ந்த விட்டத்தில நின்னுகிட்டு நான் பாடும்போது இவன் நல்லாதானே பாடுறான். பேசாமல் இனிமேல் இவனையே பாடச்சொல்லிடலாமே. எதுக்கு கேசட் கீசட்டெல்லாம் போட்டுக்கிட்டு அப்படின்னு, ஹெட்மாஸ்டர் இனிமே தெனைக்கும் நீயே பிரேயர்ல தமிழ்த் தாய் வாழ்த்து பாடு அப்படின்னு சொல்லிட் டாரு. இப்படித்தான் எனக்கு டெய்லி பாடுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைச்சுது.

இப்ப பள்ளிக்கூடத்திலிருந்து ஒரு சர்குலர் வருது. மாவட்ட லெவல்ல பாட்டுப் போட்டி நடக்குது. தீண்டாமை ஒழிப்பு, மதநல்லிணக்கம், தேச ஒற்றுமை, சுற்றுப்புறச்சூழல் இந்த தலைப்புகளில் பாட்டுப் பாடணும் அப்படின்னு. இந்த பிரேயர்ல பாடுறான்ல அந்த பையன அனுப்பலாமா அப்படின்னு வாத்தியாருங்க எல்லாரும் பேசிக்கிறாங்க. ஹெச்.எம் உடனே எங்க பரமசிவன் வாத்தியார்கிட்ட சொல்லி என்னைக் கூப்பிட்டுக்கிட்டு வரச் சொல்றாரு.

நான் போறேன். ஸ்ரீமுஷ்ணத்துல ஒன்றிய லெவல்ல ஒரு பாட்டுப் போட்டி நடக்குது. பாடறியா அப்படின்னு கேக்குறாரு. சரிங்க சார் நான் பாடுறேன் அப்படின்னு சொன்னேன். என்னுடைய பெயரை பள்ளி சார்பா எழுதி அனுப்புறாங்க. நான் ஸ்ரீமுஷ்ணம் போறேன்.

velmurugan

Advertisment

அங்க போயி நான் பாடுன முதல் பாட்டு

உள்ளம் உருகுதய்யா - முருகா

உன்னடி காண்கையிலே

அள்ளி அணைத்திடவே

அள்ளி அணைத்திடவே

அள்ளி அணைத்திடவே

எனக்குள் ஆசை பெருகுதப்பா - முருகா

உள்ளம் உருகுதய்யா

அந்த டீம்ல இந்த முருகன் பாட்டுதான் நான் பாடுனேன். அப்புறம் தேச ஒற்றுமை பற்றிய ஒரு பாட்டு பாடுனேன். நான் பாடுன பாட்டுதான் முதல் இடத்தைப் புடிச்சது. இப்ப ஒன்றிய லெவல்ல நான் செலக்ட். அதுக்கப்புறம் மாவட்ட லெவல்ல பாட்டுப் போட்டி நடக்குது. அங்கேயும் நான்தான் முதல் இடம். இப்ப எனக்கு முதல் பரிசு கிடைக்குது. அப்போ அங்க சைலேந்திரபாபு சார்தான் எஸ்.பி.யா இருந்தாரு. சந்திப் ஷேசன் மாவட்ட கலெக்டராக இருந்தாரு. இவங்க கையாலதான் நான் முதல் பரிசும், சர்டிபிகேட்டும் வாங்கினேன். என்ன முதல் பரிசு சர்டிபிகேட் எல்லாம் வாங்கினாலும் அப்ப ஊர்ல நம்மள ஒரு தோசை அளவுக்குக்கூட ஒருத்தரும் மதிக்கல.

இந்த மாதிரி பாட்டுப் போட்டி, பரிசு, சர்டிபிகேட் எல்லாம் வாங்குறோமே அப்படின்னு விருத்தாச்சலத்தில, கசப்பா தெருவில் தில்லை ரவி ராஜா இசை குழுன்னு ஒன்னு இருந்துச்சு. எங்க சித்தப்பா சதீஷ் அப்படின்னு ஒருத்தர் இருந்தார். அவர் நல்லா பாடுவாரு. அந்த இசைக் குழுவுக்கு என்னை அழைச்சிட்டுப் போயி பாட வைக்கிறாரு.

