திரைப்படப் பாடலாசிரியர்கள், தனிப் பாடலாசிரியர்கள் மற்றும் திரைப்படப் பாடலாசிரி யர்கள் சங்கம் தொடர்பான பல்வகைப்பட்ட செய்தி களை அதிராமலும், நிதான மாகவும், இடைவெளி யின்றியும், தரவுகளோடும் மெல்லிய குரலில் சொல்லிக் கொண்டே போகிறார், கவிஞரும் பாடலாசிரியரு மான தமிழமுதன்.

சில செய்திகளைச் சொல்லிக் கடக்கும்போது, நாம் சற்றும் எதிர்பாராத வகையில் விநாடிகளில் உடைந்து வெடித்து அழுது பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்புகையில், தனது சக படைப்பாளிகளான பாடலாசிரியர்கள் மீது அவர் கொண்டுள்ள அப்பழுக்கற்ற அக்கறையை நம்மால் உணர முடிகிறது. பாடலாசிரியர்கள் பலருக்கும் கலங்கரை விளக்கமாகத் திகழும் இந்த தமிழமுதன் யார்?

ss

தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்துள்ள சாத்தனூர் என்கிற சிற்றூர்தான், தமிழமுதனின் பூர்வீகம். வேளாண் தொழிற்குடும்பம். தந்தை ஜெயராமன், தாய் ஜெயலட்சுமி. ஜெயராமன் , அப்பகுதியில் புகழ்பெற்ற ஒரு கூத்துக்கலைஞர். ஆனால் கடந்த எழுபது ஆண்டுகளுக்கு முன்பே வாழ்வு தேடி சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனியில் குடியேறிய அவர், வாழவேண்டியதன் பொருட்டு ஒரு பழ வணிகராக மாறிப்போனார்.

இயல்பிலேயே தமிழின் மீதும் தமிழ்க் கவிதைகளின் மீதும் பெரும் ஈடுபாடு கொண்ட தமிழமுதன், முதுகலைத் தமிழ் இலக்கியம் படித்தார். சென்னை போரூரில் இயங்கிவருகின்ற இராமச்சந்திரா மருத் துவமனையில் இருபத்து நான்கு ஆண்டுகள் குருதி ஆய்வுத் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு.

Advertisment

பின்னர் சொந்த விருப்பத்தின் அடிப்படை யில், அப்பணியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு முழுநேரமும் கவிதைக்கும் பாடலுக்கு மாகத் தன்னை அர்ப்பணித் துக் கொண்டார். அரைக்கம்பத்தில், புன்னகைப் பிரதேசம் உள்ளிட்ட கவிதை நூல்களை எழுதி வெளியிட்ட தமிழமுதன், அப்படைப்புகளுக்காக பாரத ஸ்டேட் வங்கியின் விருது உட்பட சில விருதுகளையும் பெற்றுள்ளார். மாயாண்டிக் குடும்பத்தார், அமுதே, கோரிப்பாளையம், மிளகா உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் இவரது பாடல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், சூப்பர் சிங்கர் பிரியங்காவின் குரலில் அவரது தந்தையும் இசையமைப்பாளருமான நல்லதம்பி இசையில் அடடா அதிசயம் உயிர் பிழைத்தேன் அழகிய விபத்து தான் உயிர்தொலைத்தேன்’ என்கிற இனிமையான பாடலொன்று தனிப்பாடலாகவும் வெளிவந்திருக் கிறது.

கவிஞர் தமிழமுதனின் காதல் இணையரான இசபெல்லா என்கிற இயற்பெயர் கொண்ட இசை அவர்களும் ஒரு கவிஞர்தான். ‘என்னைக் கவர்ந்த எழில்’, ‘வெண்பா’ உள்ளிட்ட சில கவிதை நூல்கள் கவிஞர் இசை அவர்களின் படைப்புகளாக வெளிவந்துள்ளன. கவிஞர் தமிழமுதன், கவிஞர் இசை ஆகியோரின் திருமண மேடைகூட இவர் களின் கவிதைநூல் வெளியீட்டு விழா மேடையாக மாறியது முதுபெரும் கவிஞர் சுரதா உள்ளிட்டவர்கள் வருகைதந்து இவர்கள் இருவரையும் வாழ்த்திச் சிறப் பித்திருக்கிறார்கள். இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் கவிஞர் இசையின் குடும்பமே முழுமையான ஓர் இசைக் குடும்பம்தான்.

