தேவாகர் மாநிலத்தின் திவானான சர்தார் சுஜன் சிங் முதுமையை அடைந்த பிறகு, கடவுளை நினைக்க ஆரம்பித்தார்.

அரசரிடம் சென்று அவர் கூறினார்:

" ஒடுக்கப்பட்ட மக்களின் நண்பரே! இந்த அடிமையாகிய நான் உங்களிடம் நாற்பது வருடங்கள் சேவை செய்திருக்கிறேன்.

இப்போது சிறிது காலத்திற்கு கடவுளுக்கு சேவை செய்வதற்கான அனுமதியை உங்களிடம் நான் கேட்கிறேன். இன்னும் கூறுவதாக இருந்தால், இப்போது என் உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது. மாநிலத்தின் நிர்வாகத்தைக் கவனிக்கும் அளவிற்கு என்னிடம் சக்தி இல்லை. எனக்கே தெரியாமல் தவறு ஏதாவது நேர்ந்து, என் பெயரைக் கெடுத்துக்கொள்வதற்கு நான் விரும்பவில்லை.

இத்தனை வருட சேவையில் நான் சம்பாதித்து வைத்த பெயரைப் பாழாக்கிக் கொள்வதை நான் விரும்பவில்லை.''

நீண்டகால அனுபவத்தையும் திறமையையும் கொண்ட அந்த திவானின் மீது மிகுந்த மரியாதையை அரசர் வைத்திருந்தார். தன் பணியைத் தொடர்ந்து செய்யும்படி அவரை மன்னர் கேட்டுக்கொள்ள முயற்சித்தார்.

ஆனால், அதற்கு திவான் ஒத்துக்கொள்ளவில்லை.

புதிய திவானை அவரே தேர்வு செய்யவேண்டும் என்ற நிபந்தனையின் பெயரில் அவரின் வேண்டுகோளை அரசர் ஏற்றுக்கொண்டார்.

மறுநாள் நாட்டிலுள்ள பிரதான நாளிதழ்களில் இந்த விளம்பரம் பிரசுரமாகி வந்திருந்தது: தேவாகர் மாநிலத்தின் திவானாக பணியாற்றுவதற்கு உரிய ஒரு மனிதர் தேவைப்படுகிறார்.

இந்த வேலைக்குப் பொருத்தம் என்று தங்களை நினைக்கக்கூடிய நபர்கள் இப்போதைய திவானான சர்தார் சுஜன் சிங்கை அணுகவும். ஒருவர் பட்டதாரியாக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை.

ஆனால், நல்ல உடல் நிலையுடன் இருக்கவேண்டும். வயிற்றில் பிரச்சினை உள்ளவர்கள் சிரமப்பட்டு வர வேண்டியதில்லை.

பணி நாடி வரும் அனைத்து நபர்களும் விருந்தாளிகளாக நடத்தப்படுவர்.

அவர்களின் நடவடிக்கைகளும் குணமும் ஒரு மாத காலம் கூர்ந்து கவனிக்கப்படும்.

கல்வியையும் தாண்டி, பணியின்மீது கொண்டி ருக்கும் அக்கறைக்கு வெகுமதி அளிக்கப்படும்.

இந்தத் தேர்வில் வெற்றிபெறும் நபர், இந்த உயர்ந்த பதவிக்கு அமர்த்தப்படுவார்.

11

2

அந்த விளம்பரம் நாட்டில் ஒரு பெரிய பரபரப்பை உண்டாக்கியது.

அவ்வளவு பெரிய பதவிக்கு, கல்வித் தகுதிகள் தேவையில்லையா? இது எல்லாமே வாய்ப்பைப் பொறுத்து அமையக்கூடியது.

நூற்றுக்கணக்கான நபர்கள் தங்களின் அதிர்ஷ்டத் தைச் சோதித்துப் பார்ப்பதில் இறங்கினார்கள்.

தேவாகரில் புதிய வகையில் உள்ள மனிதர்கள் நடமாடிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு புகைவண்டியி-ருந்தும் வண்ணமயமான ஆட்கள் வந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள். சிலர் மதராஸி-ருந்து வந்தார்கள். சிலர் பஞ்சாபி-ருந்து வந்தார்கள். சிலர் நவ நாகரீகமான தோற்றத் தில் இருந்தார்கள். சிலர் மிகவும் எளிமையாக இருந்தார்கள்.

பண்டிதர்களும் முஸ்லீம்களும் கூட தங்களின் அதிர்ஷ்டத்தைச் சோதித்துப் பார்ப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக இதை எடுத்துக்கொண்டார்கள்.