நான் பாடுறேன். ஆனா பாட்டு சரியா வரல அப்படிங்றத விட, நான் சரியா பாடலை. அங்க நான் மைக்க புடிச்சுப் பாடும்போது எனக்கு கையெல்லாம் நடுங்குது. மேடையிலேயே மைக்கு கீழே விழுந்துடுச்சி.

இந்த சம்பவம் நடந்தோன்னையே, எனக்கு ஒருமாதிரி மனசெல்லாம் உடைஞ்சுபோச்சு. இனிமே நம்மளைக் கூப்பிடமாட்டாங்கன்னு சொல்லிட்டு அப்படியே வந்துட்டேன். இதுவந்து நான் 12-வது படிக்கும்போது நடந்துச்சி. அப்புறம் சித்தப்பா என்ன பண்ணாரு அதெல்லாம் இல்லப்பா, நீ எப்ப தோக்குறியோ அப்பதான் நீ முயற்சி பண்ணுவ. நீ நிறைய பாடம் கத்துக்கணும் .அப்படின்னு சொல் லிட்டு, என்னைத் திரும்பத் திரும்ப கச்சேரிக்கு கூப்பிட்டுக்கிட்டுப் போறாரு.

கொம்படி குப்பம் அப்படின்னு ஒரு ஊரு. அங்க ஒரு இசைக் குழு கச்சேரி நடக்குது. அங்க பாடலாம் வான்னு சொல்லிட்டு எங்க சித்தப்பா அழைச்சிட்டுப் போறாரு. நான் பாடுறேன்னு சொல்லிட்டு எங்க அப்பா, மத்தபடி ஊர்ல உள்ளவங்க எல்லாரும் அந்த கச்சேரிக்கு வந்துட்டாங்க. அந்தக் கச்சேரிக்கு டி.கே. நடராஜன் ஐயாதான் சீப் கெஸ்ட். அந்தக் கச்சேரியில பழனிவேல்னு ஒருத்தர். அவரு சீர்காழி கோவிந்தராஜன் வாய்ஸ் பாடுவாரு. அவரு நிறைய படங்கள் எல்லாம் பாடியிருக்காரு.

எங்கிட்ட ஒரு கேமரா கொடுத்திருந்தாங்க. அங்க வரவங்க போறவங்க எல்லாரையும் போட்டோ எடுக்குறதுதான் என்னோட வேலை. நான் பாடு றேன்னு சொல்லிட்டு ஊரே அங்கு வந்துடுச்சு.

அப்பா கடைசி வரைக்கும் உட்கார்ந்து பார்த்தாரு ஆனா அதுவரைக்கும் எனக்கு பாட்டு குடுக்கல. எங்க அப்பா, ஊருசனம் எல்லாம் இவன் பாடமாட்டான்னு சொல்லிட்டு கிளம்பிப் போயிட்டாங்க. கடைசில கச்சேரி முடியப்போகுது. அப்பதான் பழனிவேல் சொன்னாரு, எப்பா நீ ஒரு பாட்டுப் பாடுப்பா. சரி கடைசியிலயாவது வாய்ப்பு கெடச்சுதே அப்படீன்னு எங்க குலசாமியை பத்தி ஒரு பாட்டுப் பாடினேன்.

எங்க குல சாமி கோயிலுக்கு - நாங்க

கூட்டாக வந்து சேந்தோம் - அந்த

அம்மனுக்கு மாலை போட்டு - அங்க

ஆட்டம் போட்டு கொண்டாடுவோம்

அப்படின்னு பாடுனேன்.

பாடிட்டு வீட்டுக்குப் போனோன அப்பா சொல்றாரு, “என்னடா கச்சேரி கச்சேரின்னு போற. எங்களையும் வரச் சொல்லிட்டு கடைசி வரைக்கும் நீ பாட்டே பாடலையே. அப்போ இப்படிதான் சொல்லிட்டுத் திரியிறியா. நீ ஐ.டி முடிச்சிட்டில்ல பேசாம ஏதாவது வேலை தேடவேண்டியதுதானே அப்படின்னாரு.