கவிஞர் இசையின் தாய்வழிப் பாட்டனார் பழம்பெரும் திரைப்பட நடிகர் சந்திரபாபுவின் குழுவில் தபேலா இசைக் கலைஞராக விளங்கியவர். கவிஞர் இசையின் தாய்மாமன் மிருதங்க இசைக் கலைஞர். உடன்பிறந்த மூத்த சகோதரிகள் இருவரும் பாடகர்கள்.

Advertisment

தமிழ்த் திரையுலகில் நிறைய பாடல்களை எழுதவேண்டும் என்கிற வேட்கையோடுதான் கவிஞர் தமிழமுதன் கோடம்பாக்கத்திற்குள் நுழைந்தார்.

ss

அங்கு அவரது பாடல்களுக்கான ‘இசை’ போதிய அளவுக்கு இன்னமும் கிடைக்கவில்லையென்றா லும் கூட, அவரது வாழ்க்கைத் துணையாக கவிஞர் இசை கிடைத்திருக்கிறார், அதன் விளைவாக ஓர் இசைக் குடும்பத்தினர் தமிழமுதனுக்கு உற்ற இசை உறவுகளாக வாய்த்துள்ளனர்.

‘தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய்’ என்று சொல்வார்கள். அப்படியானதோர் சமூகத் தேவையின் பொருட்டு கவிஞர் தமிழமுதன் நிறுவி கட்டமைப்பு செய்திருக்கின்ற ஓர் அமைப்புதான், ‘தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர் கள் சங்கம்’. கடந்த 2012-ஆம் ஆண்டு தொடங் கப்பட்ட இந்த அமைப்பில் இப்போதைக்கு 320-க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடலாசிரியர் களும், தனிப்பட்ட இசைத் தொகுப்புகளுக்கு எழுதுகிற பாடலாசிரியர்களும் உறுப்பினர் களாக இருக்கின்றனர். இந்த அமைப்பின் நிறுவனராகவும் - தலைவராகவும் விளங்கி வழிநடத்திக்கொண்டிருக்கின்ற கவிஞர் தமிழமுதனுக்கு, கவிஞர் இளையகம்பன் (செயலாளர்), கவிஞர் பச்சியப்பன் (பொருளாளர்), கவிஞர் சீர்காழி சிற்பி (துணைத் தலைவர்), கவிஞர் தமிழ்க்குமரன் (செயற்குழு உறுப்பினர்) உள்ளிட்ட நிர்வாகிகள் உறுதுணையாக இருந்து செயலாற்றிக் கொண்டிருக்கின் றனர். குறிப்பாக இளைய கம்பனின் பங்களிப்பையும் உறுதுணையை யும் அதிகம் சொல்லி நெகிழ்கிறார் தமிழமுதன். அவரிடம் சில கேள்விகளையும் நாம் வைத்த போது...

பாடல் களை எழுதுவதற்காகத் திரைத்துறைக்கு வந்த உங்களுக்கு பாடலாசிரி யர்கள் சங்கத்தைத் தோற்று வித்துச் செயலாற்றவேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?’

அதற்கான தேவை மிகவும் அவசியமானதாக இருந்தது. பாடலாசிரியர்களின் நிலையை திரைப்படத் துறைக்கு மட்டுமின்றி பாடலாசிரியர் களுக்கே தெரிவித்தாகவேண்டிய ஒரு கட்டாயம் இருந்தது. ஓர் அமைப்பாக ஒன்றிணைந்து தீர்வு கண்டாக வேண்டிய சிக்கல்களைத் தனிநபர் அணுகுமுறைகளால் தீர்க்கமுடியாது என்கிற நிலையில்தான் இப்படியோர் அமைப்பைத் தோற்றுவித்தோம்.

