க்கீரன் ஆசிரியரின் இதழியல் துறைத் சாதனைகளையும், தமிழ் எழுத்துப் பணிகளையும் பாராட்டி, மார்ச் 6-ஆம் தேதியன்று, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில், சிறந்த இதழியலாளருக்கான 2023ஆம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருதினை, ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

இந்த விருதுடன் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஐந்து இலட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது! இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் இ.ஆ.ப., உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ss

இதழியல் துறை சாதனைக்காக தமிழ்நாடு அரசின் உயரிய விருதினைப் பெற்றுள்ள நமது ஆசிரியர், நக்கீரனை 37 ஆண்டுகளாக முன்னெடுத்துச் செல்வதற்காக எதிர்கொண்ட சவால்கள் எண்ணற்றவை! புலனாய்வுப் பத்திரிகை உலகில் தவிர்க்கவேமுடியாத பெயர் நக்கீரன்! நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே யென தமிழ்ப் பத்திரிகை உலகில் 37 ஆண்டுகளாக நடைபோட்டுக் கொண்டிருக்கும் நக்கீரன் கடந்துவந்த பாதை மலர்ப்பாதையல்ல... முட்கள் மட்டுமல்லாது கண்ணிவெடிகளும் புதைத்துவைக்கப்பட்ட பாதை! யாரோ செதுக்கிய பாதை யில் பயணிக்காமல், தனக்கென தனிப்பாதையை செதுக் கியதுதான் நக்கீரன் ஆசிரியரின் தனித்தன்மை!

1988-ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதியன்று, வெறும் 4,000 ரூபாய் முதலீட்டோடு, பல நண்பர்களின் ஆதரவோடு, "10ல 10' அறையில் நக்கீரன் பத்திரிகையைத் தொடங்கினார். திறமையான நண்பர்கள் குழு, கடினமான உழைப்பு ஆகியவற்றையே மூலதனமாகக்கொண்டு, எதையும் துணிச்சலோடு புலனாய்வு செய்து செய்திகளை வெளியிட்டதால், வாசகர்களின் அமோக ஆதரவால் ஒரே ஆண்டில் 1,33,000 பிரதிகள் விற்பனை என்ற சாதனையை செய்தது நக்கீரன்.

Advertisment

அடுத்தடுத்த வளர்ச்சியால், 2001-ஆம் ஆண்டில் ராயப்பேட்டைக்கு நக்கீரன் அலுவலகம் மாறியது.

தற்போது அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பிரமாண்ட அலுவலகம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. கடும் உழைப்பால் சிந்திய வியர்வை மட்டுமல்லாது, உண்மையை உரக்கச் சொன்னதற்காக ரத்தமும் சிந்தி யிருப்பதுதான் நக்கீரனின் இந்த வளர்ச்சிக்கு காரண மாக அமைந்துள்ளது. ஆட்சியாளர்கள் யாராக இருந்தாலும், அடக்குமுறைக்கு அஞ்சாமல், மக்களிடம் உண்மையைக் கொண்டுபோய் சேர்க்கவேண்டும் என்பதே நக்கீரனின் இலட்சியம்.

நக்கீரன் அம்பலப்படுத்திய ஆட்சியாளர்களின் ஊழல்கள் ஏராளம். ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவத்தில், அதற்கு காரண மான பாம்பே ரவுடி சுர்லாவின் படம் நக்கீரனில் வெளி வந்த பிறகே அவனை காவல்துறையினர் கைது செய்தார்கள்.

Advertisment

37 ஆண்டுகால புலனாய்வு இதழியல் பயணத்தில் நக்கீரன் வெளிக்கொண்டு வந்தது ஏராளம் என்றா லும், "நக்கீரன்' என்றால் எல்லாருக்கும் நினைவுக்கு வருவது வீரப்பன்தான். தமிழ்நாடு - கர்நாடகா ஆகிய இரு மாநில அதிரடிப்படைக்கும் சிம்மசொப்பனமாக விளங்கிய வீரப்பன் உண்மையில் யார், அவன் எப்படி இருப்பான், அவனைப் பிடிக்க கோடிக் கணக்கில் அரசுகள் செலவு செய்வது ஏன், அவன் இருக்கும் காட்டுப் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் இரு தரப்பிலும் துன்பப்படுவது ஏன் என்பதை யெல்லாம் நக்கீரன் தனக்குத்தானே கேள்விகளாக எழுப்பியது.

