கர்நாடக மாநிலம், விராஜ்பேட் பகுதியில், ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந் தவர் ராஷ்மிகா மந்தனா.
கல்லூரிக் காலம்வரை ராஷ்மிகாவுக்கு சினிமா ஆசையே இருந்ததில்லை யாம். அவர் அழகைப் பார்த்து சிலர் மாடலிங் செய்யச் சொல்ல, அவரும் "போய்த்தான் பார்ப் போமே' என்ற ஆசையில் செய்து பார்த்திருக்கிறார்.
இதில் ஓரளவுக்கு அடை யாளம் கிடைக்க, "2012-ல் இந்தியாவின் புத்துணர்ச்சி யான முகம்' என்ற பட்டம் அவருக்கு கொடுக்கப் பட்டது. அப்போது இதழியல், இலக்கியம் என்று படிப்பைத் தொடர்ந்துகொண்ட ராஷ்மிகாவிடம் "கிரிக் பார்ட்டி' என்ற படத்தின் குழுவினர் அப்ரோச் செய்ய, ரக்ஷித் ஷெட்டிக்கு ஜோடிபோட்டு அங்குதான் தொடங்கியிருக்கிறது ராஷ்மிகா வின் சினிமா ஆட்டம்.
அறிமுக ஹீரோவோடு ஜோடி போட்டாலும், ராஷ்மிகாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்த படமே கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமாரோடு கமிட்டா னார். அதுவும் ஹிட். அப்படியே தெலுங்கு சினிமாவில் ஒரு ரவுண்டு வந்துவிட்டு, மீண்டும் கன்னட சினிமா வில் என்ட்ரி கொடுத்து, "யஜமானா' படத்தின்மூலம் ஹாட்ரிக் வெற்றியையும் ருசி பார்த்தார் ராஷ்மி. இந்த வெற்றி, மற்ற மொழிப் படங்களிலும் கவனம் செலுத்த வைத்திருக்கிறது அவரை.
தெலுங்கு சினிமாவில் "வெங்கி குடுமுலா' என்ற இயக்குநரின் "சலோ' படத்தில், நாக சௌரியாவுக்கு ஜோடி ஆனார். அந்தப் படமும், அதற்கு அடுத்துவந்த படமான "கீதா கோவிந்த மும்' யாருடா இந்தப் பொண்ணு என்று திரும்பிப் பார்க்கவைத்தது. அதுவும், இன்கெம் காவாலே பாட்டில் சேலை மடிப்பை அப்பாவியாக சரிசெய்து, தமிழ் ரசிகர்களையும் அட்ராக்ட் செய்தார். அதுவே, கார்த்தியின் "சுல்தான்' படத்தின்மூலம் ராஷ்மிகாவுக்கு தமிழில் என்ட்ரி கொடுத்திருக்கிறது.
சமீபத்தில் ராஷ்மிகா வெளியிட்டிருந்த போட்டோ ஷூட் படங்கள்தான், இந்த செய்தியின் ஹைலைட்டே. வெள்ளைக் கலர் குட்டை கவுன் அணிந்து, சிம்பிளாக இருக்கும் ராஷ்மிகா, வழக்கமாக நடிகைகள் செக்ஸியாகப் போஸ் கொடுப்பதைப்போல் அல்லாமல், ரொம்பவே சுட்டித்தனமாக போஸ் கொடுத்திருந்தார். இந்தப் படங்கள் அவரது ரசிகர்களாலும் பெரிதும் கொண்டாடப்பட்டது. பால் வெள்ளை நிறத்தில் சுட்டித்தனமாக அவர் கொடுக்கும் எக்ஸ்ப்ரெஷன்கள் ஒருபக்கம் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், இன்னொரு புறம் கலாய்க்கப்படாமலும் இல்லை. நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் வெவ்வேறு காமெடி காட்சிகளோடு ஒத்துப்போகும் ராஷ்மிகாவின் படங்களையும் சேர்த்து, பரப்பிவிட்டனர். இது ராஷ்மிகாவின் கண்களில் பட, அதை அப்படியே தன் ட்விட்டரில் பகிர்ந்த ராஷ்மிகா "வடிவேலு சார் எவ்வளவு க்யூட்டாக இருக்கிறார்...!' என்று ரசிக்கவும் செய்திருந்தார்.
எல்லாவிதமான கதை களோடும், கதாபாத்திரங் களோடும் தன்னை சோதித்துப் பார்க்க விரும்புவதாகக் கூறும் ராஷ்மிகா, ரசிகர்களைக் கொண்டாட்டத்தில் வைக்க வேண்டும் என்ற தனது நோக்கத்தையும், "இது உனக்கு சூட் ஆகும் ராஷ்... புகுந்து விளையாடு' என்று சொல்லும் தனது உள்ளுணர்வையுமே நம்புவதாக சொல்லி இருக்கிறார்.