இன்றைய நிலையில் எங்களது தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர் கள் சங்கத்தில், திரைப்படம், தொலைக்காட்சி, தனித்தொகுப்பு என்று மூன்று வகைப்பட்ட பாடலாசிரியர் கள் 320 பேர் உறுப்பினர்களாக இருந்தாலும்கூட, இந்த மூன்று களங்களுக்கு வெளியேயும் இன்னும் கண்டறியப்படாத பாடலாசிரியர்கள் ஏராளமாக இருக்கின்றனர். பாடலாசிரியர்களின் உலகம் ஒரு தனி உலகமாக இருக்கிறது. மிகவும் வேதனை தரத்தக்க அளவில் அவர்களில் பெரும்பாலானவர்கள் சுய கட்டுப்பாடுகளைக் கவனத்தில்கொண்டு செயல்படாமல் பல்வகைப்பட்ட போதைப் பழக்கங்களுக்கு ஆட்பட்டுள்ளனர். அவர்களில் பலர் போதை மயக்க நிலையில்தான் தங்களுக்குள் பாடல்கள் ஊற்றெடுக்கும். மயக்க நிலையில் அப்படித் தோன்றுகிறபோதுதான் பாடல்களை எழுத முடியும் என்று நம்புகின்றனர். பல படைப்பாளிகளின் விபரீதமான இத்தகைய மனோ பாவம், அவர்களின் உடல் நலனை வெகுவாகக் கெடுத்து, வாழ்வின் பள்ளத்தாக்குகளில் வீழ்த்தி அவர்கள் கரையேறமுடியாத நிலைக்குக் கொண்டு போய்விடுகிறது. அவர்கள் ஒவ்வொருவரும் படைப் பாளிகள். சிறந்த கவிஞர்கள், கொடுக்கப்படுகிற வாய்ப்புக்கான பாடல்களை மிகச் சிறப்பாக எழுதக் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ ஊதியம் பெறுகிறவர்களாக இருக்கிறார்கள்.

ஆனால் இந்த எல்லைக்கு அப்பால் உலகின் வேறு எத்தகைய களங்களிலும் அவர்கள் கவனம் செலுத்துவதில்லை. முறையாக வங்கிக் கணக்குத் தொடங்கிப் பராமரிப்பது, மிகச் சாதாரணமான அடிப்படை வசதிகளையாவது கொண்ட ஓர் இருப் பிடம், அரசுத் துறைசார்ந்த அடையாள ஆவணங்கள், மின்னஞ்சல் உள்ளிட்ட தகவல் தொடர்புகள் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு போன்றவற்றின் மீதெல்லாம் வேண்டிய அளவுக்கு உரியமுறையில் அவர்கள் கவனம் செலுத்துவதில்லை. அன்றைய பொழுதுக்கு அப்போது கவலைப்பட்டுக் காசு தேற்றினால்போதும் என்பதே அவர்களின் அன்றாட வாழ்வியல்பாக இருக்கிறது. நான் பொதுவாகச் சொல்கிறேன். இவர்களில் மகழ்ச்சிக்குரிய வகையில் விதிவிலக்கான பாடலாசிரியர்களும் உண்டு.

‘பாடல்களை எழுதுகிற கவிஞர்களுக்கு, அப் பாடல்களின் உயர்வுக்கும் சமூகப் பரவலுக்கும் ஏற்ற வகையில் புகழ் கிடைக்கத்தானே செய்கிறது. அதைப் பற்றிக் கொண்டு அவர்கள் மேலும் மேலும் உயரலாம்தானே?’ ‘பாடலாசிரியர்களுக்கு அவர்கள் எழுதுகிற பாடல்களுக்கு ஏற்ப புகழ் கிடைக்கத்தான் செய்கிறது. ஆனால் அங்கீகாரம் கிடைப்பதில்லை. தெருவுக்குத் தெரு அவர்களது பாடல்களை ஒலிக்கவிட்டுக் கொண்டாடிக் கொண்டி ருக்கின்ற சமூகம், அப்பாடல் களை எழுதியவர்கள் எதிரே வந்து நின்றாலும் அடையாளம் காண்ப தில்லை.