ஏற்கனவே ரொம்ப மன உளைச்சலில இருக்கிற அப்பா, இவனும் இப்படி ஊர் சுத்திட்டு இருக்கானே அப்படின்னு மனசு உடைஞ்சு பேசுறாரு. எனக்கு அதைக் கேட்டோன மனசு ரொம்ப வேதனையா போச்சு. கச்சேரி முடிஞ்சு செலவுக்கு ஒரு பைசாகூட கொடுக்கல.

கார்குழல் ராஜேந்திரன், ரவி அப்படிங்கிறவங்க, அவங்க கார்குழல்ல ஒரு கச்சேரி வைக்கிறாங்க. எங்க சித்தப்பாகூட அங்க போறேன். அங்க பாடறதுக்கு எனக்கு வாய்ப்பு கிடைச்சுது. நான் ரெண்டு வாய்சுல பாடுவேன். அங்க போய் நான் பாடுறேன்.

மச்சான்...

ஆளான நாள் முதலா

யாரையும் நெனைச்சதில்ல,

மாமா நா உங்களுக்கே

வாக்கப்பட ஆசப்பட்டேன்...

வேணான்னு சொல்லுறீகளே

சும்மா வெறும் வாயை மெல்லுரீகளே

ஆடியிலே கட்டிக்கிட்டா சித்திரைக்கு புள்ள வரும்

ஆகாது ஆகாது மச்சானே

இது தோதான தை மாசம் மச்சானே

அப்புறம்…

குருவி கொடஞ்ச கொய்யாபழம்…

கொண்டு வந்து தரவா

குமரி பொண்ணு வெத்தலைக்கு

சுண்ணாம்பு நா தரவா

எஸ்னா எஸ்னு சொல்லு

நோவுனா நோவுனு சொல்லு

எஸ்னா எஸ்னு சொல்லு

நோவுனா நோவுனு சொல்லு

இந்த ரெண்டு பாட்டும் நான் பாடுறேன். இது அழகிங்கிற படத்துல வர்ற பாட்டு. இந்தப் பாட்ட நான் பாடுனோன, கார்குழல் ராஜேந்திரன் என்ன பண்றாரு எனக்கு ஒரு நூறு ரூபாய் கையில கொடுத்து நாளைக்கு கச்சேரிக்கு வாப்பா அப்படின்னு சொல்லிட்டு என்ன புக் பண்ணிக்கிறாரு. அங்கே இருந்துதான் அப்படியே என்னுடைய பாட்டுப் பயணம் ஆரம்பிக்குது. ஆனா எங்க போய் நான் பாடினாலும் வந்தாலும் விருதாச் சலத்துக்கு வந்து முயற்சி பண்ணிக்கிட்டே இருந்தேன்.

விருத்தாச்சலம் பஸ் ஸ்டாண்ட்கிட்ட ஜெமினி ஸ்டுடியோன்னு ஒரு ஸ்டுடியோ இருக்கு. அப்போ அங்க கவிஞர் அறிவுமதி ஐயா வருவாரு. கவிஞர் பழனி பாரதி வருவாங்க. தங்கர்பச்சான், டைரக்டர். கே.ஆர்.ஜெயா உயிரிலே கலந்து படம் பண்ணுனவரு. இவங்க கூடல்லாம் போய் போட்டோ எடுக்குறது, அப்புறம் கோமங்கலம் வீரபாண்டியன்னு சொல்லிட்டு அகத்தியன்கிட்ட டைரக்டா இருந்தவரு. இவங்கள எல்லாம் பாக்குறதுக்கு அந்த ஸ்டுடியோவுக்கு போறது. அந்த ஸ்டூடியோவுக்குதான் எல்லாரும் வருவாங்க. நான் அங்க போவேன். எல்லாரும் என்னைப் பாடச் சொல்லுவாங்க. பாடிக் காட்டுவேன். அப்புறம் கார்கில் போர் சம்பந்தமா ரோட்டரி சங்கம், லயன்ஸ் கிளப் இங்கே எல்லாம் ஏதாவது நிகழ்ச்சிகள் நடக்கும். அங்க போய் பாடுறது. இப்படிதான் பாடிப் பாடி அப்படியே முயற்சி பண்ணிக்கிட்டு சுத்திக்கிட்டு இருந்தேன்.

