பாமர இலக்கியத்தை இதயத்துடிப்போடு படைத்திருக்கும் இயக்குநர் கஸ்தூரி ராஜா, இந்த படைப்பு சார்ந்து என்ன நினைக்கிறார் என்பதை அறிய அவரிடம் பேசினோம். மிகவும் உற்சாகமாகப் பேசிய அவர்...
"இது என் ஆறு வருடத் தவம், இலக்கிய உழைப்பு. இதை எப்படி எழுதி முடித்தேன் என்று எனக்கே தெரியவில்லை. இதன் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் எனக்கே வியப்பாக இருக்கிறது. ஒரு வேள்வி போலவே இந்த பாமர இலக்கியத்தை எனக்குத் தெரிந்த மொழியில் எழுதி இருக்கிறேன். நான் என் முப்பது வயது வரை வாழ்ந்த வாழ்க்கையை, அதில் நான் பார்த்ததை, நான் சந்தித்ததை, நான் கண்ட கிராமிய இயல்புகளை, அழகை, அங்கிருந்து கிடைத்த படிப்பின் அனுபவத்தை, நான் அங்கே கண்ட வறுமையை, நான் ருசித்த காதலை, நான் அறிந்த உறவுகளை, என்னிடம் வந்து சேர்ந்த கிராமியப் பண்புகளை, இப்படி எல்லாவற்றையும் நான் என் எழுத்தில் பதிவு செய்திருக்கிறேன். இது இன்றைய சமூகத்திடமும் இளம் தலைமுறையிடமும் போய்ச்சேர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.' என்றவர் இதுதான் என் முதல் நூல் என்றும் ஆச்சரியப்படுத்தினார்.
எனக்குத் தெரிந்ததெல்லாம் கிராமத்தின் இதயத்துடிப்பு மட்டும்தான். அது குறித்து இன்னும் 40 கதைகளை திரைப்படமாக எடுக்க எழுதி வைத்திருக்கிறேன். அதற்கான சூழலையும் ஆயுளையும் எனக்கு இயற்கை கொடுக்க வேண்டும் என்கிற கஸ்தூரிராஜா அடுத்து ‘என் பழைய காதல் கடிதம்’ என்ற இன்னொரு நூலையும் எழுதி முடித்திருப்பதாகத் தெரிவித்தார்.
’பாமர இலக்கியத்தை’ எழுதத் தூண்டியது எது?’ என்ற கேள்வியை அவரிடம் நாம் வைத்த போது...
இன்று நகரமயமாக்கப்பட்ட சமூதாயத்தில் நாம் பார்த்துவருகிற மாற்றங்கள், சந்தித்து வருகிற சீரழிவுகள், இவை எல்லாம் பெரும் வலியைத் தருகின்றன. எல்லாமே தலை கீழாக இருக்கிறது. நமது பண்பாடும் கலாச்சாரமும் கடை வீதிக்கு வந்துவிட்டன.
ஆண்களும் பெண்களும் தங்கüன் நல்லியல்புகளையும் அடையாளத்தையும் இழந்து வருகிறார்கள்.
கிராமத்துப் பெண்கüன் முகத்தில் இருக்கும் வெüச்சத்தை நகரியப் பெண்கüடம் பார்க்க முடியவில்லை. நகரியம் நம்மை உலர்ந்துபோக வைக்கிறது. நாம் இயல்பு கெட்டுப் போய்க்கொண்டு இருக்கிறோம். நம் வாழ்வின் போக்கே திசைமாறிச் செல்கிறது. இப்போது ஊடகங்கள் நுழைந்து, கிராமியத்தின் மிச்ச சொச்ச அழகையும் நிறம் திரிய வைத்துக்கொண்டு இருக்கிறது.