ஏழைகளாக இருப்பவர்கள் பொதுவாக பட்டதாரிகளாக இல்லாமற் போய்விட்டோமே என்று எப்போதும் கவலைப்படுவார்கள். ஆனால், இங்கோ பட்டதாரிகளுக்கான தேவையே இல்லாமல் இருந்தது. பல வர்ணங்களைக் கொண்ட சட்டைகள், மேலாடைகள் அனைத்து வகையான ஆண்களின் ஆடைகள், தலையில் அணியும் துணிகள் என்று அனைத்துமே காட்சிப் பொருட்களாக தேவாகரில் இருந்தன.

எனினும், பணி தேடி வந்தவர்களில் அதிகமான பேர் பட்டதாரிகளாகவே இருந்தார்கள். ஒரு பட்டம் என்பது ஒரு அத்தி இலையாக பயன்படாது என்ற முன் நிபந்தனை இருப்பினும்...

விருந்தாளிகளாக வந்திருக்கும் நபர்களுக்கான அனைத்து வசதிகளையும் சர்தார் சுஜன் சிங் நன்கு செய்திருந்தார்.

தங்களின் அறைகளில் தங்கியிருந்த அவர்கள் தினமும் ரம்ஜான் காலத்தில் முஸ்லீம்கள் எண்ணப் படுவதைப் போல எண்ணப்பட்டனர்.

ஒவ்வொருவரும் தங்களின் வாழ்க்கையை எந்த அளவிற்கு சிறப்பாக வெளிப்படுத்த முடியுமோ, அந்த அளவிற்கு வெளிப்படுத்தினர்.

ஒன்பது மணிக்கு எழுந்திருக்கக் கூடிய மிஸ்டர். ஏ, சூரியன் உதயமாவதற்கு முன்பே பூங்காவில் நடந்து கொண்டிருந்தார். ஹூக்கா புகைப்பதற்கு அடிமையாகி விட்ட மிஸ்டர். பி, இப்போது மூடப்பட்ட கதவு களுக்குப் பின்னால் இரவு வேளையில் சிகரெட்டைப் புகைத்துக்கொண்டிருந்தார்.

தங்களின் வீடுகளிலுள்ள பணியாட்களை அடிமைகளைப் போல நடத்தும் மிஸ்டர். டி... மிஸ்டர். ஸி... மிஸ்டர். ஜி, இங்கிருக்கும் பணியாட்களிடம் எப்போதும் இல்லாத பாசத்துடனும் பணிவுடனும் நடந்தனர். ஹக்ஸ்-யின் ரசிகரான கடவுள் நம்பிக்கையற்ற மிஸ்டர். கே, ஆழமான பக்திமானாக மாறினார்.

ஆலயங்களின் அர்ச்சகர்கள் கூட எங்கே வேலையைப் பறித்து விடுவாரோ என்று பயந்தனர்.

இன்னொருவர்...

மிஸ்டர். எல்..

புத்தகங்களை வெறுக்கக் கூடியவர். சமீப நாட்களாக மிகப் பெரிய புத்தகங்களில் தன்னையே மறந்து மூழ்கிக் கிடந்தார். நீங்கள் யாரைப் பார்த்து பேசினாலும், அவர்கள் நாகரீகமான நண்பர்களாகவும், நல்ல நடத்தைகள் கொண்ட மனிதர்களாகவும் இருந்தார்கள்.

ஷர்மாஜி வேதங்களி-ருந்து மந்திரங்களை உச்சரித்து தன் நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருந்தார்.

முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர், நமாஸ் கூறிக் கொண்டும் குரானை வாசித்துக் கொண்டும் இருப்பதைத் தவிர, வேறு எதுவுமே செய்யவில்லை.ஒரு மாத காலத்திற்கு மட்டுமே கவலைப்படக்கூடிய விஷயமிது என்பதாகவே ஒவ்வொருவரும் நினைத் தார்கள்.

ஒருவர் வெற்றி பெற்றுவிட்டால், அதற்குப் பிறகு அதில் யார் அக்கறை செலுத்தப் போகிறார்கள்?

ஆனால், பழைய திவானைப் பொறுத்த வரையில், ஒவ்வொருவரையும் கூர்ந்து கவனித்து, கொக்குகளுக்கு மத்தியில் வாத்தைக் கண்டுபிடிப்பதில் தீவிரமாக இருந்தார்.

