விதைதான் உலகப்பொதுமொழி. உலக ஞானிகள் அனைவரும் எந்தக் கருத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றாலும், அவர்கள் கவிதை மொழியையே கையில் எடுத்தார்கள். அந்த வகையில் ஆன்மீக வெளிச்சத்தை ஏற்ற முனைந்த பாரசீக ஞானிகளும் கவிதைகளைக் கையில் எடுக்கத் தவறவில்லை.

ss

சூஃபி என்பதன் பொருள்

'சூஃபி' என்ற சொல் 'ஸோபி' என்ற கிரேக்க மொழிச் சொல்லிலிருந்து உருவானது. அரபி மொழியில் இதன் பொருள் தத்துவம், அறிவு என்று செ. ஞானன் (தத்துவ தரிசனங்கள், ப. 345) குறிப்பிடுகிறார்.

Advertisment

முஹம்மது நபி வாழ்ந்த காலத்தில் அவருடைய 'திண்ணைத் தோழர்கள்' 'அஹ்லுஸ்ஸுப்பா' என்று அழைக்கப் பட்டனர். 'ஸுப்பா' என்ற சொல்லிலிருந்து சூஃபி என்ற சொல் வந்ததாகவும் கருதுகின்றனர்

"கிறித்துவச் சமயத் துறவிகள் அணிகின்ற கம்பளி ஆடையை அரபியில் 'ஸுஃப்' (நன்ச்) என்பர். இதனையே ஆரம்பகால இஸ்லாமிய ஞானிகளும் தங்கள் ஆன்மீக பாதைக்குப் பெயராகச் சூட்டிக்கொண்டனர்" என்று ஜூலியன் பால்டெக் (ஙஹ்ள்ற்ண்ஸ்ரீஹப் ஒள்ப்ஹம் ஆய் ஒய்ற்ழ்ர்க்ன்ஸ்ரீற்ண்ர்ய் ச்ர்ழ் நன்ச்ண்ள்ம், ல்.15) என்ற ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.

பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த அல்ஹுஜ்வீரி என்பவரே சூஃபி என்ற சொல்லுக்கு வரையறை செய்தவராகக் கருதப்படுகிறது.. பாரசீக மொழியில் அவரால் எழுதப்பட்ட 'கஸ்ஃபுல் மஹ்ஜூப்' (திரைக்குப் பின்னால் தெரியும் காட்சி) என்ற நூலில் சூஃபி என்ற சொல்லுக்கான வரையறை கொடுக்கப் பட்டுள்ளது.

Advertisment

"சஃபா" என்றால் 'தூய்மை' என்று பொருள். சூஃபிகள் இதயத்தூய்மை பெற்றவர்களாக இருந்த படியால் தூய்மையைக் குறிக்கும் 'ஸஃபா' என்ற சொல்லிலிருந்து சூஃபி என்ற சொல் வந்திருக்க வேண்டும் என்ற கருத்தையே மிகச் சரியானதென அல்ஹுஜ்வீரி ஏற்றுக்கொள்கிறார் (சூஃபி வழி: இதயத்தின் மார்க்கம், ப.59-60)

பாரசீக சூஃபி ஞானிகள்

சூஃபி தத்துவத்தை வளர்ப்பதில் பாரசீகர்கள் முக்கிய பங்கு வகித்தனர். ரோதகி, ரூமி, அக்தர், நிஜாமீ, ஹாஃபீஸ், சனாய், ஷாம்ஸ் தப்ரிஸி, ஜாமி ஆகியோர் பாரசீக சூஃபி கவிஞர்களில் தலைச்சிறந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். கி.பி. 12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டு கள் சூஃபி இலக்கியத்தின் பொற்காலமாகக் கருதப் படுகிறது. பாரசீகத்தில் உருவான சூஃபி கவிஞர்களின் தாக்கமானது உலகம் முழுவதும் பரவியிருந்தது.

அவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்திய சூஃபி கவிஞர்கள் சிலரைப் பற்றி இங்குக் காண்போம்.

ரோதகி: இப்பெயரானது 'ருடாகி' அல்லது 'ரோடகி' என்றும் உச்சரிக்கப்படுகிறது. (கி.பி 858 முதல் 940 வரை) இவர் கவிஞர், பாடகர் மற்றும் இசைக் கலைஞர் ஆவார். ஈரானில் 'பாரசீக கவிதையின் நிறுவனர்' என்றும் தாஜீக் 'இலக்கியத்தின் தந்தை' என்றும் போற்றப்படுகிறார். இவர் பார்வையற்றவர் என்றும் கூறப்படுகிறது. ரோதகியின் 'திவான்' என்ற கவிதை தொகுப்பு ஒரு லட்சத்து எண்பதாயிரத்திற்கும் மேற்பட்ட வசனங்களைக் கொண்டது. ஆனால், அவற் றுள் பெரும்பாலானவை தொலைந்துவிட்டன என்று தெரிய வருகிறது.

