பெரும்பாலான நாட்களிலும் மாலை நேரத்தில் போதவிரதன் கடைத் தெருவிற்குச் செல்வதுண்டு.

"என்ன கூட்டம்!'' அவன் எப்போதும் கூறுவான்.

கடை வீதியில் மக்கள் கூட்டம்... ஆட்களின் தோள்களை உரசாமல் நடக்க முடியவில்லை. காய்கறி, மீன், பல வகையான துணிகள்... இப்படி என்னென்னவோ பொருட்களை வாங்குவதற்காக மக்கள் எப்போதும் சாயங்கால வேளைகளில் தெருவில் நெரிசலாக நடந்து கொண்டிருந்தார்கள்.

dd

Advertisment

ஒரு மாலைப் பொழுதில் கடுமையான வெறுப்புடன் போதவிரதன் கூறினான்: "இது என்னவொரு தொல்லை! இந்த மக்கள் அனைவரும் எதற்காக வெளியே வந்து நடந்து திரிகிறார்கள்?'' மக்கள் அதைக் கேட்டார்கள். மறுநாள் ஆட்கள் வரவில்லை. தெரு காலியாகக் கிடந்தது. கடைகளில் விற்பனை செய்பவர் கள் இல்லை. விலை மதிப்புள்ள விற்பனைப் பொருட்கள் ஆளில்லாமல் கிடந்தன.

வழக்கம்போல சாயங்கால நடைப் பயணத்திற்காக வெளியே வந்த போத விரதன் கடைத் தெருவின் வழியாக தனியாக நடந்தான். திறந்து கிடக்கும் கடைகளில் திறந்து கிடக்கும் விற்பனைப் பொருட்கள்! எனினும், எதையும் எடுப்பதற்கு போதவிரதனுக்கு மனம் வரவில்லை.

ப்