3

ஒருநாள் நாகரீகமான குழு ஒரு ஹாக்கி விளையாட்டை விளையாட தீர்மானித்தது. இந்த தீர்மானத்தை அந்த விளையாட்டை எப்போதும் விளையாடக்கூடிய வீரர்கள் எடுத்தார்கள். அதுவும் ஒரு கலைதானே? அதை ஏன் விளையாடக் கூடாது? அதுவும் உதவும் என்று யாருக்குத் தெரியும்? அதனால், அந்த முடிவு எடுக்கப்பட்டது.

குழுக்கள் அமைக்கப்பட்டு, விளையாட்டு ஆரம்பித்தது. பந்து உந்தப்பட்டது...

ஏதாவது அலுவலகத்தின் ஆரம்ப கட்ட, அனுபவமற்ற பயிற்சி பெறுபவர் மிதிபடுவதைப் போல பந்து மிதிபட்டது.

ஒட்டுமொத்தமாக இந்த விளையாட்டு, புதுமையான ஒன்றாக தேவாகருக்கு இருந்தது.

படித்தவர்களும் மரியாதைக்குரிய மக்களும் சிந்தனையைத் தூண்டக்கூடிய செஸ், சீட்டு போன்ற விளையாட்டுகளை ஆடினார்கள். ஓடிக்கொண்டும், குதித்துக்கொண்டும் விளையாடக்கூடிய விளையாட்டு கள் குழந்தைகளுக்கான விளையாட்டுகளாக கருதப்பட்டன.

உற்சாகம் நிறைந்த போட்டியாக விளையாட்டு மாறியது. அடிக்கும் அணி, பந்துடன் வேகமாக முன்னேறிச் செல்லும்போது, ஒரு அலை மிகவும் வேகமாக முன்னோக்கி பாய்ந்து செல்வதைப் போல இருந்தது. அதே நேரத்தில்... காக்கும் அணி, அது முன்னேறிச் செல்வதைத் தடுத்து நிறுத்தும் ஒரு இரும்புச் சுவரைப் போல இருந்தது.

அது இப்படியே மாலைவரை சென்றது.

விளையாட்டு வீரர்கள் வியர்வையில் குளித்தார்கள்.

அவர்களின் முகங்களும் கண்களும் வெப்பம் காரணமாக சிவப்பாக இருந்தன. அவர்கள் மூச்சு விடுவதற்காக சுவாசித்தனர். வெற்றியும் இல்லாமல் தோல்வியும் இல்லாமல், விளையாட்டு நடுநிலையில் முடிந்தது.

இப்போது இருட்டாகி விட்டது. விளையாட்டு மைதானத்திற்கு அருகில் ஒரு குளம் இருந்தது. குளத்தின் குறுக்காக எந்தவொரு பாலமும் இல்லை. நீரில் பயணிப்பவர்கள் எதிர் கரைக்குச் செல்ல வேண்டுமெனில், நீரில் நீந்தித்தான் செல்ல வேண்டும்.

விளையாட்டு இப்போதுதான் முடிந்தது.

விளையாட்டு வீரர்கள் நன்கு மூச்சு விடுவதற்காக ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு விவசாயி முழுமையாக தானியங்கள் ஏற்றப்பட்ட ஒரு வண்டியுடன் குளத்திற்குள் இறங்கி னார். வண்டி செல்லும் பாதை சேறு நிறைந்ததாக இருந்தது. வண்டி ஏறும் பாதை உயரமாக இருந்தது. அதனால், அவரால் குளத்தின் வழியாக வண்டியை ஓட்டிச்செல்ல முடியவில்லை. அவர் காளைகளைப் பார்த்து சத்தமிட்டார். தன் கைகளைக் கொண்டு சக்கரங்களை முன்னோக்கி நகர்த்த முயற்சித்தார்.

வண்டியில் அளவுக்கு அதிகமாக தானியம் ஏற்றப் பட்டிருந்தது.

காளைகள் அந்த அளவிற்கு பலம் கொண்டதாக இல்லை. வண்டி மேல் நோக்கி நகரவில்லை.

அப்படியே போனாலும், மீண்டும் பின்னோக்கி நகர்ந்து வந்தது. அந்த விவசாயி வண்டியை திரும்பத் திரும்ப முன்னோக்கி நகர்த்த முயன்றார்.

வெறுப்பின் காரணமாக காளைகளைச் சாட்டையால் அடித்தார். ஆனால், வண்டி மேட்டில் ஏறுவதற்கு மறுத்தது. அந்த ஏழை மனிதர் இங்குமங்கு மாக பார்த்தார். ஆனால், எந்தவொரு உதவியும் கிடைக்கவில்லை.

