ளையராஜா "வேலியண்ட்" என்று சொல்லக்கூடிய சிம்பொனி இசையமைத்து உலக சாதனை புரிந்துள்ள இந்த நேரத்தில் அவரை வாழ்த்துகிறேன்.

ஒத்தின்னியம் (சிம்ஃபனி, symphony) ஒரு இசைத் தொகுப்பு (musical composition) வகை. பொதுவாக இது சேர்ந்திசை (orchestra) நிகழ்ச்சிகளுக்கான ஒரு ஆக்கமாக அமைக்கப்படும்.

வழக்கமாக இது 3 அல்லது 4 பகுதிகளைக் கொண்ட நீளமான ஆக்கமாக இருக்கும். முதல் பகுதி வேகமான நடையில் அமைந்திருக்கும். இரண்டாம் பகுதி மெதுவான நடையில் அமைந்திருக்கலாம். இவ்வாறே மூன்றாம், நான்காம் பகுதிகளும் அவற்றுக் குரிய தனித்துவமான முறையில் ஆக்கப்படுகின்றன.

ss

ஒத்தின்னியம் (சிம்ஃபனி) எழுதுவதற்குப் பல முறைகள் இருந்தாலும், ஒத்தின்னியத்தின் தந்தை எனக் கருதப்படும் ஜோசப் ஹேடன் என்பவர் முன் குறிப்பிட்ட வடிவில் ஒத்தின்னிய ஆக்கங்களை எழுதியதால் பின்வந்த இசையமைப்பாளர் பலரும் அவரைப் பின்பற்றியே எழுதி வருகின்றனர்.

ஜோசப் ஹேடன், வூல்ஃப்காங் அமாடியஸ் மொசார்ட், லுட்விக் வான் பீத்தோவன் போன்றோர் மிகவும் பெயர்பெற்ற இசையமைப்பாளர்கள் ஆவர்.

இளையராஜா மேற்கத்திய இசை வல்லுநர்கள் அமைத்த இலக்கண அமைப்புப்படி ஆசியாவில் முதல் இசையமைப்பாளராக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விதத்தில் ஒருவராக இளையராஜா இருக்கிறார்.

சிம்ஃபனி என்பது மேற்கத்திய இசை விழாக் களிலும் திருமண விருந்துகளிலும் நடைபெறக்கூடிய ஒரு நிகழ்வு ஆகும். இதில் இளையராஜாவுக்கு முன்னோடியான பீத்தோவன் போன்றவர்கள் போட்டு வைத்த தடத்தில்தான் இளையராஜா நடந்து சென்றுள்ளார். v ஆனால் அவர் புதிய தடம் நமக்கு அமைத்துக் கொடுத்தது அவருடைய திரை இசைப் பாடல்களில் தான். என்னென்ன மாற்றங்கள் இளையராஜா தமிழ்த் திரை இசையில் செய்துள்ளார் என்பதை பார்ப்பது இந்தக் கட்டுரையின் நோக்கம்.

எனது வயதிலுள்ள இசை ரசிகர்கள் நான் சொல்லும் திரைப்படப் பாடல் வேறு பாட்டைப் புரிந்து கொள்ள முடியும்.

இளையராஜா வருவதற்கு முன்னர் ஒரு பாடல் ஓடக்கூடிய நேரம் இரண்டரை நிமிடங்களாக இருந்தது. சில பாடல்கள் மூன்று நிமிடங்களாக இருந்தன. வெகு அபூர்வமான பாடல்கள் ஐந்து நிமிடம் ஓடும். இசைத்தட்டு இருந்த காலங்களில் பாதிப் பாடல் ஒரு பக்கத்தில் ஒலி பரப்பாகி, பிறகு இரண்டாவது பக்கத்தைத் திருப்பிப் போட்டு ஆம்ப்ளிபைரில் ஓடவிட்டு மீதி பாதிப் பாடலைக் கேட்கக்கூடிய சூழ்நிலை இருந்தது.

காலப்போக்கில் ஒரே பக்கத்தில் ஆறு பாடல்கள், பத்துப் பாடல்கள் என பதிவாகிவந்தன.

இளையராஜா வருவதற்கு முன்பு வரை ஒரு பாடலின் சராசரி நீளம் இரண்டரை நிமிடங்கள் அல்லது மூன்று நிமிடங்கள்.

