"மதுரை முத்து மூவிஸ்' மற்றும் "கனவு தொழிற்சாலை' இணைந்து தயாரித்துவரும் படம் "அக்கா குருவி'. சாமி டைரக்ட் செய்யும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரீ-ரெகார்டிங் வேலை கள் நடைபெற்றுவருகின்றன. உலகத் தரவரிசையில் இப்படத்துக்கு ரீ-ரெகார்டிங் செய்துவருகிறார் இளையராஜா.
இப்படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெறுகின்றன. மூன்று பாடல்களையும் இளையராஜாவே எழுதியுள்ளார். உலகப் புகழ்பெற்ற திரைப்படமான "சில்ட்ரன் ஆஃப் ஹெவன்' படத்தின் மறுபதிப்பான "அக்கா குருவி'-யை அதன் ஒரிஜினல் கெடாமல் படமாக்கி யுள்ளார் சாமி. படத்தைப் பார்த்த பின்தான் இசையமைக்க ஒப்புக்கொண்டுள்ளார் இளையராஜா.
இரண்டு குழந்தைகள், அப்பா- அம்மா இவர்களுடைய உணர்ச்சிகளின் தாக்கம் அனைவரையும் மெய் சிலிர்க்க வைக்கும். இந்த காட்சிகளுக்குப் பின்னணி இசையில் பல உணர்ச்சிகரமான இடங்களில் இளையராஜாவின் 11 பழைய பாடல்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன.
மே மாதம் இப் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளார்கள்.