"தமிழிலும் சரி ஆங்கிலத்திலும் சரி,அல்லது வேறு

எனக்குத் தெரிந்த எந்தமொழியிலும் சரி.நான்பண்டிதனல்ல.

இதைப் பெருமையாகவும் சொல்லிக் கொள்ளலாம். சிறுமையாகவும் கொள்ளலாம்.ஆனால்நான் பண்டிதனல்லாத காரணத்தால்

தான் நான் ஒருநூலைப் படித்தவுடன்முன்பின்

Advertisment

யோசனைக்கு இடம்தராமல்இது எனக்குப் பிடித்தது என்றும், ஏன்பிடித்தது என்றும் சொல்லும் துணிவைப்பெற்றேன்”

-என்று ஓர் அழுத்தமான குரல்

ஒலித்தபோது, தமிழ் இலக்கியக்களத்தில்ஒரு சலசலப்பு ஏற்பட்டது.

Advertisment

"இலக்கியத்தில்ஆணவம், தனித்தன்மை தேவைப்படுகிறது.இல்லாவிட்டால் மிஷின்கள் உற்பத்தி செய்யும் இலக்கியம்தான் இருக்கும்.

.மனிதர்கள் ஒருவருக்கொருவர் மாறுபட்டுச் செய்யும் இலக்கியம் இராது.க.நா.சுபாணி என்பதே மருட்டுவதாக இருந்தது.அவரது நோக்கம் அதுவாக இல்லை. உலக இலக்கியத்திற்குஇணையாக-அதைத்தாண்டியும் தமிழிலக்கியத்தைக் கொண்டுபோக வேண்டும் என்ற உந்துதல்தான்.உண்மை என்ற ஒன்றே இவரது கைவசமிருந்த ஆயுதம் என்றாலும் க.நா.சு வைஓர் இலக்கிய இயக்கமாகவே அடையாளப்படுத்த வேண்டியிருக்கிறது.

காலமும்ஏதோ சொல்பம் விரயமானாலும் பாதக மில்லை.நல்ல நூலாக ஓரிரண்டு இந்தஆண்டிலோ, இந்த மாதத்திலோ படித்தோம்;படித்துப் பாராட்டினோம் என்று ஓர் இரண்டாயிரம் மூவாயிரம் பேருக்குத்திருப்தி ஏற்பட வேண்டும்.அப்போதுதான்தமிழ்நாட்டில் ஓர்இலக்கிய இயக்கம்செயல்படத் தொடங்கிவிடும்.நன்றாகஇருக்கிறது என்று சொன்னால் தேடிப் பிடித்துப் படிக்க ஒரு பத்துபேர் இருந்தால்போதும் என்பார்.

தமிழ்ப்பண்டிதப் பேராசிரியர்களின் இலக்கிய அக்கறையில்அலட்சியம் நிறைய இருந்தது.புறக்கணிப்பும்கூட. முறையாகக்கற்றவர்க்கு இரசனை அவ்வளவாகஇருப்பதில்லை.எல்லாமே பாடதிட்டத்திற்குள் இருக்கிறது என்ற எண்ணம் வந்துவிடுகிறது.முதல் நூலைவிட வழிநூல்பற்றிய மறதி வந்துவிடுகிறது. இனிபடிக்கவேண்டிய அவசியமே இல்லை என்றுஎண்ணிவிடுகிறார்கள்.எனவே இவர்களிடம் சிறந்த இலக்கியம் என்ற பிரக்ஞை துளிக்கூட இருக்க முடியாது என்று அதிரவைப்பார்.

dd

தன் எழுத்து முழுமையானதல்ல.முயற்சிமட்டுமே என்று சொல்வதில் தயக்கம்காட்டியதில்லை.சர்மாவின் உயில்,பசி, சக்தி விலாசம், பித்தப்பூ,மணிக்கூண்டு, ஆடரங்கு, கருகாத மொட்டு முதலானஅனைத்துமே என்னுடைய சோதனைமுயற்சிகளே என்பார்.

சர்மாவின் உயில்தன்னுடைய சுயசரிதை என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.விமரிசனக்கலை, படித்திருக்கிறீர்களா, உலகத்துச் சிறந்த நாவல்கள், இலக்கிய விசாரம், இலக்கியக்கலை, இலக்கியத்துக்கான இயக்கம்,அவதூதர்,என்பன முக்கியமானவை.

நவீன இலக்கியயுகம் என்பது க.நா.சு அறிமுகப்படுத்திய பிறகே புரிபட ஆரம்பித்தது.நம் இலக்கிய மரபு,நம் இலக்கிய மரபிலிருந்து எழாமல் மேலை இலக்கியமரபிலிருந்து கடன்வாங்கியது.

இது வளர்ச்சிக்கு இட்டுச் செல்லவில்லை.நம் பண்டைய-சமகால இலக்கியங்களை நம் பண்பாடு, சமூகம் ஆகியவற்றின் பின்னணியைவைத்து விமரிசிக்கிறோம்.இது சரியன்று.மேலை விமரிசன மரபு வளரவில்லை.அது அலசலில் சிக்கிக் கொண்டது.தேங்கியும்விட்டது.நம் மரபோ அனுபவ விமரிசனமாகச்சிறிது நகர்ந்துவிட்டது.இரசனையை விலக்கிவிட்டது. இரசனை இன்றேல் வளர்ச்சி இல்லை என்று கடுமையாகப் பேசினார்.