யாருடைய உதவியும் இல்லாமல் அவரால் வண்டியை நகர்த்த முடியவில்லை.உதவி தேடி எங்கோ சென்றார். அவர் மிகுந்த பிரச்சினையில் இருந்தார்.

அந்தச் சமயத்தில் விளையாட்டு வீரர்கள் அவர்களின் மட்டைகளுடன் குளத்தைக் கடப்பதற்காக வந்தார்கள். விவசாயி அவர்களைக் கெஞ்சும் கண்களுடன் பார்த்தார். ஆனால், உதவியைக் கேட்பதற்கான தைரியம் அவருக்கு இல்லாம-ருந்தது.

விளையாட்டு வீரர்களும் அவரைப் பார்த்தார்கள்.

ஆனால், தங்களின் கண்களை மூடிக்கொண்டனர்.

அந்த கண்களில் இரக்க உணர்ச்சி தெரியவில்லை.

அவற்றில் சுயநலம் வெளிப்பட்டது. கர்வம் குடிகொண்டிருந்தது. பரந்த சிந்தனையோ மனிதாபிமானமோ அவற்றில் வெளிப்படவில்லை.

4

ஆனால், அந்த விளையாட்டு வீரர்களுக்கு மத்தியில் இரக்க உணர்வும் தைரியமும் உள்ள ஒரு மனிதன் இருந்தான். இன்று விளையாட்டின்போது அவனுடைய பாதத்தில் காயம் உண்டாகியிருந்தது. அதனால், மெதுவாக நொண்டியவாறு அவன் நடந்து வந்துகொண்டிருந்தான்.

அப்போது அவனுடைய கண்கள் அந்த காளை வண்டியின் மீது பதிய, அவன் நின்றுவிட்டான். அந்த விவசாயியைப் பார்த்த கணத்தில் அவன் நிலைமையைப் புரிந்துகொண்டான். தன் ஹாக்கி மட்டையை ஒரு பக்கம் வைத்துவிட்டு, தன் மேலாடையைக் கழற்றியவாறு அவன் விவசாயிடம் கூறினான்:

"உங்களின் வண்டியைத் தள்ளி விடுவதற்கு நான் உதவட்டுமா?''

தனக்கு முன்னால் ஒரு உயரமான, திடகாத்திரமான மனிதன் நின்று கொண்டிருப்பதை விவசாயி பார்த்தார். "அய்யா... நான் உங்களிடம் கேட்கவில்லை.''

அதற்கு அந்த இளைஞன் கூறினான்: "நீண்டநேரமாக நீங்கள் இங்கு பிரச்சினையில் சிக்கிக்கொண்டிருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. இப்போ...போய் வண்டியில் உட்காருங்க. நான் சக்கரத்தை முன்னோக்கித் தள்ளுகிறேன். நீங்க காளைகளை ஓட்டுங்க...''

விவசாயி சென்று, வண்டியில் அமர்ந்தார். அந்த இளைஞன் முன்னோக்கி வண்டியைத் தள்ளினான். அந்த முழு இடமும் சேறாக இருந்தது. முழங்கால் வரை சேற்றில் இருக்க, அவன் வண்டியைத் தள்ளி னான்.

அதற்குப் பிறகும் அவன் விடவில்லை. அவன் மீண்டும் வண்டியைத் தள்ளினான்.

விவசாயி காளைகளைப் பார்த்து கத்தினார். உதவி கிடைத்ததால், காளைகள் மீண்டும் உற்சாகமடைந்து இறுதி முயற்சியாக வண்டியைக் குளத்திற்கு வெளியே இழுத்தன.

விவசாயி கூப்பிய கைகளுடன் அந்த இளைஞனுக்கு முன்னால் நின்று கொண்டு கூறினார்:

"அய்யா... நீங்கள் எனக்கு மிகப் பெரிய உதவியைச் செய்தீர்கள்.இல்லாவிட்டால்... இந்த முழு இரவையும் நான் இங்கேயே கழிக்கவேண்டிய நிலை உண்டாகியிருக்கும்''.

அந்த இளைஞன் தமாஷாக கூறினான்:

"இப்போ... எனக்கு ஏதாவது விருது தர்றீங்களா?''

விவசாயி கூறினார்: "கடவுள் தருவார். நீங்கதான்... திவான்''.

அந்த இளைஞன் விவசாயியைப் பார்த்தான்.

