ண்பட்ட நடிகராகவும், இலக்கிய ஆர்வலராகவும், பல்துறை ஆய்வாளராகவும் திகழ்ந்த திரை நட்சத்திரம் ராஜேஷ், தனது பரபரப்பான வாழ்க்கைப் பயணத்தை, தனது 75 -ஐக் கடந்த நிலையில் நிறைவு செய்துகொண்டிருக்கிறார்.

rajesh sir

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அவர் அனைவரிட மிருந்தும் கடந்த 29 ஆம் தேதி காலை விடைபெற்றுக்கொண்டார்.

இவரது முதல் படமான கன்னிப் பருவத்திலே 250 நாட்கள், அதற்கு பிறகு பல படங்கள் 100 நாட்கள் என சினிமா வாழ்க்கையின் உயரங்களைத் தொட்டவர். நடிகராக மட்டுமல்லாது ஆசிரியராக, டப்பிங் கலைஞராக, தொழில் அதிபராக, தன்னம்பிக்கை பேச்சாளராக, எழுத்தாளராக, ஜோதிட வல்லுனராக, சின்னத்திரை கலைஞராக என்றென்றும் நல்ல மனிதராக தன்னுடைய இறுதிக்காலம் வரை கற்றுக்கொண்டே இருந்த மாணவராக, 75 வயதாகியும் தன்னுடைய சொல்லால், செயலால் இளமையாக காட்சியüத்தவர் ராஜேஷ்.

Advertisment

சினிமா தவிர்த்து ஓட்டல், ரியல் எஸ்டேட் போன்ற தொழில்கüலும் ஆழம் பார்த்தவர்.

நடிகர் ராஜேஷ் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் பெரியார் மற்றும் மார்க்சிய சித்தாந்தங்கüல் மிகத்தீவிரமாக இருந்தார். 1983-ஆம் ஆண்டு ஜோன் சில்வியா என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவருக்கு திவ்யா என்கிற மகளும் தீபக் என்கிற மகனும் உள்ளனர்.

2012-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி ராஜேஷின் மனைவி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

Advertisment

rajesh sir

1985-ஆம் ஆண்டு சென்னை கே.கே.நகர் அருகே சினிமா படப் பிடிப்புக் காக பங்களா கட்டிய முதல் தமிழ் நடிகர் இவர்தான். அதை அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். திறந்துவைத்தார். எம்.ஜி.ஆர். மறைந்தபோது 1987 முதல் 1991 வரை ஜானகி ராமச்சந்திரனை ஆதரித்து தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தார். ஒருகட்டத்தில், ஜோதிடம் மீது அதிக ஆர்வம் கொண்ட ராஜேஷ் அதுகுறித்து நமது நக்கீரனின் "ஓம் சரவணபவ' யூடியூப் சேனலில் சினிமா, தொலைக்காட்சித் தொடர்கள் இலக்கியம், ஜோதிடம், ஆன்மீகம், சினிமா பிரபலங்களுட னான அவருடைய நெருக்கம் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்தும் பகிர்ந்துவந்தார். அதில் பேசும்போது, மகனுக்கு மகளுக்கும் எதற்கு சிரமம் கொடுக்கவேண்டும். மேலும், ஒருவருக்கான கல்லறையை பிறர் கட்ட முடியாது. அதனால் அது எப்படி அமைய வேண்டுமென தீர்மானிக்க முடியாது. அதனால் தனக்கான கல்லறையை தான் விரும்பியபடி கட்டிவிட்டதாகக் கூறியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.

ஹாலிவுட் நடிகர்கüன் வாழ்க்கை வரலாற்றை தமிழில் எழுதி தமிழ் ரசிகர்களுக்கு விருந்து படைத்த வர், தனது ஆர்வத்துக்குரிய ஜோதிடம் பற்றி பல நூல் களையும், கட்டுரைகளையும் எழுதிவந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.

இவரைப் பாராட்டி கௌரவிக்கும் விதமாக ராஜேஷ் சார் -75 என்று பிரம்மாண்ட நிகழ்வினை நக்கீரன் கடந்த வருடம் முன்னெடுத்திருந்தது குறிப்பிடத் தக்கது. அண்மைக்காலமாக, நக்கீரன் குழுமத்தோடு நெருங்கிய தொடர்பில் இருந்த ராஜேஷ், நக்கீரனின் காட்சி ஊடகங்கüல், பல்துறை நிபுணர்கüன் நேர்காணல்களை விறுவிறுப்பாகவும் சுவையாகவும் கொடுத்து, ஏராளமான ரசிகர்களைத் தன்வசப்படுத்தி இருந்தார்.

தன்னுடைய மகனின் திருமண அழைப்பித ழோடு நண்பர்களை சந்திப்பதாக குறுந்தகவல் அனுப்பியிருந்தார். இறுதி அஞ்சலிக்காக மாலை யோடு அவரை நண்பர்கள் சந்திப்பார்கள் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

இன்னும் பல வேடங் கüல் நடிப்பார் என திரையுலகம் எதிர்பார்த்திருக்க, தன் வாழ்வின் இறுதிக்காட்சியையும் புன்னகை மாறாத முகத்தோடு நடித்துக் கொடுத்துவிட்டு விடைபெற்றிருக்கி றார் ராஜேஷ் ஒரு சகாப்தம் நிறைவடைந்திருக் கிறது.

-தாஸ்