இப்படியிருந்த பாடலின் நீளத்தை அதிகப் படுத்தியது இளையராஜா செய்த முதல் மாற்றமாகும். இளையராஜா வந்த பிறகுதான் ஒரு பாடலை நாலு நிமிடங்கள், நாலரை நிமிடங்கள் என்று மாற்றினார்.

எம்.எஸ். விஸ்வநாதன்லி ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன் போன்ற இசை மேதைகள் பிற்காலத்தில் அமைத்த திரையிசைப் பாடல்கள் சற்று நீளமாக இருந்திருக்கலாம். ஆனால் 80 சதவீதம் பாடல்கள் நான் மேலே குறிப்பிட்ட அளவில்தான் இருந்தன. பாடல்கள் சட்டென்று முடிந்துவிடும். பாடல்கள் கதைக்கு எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என்பத னால் அவ்வாறு செய்தனர். ஆனால் இதில்தான் இளையராஜா முதன்முதலாகப் புதுமையைப் புகுத்தினார். அப்போது பாடல்கள் கதையோடு தொடர்புடையதாக அதிகம் இருந்தன. எனவே பாடல்கள் மூலம் பாத்திரங்களின் உணர்ச்சிகளைச் சொல்வது மட்டுமே நோக்கமாக இருந்தது.

அதனால் பாடல்கள் மூலமும் கதைக்கு வலு சேர்க்க வேண்டிய அவசியம் இருந்தது. குறிப்பாக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மற்றும் கண்ணதாசன் பாடல் வரிகள் அந்த கடமையை சரியாகச் செய்தன. இசைக்கருவிகளுக்கான முன்னுரிமை தருவது அப்போது அதிகமாக இல்லை. பாத்திரங்களின் உணர்ச்சிகளை வெளிக்காட்டும் ஒரு வடிகாலாக பாடல்களை அவர்கள் பயன்படுத்தினர்.

அதேசமயம் இளையராஜா வந்தபிறகு மின்னணு இசைக்கருவிகளின் வருகை அதிகமாகிவிட்டது. ஆகவே அவற்றை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று விரும்பியபொழுது, பாடல் வழி உணர்ச்சிகளை கேட்பவருக்கு கடத்துவதைவிட, இசை மூலம் கடத்துவதை இளையராஜா செய்துவந்தார்.

இது ராஜா செய்த மிக முக்கியமான மாற்றமாகும். காரணம் ல்ழ்ங்ப்ன்க்ங்.. ண்ய்ற்ங்ழ்ப்ன்க்ங் என்னும் முன்இசை மற்றும் இடையிசைக்கு அதிகம் கருவிகளை பயன்படுத்த வேண்டியது இருந்ததால் அதிக நேரம் எடுத்துக்கொண்டார்.

அவற்றை தன்னுடைய இசைக்குப் பயன்படுத்தி வெற்றிகண்டவர்களில் முதன்மையானவர் இளைய ராஜா.

இளையராஜா அவர்கள் செய்த பெரிய மாற்றம் பல்லவிகளில் அமைந்தது. இளையராஜாவுக்கு முன்பு வரை பல்லவி என்பது அளந்துவைத்த மாதிரி மூன்று சீர்களிலோ நான்கு சீர்களிலோ வரும் உதாரணமாக

*வீடு வரை உறவு

வீதி வரை மனைவி

காடு வரை பிள்ளை

கடைசி வரை யாரோ "

இந்தப் பாடலில் மூன்று சீர்கள் வந்துள்ளன

"இந்த மன்றத்தில் ஓடிவரும்

இளம் தென்றலை கேட்கின்றேன்

என் கண்மணி தவிக்கின்றாள்

அவள் கவலைகள் தீராயோ"

தனித்தனியாக மூன்று சீர்கள் வந்துள்ளன

"சட்டி சுட்டதடா

கைவிட்டதடா

புத்தி கெட்டதடா

நெஞ்சைத் தொட்டதடா"

இந்தப் பல்லவி இரண்டு சீர்களோடு வந்துள்ளது

... இப்படி அளந்துவைத்த மாதிரிதான் பல்லவி கள் இருக்கும்

இளையராஜா இதிலும் மாற்றம் செய்தார்.

