடிப்படையில் கதை சொல்வது என்பது மறக்கப்பட்டு வருகிறது. டெக்னிக்கலாக அசத்துவது தான் சினிமா என்று கோடி மேல் கோடிகளைக் கொட்டி செலவழித்துவிட்டு, அதை திரும்ப எடுப்ப தற்கு சினிமாக்காரர்கள் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எப்படி எளிமையாக ருசியாக சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களை ஏமாற்றி பீட்சாவும் பர்கரும் சாப்பிடவைக்க கோடிக் கணக்கில் விளம்பரம் செய்கிறார்களோ அதைப் போன்ற அவலம் இது!
இன்றைய இளைய இயக்குநர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது..?
நெஞ்சைத்தொடுகிற விதத்தில் எளிமையாக சுவாரசியமாக கதை சொல்லப் பழகுங்கள். அது என்றைக்கும் உங்களுக்கு கைகொடுக்கும். ஆரவாரங்கள் சில சமயங்களில் வெற்றி யைத் தரலாம். ஆனால் பல சமயங்களில் ‘கங்குவா’வாக, ‘இந்தியன் 2’ ஆக பாதாளத் தில் தள்ளிவிடும். மீண்டு எழுவது என்பது முடியவே முடியாது.
‘இனிய உதயம்’ இதழைப் பற்றி தங்களின் கருத்து...
படிக்கிற பழக்கம் குறைந்து வருகிற இன்றைய காலத்தில் தரத்துடன் இலக்கிய கருத் தாக்கங்களையும் சிந்தனைகளையும் மக்களிடம் கொண்டுசெல்கிற இனிய உதயம் இதழுக்கு என் நெஞ்சிற்கினிய வாழ்த்துக் கள்.
சந்திப்பு புதுவை முருகுபாரதி
படங்கள் எஸ் பி சுந்தர்