"இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்

நடுக்கற்ற காட்சி யவர்.'

-என்பது வள்ளுவர் வாக்கு.

தெளிவான அறிவும் மன உறுதியும் கொண்டவர்கள், எந்த நிலை யிலும் இழிவான செயலில் ஈடுபடமாட்டார்கள் என்பதே இதன் பொருள்.

இந்தக் குறள், இப்போது டெல்லியில் அதிகாரத்தைச் செலுத்துகிற பா.ஜ.க.வினருக்கு ஏக பொருத்தமான குறளாக இருக்கிறது.

பாலியல் அத்துமீறல்- கொலைக்குற்றம்- பணமோசடி- ஏமாற்று- வன ஆக்கிரமிப்பு என பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கியிருக்கும் ஜக்கிவாசுதேவ் நடத்திய சிவராத்திரி விழாவில் கலந்துகொண்டதன் மூலம், நாட்டின் மாண்பையும் தனது பதவியின் மாண்பையும் ஒரு சேரக் கேள்விக்குறியாய் ஆக்கியிருக்கிறார் இந்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா.

கோவை ஈஷா யோக மையத்தின் 31-ஆவது மகா சிவராத்திரி விழாவில், பிரதமர் மோடிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் பவர்ஃபுல் நபரான ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எந்தவித தயக்கமும் இல்லாமல் கலந்துகொண்டிருக்கிறார்.

அவரோடு கர்நாடக மாநில துணை முதல்வர் சிவக்குமார், ஒடிசா ஆளுநர் ஹரிபாபு, பஞ்சாப் கவர்னர் குலாப் சந்த் கட்டாரியா உள்ளிட்ட பெரிய பெரிய மனிதர்கள் எல்லாம் கலந்துகொண்டு ஜக்கியின் ஜோதியில் ஐக்கியமாகி இருக்கிறார்கள்.

அங்கே பேசிய அமித்ஷா "நான் ஜக்கியிடம் ஆசிர்வாதம் வாங்க வந்திருக்கிறேன், இங்கும் ஒரு கும்பமேளாவாக இந்த விழா நடந்துகொண்டிருக்கிறது. இந்த ஆசிரமத்தைப் புனிதமான இடமாக ஜக்கி மாற்றியிருக்கிறார். லட்சக்கணக்கான மக்களுக்கு அவர் நல்வழி காட்டிவருகிறார்'- என்றெல்லாம் பக்திப் பரவசத்தோடு ஜக்கிக்காக உருகி உருகி நெகிழ்ந்து கரைந்திருக்கிறார்.

அமித்ஷா இப்படி எல்லாம் ஆராதனை செய்திருக்கும் ஜக்கி வாசுதேவ் எப்படிப்பட்டவர்?

அவர் மீது வைக்கப்பட்ட ஆபாசப் புகார்களை அறிந்திருக்கும் வட நாட்டு ஊடகங்கள்கூட, ஆபாச ஜக்கி விழாவில் அமித்ஷா பங்கேற்கலாமா? ஜக்கியின் பாவக் கரங்களை அமித்ஷா புனிதமாக்க முயலலாமா? என்றெல்லாம் கேள்விகளை எழுப்பிவருகின்றன.

ss

ஈஷா மைய சாமியாரான ஜக்கி வாசுதேவின் ஜாதகத்தைப் புரட்டினாலே நமக்கு அதிர்ச்சியும் குமட்டலும் ஏற்படுகிறது.

Advertisment

ஆரம்பத்திலேயே-

= அவர் கோவை வெள்ளியங்கிரி மலையை ஒட்டிய வனப் பகுதியை அடாவடியாக ஆக்கிரமித்ததாகவும், அங்கே சட்ட விரோதமாக, அனுமதிகள் இன்றி 4 லட்சம் சதுர மீட்டருக்கு மேல், கட்டடங்களைக் கட்டியிருக்கிறார் என்றும் ஆதாரத்தோடு புகார்கள் கிளம்பி புழுதிகிளப்பின.

= அதேபோல் பழங்குடி மக்களுக்குச் சொந்தமான 44 ஏக்கர் நிலத்தை பலரது பெயரில் ஜக்கி சட்டவிரோதமாகப் பதிவு செய்திருக்கிறார் என்றும், அவர்கள் தரப்பு உச்சநீதிமன்றம் வரை சென்றது.