கொரோனா காலத்தில் சென்னையில் வாழமுடியாத சூழ்நிலையில், தங்களது கிராமங்களுக்குப் புறப் பட்டுப் போய்விட்ட பாடலாசிரியர்கள் ஏராளம். அவர்களில் பலர் இன்னமும் திரும்பிவரவில்லை. அல்லது தேவையின் பொருட்டு அவ்வப்போது சென்னைக்கு வந்து பாடல் எழுதிவிட்டு மீண்டும் தங்களது கிராமத் திற்குப் போய்விடுகிறார்கள்.

pp

உதாரணமாக மயிலாடுதுறை பகுதியில் மேலா நல்லூர் சீனிவாசன் என்கிற பாடலாசிரியர் ஒருவர் இருக்கிறார். அவர் சிம்பொனி உள்ளிட்ட இசை நிறுவனங்களுக்கு 300-க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களை எழுதியவர். ஆனால் அவர் இப்போதும் சென்னைக்கு வந்து பாடல்களை எழுதிவிட்டு மீண்டும் ஊருக்கே போய்விடுவார்.

அவர் எழுதிய 300 பாடல்கள், திரைப்பட வாய்ப்புகள் மற்றும் இசை நிறுவனங்களின் தொடர்புகள் என்று அவருக்கான அனைத்தும் அவரை எந்த அளவுக்கு அங்கீகரித்திருக்கிறது என்பது மிகப் பெரிய கேள்விக்குறிதான்.

சரி இதற்கு யார் மீது குறை சொல்ல முடியும்? என்னதான் செய்யவேண்டும்?

என்னைப் பொறுத்தவரை முதலில் நான் களைய விரும்புவது பாடலாசிரியர்களிடம் நிறைந்துள்ள குறைகளைத்தான். தமிழ்நாடு அரசு - 206/2012 - தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கம் என்கிற, பதிவுசெய்யப்பட்ட ஓர் அமைப்பின் தலைவராக இருந்து கள நிலவரங்களையெல்லாம் கண்கூடாகக் கண்டு நாள்தோறும் குமுறிக் கொண்டிருப்பவன் என்கிற வகையில் இதை நான் உரத்துச் சொல்கிறேன். நமது பாடலாசிரியர் சமூகம், முதலில் தன்னளவில் சுய தெளிவும், தொலை நோக்குப் பார்வையும், வாழ்க்கைக்கான செயல் திட்டங்களும், அரசு தொடர்பான சான்றாதார ஆவணங்களும், வங்கிக் கணக்கு முறைகளும் கொண்ட ஓர் உறுதியான சமூகமாக மாறியாகவேண்டும். இவற்றையெல்லாம் குறித்துச் சிந்திக்கமுடியாத நிலை யில் அவர்களில் பெரும் பானாலானவர்கள் இருப் பதற்குக் காரணம், பல வகையில் அவர்களது மூளையை மழுங்கடித்துச் சீர்குலைக்கின்ற வேண்டாத பல பழக்க வழக்கங்கள்தான். அவர்களை ஒருங்கிணைத்து ஓர் அமைப்பாகத் திரட்டி ஒரு குடைக்குக் கீழே கொண்டு வந்திருப்பவன் என்கிற வகையில் அவர்களுக்கான மாதாந்திரக் கூட்டங்களில் அவர்கள் பெற்றாகவேண்டிய சுயதெளிவையும், மனஉறுதியையும் குறித்தே நான் இடைவிடாமல் தொடர்ந்து உரத்த குரலில் வலியுறுத்திக் கொண்டி ருக்கிறேன்.