23 வயதாகும் ராஷ்மிகா மந்தனா சினிமாவுக்கு வந்து நான்கு ஆண்டுகள்தான் ஆகின்றன, பத்து படங்களில்தான் நடித்திருக்கிறார், லேட்டஸ்டாக ஹரி- சூர்யா 6-ஆவது முறையாக கைகோர்க்கும் "அருவா' உட்பட நான்கு படங்கள்தான் ராஷ்மிகாவின் கைவசம் இருக்கின்றன.
ஆனால்... ராஷ்மிகா குவித்து வைத்திருக்கும் சொத்துகளைப் பார்த்தால் பார்ட்டி ரவுண்டு கட்டி அடிப்பதில் செம கில்லி போல. கர்நாடக மாநிலத்தில் காபி தோட்டத்திற்கு பேர் பெற்ற குடகுமலையில் 24 ஏக்கரில் காபி எஸ்டேட், விராஜ்பேட்டையில் ஷெரினிட்டி என்ற பெயரில் 2 மாடிகள் கொண்ட பெரிய பங்களா, 2 பெட்ரோல் பங்க், 5 ஸ்டார் அந்தஸ்தில் பிரம்மாண்ட கல்யாண மண்டபம், இன்டர்நேஷனல் ஸ்கூல் என வகைதொகையில்லாமல் சொத்துகளை வளைத்துப் போட்டுள்ளார் ராஷ்மிகா.
எப்படி கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் 100 கோடி ரூபாய்க்குமேல் சொத்துகளின் மதிப்பு இருக்கும். "இந்த வயசுல இப்படி வளர்ச்சியா' என வாய்பிளந்த வருமான வரித்துறை அதிகாரிகள், ராஷ்மிகாவின் வீடு, பெட்ரோல் பங்குகள், கல்யாண மண்டபம், ஸ்கூல் ஆகியவற்றி லெல்லாம் அதிரடி ரெய்டு நடத்தி, கணக்கில் காட்டாத பணத்தைக் கைப்பற்றினார்கள்.
கன்னட சினிமாவில் பெரிய பணக்கார ஹீரோவாக இருக்கும் ரக்ஷித் ஷெட்டி, முன்னணி தயாரிப்பாளரும்கூட. "கிரிக்பார்ட்டி' என்ற கன்னட படத்தின்மூலம் ரக்ஷித் ஷெட்டிக்கு ஜோடியாக அறிமுகமானார் ராஷ்மிகா மந்தனா. சினிமாவிற்குள் வந்து ஒரே வருடத்தில், அதாவது 2017 ஜூலை 3-ஆம் தேதி ரக்ஷித் ஷெட்டிக்கும் ராஷ்மிகா மந்தனாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து, ஆனால், ஒரே வருடத்தில், அதாவது 2018 செப்டம்பர் மாதமே நிச்சய தார்த்தம் ரத்தானது.
அதன்பின், தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோவான விஜய்தேவர ஹொண்டாவுடன் "கீதா கோவிந்தம்' படத்தில் அறிமுகமான ராஷ்மிகா, "டியர் காம்ரேட்' படத்திலும் ஜோடிபோட்டார். கரெக்டாக கணக்குப் போட்டு விஜய் தேவரஹொண்டாவிற்கு காதல் பிராக்கெட் போட்டிருக்கிறார்.
"எப்படியும் விஜய்தேவர ஹொண்டாவைக் கல்யாணம் செய்தே ஆகவேண்டும் என்ற முடிவுடன் இருக்கிறார் ராஷ்மிகா. இதனால், ஹைதராபாத்திலேயே செட்டிலாகும் முடிவுக்கு வந்துட்டாராம். ஆனால் வி.தே.ஹொ.வின் பெற்றோர்களோ ரவுண்டு கட்டி அடிக்கும் ராஷ்மிகாவின் டெக்னிக்கைப் பார்த்து மிரண்டுபோய் கிடக்கி றார்கள்.
தான் மட்டும் ரவுண்டு கட்டினால் பத்தாது என நினைக் கும் ராஷ்மிகா, இன்னும் சில ஆண்டுகளில் தனது தங்கை சிமன் மந்தனாவையும் சினிமாவிற்குள் கொண்டுவரும் வேலையை ஆரம்பித்துவிட்டாராம்!
-ஈ.பா. பரமேஷ் & மூன்கிங்