வீரப்பனால் கர்நாடக வனத்துறையினரும் நடிகர் ராஜ்குமாரும் கடத்தப்பட்டபோது, இரு மாநில அரசு களின் அதிகாரப்பூர்வ தூதர் என்ற அங்கீகாரம் நக்கீரனுக்கு கிடைத்த பெருமை. இரு மாநில மக்களின் பதற்றத்தைத் தணிக்கும் வகையில், எவ்வித உயிர்ப்பயமும் இன்றி மீட்பு முயற்சியை வெற்றிகரமாக செய்து முடித்தது நக்கீரன். அதுமட்டுமல்ல, நக்கீரன் மேற்கொண்ட சட்டப்பூர்வமான முயற்சிகளால் வீரப்பன் காட்டுப் பகுதி மலைவாழ் மக்கள் அனுபவித்த துன்பங்கள் தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலையீட்டின்படி முடிவுக்கு வந்தன. நீதிபதி சதாசிவா கமிஷன் இதுகுறித்து விசாரித்து, நிவாரணம் வழங்க உத்தரவிட்டது.

வீரப்பன் காட்டில் வீரப்பனைப் பிடிக்கச்சென்ற இரு மாநில போலீசார் செய்த காமக்கொடூரம், கொலைகளை ஆதாரத்துடன் டெல்லி மனித உரிமைக் கழகத்தில் வழக்குத் தொடுத்ததன் விளைவுதான் இந்த சதாசிவா கமிஷன். இதன் எதிரொலியாக, நக்கீரன் தலையிட்டபின் அந்தக் காட்டில் பெண்கள் பலாத்காரம் அறவே நிறுத்தப்பட்டது.

வீரப்பனிடமிருந்து பிணைக்கைதிகளை மீட்டுவந்ததில் கடுப்பான ஜெயலலிதா அரசால், வீரப்பனைப் பார்த்ததற்கு கைமாறாக, வீரப்பன் செய்த 3 கொலை வழக்குகள், 4 கடத்தல் வழக்குகள், ஒரு ஆயுத வழக்கு மற்றும் எண்ணிலடங்கா அவதூறு வழக்குகள் போடப்பட்டு, அத்தனையையும் எதிர்கொண்டு தான் நக்கீரனை முன்னெடுத்து வந்தார் ஆசிரியர். அ.தி.மு.க அலுவலகத்தில் நடந்த உட்கட்சிப் பூசல் முதல், ஜெயலலிதா- சசிகலாவின் மகாமகக் குளியல் காரணமாக ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த உயிர்கள் குறித்த விவரங்களோடு, ஜெயலலிதா வின் இறுதிக்காலத்தில் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டதிலிருந்து, அவரது கால்களை வெட்டியெடுத் தது வரை புகைப்பட ஆதாரங்களோடு உரக்கப் பேசியது நக்கீரன்.

மதுரை‘தினகரன்’ பத்திரிகை அலுவலகம் எரிப்பு விவகாரத்தில், அந்த கொடூரத்தைச் செய்தது மதுரை அட்டாக் பாண்டி என்பதை படங்கள் மூலம் வெளி யிட்டது நக்கீரன்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப் பட்டதில், அதிலிருந்த சர்வதேசப் பின்னணியை வெளிக்கொண்டுவந்தது நக்கீரன்தான். பிரேமானந்தா முதல் நித்யானந்தா, சிவசங்கர் பாபா, காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர், ஈஷா ஜக்கி வாசுதேவ் வரையிலான சாமியார்களின் லீலைகளை அம்பலப்படுத்தியது நக்கீரன்தான். பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளான கொடூரத்தை நக்கீரனின் புலனாய்வுதான் வெளிக்கொண்டுவந்தது. அதன்பின்னரே காமக்கொடூரர்கள் மீது வழக்குகள் பாய்ந்தது. பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை ஆசைவார்த்தை காட்டி, வி.வி.ஐ.பி.க்களுக்கு விருந்தாக்க முயன்றபோது, அவ்விவகாரத்தை வெளிக்கொண்டுவந்து, நிர்மலா தேவிக்கு தண்டனை கிடைக்கச்செய்ததில் நக்கீரனின் பங்களிப்பு பெரிது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி கொல்லப்பட்டதில், அது தற்கொலையல்ல, கொலை தான் என்பதை அன்றிலிருந்து இப்போதுவரை பல்வேறு கேள்விகள், ஆதாரங்களின்மூலம் உரக்கச் சொல்லிவருவது நக்கீரன் மட்டுமே!

