முதல் படத்திலேயே தேசிய விருதை வென்று கவனம் பெற்ற நடிகை ரித்திகா சிங். மிகக்கவனமுடன் தன் மனதிற்கு நெருங்கிய கதாபாத்திரங்களை மட்டுமே செய்துவருகிறார்.
சிறு இடைவெளிக்குப் பிறகு தமிழில், அவர் நடிப்பில், பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகிய "ஓ மை கடவுளே' படம் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பு பெற்றிருப்பதில் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rithvika1.jpg)
இனிவருவது ரித்திகா சிங்கின் ஸ்டேட்மெண்ட் "" "ஓ மை கடவுளே' என் வாழ்வில் ஸ்பெஷலான படம். மூன்று வருடங்களுக்குப்பிறகு தமிழுக்கு வந்திருக்கிறேன். மனதிற்குப் பிடித்த நல்ல கதாபத்திரங்கள் மட்டுமே செய்வது என்கிற முடிவில் இருந்தேன். இந்தப் படத்தின் கதையைக் கேட்டபோது இது எனக்கு கிடைத்த தங்க வாய்ப்பாகத் தோன்றியது. இக்கதையில் முதலில் என்னை ஈர்த்த விஷயம், நாயகி ஒரு கிறிஸ்துவ மணப்பெண்ணாக வருவதுதான். என் நெடுநாளைய சிறுவயது கனவு அது. மேலும் படத்தின் திரைக்கதை அற்புதமாக இருந்தது. படம் முழுக்க நீங்கள் புன்னகை தவழும் முகத்துடன் இருப்பீர்கள். அசோக் செல்வன் மிகத் திறமைவாய்ந்த நடிகர். இப்படத்திற்குப்பிறகு அவருக்கு பெரியளவில் வாய்ப்புகள் குவியும். இன்னொரு ஹீரோயின் வாணி போஜன் ஒரு அற்புதமான நடிகை.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rithvika.jpg)
அவரை சுற்றி இருப்பவர்களிடம் எப்போதும் புன்னகை தவழும். நேர்மறை தன்மைமிக்க பண்பாளர். இப்படம்மூலம் அவர் என் சகோதரியாக மிக நெருக்கமான உறவாகிவிட்டார்.
"ஓ மை கடவுளே' வெறும் ரொமான்ஸ் படம் மட்டுமே இல்லை. உறவுகளின் வலிமையை, நட்பின் பெருமையைப் பேசும் படமும்கூட. இப்படம் உங்கள் மனதில் பலகாலம் நீங்காது நிற்கும்'' என்றார் ஹேப்பியாக.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-02/rithvika-t.jpg)