பல்லவி சீர்களின் எண்ணிக்கையைக் கூட்டினார் . சீர் என்றால் வார்த்தை என்று வைத்துக்கொள்ளுங்கள். பழைய பாடல்களில் இரண்டு சீர் அல்லது நான்கு சீர் வரை இருந்த பல்லவிகளை ஆறு சீர், ஏழு சீர், எட்டு சீர் வரை கூட்டியமைத்தார்

*ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குஞ்சு வந்ததுன்னு

யானைக்குஞ்சு சொல்லக்கேட்டு பூனைக்குஞ்சு சொன்னதுண்டு

கதையிலதானே. இப்போ காணுது பூமி

இது மட்டும்தானா.. இன்னும் இருக்குது சாமி*

"தேன் சிந்துதே வானம் உனை

எனை தாலாட்டுதே

மேகங்களே தரும் ராகங்களே

எந்நாளும் வாழ்க"

"சிறு பொன்மணி அசையும்…

அதில் தெறிக்கும் புது இசையும்

இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்

நிதமும் தொடரும் கனவும் நினைவும்

இது மாறாது…

ராகம் தாளம் பாவம் போல"

இந்த பல்லவியின் சீர்கள் அறுபடாமல் தொடர்ந்து பத்துக்கு மேல் அமைந்துள்ளன. இவ்வளவு நீளமாக பல்லவி அமைத்தார்

"தேன் சிந்துதே வானம்" பாடல் கம்போஸிங் பற்றி குறிப்பிடும்போது இளையராஜா குறிப்பிட்ட ஒரு செய்தியை யூட்யூபில் கேட்டேன்

(இதுபற்றி இளையராஜா ஒரு மேடையில் குறிப்பிடும்போது *நான் சொன்ன தத்தகாரத்தை (ட்யூனை) கேட்காத மாதிரியே புகைபிடித்துக் கொண்டிருந்தார் கண்ணதாசன். பல்லவியை சொல்லிமுடித்தவுடன் தூ என்று எச்சிலைத் துப்பினார். சிகரெட் எச்சிலை துப்பினாரா டியூன் சரியில்லை அல்லது சிச்சு வேஷன் சரி இல்லை என்று துப்பினாரா என்று தெரியாது. கவனிக்காத மாதிரியே இருந்த கவிஞர் எழுதிக் கொள் என்று சொல்லி மேலே கண்ட வார்த்தை களை சரம்சரமாக சொல்ல, வரிகள் வந்து விழுந்தன.) இந்தப் பாடல் ஜி.கே. வெங்கடேஷ் (பொண் ணுக்கு தங்க மனசு- படம்) அவர்களுக்கு இளையராஜா உதவியாளராக இருந்தபோது உருவான பாடல்.

நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல இரண்டு சீர்கள் நான்கு சீர்களுக்கு எழுதிப் பழகிய கண்ணதாசன் இத்தனை சீர்கள் உள்ள பல்லவிக்கு எழுதிவிடுவாரா என்ற ஐயம் இளையராஜாவுக்கு இருந்தது.

ஆனால் கவிஞர் எளிதாக முடித்துத் தந்து விட்டார்.

மூன்றாவது மாற்றம் இடையிசையில் செய்த மாற்றம்.

இளையராஜா வருவதற்கு முன்பு இந்த இடையிசை எத்தனை சரணங்கள் இருந்தாலும் அத்தனை சரணங்களுக்கும் ஒரே மாதிரி இடையிசை யைப் பயன்படுத்தினர் முந்தைய இசை அமைப் பாளர்கள். ஆனால் இளையராஜா வந்தபிறகுதான் சரணத்துக்கு சரணம் இடையிசை வித்தியாச வித்தியாச மாக மாறி மாறி அமைக்கப்பட்டது.

உதாரணமாக "வெண்ணிற ஆடை" படத்தில் இடம்பெற்ற 'கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்லச் சொல்ல 'பாடலின் சரணங்கள் கீழ்க்கண்ட மாதிரி அமைந்திருக்கும்.