Advertisment

=அதேபோல் யானைகளின் வழித்தடத்தையும் ஆக்கிரமித்துக் கட்டிடம் கட்டிய ஜக்கி, அங்கே மின்வேலி அமைத்து யானைகளையும் கொன்றுகொண்டே இருக்கிறார் என்றும் ஏரியாவாசிகள் புகார் கூறினர்.

= ஜக்கியின் மனைவி விஜி மர்மமான முறையில் 97-ல் மரண மடைய,அவர் ஜீவசமாதி அடைந்துவிட்டதாக ஜக்கி நீலிக்கண்ணீர் வடித்தார்.சமாதி அடைந்தவர்களைத் தகனம் செய்ய மாட்டார்கள். ஆனால் ஜக்கி, தன் மனைவியை அவரது உறவினர்கள் வரும்முன் அவரசர கதியில் தகனம் செய்தார். ஜக்கியின் மாமனார் கங்கண்ணாவோ, தன் மகளை ஜக்கி கொன்றுவிட்டார் என்று பகீர் குற்றம் சாட்டினார்.

= சட்டவிரோதமாக இளைஞர்களையும் இளைஞிகளையும் ஈஷா மையத்தில் ஜக்கி அடைத்துவைத்து கொடுமை செய்வதாகவும் புகார்கள் எழுந்தன.குறிப்பாக,முனைவர் காமராஜ், தனது இரண்டு மகள்களான லதா,கீதா ஆகியோரை சட்டவிரோதமாக ஈஷாவில் ஜக்கி அடைத்து வைத்திருப்பதாக நீதிமன்றத்தில் முறையிட்டார். இன்றுவரை அவர்களை அவரால் மீட்க முடியவில்லை.

= காவிரி அழைக்கிறது என்கிற திட்டத்தை அறிவித்த ஜக்கி,தமிழகம் முழுக்க மரக்கன்றுகளை நடுவதாக கூறி பத்தாயிரத்து ஐந்து கோடி நிதியை வசூலித்திருக்கிறார் என்ற புகாரும் எழுந்தது.

= யோகா ஆசையில் ஈஷா மையம் செல்லும் இளம்பெண்களை வசியப்படுத்தி, அவர்களுக்கு மொட்டையடித்து ஜக்கி ஆட்டி வைப்பதாகப் புகார்கள் நிறைய எழுந்தன.மற்ற இளம்பெண்களை மொட்டைக் கோலத்தில் ஆசிரம வேலைகளில் ஈடுபடுத்தும் ஜக்கி தன் மகளுக்கு மட்டும் ஆடம்பரத் திருமணத்தை நடத்தி வைத்திருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

= ஈஷாவில் நடக்கும் கொடுமைகளை எதிர்த்த ஊழியர்களும் பணிய மறுத்த பெண்களும் மாயமாய் ஆக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.குறிப்பாக, திருப்பூரைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண், ஈஷாவில் நடந்த யோகா பயிற்சிக்குச்சென்றார். பயிற்சி முடிந்து வீடு திரும்பவிருந்த அவர்,சம்பவத்தன்று ஈஷா மையத்தில் இருந்து தப்பித்து வெளியே ஓடிவந்தார். கடைசியில் அவர் செம்மேடு பகுதியில் உள்ள ஒரு விவசாயக் கிணற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். சுபஸ்ரீயை ஈஷாவிலிருந்து அந்தக் கிணறு வரை துரத்தி வந்தது யார்?என்பது இன்று வரை மர்மமாக இருக்கிறது.

= ஈஷா மையத்தில் பணியில் இருந்த கணேசன் உள்ளிட்ட 6 பேர் மாயமாகிவிட்ட தாக காவல்துறையே 2024 மார்ச்சில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை கொடுத்தது.

= ஈஷா மையத்திற்குள்ளேயே மர்மமாக மின் தகன மேடையை ஜக்கி உருவாக்கி, அனைவரையும் அதிரவைத்தார்.

= ஈஷா மையத்தில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாலியல் ரீதியான டார்ச்சர் கொடுக்கப்படுவதாக புகார்கள் வெளியே வந்தபோது நக்கீரன் யூ டியூப் மூலம் நாமே ஆதாரங்களோடு அம்பலப்படுத்தினோம்.

= யாமினி என்பவர் தனது கணவர் சத்ய நரேந்திராவுடன் ஹைதராபாத்தில் செய்தியாளர் களைச் சந்தித்து, ஈஷாவின் "லீடர் ஷிப் அகடமி' பள்ளியில் சேர்க்கப்பட்ட தனது 13 வயது மகனை, அங்கிருந்த ஆசிரியர்கள் தினசரி வல்லுறவு செய்து கொடுமைப்படுத்தியதாக பகீர் புகார் தெரிவித்தார்.