தமிழ் என்கிற மிகச் சிறந்த நமது மொழியைத் தங்களது அறிவாளுமையால் மிகச் சிறப்பாகக் கையாண்டு சமூகத்தின் மேன்மைக்கும், பக்திக்கும் களிப்பிற்குமாகப் பாடல்களைத் தருகின்ற பாடலாசிரியர்களில் பெரும்பாலானவர்கள் தங்களின் வாழ்க்கை ஒரு வெற்றுக் கூடாகி நொறுங்கு வதை உணராதவர்களாக இருக்கிறார்கள்.

நிலைமை அவ்வளவு மோசமாகவா இருக்கிறது?

சற்று யோசித்து சன்னமான வருத்தம் தோய்ந்த குரலில் பேசத் தொடங்குகிறார் கவிஞர் தமிழமுதன்.

‘முத்துவிஜயன் என்கிற மிகச் சிறந்த ஒரு பாடலாசிரியரைப் பரவலாக எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவரது கடைக் கால வாழ்க்கை யின் வேதனைகளும், நாற்பத்தைந்து வயதுக்குள் அவருக்கு நேர்ந்துவிட்ட மரணமும், அவரது உடலை எடுத்துக்கொண்டு சுடுகாடுகளைத் தேடி நாங்கள் அலைந்த அவலம் நிறைந்த மனஉளைச்சல்களும் அவ்வளவாக யாருக்கும் தெரியாது.

கட்டுப்பாடற்ற குடிப்பழக்கத்தால்தான் அவரது உடல்நிலை மிகமிக மோசமாகச் சீர்குலைந்தது. இனி அவரைக் காப்பாற்ற முடியாது என்கிற நிலையில், கே.கே.நகரில் தெரிந்த ஒரு தம்பியின் வீட்டில் அவரது பாதுகாப்பில் முத்துவிஜயனை வைத்திருந்தோம் என்றாலும்கூட, அடுத்த மூன்று நாள்களில் அவர் இறந்துவிட்டார். ஊரிலிருந்து அவரது சகோதரருக்கு தகவல் தெரிவித்து அவரை வரவழைத்தோம். எடுத்து அடக்கம் செய்ய எங்களுக்கு வசதி வாய்ப்பு இல்லை, அதற்கான உறவுகளும் இல்லை என்று உடனே அவர் புறப் படத் தயாரானார். அவரைச் சமாதானப்படுத்தி சுடுகாட்டில் முத்துவிஜயனுக்கு இறுதிச் சடங்குகள் செய்யுமாறு நாங்கள் கேட்டுக்கொண்டோம்.

முத்துவிஜயனிடம் எத்தகைய ஆவணமும் இல்லை. தனிப்பட்ட முறையில் பேசி போரூர் சுடுகாட்டில் அவரை எரிக்க ஆம்புலன்சில் உடலை ஏற்றிக்கொண்டு புறப்பட்டோம். பாதி வழியில் போய்க்கொண்டிருக்கும்போதே போரூர் சுடுகாட்டி லிருந்து, ‘இங்கு கொண்டுவர வேண்டாம். போலீஸ் வந்துவிட்டது, வேறு எங்காவது எடுத்துச் செல்லுங்கள்’ என்று கைவிரித்துவிட்டார்கள்.

அடுத்து என்ன செய்வது என்று நானும், சீர்காழி சிற்பியும் கதிகலங்கிப் போனோம். முத்துவிஜயனின் உடலுடன் அப்போது உடனிருந்தவர்கள் நாங்கள் நான்கே நான்கு பேர்தான். அப்போதுதான் அந்த ஆம்புலன்ஸ் வண்டியின் டிரைவர் வளசரவாக்கத்தில் உள்ள சுடுகாட்டில் பேசி எரிக்க ஏற்பாடு செய்யலாம் என்று சொல்லி அவர் வண்டியைத் திருப்பினார். அங்கு நாங்கள் போன போது அங்கே யும் போலீஸ் வந்துவிட்டது.