தென்றல் இன்று பாடும் பாடல் என்ன என்ன

சின்னக் கிளிகள் சொல்லும் கதைகள் என்ன என்ன

கண்ணும் நெஞ்சும் ஒன்றுக்கொன்று

பின்னப் பின்ன

என்னைத் துன்பம் செய்யும் எண்ணம் என்ன என்ன

அக்கம் பக்கம் யாரும் பார்த்தால்

வெட்கம் வெட்கம்

அன்பே உன்னை நேரில் கண்டால்

நாணம் நாணம்

ஆசை நெஞ்சை சொல்லப்போனால்v அச்சம் அச்சம்

அன்றும் இன்றும் அதுதான் நெஞ்சில்

மிச்சம் மிச்சம்

இதுபோல் சரணங்கள் அமைந்திருக்கும். இந்த சரணங்களுக்கு இடையே வரக்கூடிய இடை இசையும் ஒரே மாதிரி அமைந்திருக்கும். அதாவது முதல் சரணத்தில் இடையே புல்லாங்குழல் வயலின், வீணை, வயலின், கித்தார், தபேலா என்று வந்திருந்தால் மூன்றாவது சரணத்திற்கும், நான்காவது சரணம் இருந்தால் நான்காவது சரணத்துக்கும் இதே இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டு இருக்கும்.

ஆனால் இளையராஜா வந்தபிறகு வித்தியாச மான சரணங்களைப் பயன்படுத்திவந்தார். அதே போல வித்தியாசமான இசைக் கருவிகளையும் ஒவ்வொரு சரணத்திற்கும் மாறி மாறி தந்துகொண்டு வருவது அவரது இசைப் பாணியாகும்.

எடுத்துக்காட்டாக மண்வாசனை படத்தில் வரக்கூடிய, பொத்தி வச்ச மல்லிகை மொட்டு பாடலில் ஒரு சரணம் முடிந்தவுடன் நாதஸ்வரம் மேளங்கள் முழங்கி ஒரு திருமணக் காட்சி நம் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தும். அதற்குத் தகுந்ததுபோல் வைரமுத்து எழுதிய பாடல் வரிகள் கீழே கண்டமாதிரி வந்துநிற்கும்

*மாலையிட காத்து

அல்லியிருக்கு

தாலி செய்ய நேத்து

சொல்லியிருக்கு

பெ: இது சாயங்காலமா

மடி சாயும் காலமா

ஆ: முல்லைப் பூச்சூடு

மெல்லப் பாய் போடு

பெ: அட வாடைக் காத்து சூடு ஏத்துது"

மேற்கண்ட சரணம் முடிந்தபிறகு அடுத்த சரணம் ஆரம்பிப்பதற்கு முன்பு பழைய மாதிரி அதே நாதஸ் வரம் மேளம் ஒலிக்காது. மாறாக இரண்டு விதமான சுருதிகளில் இரண்டுவிதமான புல்லாங்குழல்களையும் வயலின் இசையையும் பயன்படுத்தியிருப்பார்.

இதுபற்றி ஒருமுறை வைரமுத்து குறிப்பிடும் போது சொன்னார், "இளையராஜாவும் நானும் பாரதிராஜாவும் ஓரிடத்தில் அமர்ந்து இசை கம்போஸ் செய்யப்பட்ட பாடல் அல்ல இது.? அனைவருக்கும் சூழ்நிலையை பாரதிராஜா சொல்லிவிட்டார். மேற்கண்ட வரிகளில் திருமணம் நடப்பதுபோல நான் (வைரமுத்து) எழுதியிருப்பது இளையராஜாவுக்குத் தெரியாது.

இளையராஜா இவ்வாறு இசையமைக்கப் போகிறார் என்று எனக்குத் தெரியாது.? நான் தனியாக பாடல் வரிகளை எழுதிவருகிறேன். இளைய ராஜா தனியாக மேளம், நாதஸ்வரம் கலந்த இடையிசை அமைத்துக் கொண்டுவருகிறார். இருவரும் எதிர் பார்க்காத இருவருக்கும் இன்ப அதிர்ச்சி தருவதுபோல பாடல் வரிகளும் இசையமைப்பும் தற்செயலாக அமைந்துவிட்டது" என்று சொல்லியிருப்பார் இவ்வாறுதான் பெரும்பாலான பாடல்களில் அவர் மாறுபட்ட இசையைத் தந்து மகிழ்விக்கிறார்.

இப்போது வரக்கூடிய இளையராஜா பாடல் என்றாலும் சரி ஏ.ஆர். ரகுமான் பாடல் என்றாலும் சரி ஒரே ஒரு சரணத்தில் பாடல் முடிந்துவிடுகிறது. பாடல் இரண்டு சரணங்களோடு பதிவுசெய்யப்பட்டிருந்தாலும் காட்சிப்படுத்தும்போது ஒரு சரணம் மட்டுமே படத்தில் இடம்பெறுகிறது இது இசைக்கு இழப்பாக அமைந்து விடுகிறது