= அவர் பேட்டி கொடுக்கும்போதே, வாட்ச் அப்பிற்கு வந்த மற்றொரு பெண்மணி, ஈஷா பள்ளியில் சேர்க்கப்பட்ட தனது 8 வயது மகளை, அங்கிருந்த சக்தி என்ற உடற்கல்வி ஆசிரியர் தினசரி பாலியல் வல்லுறவு செய்ததாகக் கண்ணீருடன் தெரிவித்தார்.

= இந்த நிலையில், ஈஷாவிடம் நீதிகேட்டு ஒரு பெண் பிள்ளையின் அப்பா எழுதிய கண்ணீர்க் கடிதத்தில், பள்ளியில் படிக்கும் பெண் பிள்ளைகளை தீட்சைக்கு அதிகாலை 3 மணிக்கே வரச் சொல்கிறார்கள் என்றும் அப்படி வரும் பெண் குழந்தைகள் மேலாடை யின்றி வரவேண்டும் என வற்புறுத்தப்படுகிறார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

= இதைவிடவும் ஒரு அதிரவைக்கும் ஆதார வீடியோ நம் கைக்கு வந்தது.அதில், தீட்சை தருவதாகக்கூறி, அதிகாலை நேரத்தில் ஒரு இளம்பெண்ணைத் தரையில் படுக்க வைத்து, அவரை கைகளாலும் கால் கட்டை விரல்களாலும் கண்ட இடத்திலும் அழுத்தி, தன் வக்கிரத்தை எல்லாம் அரங்கேற்றுகிறார் ஜக்கி.இந்த வீடியோ,ஆன்மீக நம்பிக்கை யாளர்களை அதிரவைத்தது.

=இந்த நிலையில் அமெரிக்கா புலனாய்வுத்துறையில் புகார் கொடுத்த ஒரு பெண்மணி,குடும்பப் பிரச்சினைக்காக தோழி ஒருவர் வழிகாட்டலில் தான் ஜக்கியை சந்தித்ததாகவும், அவரிடம்,உன் தோசத்தை எடுக்கிறேன் என்ற ஜக்கி,உடம்பில் சந்தனம் பூசி மெல்லிய ஆடையுடன் தன் அறைக்குள் அவரை வரச்செய்து, மயிலிறகால் உடலை வருடிக்கொடுத்து விட்டு, நானே சிவன்... ஆலிங்கனம் செய்வோம் என்றபடி, அரை மயக்கத்தில் இருந்த அவரைச் சீரழித்தாராம்.

-இப்படிப்பட்ட அதிரடியான ஆபாசம் மிகுந்த புகார்களுக்கு ஆளான ஜக்கியின் ஆசிரம விழாவிற்கு அமித்ஷா வந்து சென்றதும், அவரது பாவக் கரங்களால் வாழ்த்து பெற்றதும், அவரது அத்தனை கிரிமினல் வேலைகளுக்கும் துணை நிற்பது போல ஆகாதா?

ஜக்கியின் இந்த ஏடாகூட ஆபாச நடத்தைகளைத் தான் ஆன்மீக வழி என்று பா.ஜ.க. ஏற்றுக்கொள்கிறதா?

ண்ணா காலத்தில் இருந்தே நம் தமிழகம், தாய்மொழியான தமிழையும் தொடர்பு மொழியான ஆங்கிலத்தையும் மட்டுமே ஏற்கிற "இருமொழிக் கொள்கையை'க் கடைப்பிடித்து வருகிறது.

ஆனாலும் மூன்றாவது மொழியாக இங்கே இந்தியைத் திணிக்கவேண்டும் என்றும், அதன்மூலம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தை பக்தியின் உதவியோடு சமஸ்கிருதமயமாக்க வேண்டும் என்றும் வடக்கு தொடர்ந்து திட்டமிட்டு காய்நகர்த்துகிறது.

இதற்காக, ராஜாஜி ஆண்ட 1937-ல் இருந்தே இந்தியைத் திணிக்கும் முயற்சி தமிழகத்தில் நடந்தது. அப்போது தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும் களமிறங்கிப் போராடியதால் இந்தி திரும்பப்பெறப்பட்டது.அதன்பிறகும் வடக்கு, அடிக்கடி இந்தியைத் திணிக்க முயல்வதும், அதை திராவிட இயக்கங்கள் போராடித் தடுப்பதுமான யுத்தம் இன்றுவரை தொடர்கிறது.

