நடுக்கம்-1

தேவராஜுலு மார்க்கெண்டேயன் தயாரிப்பில் ரஞ்சித் ஜெயக்கொடி டைரக்ஷனில் "யாருக்கும் அஞ்சேல்' படத்தின் மொத்த படப்பிடிப்பும் முப்பதே நாட்களில் ஊட்டியில் முடிந்துவிட்டது. இரண்டு சகோதரிகள் தங்களுக்கு பாத்தியப்பட்ட சொத்தை விற்க, தங்களது சொந்த ஊருக்குப் போகும்போது சந்திக்கும் சிக்கல்களை த்ரில்லருடன் சொல்லியுள்ளார் ரஞ்சித் ஜெயக்கொடி. இதில் சகோதரிகளாக பிந்துமாதவியும் தர்ஷனா பானிக்கும் நடித்துள்ளனர். கொரோனா பீதி விலகியதும் "யாருக்கும் அஞ்சேல்' படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டுவிழா நடக்கும் என்கிறார் தயாரிப்பாளர் தேவராஜுலு மார்க்கெண்டேயன்.

kk

நடுக்கம்-2

தே.மு.தி.க.விலிருந்து அ.தி.மு.க.விற்குத் தாவி, அதன்பின் தினகரனின் அ.ம.மு.க. விற்குத் தாவிய (இப்ப எந்தக் கட்சில இருக்காருன்னு அவருக்குத்தான் தெரியும்) மைக்கேல் ராயப்பன் தயாரிக்க, அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா டைரக்ட் பண்ணும் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் அதர்வா முரளி. ஹீரோயினாக லாவண்யா திரிபாதி, பவர்ஃபுல் வில்லனாக நந்தா ஆகியோர் நடிக்கிறார்கள். தனா டைரக்ஷனில் சமீபத்தில் ரிலீசான "வானம் கொட்டட்டும்' படத்தில் டபுள் ஆக்ட் பண்ணியிருந்தார் நந்தா. ரவீந்திர மாதவாவின் படத்திற்குப்பின் வெயிட்டான வில்லன் வேடங்கள் தொடர்ந்துவரும் என்ற நம்பிக்கையில் உள்ளார் நந்தா. இந்தப் படத்தின் ஷூட்டிங்கும் கொரோனா பீதி விலகியதும் ஆரம்பமாக உள்ளதாம்.

Advertisment

kk

நடுக்கம்-3

(இது பெரிய நடுக்கம்)

Advertisment

கொரோனா போட்ட போடு, கோடம்பாக்கத்தையே குலை நடுங்க வைத்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் "அண்ணாத்த', தல அஜீத்தின் "வலிமை' கார்த்தியின் "சுல்தான்', விக்ரமின் "கோப்ரா', விஜய் சேதுபதியின் படங்களான "க/பெ.ரணசிங்கம்', "டெல்லி தர்பார்', சந்தானம்- தாரா அலிஷா பெரி நடிக்கும் படம், வெற்றிமாறன்- சூர்யா காம்பினேஷனில் தயாரகும் "வாடிவாசல்', தனுஷ்- மாரிசெல்வராஜ் காம்பினேஷனில் உருவாகும் "கர்ணன்', நயன்தாராவின் "மூக்குத்தி அம்மன்', "நெற்றிக்கண்' விஜய் ஆண்டனியின் புதிய படம், விஷாலின் "துப்பறிவாளன் -2', மணிரத்னத்தின் "பொன்னியின் செல்வன்', ரம்யா நம்பீசன் நடிக்கும் "ப்ளான் பண்ணி பண்ணனும்' இப்படி பெரிய படங்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட படங்களின் ஷூட்டிங்கள் மார்ச் 31 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

k

நடுக்கம்-4

கடந்த 17-ஆம் தேதி காலை ஜோதிகா- ரா. பார்த்திபன் நடிக்கும் "பொன்மகள் வந்தாள்' படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டுவிழா சென்னை சத்யம் தியேட்டரில் நடப்பதாக அப்படத்தின் பி.ஆர்.ஓ .யுவராஜிடமிருந்து மீடியாக்களுக்கு வாட்ஸ்-அப் தகவல் 15-ஆம் தேதி மாலை வந்தது. ஆனால் கொரோனா நடுக்கத்தால் அனைத்து சினிமா நிகழ்ச்சிகளையும் ரத்து செய்யவேண்டும் என தமிழக அரசு அறிவித்ததால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக 16-ஆம் தேதி காலை மீண்டும் வாட்ஸ்-அப் தகவல் அனுப்பினார் யுவராஜ்.

kk

நடுக்கம்-5

கடந்த 13-ஆம் தேதி ஹரிஷ் கல்யாண்- தான்யாஹோப், விவேக் நடித்த "தாராள பிரபு' படம் ரிலீசாகியது. படத்திற்கு பாஸிட்டிவான விமர்சனங்கள் நெட்டில்வர ஆரம்பித்தன. ஆனால் படம் ரிலீசாகி இரண்டே நாட்களில் கொரோனா பீதி கிளம்பி, தியேட்டர்கள், மால்களை மூடுமாறு அரசாங்கம் உத்தரவு வந்தது. இதனால் படுஅப்செட்டான ஹரிஷ் கல்யாண், ""இந்த இரண்டு நாட்களும் படத்தை நல்லவிதமாக விமர்சித்தவர்களுக்கு நன்றி. ஆனாலும் அரசாங்க உத்தரவும் மக்களின் நலனும்தான் எங்களுக்கு முக்கியம். அதனால் "தாராள பிரபு'-வை மீண்டும் ரிலீஸ் செய்யும்போது தாராளமாக ஆதரவளிக்கவும்'' என வேண்டுகோள் விடுத்தார்.