நவராத்திரி விழா குழு தனக்கல்யாண் தட்சிணா மூர்த்தின்னு ஒருத்தர் இருந்தாரு. அவர் மோட்டார் விக்கிற கடை வச்சிருந்தாரு. அங்க போய் டேபிள தட்டிக்கிட்டு ஒரு ஒரு பாட்டா அவர்கிட்ட பாடிக் காட்டுவேன். அவரு புளி சாதம், எலுமிச்சை சாதம், தக்காளி சாதம் இது ஏதாவது வாங்கிக் கொடுப்பாரு. ஒரு சாப்பாடு அஞ்சு ரூபா. என்ன ”கண்ணே ஞான ஒளி” அப்படின்னுதான் கூப்பிடுவாரு. அவர்தான் எனக்கு கானா வேலு” அப்படின்னு பட்டம் கொடுத்தாரு. அப்போ அந்த டயத்துல அதை நான் பிரேம் பண்ணி வச்சுக்கிட்டு, ஃபைல் போட்டு பாட்டு பாடுவதற்கு வாய்ப்புக் கேட்டு சுத்திகிட்டு இருப்பேன். ஓமக்குச்சி, தவக்கல, கிங்காங் அண்ணன் இவங்க மாதிரி முக்கியமானவங்க யாரு வந்தாலும் அவங்ககிட்ட நின்னு ஒரு போட்டோ எடுத்துக்கறது. அப்புறம் கூழ் பழனி அப்படின்னு ஒருத்தர் இருந்தாரு. அவருகிட்ட போனா கூழு ஊத்திக் கொடுப்பாரு. இப்படி பசிக்கும் பட்டினிக்குமே பாட்டுப் பாடிக்கிட்டு இருந்தேன்.

விருத்தாச்சலத்துல பாண்டின்னு ஒருத்தர் இருந் தாரு. அவரு சொன்னாரு, கிண்டியில ஸ்மால் இண் டஸ்ட்ரீஸ்ன்னு இருக்கு. அங்க காயாம்பு பாலு அண்ணன்னு சொல்லிட்டு ரிசப்ஷனிஸ்டா ஒருத்தர் இருக்காரு. அவர போய் பாருன்னாரு. நான் போறேன். அவர கண்டுபிடிச்சு பார்க்கும்போது அவரு சொன்னாரு எப்படிப்பா என்னை கண்டுபிடிச்சு வந்த அப்படின்னாரு.

அப்பல்லாம் பேய் மழை பெய்யும். மழை பெஞ்சா தண்ணி அப்படியே நிக்கும். நான் போன அன்னைக்கும் சரியான மழை. அவர் வீட்டிலயும் தண்ணி உள்ள வந்துருச்சு. அவர் வீட்டில இருந்த மழை தண்ணிய மொண்டு மொண்டு வெளியில ஊத்திக்கிட்டு இருந் தோம். இன்னும் ரெண்டு மூணு பேரு அவருகூட இருந் தாங்க. அங்க நான் எடுத்துட்டுப் போன காசுலதான் டிபன் வாங்கி எல்லாரும் சாப்பிட்டுகிட்டு இருந்தாங்க. எனக்கு சினிமாவில பாட்டு பாடுவதற்கு வாய்ப்பு வாங்கித் தரேன்னு சொல்லிட்டு மூனு நாள் அப்படியே சும்மாவே சுத்திக்கிட்டு இருக்கோம். அப்புறம் பீச்சிக்கு கூப்பிட்டுகிட்டு போயி அங்கேயும் சுத்திக் காட்றாங்க. ஒரு வாய்ப்பும் கெடைக்கல. அப்புறம் நான் ஊரைப் பாக்க திரும்ப வந்துட்டேன்.அதுக்கப்புறம்தான் விருத் தாச்சலத்தில, டேவிட் லாசர் அப்படிங்கறவரு என்ன பண்றாரு, அவங்க தம்பிகிட்ட சொல்றாரு. நீ இசைக் கல்லூரியிலதானடா படிக்கிற. அங்க இவனுக்கு ஒரு அப்ளிகேஷன் வாங்கிக் கொடு அப்படின்னு சொல்றாரு.