தாமஸ்மன்,ஆர்தர் கெய்சர், கதே,மொபசான், டால்ஸ்டாய்,எலிசெபத் காஸ்வெல்,நட்ஹாம்சன் என்ற பெயர்களை தமிழுக்குத் தெரியப்படுத்தினார்.படைப்புகளையும்தமிழில் சுருக்கமாகத்தந்தார். மிகச் சிக்கலான மேலைப்புதினங்களை மொழிபெயர்க்க ஆர்வம் கொண்டார்.ஷீட்,டை மொழிபெயர்த்தது சாதனை. இலக்கியம் எல்லாவற்றையும்விட உயர்ந்தது என்றகருத்துஇருந்தது.இலக்கியம் பணியோபதவியோ அல்ல.அது வாழ்க்கை லட்சி யம்.உபாசனை.இதில் சமரசமோ அலட்சியமோஇல்லை.எல்லாவற்றையும் தரப்படுத்த முடியும்.தரப்படுத்திப் பார்க்க முடியாததால் நாம் தேங்கி நிற்கிறோம்.தமிழர்கள் மிகைநாடிகள்.இருப்பதே போதும்அவை சரியானவை என்பதே பிழை எனச் சொன்னபோது கண்டனங்களை எதிர்கொண்டார்.இயல்பாகக் கிடைக்க வேண்டிய கௌரவங்கள்கூட கிடைக்காமல்போயின.

க.நா.சு கவலைப்பட்டதில்லை.க.நா.சுவிற்குச் சொத்தாக ஒரு சின்ன டைப்ரைட்டர்,பெரிய ஜோல்னாப்பை.அதற்குள் நாலு வேஷ்டிகள், வெள்ளைஜிப்பாக்கள், மூன்று தமிழ் ஆங்கிலப்புத்தகங்கள்.

பணக்கஷ்டம் அடிக்கடிவந்துவிடும்.பழைய இந்து பேப்பர்களைச் சேகரித்துக் கடைக்குப் போட எடுத்துச்சென்றால் அவரிடம் பணமில்லை என்றுபொருள்.மயன் கவிதைகளை வாசித்து விட்டு 'உங்களுக்கு கவிதையோ கதையோ எழுதவராது விமரிசனத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்'என்ற போது, அப்படி யா சொல்றே?..என்ற ஒற்றைவரிதான் பதில்.ஆண்டுதோறும் அவர்போடும் பட்டியல்குறித்துக் கிண்டல் செய்வதுண்டு.

எவ்வளவு வெறுப்பான விஷயமானாலும் அதுபற்றி அபிப்ராயம் சொல்லித்தரவும்பெறவும் வேண்டியது அவசியம்.இல்லாவிட்டால் பண்டிதப் பேராசிரியர்கள் கையில் அகப்பட்டுக் கொண்டு சில ஆண்டுகளில்,சில தலைமுறைகளில் நசிந்துவிடும்.தமிழில் தரவிமரிசனம் செய்யப்பேராசிரியர்களுக்கு நிச்சயம் தைரியம் வராது என்பதுண்டு.

பாதி கிணறுதாண்டியபின் மிச்சத்தைக் கற்பனையில்தாண்டுவதுதான் இலக்கியம் என்பது அவரது கட்சி.ஒரு ஏழெட்டுப்பத்து இலக்கியக்காரர்களை க.நா.சுவால் ஏற்கமுடிந்தது.முதல் ஆசாமி புதுமைப்பித்தன்.பட்டியல்கள் முக்கியம்.நல்ல இலக்கியங்களை இனம் காட்டமுடியும்.சைவத்தில் நம்பியாண்டார் நம்பி. வைணவத்தில் நாதமுனிகளையும் உதாரணமாகச் சொல்வார்.

"தேவதைகளின் கிளர்ச்சி"எனற பிரஞ்சுக்கதையும் ஆர்தர் கெய்சரின் 'நண்பகல்இருட்டும்' அவருக்குப் பிடித்தமானவை.

ஜ்யார்ஜ் ஆர்வெல் லின் விலங்குப்பண்ணையையும் 1986 ஐயும் மொழிபெயர்த்து எங்களிடமே வாங்கிக் கட்டிக் கொண்டார்.திருக்குறள்,சிலப்பதிகாரம் இரண்டையும் மொழிபெயர்க்க ஆரம்பித்ததுதெரியும்.இலக்கியத்தரம், அளவுகோல்களைச் சிந்திக்கமறுப்பது வளர்ச்சிக்கு உதவாது.பழைய இலக்கியங்கள்பற்றிய அளவுகோள்கள் இனிமேல்தான் ஏற்படவேண்டும்.இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை என்பது அவரின் மனக்குறை.

எங்களைக் க.நா.சு வின் அடிப்பொடிகள் எனப்பேசுவர்.இது எங்களுக்கான அரியசன்னத்துதான். ஒருமுறை தஞ்சாவூரில் க.நா.சு சிறப்புரை.தஞ்சைப்ரகாஷ் ஏற்பாடு. நகரத்தில் நெடுக" க.நா.சு பேசுகிறார்" என்ற வால்போஸ்டர்.வியந்துபோன க.நா.சு சொன்னது: " எனக்கு ரெண்டுபோஸ்டர் குடுப்பா. மனைவியிடம் காட்டணும்"

என் அபிப்ராயத்தில் வலு இல்லாவிடின்காலம் அடித்துக் கொண்டுபோய்விடும்.வலுவிருந்தால் என் அபிப்ராயம் நிற்கும்.

என்பார்.இது க.நா.சு வின் கலை வெளிப்பாடு.