காந்தி கிராம பல்கலைக்கழகம் மூலம் ஒரு மலைக் கிராமத்திற்கு ஆறேழு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றபோது, அங்கே எல்லாம் அப்படியே இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அங்கே இருக்கும் பழங்குடிப்பெண்களும் சுடிதாரில் இருந்தபோது சற்று ஏமாற்றம் ஏற்பட்டது. இதைத் தவறு என்று சொல்லவில்லை. இது காலமாற்றம். அதேபோல் நான் பார்த்த வயல்வெüக் காட்சிகள் இப்போது மாறி வருகின்றன. விவசாய வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை. படித்தவர்கள் விவசாய வேலை செய்யக்கூடாது என்ற நினைப்பு நமக்கிடையே உருவாகிவருகிறது. இதெல்லாம் சமூகம் சார்ந்த இழப்பு” என்றார் கவலையாய்.
பின்னர் அவரே....
ஒரு காலத்தில் அம்மாதான், நமக்கு நிலவைக் காட்டி சோறூட்டுவாள். அன்பையும் பண்பையும் அறிவையும் நமக்குத் தன் கைவழியே ஊட்டுவாள். அதனால் அம்மாவையே நாம் நம் பால்யத்தில் சுற்றிச் சுற்றி வந்தோம். குடும்பம் சார்ந்து அன்பும் பண்பும் உள்ளவர்களாக வளர்ந்தோம்.
இப்போது பல வீடுகüல் வேலைக்காரர்கள் தான் குழந்தைக்குப் பால் கொடுக்கிறார்கள். உணவை ஊட்டுகிறார்கள்.
அதனால் இன்றைய குழந்தைகள் காலையில் எழும்போதே அவர்கüன் பெயரைச் சொல்லிக்கொண்டுதான் எழுகின்றன. அம்மாவைத் தேடுவதில்லை.
இது போதாதென்று, இன்று நம் பிள்ளைகளும் இளைஞர்களும் ஆண்ட்ராய்டு போன்கüடம் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள். நாம் யார்? எங்கிருந்து வந்தோம்? நம் வேர் எது? எதை நோக்கி நகர்கிறோம்? என்கிற புரிதல்கள் எவரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. சமூக அக்கறை நம் எல்லோரிடமும் குறைந்துவிட்டது. பெண் விடுதலை என்பதும் கூட பொருள் மாறி, பொருளற்ற ஒன்றாகச் சிதைந்து வருகிறது. பெண்ணுக்குத் திருமணமும் குழந்தையும் தேவையில்லை. உறவின்பம் மட்டும் போதும் என்கிற குரலை சிலரிடம் கேட்க முடிகிறது. பொதுவெüயிலும் பண்பியல் குறைந்துவிட்டது. வெüயிடங்கüல் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது கூட பலருக்கும் தெரிவதில்லை.
அது அதுவும் அதது போல் இல்லை. மாற்றம் என்ற பெயரில் நாம் ஏமாற்றத்தை நோக்கியே விரைந்து கொண்டு இருக்கிறோம். இதெல்லாம் கோபத்தை உண்டாக்குகின்றன. அந்தக் கோபம் வலியாக மாறுகிறது. அந்த வலிதான் இப்படி எல்லாம் என்னை எழுதவைக்கிறது. நல்லவற்றை நம் இளைய தலைமுறையினரிடம் விதைக்க வேண்டுமே என்ற ஆசையில் இதை மக்கüடம் கொண்டு வந்திருக்கிறேன்” என்றார் அழுத்தமாக.
இந்த நூலுக்கு தமிழ்ச் சமூகத்தின் வரவேற்பு எப்படி இருக்கிறது? என்றோம். கஸ்தூரிராஜாவோ “ படித்தவர்கள், கிராமியத்தின் மதிப்பை உணர ஆரம்பிக்கிறார்கள். இந்த நூலை மாணவர்கள் சிலர் ஆய்வுக்கு எடுத்திருக்கிறார்கள். அது மன நிறைவைத் தருகிறது. என்றார்.
இந்த தேர்ந்த படைப்பாüயின் அவநம்பிக்கையை, சாகித்ய அகாடமி போன்ற அமைப்புகள் உடைத்தெறிய வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பமும். நல்ல இலக்கியங்கள் கொண்டாடப்பட வேண்டும். இல்லையேல் மொழி தன் எதிர்காலத்தை இழந்துவிடும்.