புலனாய்வு இதழியல் என்பது வெறும் விமர்சனமல்ல, ஆக்கப்பூர்வமான செயல்பாட்டு வடிவம். நக்கீரனில் மரண தண்டனைக் கைதி ஆட்டோ சங்கர் மரண வாக்குமூலம் என்ற பெயரில் தொடர் எழுதியபோது அதற்கு காவல்துறை தடை விதித்தது. அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று நக்கீரன் பெற்றுத்தந்த தீர்ப்புதான் இன்றளவும் ஊடக சுதந்திரத்திற்கான பாடத்திட்டமாக இந்தியாவில் சட்டம் பயிலும் மாணவர்களுக்கு அமைந்துள்ளது. கொலம்பியா பல்கலைக்கழகம் "க்ளோபல் ஃப்ரீடம் ஆப் எக்ஸ்பிரஷன்' வலைத்தளத்தில் நக்கீரன், உச்சநீதிமன்றத்தில் நடத்திய சட்டப் போராட்டத்தைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளை எதிர்த்து நக்கீரன் மேற்கொண்ட சட்டப் போராட் டங்கள் ஏராளம். அதற்காக நக்கீரன் கொடுத்த விலையும் அதிகம். பொடா சட்டத்தின் கீழ் 252 நாட்கள் நக்கீரன் ஆசிரியர் சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத் தப்பட்டார்.. நக்கீரன் இணையாசிரியர், நிருபர்கள் எனப் பலரும் பல பொய் வழக்குகளில் சிறைப் படுத்தப்பட்டனர். அலுவலகத்தில் சோதனை என்ற பெயரில் அத்துமீறல்கள் நடைபெற்றன. 2012, ஜனவரி 7 அன்று ஜெயலலிதா பற்றிய செய்திக்காக நக்கீரன் அலுவலகத்தை அ.தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்கள் உட்பட 1000 பேர் தாக்கி சூறையாடினர். ஒரே நாளில் 261 எஃப்.ஐ.ஆர். நக்கீரன்மேல் போடப்பட்டது.

வாழ்க்கை முழுக்க போராட்டங்களையே சந்தித்துவரும் நக்கீரனுக்கு, சில ஆறுதல் ஒத்தடங்களும் கிடைக்கத்தான் செய்தன. குறிப்பாக, சந்தனக் கடத்தல் வீரப்பன் பிடியிலிருந்து கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் உள்ளிட்டவர்களை மீட்டு வந்ததற்காக, இரு மாநில அரசுகளும் நக்கீரன் ஆசிரியருக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கி கௌரவித்தன. அதே வருடம், நீதியரசர் கிருஷ்ணய்யர் விருது, நக்கீரன் ஆசிரியருக்கு வழங்கப்பட்டது. நக்கீரன் ஆசிரியரின் இதழியல் பணிகளைப் பாராட்டி, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி, பெரியார் விருதை 2005-ல் நக்கீரன் ஆசிரியருக்கு வழங்கினார். அதுபோல், தமிழக அரசின் 2009-ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதினை, அன்றைய முதல்வர் கலைஞர், 15-01-2010 அன்று நக்கீரன் ஆசிரியருக்கு வழங்கி சிறப்பித்தார். இதேபோல் சர்வதேச தொண்டு நிறுவனமான "யூனிவர்சல் பீஸ் ஃபெடரேஷன்' அமைப்பு, நக்கீரன் ஆசிரியரை லண்டனுக்கே அழைத்து, ‘அமைதிக்கான தூதர்’ விருதினை வழங்கி கவுரவித்துள்ளது.

நக்கீரன் ஆசிரியருக்கு வழங்கப்பட்டுள்ள கலைஞர் எழுதுகோல் விருதுக்கு, சக பத்திரிகையாளர்கள், அன்பர்கள் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.

எம்.பி.உதயசூரியன்- பத்திரிகையாளர்

ss

அநீதியை வீழ்த்தி

அறத்தைக் காப்பதில் -

அதிகார மிரட்டலுக்கு

அஞ்சாமல் எதிர்த்து நிற்பதில் -

பொய்வழக்குகளை எதிர்கொண்டு

போராடி வெல்வதில் -

போலி பீடங்களின் முகத்திரையைக்

கிழிப்பதில் -

சாமானிய மக்களுக்கு

அரணாக நிற்பதில் -

அரசியலில்

தமிழினத் தலைவர் கலைஞர் என்றால்...