பிறகு நிலைமையை விளக்கி ஒருவழியாக முத்துவிஜயனை எரிப்பதே ஒரு சாதனை என்றாகி அதைச் செய்து அவரது சாம்பலை அள்ளி அவரது சகோதரரிடம் கொடுத்தோம். ‘மேகமாய் வந்து போகிறேன்’, ‘கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா’ என்பன போன்ற சாகாவரம் பெற்ற பாடல்களை எழுதிய அந்தக் கவிஞன் ஓர் அனாதையைப்போல செத்துப்போன பின்பு இப்படியெல்லாம் நடந்தது’ சொல்லி முடிப்பதற்குள் குரல் உடைந்து குமுறிக் குமுறி அழுகிறார் தமிழமுதன். சற்று இறுக்கமான அமைதிக்குப் பிறகு அவர் மீண்டும் நிதானமாகப் பேசத் தொடங்குகிறார்.

‘பாடலாசிரியர்களுக்கும், இசையமைப்பாளர் களுக்கும், பாடகர்களுக்கும் காப்புரிமைச் சட்டப்படி பொருளாதாரப் பாதுகாப்பு தருகிற ‘ஒடதந’ அமைப்பில் இவர்களை இணைப்பதற்குக்கூட நான் பெரும்பாடுபட வேண்டி இருக்கிறது!’ ‘ஒடதந நிறுவனம் குறித்து கொஞ்சம் விரிவாக சொல்ல முடியுமா?’ “ஒய்க்ண்ஹய் டங்ழ்ச்ர்ழ்ம்ண்ய்ஞ் தண்ஞ்ட்ற் நர்ஸ்ரீண்ங்ற்ஹ்” (இந்திய படைப்புக் காப்புரிமைச் சங்கம்) என்கிற பெயரில் நாடு தழுவிய அளவில் ஓர் வலுவான அமைப்பு கடந்த 1951-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற, சுயாதீனமாகச் செயல்படக்கூடிய இந்த அமைப்பு, இசைக் கலைஞர்கள் மற்றும் பாடலாசிரியர்களின் படைப்புரிமைகள் மற்றும் நலன் சார்ந்து செயல்படக்கூடிய ஒரு வலுவான நேர்மையான அமைப்பாகும். இதைத் தோற்றுவித்தவர் பிரபல திரைப்பட இசையமைப்பாளர் திரு.எம்.பி.சீனுவாசன். மாநிலங்களவை உறுப்பினராக இருந்த பிரபல இந்தி திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் ஜாவேத் அக்தர்தான், நாடாளுமன்றத்தில் பேசி இந்த அமைப்புக்கு சட்ட அங்கீகாரம் பெற்றுத் தந்தார். இப்போது இந்திய அளவில் பல்லாயிரக்கணக்கான பாடலாசிரியர்களும், இசையமைப்பாளர்களும், பாடகர்களும் இவ்வமைப்பின் உறுப்பினர் களாகி தங்களின் பணிகளுக்கு உரிய அங்கீகாரம் பெற்று காப்புரிமை ஊதியங்களைப் பெற்று வருகின்றனர். வெள்ளம், கொரோனா, வறட்சி போன்ற பேரிடர் காலங்களில் அவ்வமைப்பின் நிவாரணத் தொகையினையும் பெற்றுவருகின்றனர். இவ்வமைப்பின் உறுப்பினர்களுடைய படைப்புகள் எங்கே பயன்படுத்தப்பட்டாலும் அதற்குரிய ஒரு சிறு தொகை அவ்வவ்போது சேர்ந்து பின்னர் அது குறிப்பிட்ட கால இடைவெளியில் படைப்பாளிகளுக்கு கொஞ்சம் கணிசமாக அவர்களது வங்கிக் கணக்கிற்கு வந்துசேரும். அந்த அளவுக்கு இந்திய அளவில் மிகவும் தெளிவான, உறுதியான தகவல் தொடர்பு அறிவியல் கட்டமைப்பு முறைகளைக் கொண்டது ஒடதந நிறுவனம்.