அவர் சென்னைக்குப் போனதுக்கு அப்புறம் எனக்கு அப்ளிகேஷன் வாங்கி அனுப்புறாரு. நான் அப்ளிகேஷன் புல்லப் பண்ணிட்டேன். அப்ளிகேஷன் போடலாம்னு போஸ்ட் ஆபீசுக்கு போனா அன்னைக்குதான் கலைஞரை அரெஸ்ட் பண்றாங்க. அரெஸ்ட் பண்றப்ப ஸ்ட்ரைக் ஆகுது. அதனால அன்னைக்கு அப்ளிகேஷன் அனுப்பமுடியல. அதனால் நான் கடைசி தேதி முடிஞ்சுதான் அப்ளிகேஷன் அனுப்பிவச்சேன்.

அதுக்கப்புறம்தான் ஏதோ முருகனோட அருளால எனக்கு இன்டர்வியூ கார்ட் வருது. அதை எடுத்துக் கிட்டு, கொளஞ்சினு ஒருத்தரு அவருதான் என்னை சென்னைக்குக் கூட்டிட்டு வராரு. ராத்திரிக்கு பஸ் ஏறி மறுநாள் சென்னையில போய் இறங்குறோம். அங்க தான் சென்னைல, சைதாப்பேட்டையில எம்.சி. ராஜா ஹாஸ்டலுக்கு கூட்டிட்டு போராரு. ஏற்கனவே அண்ணன் திருமாவளவன் அந்த எம்.சி. ராஜா ஹாஸ்டல்லதான் தங்கியிருந்தாரு. அந்த ஹாஸ்டல காட்டிவிடுறதுக்கும், காலேஜ்ஜ காட்டி விடுறதுக்கும்தான் அண்ணன் கொளஞ்சி என்கூட வராரு. நாங்க காலேஜ் போறதுக்கு மணி சாயங்காலம் 3 ஆயிடுச்சு. இனிமே அட் மிஷன் இல்ல. அட்மிஷன் எல்லாம் முடிஞ்சுபோச்சு இருந்தாலும் நாளைக்கு வந்து பிரின்சிபால பாருங்க. அவரு சேர்த்தா சேர்ந்துக்கோங்க அப்படின்னு சொல் றாங்க. அப்ப நான் பேன்ட் சட்டையோடு போயிட்டேன். ஜிப்பா போட்டுக்குட்டுதான் வரனும் அப்படின்னாங்க.

அப்பாகிட்ட நான் பொய் சொல்லிட்டுதான் சென்னைக்கு வரேன். எனக்கு அக்ரிகல்ச்சர் காலேஜ்ல இடம் கிடைச்சிருக்கு இ.நஸ்ரீ சேரப் போறேன்னு சொல்லிட்டுத்தான் வரேன். அப்பாகிட்ட ஒரு 200 ரூபா குடுத்தாரு. நான் கொஞ்சம் கொஞ்சமா சேத்து ஒரு 100 ரூபா வச்சிருந்தேன். இந்த 300 ரூபாவ எடுத் துக்கிட்டுதான் நான் சென்னைக்கு வரேன். அதுல ஒரு 18 ரூபா பஸ்ஸுக்கு செலவாயிடுச்சு.

அதுக்கப்புறம் மயிலாப்பூர் வந்து அங்க ஒரு வேஷ்டி யும் ஜிப்பாவும் வாங்கிட்டு, பட்டைய போட்டுக்கிட்டு மறுநாளு காலேஜுக்கு போறேன். ஜெயாமான்னு சொல்லிட்டு பிரின்ஸ்பால். அவங்க என்ன உட்கார வச்சு கர்னாடிக்கு மியூசிக் தெரியுமா அப்படின்னு கேக்குறாங்க. நான் என்ன நினைச்சுக்கிட்டேன் கர்நாடிக் அப்படின்னா பக்தி பாட்டு அப்படின்னு நினைச் சுட்டேன். நினைச்சுகிட்டு தெரியும் அப்படின்னு சொல்லிட்டேன். ஏன்னா நம்ம கிராமத்திலிருந்து வந்த நமக்கு கர்நாடிக்னா என்னன்னு தெரியாது. அத நம்ம கேள்விப்பட்டதும் இல்லை. அப்ப என்னைப் பாடுன்னு சொல்றாங்க. அங்கே சுருதி பாக்ஸும் போட்டு விடுறாங்க.