இதழியல் துறையில் "நக்கீரன்" ஆசிரியர்

அண்ணன் திரு. நக்கீரன் கோபால் அவர்கள்தான்!

அண்ணனின் அசர வைக்கும் இதழியல் சாதனைகளைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கியுள்ள "கலைஞர் எழுதுகோல் விருது" அண்ணன் அவர் களுக்கு எத்தனை பொருத்தம்! எத்தனை சிறப்பு!

ஒரு சக பத்திரிகையாளராகப் பெருமித வாழ்த்துகள் அண்ணே!

பழநிபாரதி பாடலாசிரியர்

ss

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற அய்யன் வள்ளுவனின் எழுதுகோலால், 'மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு' என்ற தந்தை பெரியாரின் கறுப்பு மை தொட்டு எழுதி... எழுதி... எழுதி... இந்தத் தமிழ் மண்ணையும் மக்களையும் ஆண்டவர் கலைஞர்.

அத்தகைய கலைஞரின் பெயரிலான கலைஞர் எழுதுகோல் விருதை (2023) தமிழ்நாடு அரசு அண்ணன் நக்கீரன் கோபாலுக்கு வழங்கியிருப்பது பொருத்த மான தேர்வு.

'நக்கீரன்' பத்திரிகை வாயிலாக அண்ணன் கோபால் அவர்கள் தமிழ்ச் சமூகத்திற்கு ஆற்றியிருக்கிற தொண்டும், ஏற்படுத்தியிருக்கிற விழிப்பும் அளப்பிற் கரியவை. அண்ணனுக்கு என் அன்பில் நனைந்த வாழ்த்துக்களைக் கவிதைத் தமிழால் அள்ளி வழங்குகிறேன்.

பெ.கருணாகரன்- பத்திரிகையாளர்

ss

"நாளை நடக்கவிருப்பதை முன்கூட்டியே யூகித்து, அதற்கேற்ப திட்டமிட்டுச் செயல்படுவது கோபால் அண்ணனின் தனிச்சிறப்பு. அதுதான் அவரது வெற்றிக்கும் அடிப்படை. ஜெயலலிதா ஆட்சியின்போது க.சுப்பு எழுதிய 'இங்கேயும் ஒரு ஹிட்லர்' தொடர் நக்கீரனில் வெளிவந்து கொண்டிருந்தது. அதனால் ஆத்திரமடைந்த ஆளுங்கட்சி, நக்கீரனுக்குத் தொடர்ந்து மின் இணைப்புத் துண்டிப்பு, தண்ணீர் இணைப்புத் துண்டிப்பு என்று தொல்லை கொடுத்து வந்தது. அதன் உச்சகட்டமாக ஒருமுறை நக்கீரன் அச்சகத்துக்குள் நுழைந்து அச்சான புத்தகங்களை எல்லாம் பறிமுதல் செய்து எடுத்துப்போனார்கள்.

ஆனால், ஆட்சியாளர்கள் முகத்தில் கரியைப் பூசுவது போல் மறுநாள் நக்கீரன் இதழ் கடைகளில் விற்பனைக்கு வந்தது. நடந்தது என்னவென்றால் நக்கீரன் பிரதி களை அந்த வாரம் பறிமுதல் செய்யப் போகிறார்கள் என்ற தகவல் முன்கூட்டியே அண்ணனுக்குத் தெரிய வந்ததால் அந்த வார இதழை முன் எச்சரிக்கையாக இன்னொரு அச்சகத்திலும் அச்சடிக்க ஏற்பாடு செய்திருந்தார். முன்கூட்டியே எதையும் திட்டமிட்டு அயராமல் செயல்படுவதே அவரது வெற்றிக்குக் காரணம்...''