ஹக்கீம் சனாய்: இஸ்லாமிய கவிதை உலகில் தசவ்வுஃப் எனப்படும் ஆன்மீகத்தை முதன்முதலாக பாடியவர் சனாய் ஆவார். அவர் தெற்கு ஆப்கானிஸ் தானில் பிறந்தார். இவருடைய கவிதைகள் டில்லி, குல்பர்கா, முல்தான் போன்ற ஊர்களில் ஆன்மீக மையங்களில் பாடமாக போதிக்கப்பட்டன. இவர் எழுதிய நூலின் பெயர் 'ஹதீகத்துல் ஹகாயிக்' (உண்மை யின் தோட்டம்) என்பதாகும். 'ஹதீகா' என்பது தோட்டத் தைக் குறிக்கும். இங்குத் தோட்டம் என்பது சொர்க்கத்தை குறிப்பிடுகின்ற அடையாளக் குறியீடாகும் என்பர்.

ஸனாயின் கவிதை:

"அவனது வாசலில்

முஸ்லிம் யார்? கிருத்துவன் யார்?

நல்லவன் யார்? கெட்டவன் யார்?

எல்லோரும் தேடுபவர்

அவனோ தேடப்படுபவன்"

ஃபரீதுத்தீன் அத்தார்: (அத்தர்-நறுமணம்)

இவர் வாசனை மூலிகைகள் விற்பனை செய்யும் கடையை வைத்திருந்தார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள போதிலும் இரண்டு நூல்கள் மட்டும் இவரை இன்றளவும் பேச வைக்கிறது.

1. மந்திகுத் தய்ர் (பறவைகளின் மாநாடு) என்ற ஆன்மீக நூல் அரபி மொழியில் எழுதப்பட்டுள்ளது. 2. தத்கிரத்துல் அவ்லியா (இறைநேசர்களின் நினைவாக) இது பாரசீக மொழியில் இயற்றப்பட்டது.

பறவைகளின் மாநாடு என்ற நூல் குறியீட்டு தன்மை கொண்ட காவியமாகும். 4600 பாடல்களைக் கொண்டது. 'சிமோர்' என்ற இராஜப் பறவையைத் தேடி 30 பறவைகள் பயணம் மேற்கொள்கின்றன. அப்பொழுது அப்பறவைகள் படும் துயரங்களைக் குறியீட்டுத் தன்மையுடன் இந்நூல் விளக்குகிறது.

மௌலானா ஜலாலுதீன் ரூமி:

ரூமி என்றால் 'இறைக்காதல்' என்றும் 'பரவசம்' என்றும் பொருள். பாரசீகத்தில் உள்ள 'ரூமி' என்ற ஊரில் பிறந்ததால் ஜலாலுதீன் ரூமி என்று அவரது இயற்பெயருடன் சேர்த்து அழைக்கப்பட்டார். இவர் பாரசீகக் கவிதை உலகில் முடிசூடா மன்னராக விளங்கி னார். அத்தார், சனாய் ஆகியோரைத் தனது குருவாகக் கொண்டிருந்தாலும், குருவை மிஞ்சிய சீடராகப் புகழின் உச்சியில் இருந்தார். ரூமி தனக்கென உருவாக்கிய ஆன்மீகப் பாதையே மௌலவியா தரீக்கா வாகும். அவருடைய காலத்தில் 'ஸமா' என்ற சுழல் நடனம் பிரபலமாகி இருந்தது. 'சுழலும் தர்வேஷ்கள்' என்று அவருடைய சீடர்கள் அழைக்கப்பட்டனர்.

ரூமியும் ஒரு சுழலும் தர்வேஷாக இருந்தார்.

அவருடைய இறுதி ஊர்வலத்தின்போது முஸ்லிம்கள், கிறித்துவர்கள் மற்றும் யூதர்கள் என மூன்று மார்க்கங்களைச் சேர்ந்தவர்களும் திரண்டு வந்து அவரது உடலை சுமந்துச் சென்று இறுதி மரியாதை செய்தார்கள் என்று கூறப்படுகிறது.