இதில் துயரம் என்னவென்றால் தங்களின் படைப்புரிமைக்களுக்காக இப்படியோர் அமைப்பு சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதுகூட பெரும்பாலான திரைப்படம், தொலைக் காட்சி, பக்தி, வாழ்வியல் என்று அனைத்துத் துறைகளையும் சார்ந்த தமிழ்ப் பாடலாசிரியர்களுக்குத் தெரியாது. தெரிந்தவர்களோ இது குறித்து தனது சக படைப்பாளிகளிடம் வாய்திறப்பதே கிடையாது.

இந்த ஒடதந அமைப்புக்கும் உங்களுக்குமான தொடர்பு எத்தகையது? இதன் வாயிலாகப் பாடலாசிரியர்களுக்கு நீங்கள் எப்படி உதவமுடிகிறது? இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமாரின் உதவியாளரும் தெலுங்குத் திரைப்படப் பாடலாசிரியருமான இ.எஸ்.மூர்த்தி தான், 2005-ஆம் ஆண்டு ஒடதந அமைப்பை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். அதன்பிறகு அந்த அமைப்பைப் பற்றித் தெரிந்துகொண்டு, அதில் நான் செயற்குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தேன். எனவே இந்த அமைப்பினால் கிடைக்கக்கூடிய பயன்களையெல்லாம் நமது பாடலாசிரியர்களுக்கு விளக்கி 300-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பாடலாசிரியர்களையும் 25-க்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்களையும் இந்த அமைப்பின் உறுப்பினர்களாகச் சேர்த்தேன். இந்த வேலையை கட்டாயப்படுத்தியும், வேண்டியும், கெஞ்சியும் தான் நான் செய்யவேண்டியிருக்கிறது.

ஏனெனில் இந்த அமைப்பைக் குறித்த எந்தவொரு விழிப்புணர்வும் நமது பாடலாசிரியர் களுக்கு இல்லை. அதன் பயன்கள் என்னவென்று அவர்களுக்குத் தெரியவில்லை. மிகவும் புகழ்பெற்ற கவிஞர் ஒருவர், ஒடதந என்றால் என்ன? என்று முகத்தைச் சுழித்துக்கொண்டு கேட்டார். இருந்தாலும் நான் மனம் தளருவதே யில்லை. அனைத்து வகையான பாடலாசிரியர் களையும் அந்த அமைப்பில் இடையறாமல் சேர்த்துக்கொண்டேயிருக்கிறேன். அண்மையில்கூட ஒரு பாடலாசிரியருக்கு அவ்வமைப்பின் தகவல் தொடர்பில் ஒரு சிக்கல் ஏற்பட்டது. அதைச் சரி செய்தேன். பிறகு நிலுவையில் இருந்த அவருக் கான ஒரு பெருந்தொகை அவரது கணக்கிற்கு வந்து சேர்ந்தது. இன்னொருவருக்கு நான்கு இலட்சம் வந்தது. இன்றளவும் அவ்வமைப்பில் என்னால் சேர்த்துவிடப்பட்ட படைப்பாளிகளுக்கு அவரவர் படைப்புகளின் பயன்பாட்டு அடிப்படையில் காப்புரிமைத்தொகை வந்து கொண்டுதான் இருக்கிறது.

சரி அண்ணா... சங்கத்துல ஒரு கூட்டம் நான் கௌம்பறேன்!

விடைபெற்றுக் கொண்டு ஓடிக்களைத்து, உழைத்து, நொடித்துப் போயிருந்த ஒரு இரு சக்கரவாகனத்தை பலமுறை உதைத்து அதை உறுமவைத்து புறப்பட்டுப் போகிறார் கவிஞர் தமிழமுதன். நமக்குத்தான் ஏனோ மனம் சற்று கனத் துப்போகிறது.