இயக்குநர் சீனு ராமசாமி

ss

தானறிந்த ஒரு செய்தியை, ஒரு உண்மையை தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் செயல்பட்டு, மக்களுக்கு கொண்டுவந்து சேர்ப்பவர்கள் பத்திரிகையாளர்கள் என்ற பெருமை உண்டென்றால், அதற்கு காரணம் அண்ணன் நக்கீரன் கோபால் அவர்கள். அண்ணனுக்கு இந்த விருது கொடுத்திருப்பதால் விருதுக்கு பெருமை. அதே சமயத்தில், மற்ற எல்லாருக்குமே இது வழிகாட்டக்கூடிய ஒரு விஷயம். அரசியல் பத்திரிகைகளில் நடுநிலையோடு செயல்படுவ தென்ற ஒரு விஷயம் எப்போதுமே பாதிப்பு களை உண்டாக்கக்கூடியது. எதிர்க்கட்சியையும் எதிர்த்தாக வேண்டியிருக்கும், ஆளுங்கட்சியையும் எதிர்க்கவேண்டியிருக்கும். எல்லோருடைய பகையையும் சம்பாதிக்கவேண்டிய சூழல் உண்டாகும். அப்படி எந்த சூழல் வந்தாலும் உண்மையை மக்களுக்கு சொல்லவேண்டும் என்று இயங்கிக்கொண்டிருக்கிறார். இப்படி செயல்படுபவர்களை ம்ங்ள்ள்ங்ய்ஞ்ங்ழ் என்று ஆங்கிலத் தில் சொல்வார்கள், அது போல், இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான, பெருமைக்குரிய தமிழ் பத்திரிகை ஆசிரியர்களில் அண்ணன் நக்கீரன் கோபால் இடம்பிடித்துள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்

இயக்குநர், நடிகர் கவிதாபாரதி

ss

குண்டாந்தடிகளுக்கும், துப்பாக்கிகளுக்கும் அஞ்சாமல் அதிகாரத்திற்கும், அதர்மத்துக்கும் எதிராக எழுதுகோலை ஆயுதமாக்கிய வர் அண்ணன் நக்கீரன் கோபால்.

அவரை கலைஞரின் எழுதுகோல் ஆசீர்வதித்தி ருக்கிறது... மகிழ்ந்த வாழ்த்துகள்!

மு.முருகேஷ் கவிஞர், பத்திரிகையாளர்.

அறத்தின் இதழியல் குரலை எதிரொலித்த ஆளுமைக்கு கலைஞர் எழுதுகோல் விருது!

ss

இதழியல் அறத்தின் குரலாக ஒலிக்கும் ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ எனும் வரிகளை இதழின் நெற்றியில் மட்டுமின்றி, தனது இதயத்திலும் ஏந்திய தமிழ் இதழியல் முன்னோடி அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களின் இதழியல் அனுபவத்திற்கு அரை நூற்றாண்டு வயதிருக்கும்.

கடந்த 37 ஆண்டுகளாக நக்கீரன் எனும் அரசியல் புலனாய்வு இதழின் வழி அவர் செய்திருக்கும் பல சமூக அக்கறைமிக்க செயல் பாடுகள் இந்திய அளவிலும் உலக அளவிலும் கவனம் பெற்றவை; பாராட்டப்பெற்றவை.

இதழின் ஆசிரியராக இருந்தாலும் வாசக ரோடும், தமிழ் மக்களோடும் இரண்டற கலந்துநின்று, இன்முகத்தோடு எப்போதும் உரையாடிவரும் நக்கீரன் கோபால் அவர்களுக்கு தமிழக அரசு 2023-ஆம் ஆண்டிற்கான‘கலைஞர் எழுதுகோல் விருதினை வழங்கியிருப்பது தகுதியுடைய இதழியலாளருக்கு வழங்கப்பட்ட சிறப்பு டைய விருதாகும்.

இவ்விருதினைப் பெற்ற அண்ணன் நக்கீரன் கோபால் அவர்கள் மகிழ்ந்திருப்பதைப் போலவே, கலைஞரால் மிகவும் நேசிக்கப்பட்ட இதழாளருக்கு கலைஞர் பெயராலான எழுதுகோல் விருதினை வழங்கியிருப்பதற்கு தமிழக அரசுக்கு தமிழ் மக்களின் சார்பாக என் நன்றிகளைப் பகிர்கின்றேன்.

கவிஞர் திருமாவளவன்

ss

வீரப்பனுக்கும் மாநில அரசாங்கங்களுக்கும் இடையில் அமைதியின் தூதராக இருந்த முதல் ஆசிரியர் என்னும் பெருமையை உடையவர். வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமார் மற்றும் எட்டு வனக்காவலர்களை வெற்றிகரமாக மீட்டவர். பத்திரிகை சுதந்திரத்திற்காக இந்திய உச்சநீதிமன்றம் வரை சென்று அதில் வெற்றியும் பெற்றவர்.

அருப்புக்கோட்டையிலிருந்து புறப்பட்டு வந்த இந்த எழுத்து சாமான்யர் வளரும் பல இளைய சமூகத் தின் ஒளிவிளக்கு. கலைஞர் எழுதுகோல் விருது இவருக்கு அளித்திருப்பது பொருத்தமான ஒன்று.

மனமார்ந்த வாழ்த்துக்கள்!