மௌலானா ரூமி தனது குருவாக 'ஷம்ஸ் தப்ரேஸ்' என்ற ஞானியை ஏற்றுக்கொண்டாரென்றும் பிறகே ரூமியின் ஆன்மீகத் தேடலில் கவிதைகள் பொங்கி வழிந்ததாகக் கூறப்படுகிறது. ரூமியின் தலைசிறந்த காவியமான 'மஜ்னவி' உலகப் புகழ்பெற்றது. கதை களின் கருவூலமாக ஏறக்குறைய 22,000 பாடல்கள் அல்லது 25,700 பாடல்கள் உள்ளன என்று அறிஞர்கள் இருவேறு கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர்.

"தாகித்தவர் இவ்வுலகில்

தண்ணீரைத் தேடுகின்றனர்

தண்ணீரும் தேடிக் கொண்டிருக்கிறது

தாகம் கொண்டவர்களை"

என்று பாடியுள்ளார்.

"கால் ஒடிந்து விட்டால்

கவலைப்படாதே

சிறகு ஒன்று தருவான் கருணையாளன்"

என்ற கவிதையில் கருணையாளனின் கொடை யைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

ஷா அதி

பாரசீகத்தில் உள்ள சராஜ் என்ற ஊரில் பிறந்தார்.

பாக்தாத்தில் நிஜாமியா பல்கலைக்கழகத்தில் படித்தார். சூஃபி தரீக்காக்களில் 'நக்சபந்தியா' என்ற தரீக்கா பாதையைப் பின்பற்றுபவராகவும், 'சுஹ்ரவர்த்தியா' தரீக்காவின் நிறுவனரான சுஹ்ரவர்த்தியோடும் நெருக்கமாக இருந்தார். இவர் எழுதிய இரண்டு காவியங்களான 'குலீஸ்தான்' (ரோஜா தோட்டம்), 'பஸ்தான்' (பழத்தோட்டம்) முதலானவை ஆன்மீக உலகின் ஈடு இணையற்றவையாக கருதப்படுகின்றன.

தன்னைத்தானே பழித்துக் கொள்கின்ற சுய பழிப்பு என்பது சூஃபி பயிற்சியில் 'முஹாசபா' என்று அழைக்கப்படுகிறது. "உங்களை நீங்களே பழிக்காவிட்டால் அடுத்தவர் பழிப்பதை உங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது"என்று சாஅதி சுயபழிப்பு குறித்துக் கூறுகிறார். இப்பயிற்சியின் மூலமாக தன்னுடைய பலம், பலவீனம் என்பதெல்லாம் தெரியவரும் என்கிறார்.

குலிஸ்தான் என்ற நூல் 8 அத்தியாயங்களைக் கொண்டது. 171 சிறுகதைகளும் 72 நீதிகளும் உவமானங்களுடன் கூடியதாக உள்ளன. ஒவ்வொரு கதையின் முடிவிலும் ஒரு நீதி சொல்லப்பட்டுள்ளது. அவருடைய மற்றொரு நூலான போஸ்தானும், குலிஸ்தானைப் போலவே எழுதப் பட்டிருந்தாலும் புகழ்பெறவில்லை என்று கூறப்படுகிறது.

தத்துவஞானி இமாம் கஸாலி

பாரசீகத்தின் வடகிழக்கில் உள்ள குராஸான் மாகாணத்தில் 'தூஸ்' என்ற கிபி 1057 இல் பிறந்தார். சூஃபி ஞானிகளான பில்தாமா, மன்சூர் ஹல்லாஜ், உமர் கய்யாம், ஃபிர்தௌசி ஆகியோர் பிறந்த ஊராகும். நிஷாப்பூர் கல்லூரியில் கல்வி பயின்று விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

இமாம் கஸாலி தம்முடைய தத்துவங்களின் வாயிலாகச் சிந்தனை சுடரேற்றிய ஞானியாக விளங்கினார். உள்ளத்தைப் பாதுகாக்கும் நான்கு வழிகளாக அவர் கூறுவன. 1. ஆசையைக் குறை, 2. நிதானத்துடன் இரு, 3. மக்களுக்கு அறிவுரை கூறு, 4. பணிவன்போடு வாழ். ஆசைகளைக் குறைக்க மரணத்தை அருகே வைத்துப் பார் என்கிறார். மேலும் மனிதர்களின் இவ்வுலக வாழ்க்கையானது மூன்று மணி நேரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு மணி நேரம் என்பது கடந்துபோன இறந்த காலமாகும்.

தற்போது வாழ்கின்ற நிகழ்காலமானது ஒரு மணி நேரமாகும். உங்களுக்கென உரிமையாக இருக்கின்ற எதிர்கால வாழ்க்கை ஒரு மணி நேரம் என்று கூறுகின்றார்.