அந்த வகையில்தான் இப்போதும் தமிழகத்தில் இந்தியையும் சேர்த்து, மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தவேண்டும் என்று டெல்லி துடியாய்த் துடிக்கிறது. அதற்காக நேரடியாகவும் மறைமுகமாகவும் நெருக்கடிகள் தரப்படுகின்றன.

s

அண்மையில் ஒன்றிய கல்விஅமைச்சரான தர்மேந்திர பிரதான் "தேசியக் கல்விக் கொள்கையை ஏற்காதவரை தமிழகத்திற்கு நிதியைத் தரமாட்டோம்' என்று பகிரங்கமாகவே திமிரைக் காட்டியிருக்கிறார்.மேலும் அவர், "தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நிதி நிலுவையில் இருப்பது எங்களுக்குத் தெரியும். புதிய கல்விக் கொள்கையையும், மும்மொழி கொள்கையையும் ஏற்றால்தான் நிதி தரப்படும்' என்றும் கூறியிருக்கிறார்.

அதாவது மும்மொழிக் கொள்கையை ஏற்று,தமிழகப் பள்ளிகளில் இந்தியையும் கற்பிக்க முன்வந்தால்தான் தமிழகத்திற் குத் தரவேண்டிய நிலுவைத் தொகையான 2,152 கோடி ரூபாயைத் தரமுடியும் என்று சொல்லியிருக்கிறார்.இப்படி பகிரங்கமாகவே இந்தியைப் படிக்கவேண்டும் என்று தமிழகத்திற்கு டெல்லி நெருக்கடி தருவதை எப்படி ஏற்கமுடியும்?

இந்த நாடு என்ன அவர்களின்

அப்பன் வீட்டு சொத்தா?

இந்தியா என்பது பல மாநிலங்கள் அடங்கிய பகுதி.பல இன,மொழி கலா சாரங்களைக் கொண்ட கலவை பூமி. இங்கே இந்தியைத்தான் எல்லோரும் படிக்கவேண்டும் என்றோ குஜராத்தியைத்தான் எல்லோரும் கற்கவேண்டும் என்றோ நிர்பந்திக்க முடியாது.

இந்திய தேசியக் கல்விக் கொள்கையில் இந்தி கட்டாயம் என்று குறிப்பிடப்படவில்லை.இந்திய அரசின் சாசனப்படி 22 மொழிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கின்றன. எனினும் இந்த 22 மொழிகளையும் ஒன்றிய அரசு சமமாக நடத்துகிறதா? என்றால் அதுவும் இல்லை.

ஏறத்தாழ 10 கோடி தமிழர்கள் பேசும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு வெறும் 74 கோடியை மட்டுமே ஒதுக்கியது.ஆனால் எந்த மாநிலத்திலும் தாய்மொழியாக இல்லாத,வெறும் 18 ஆயிரம் பேர் மட்டுமே பேசுகிற சமஸ்கிருத மொழிக்கு 1,488 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறார்கள்.இதுதான் டெல்லியின் அற்ப புத்தி!

= இந்த லட்சணத்தில் "பாரதிய பாஷா சமிதி' என்கிற மொழி வளர்ச்சித் திட்டத்திற்கான வெப்சைட்டை ஒன்றிய அரசின் கல்வித்துறை உருவாக்கி வைத்திருக்கிறது.

அந்த வெப்சைட்டை 11 மொழிகளில் மட்டுமே பார்ப்பதற்கான வசதியை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். அதில் இந்திய ஆட்சி மொழிகளில் ஒன்றான தமிழ்மொழி இல்லை. தமிழைத் தவிர ஆங்கிலம், இந்தி, மணிப்பூரி, போடோ உள்ளிட்ட 11 மொழிகளில் அந்த வெப்சைட்டைப் படிக்கலாமாம். நம் தமிழ் மொழிக்கு எதிராக ஒன்றிய அரசின் கல்வித்துறை இப்படி சல்லித்தனமாக நடந்துகொண்டிருக்கிறது.

இதுபோன்ற புறக்கணிப்புகளை எப்படி நாம் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருப்பது?

தமிழ்நாட்டில் மீண்டும் மொழிப்போரை உருவாக்கப்பார்க்கிறது டெல்லி!

-ஆதங்கத்தோடு,

நக்கீரன்கோபால்