அது ம்……..ன்னு சத்தம் போட்டுட்டே இருக்கு. அத வச்சுகிட்டு நம்மல பாடச் சொன்னா ஒருவேளை குரல் நல்லா இல்லைன்னு சொல்லிட்டு நம்மள வேணாம் னுட்டாங்கன்னா என்ன பண்றது அப்படின்னு, மேடம் இது டிஸ்டர்பா இருக்கு இது ஆப் பண்ணுங்க அப்படின்னு சொன்னேன். கர்நாடிக் ஸ்ருதியோடு பாடுவதற்கு சுருதி பாக்ஸ் இருந்தாதானே பாட முடியும். இவன் என்னடா ஆப் பண்ண சொல்றானே அப்படின்னுட்டு உனக்கு கர்நாடிக் தெரியுமா அப்படின்னாங்க. தெரியும் அப்படின்னேன்.

தெரியும்னா கர்னாட்டிக் இதை வச்சுதானே கத்துக்கணும். நீ சுருதி பாக்ஸ ஆப் பண்ண சொல்றியே அப்படின்னுட்டு அவங்க எல்லா டீச்சரயும் வரச் சொல்லி சொல்றாங்க.

இவன்கிட்ட கர்நாடிக் தெரியுமான்னு கேட்டேன். தெரியும்னு சொன்னான். பாடச் சொன்னா சுருதி பாக்ஸ ஆப் பண்ணச் சொல்றான். அப்படின்னு ஜெயா அம்மா சொன்னாங்க. இவங்க எல்லாரையும் கூட்டி சொன்ன உடனே எனக்கு எட்டாவதுல ஹெட்மாஸ்டர்கிட்ட பரமசிவம் வாத்தியார் மாட்டிவிட்டது போல ஏதாவது நடக்கப் போகுது போல அப்படின்னு நான் பயந்துகிட்டு உட்கார்ந்திருக்கேன். ஐயோ ஊரு விட்டு ஊரு வந்து என்னடா பண்றது அப்படின்னு சொல்லிட்டு உள்ளுக்குள்ள ஒரு பயம். அட்மிஷன் அடுத்த நாளு அப்படிங்கறதுனால நீ இருந்து பாத்துட்டு வாப்பா நான் கிளம்புறேன்னு சொல்லிட்டு கொளஞ்சி அண்ணன் என்னை விட்டுட்டுப் போயிட்டாரு. இவன் என்னதான் பண்றான்னு பார்ப்போம் அப்படின்னட்டு ஜெயா அம்மா என்ன பாடச் சொன்னாங்க. இசைக்கல்லூரியில சுருதி பாக்ஸ ஆப் பண்ணிட்டு பாட்டு பாடுன ஒரே ஆளு நானாதான் இருப்பேன்.

அப்ப நான் பாடுறேன்

தாயே கருமாரி

எங்கள் தாயே கருமாரி

தேவி கருமாரி…

துணை நீயே மகமாயி

தாயே கருமாரி

எங்கள் தாயே கருமாரி

ஆயிரம் கண்கள் உடையவளே

ஆலயத்தின் தலைமகளே

ஆயிரம் கண்கள் உடையவளே

ஆலயத்தின் தலைமகளே…

கடைக்கண்ணாளே பார்த்தருள்வாய்

காலமெல்லாம் காத்தருள்வாய்

கடைக்கண்ணாளே பார்த்தருள்வாய் காலமெல்லாம் காத்தருள்வாய்

தாயே கருமாரி

எங்கள் தாயே கருமாரி

அப்படின்னு பாடுறேன்

இப்ப இதுதான் கர்நாடிக் பாட்டான்னு கேக்குறாங்க.

ஆமாம் மேடம் சாமி பாட்டு எல்லாம் கர்நாடிக் பாட்டுதானே அப்படின்னு சொல்றேன்.

ஓ கர்நாடிக்ன்னா என்னன்னே தெரியாமதான் காலேஜ் சேர வந்திருக்கிறான். அப்படி நினைச்சுகிட்டு உன்னை எப்படி புரிய வச்சு சேத்துகுறதுப்பா. உன்ன காலேஜ்ல சேர்க்கமுடியாது அப்படின்னு சொல்றாங்க. அப்ப நான் என்ன சொல்றேன் கர்நாடிக்னா என்னன்னு சொன்னீங்கன்னா நான் கத்துக்குறேன் மேடம் அப்படின்னு சொல்றேன்.

வண்டி ஓடும்...