விவசாயியே ஒருவேளை சுஜன் சிங்காக இருக்கக் கூடாதா என்ற சந்தேகம் அவனுக்கு உண்டானது.

அவருக்கு அதே குரல்... அதே முகம்.. விவசாயியும் இளைஞனைக் கூர்ந்து பார்த்தார். அந்த இளைஞன் என்ன நினைக்கிறான் என்பதை அவரும் உணர்ந்தார். அவர் புன்னகைத்தவாறு கூறினார்: "ஆழமான நீருக்குள் நீச்சலடித்தால்தான் ஒருவரால் முத்துக்களை எடுக்க முடியும்.''

5

ஒரு மாத காலம் முடிவடைந்தது.

தீர்மானம் எடுக்கும் நாள் வந்தது. விதி தங்களுக்கு என்ன தீர்மானித்து வைத்திருக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்கான ஆர்வம் அனைத்து நபர் களுக்கும் இருந்தது.

காத்திருக்கும் நேரம் என்பது ஒரு மலையைக் கடப்பதைப் போல இருந்தது.

அவர்களின் முகங்களில் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் நிழல்களைப் போல பரவிச் சென்றன. கடவுள் லட்சுமிக்குப் பிடித்த அதிர்ஷ்டசா- யாராக இருக்கும் என்று யாருக்கும் தெரியாது.

மாலை வேளையில் அரசர் அவையைக் கூட்டினார்.

நகரத்தின் பணக்காரர்கள், புகழ் பெற்றவர்கள், மாநிலத்தின் அதிகாரிகள், ஆலோசகர்கள், திவான் பதவிக்கான வேட்பாளர்கள்- அனைவரும் மிகச்சிறந்த ஆடைகள் அணிந்து அவையில் இருந்தனர்.

வேட்பாளர்களின் இதயங்கள் வேகமாக அடித்துக் கொண்டிருந்தன.

சுஜன் சிங் எழுந்து நின்று கூறினார்:

"திவான் பதவியில் அமர்வதற்கு ஆர்வத்துடன் இருக்கும் வேட்பாளர்களே! உங்களுக்கு நான் ஏதாவது தொந்தரவுகள் கொடுத்திருந்தால், என்னை மன்னித்து விடுங்கள். இந்த பதவிக்கு மனிதாபிமானமும் பரந்த எண்ணமும் கொண்ட ஒரு நபர்தான் எனக்குத் தேவை. எப்படிப்பட்ட கஷ்டத்தையும் சந்திப்பதற்கான தயார்நிலையில் இருப்பவரை...

அதிர்ஷ்டவசமாக அப்படிப்பட்ட ஒரு மனிதரை நாடு கண்டுபிடித்துவிட்டது. இந்த உலகத்தில் அப்படிப்பட்ட குணங்களைக் கொண்டவர்கள் வெகு சிலரே இருக்கிறார்கள்.

அவர்கள் ஏற்கெனவே உயர்ந்த பதவிகளில் இருக்கிறார்கள்.

அதனால், அவர்களை நாம் அணுக முடியாது. புதிய திவானாக ஜன்கிநாத்தைப் போன்ற ஒரு மனிதர் நாட்டிற்குக் கிடைத்திருக்கிறார் என்பதற்காக நான் வாழ்த்துகிறேன்."

அதிகாரிகளும் நாட்டின் வசதி படைத்த மனிதர்களும் பாராட்டும் வகையில் ஜன்கிநாத்தைப் பார்த்தார்கள். மற்ற வேட்பாளர்கள் பொறாமையுடன் பார்த்தார்கள்.

சர்தார் சாஹிப் மீண்டும் பேசினார்: "தான் காயமுற்ற நிலையில் இருந்தாலும், சேற்றில் சிக்கிக் கிடந்த வண்டியை இழுப்பதற்கு ஒரு விவசாயிக்கு உதவுகிறார் என்றால், அதற்கு மனிதாபிமானமும் உறுதியான மனமும் வேண்டும்.

அப்படிப்பட்ட ஒரு மனிதரை ஏற்றுக்கொள்வதற்கு நீங்கள் தயங்கமாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன்.

அப்படிப்பட்ட ஒரு மனிதர் ஏழைகளை எந்தக் காலத்திலும் நசுக்கமாட்டார். அவருடைய தீர்மானங்கள் அவரின் இதயத்தை நல்ல முறையில் வைத்திருக்கும். அவர் ஏமாற்றப்படலாம். ஆனால், கடமை எனும் பாதையி-ருந்து அவர் விலகவே மாட்டார்.''