'காலம் பொன் போன்றது' என்ற பழமொழியை நினைவுறுத்தும் வகையில் அவரது கூற்று அமைந்துள்ளது நோக்கத்தக்கது. 'நாவைக் கட்டுப்படுத்துங்கள் அது மற்ற உறுப்புகள் அனைத்தையும்விட பிடிவாதம் கொண்டது, துரோகம் நிறைந்தது" என்றும் கூறுகின் றார். 'யாகாவராயினும் நா காக்க' என்று வள்ளுவன் உரைத்ததுபோல கஸாலியும் தம் மக்களை எச்சரித் துள்ளார் என்பதை அறிய முடிகிறது.

ராபியா பஸரியா:

பெண் சூஃபிகளில் முதன்மையானவராக அறியப்படுகிறார். இவரது வேறு பெயர்கள்: ராபியா, அதவியா, ராபியத்துல் அதவியா என்பதாகும். ஈராக் நகரில் உள்ள 'பஸ்ரா' என்ற ஊரைச் சேர்ந்த காரணத்தினால் இவர் 'பஸரியா' என்று அழைக்கப் பட்டார். இவருடைய காலம் கி.பி. 717 முதல் கி.பி.801 ஆகும். 'அதீ' என்ற பரம்பரையைச் சேர்ந்தவர். ஆகையால் அதவியா என்று அழைக்கப்பட்டார். இறைவனைக் காதலனாக வரிந்து கட்டிக்கொண்டு பாடல்களைப் பாடியுள்ளார். இவர் குடும்ப வறுமை யின் காரணமாக அடிமையாக விற்கப்பட்டு பின்னர் அவருடைய எஜமானால் விடுதலை செய்யப் பட்டார் என்று கூறப்படுகிறது. இவருடைய தெய்வீகக் காதலானது பாக்தாத்தில் சூஃபிசம் செழிக்க வகை செய்தது. பின்னர் பெர்சியா, பாகிஸ்தான், இந்தியா, வட ஆப்பிரிக்கா மற்றும் ஸ்பெயின் வரை பரவியது என்று கூறுகின்றனர். ராபியத் பசரியாவின் கவிதை ஒன்றில் ஓ என் நாயனே!

இவ்வுலகில் எனக்கு

என்னவெல்லாம் தர இருக்கிறாயோ

அவைகளை உன் எதிரிகளுக்குக் கொடு

அந்த உலகில் எனக்கு

என்னவெல்லாம் தர இருக்கிறாயோ

அவைகளை உனது நண்பர்களுக்குக் கொடு

என்று பாடியுள்ளார். இப்பாடலின் வாயிலாக ஆன்மீகத் தேடலில் சூஃபி ஞானிகள் தங்களுக்கென்று எதையும் ஏற்றுக்கொண்டதாகவோ, சேர்த்துவைத்துக் கொண்டதாகவோ தெரியலில்லை என்பது புலனாகி றது.

இப்னு அரபி : இவர் ஸ்பெயினில் உள்ள முர்ஷியா என்ற ஊரில் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது. சூஃபி ஞானிகளைத் தேடி டுனிசியா, தில் மஸான், உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பயணித்தார். ஹிஜ்ஜிரி 603இல் எகிப்துக்குச் சென்று பல நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களில் கண்டனத் துக்குரிய செய்திகள் இருந்ததால் உலமாக்கள் அவரைக் காஃபிர் என்று அழைத்ததாக கூறப்படுகிறது. இவர் பல்வேறு அரபு நாடுகளுக்கும் அலைந்துதிரிந்து இறுதியாக 75-ஆம் வயதில் தமாஸ்கசில் இறந்தார் என்று கூறப்படுகிறது.

விளைவுகள்

சூஃபி தத்துவம் இந்தியாவில் பரவிய காரணத்தி னால் பலவித மாற்றங்கள் ஏற்பட்டன. மதங்களுக்கு இடையிலான தத்துவ ஒற்றுமைகள், கொள்கைகள் மக்களிடையே பரவலாகக் கவனம் பெற்றன. பல்வேறு சமயத்தினருக்கிடையே ஒற்றுமை ஏற்பட்டது. பிறவி பேதத்தைப் பேசும் வருணாசிரமத்தை இசுலாம் அடியோடு மறுத்ததால் ஒடுக்கப்பட்ட மக்கள் இசுலாத் தின்பால் ஈர்க்கப்பட்டனர். சமய மறுமலர்ச்சி ஏற்பட்டு குருநானக், கபீர் தாஸ், சீரடி சாய்பாபா போன்றோரின் கருத்துகளால் மக்கள் கவரப்பட்டு புதிய கோட்பாடு கள் உருவாயின. கலைகள், இலக்கியங்கள் என அனைத்தி லும் ஆன்மீகத்தேடல் ஊடுருவிப் பாய்ந்தது.