அவ்னி மூவிஸ் சார்பில் இயக்குநர் சுந்தர்.சி தயாரிப்பில் கடந்த 14-ஆம் தேதி "நான் சிரித்தால்' படம் வெளியாகி வெற்றி பெற்றது. இப்படத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நாயகனாகவும், ஐஸ்வர்யா மேனன் நாயகியாகவும் நடித்திருந் தார்கள். இவ்வெற்றி விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின் தயாரிப்பாளர் நடிகை குஷ்பு பேசும்போது, ""இதுபோன்ற சினிமா மேடையில் பேசி பல வருடங்கள் ஆகின்றன. அவ்னி மூவிஸ் என்பது எனக்கும் சுந்தர்.சி-க்கும் கனவு. ஏனென்றால், எங்கள் இருவருக்கும் தெரிந்தது சினிமா மட்டும்தான். அவ்னி மூவிஸ்-ன் வெற்றிக்கு முழுக்க முழுக்க காரணம் எனது கணவர் சுந்தர்.சி மட்டும்தான்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kushbu_1.jpg)
நாங்கள் இருவரும் சினிமாவை நேசிக்கிறோம். எங்கள் படங்கள் மட்டு மல்லாமல்; அனைவரின் படங்களும் வெற்றிபெறவேண்டும் என்று நினைப் போம்.
ஆதி எங்கள் குடும்பத்திற்குள் வந்தது எனது சிறிய மகளால்தான்.
அவள்தான் ஹிப் ஹாப் தமிழா ஆதியை அறிமுகப்படுத்தினாள். எனக்கு சக்களத்தி ஆதிதான். எனது கணவரும், ஆதியும் பேச ஆரம்பித்தால் நேரம் காலம் பார்க்காமல், இரவு 2 மணி ஆனாலும் பேசிக்கொண் டேயிருப்பார்கள்.
என்னுடைய வெற்றிக்கு எனது பின்னால் பக்கபலமாக இருக்கும் எனது கணவர் சுந்தர்.சி.தான் காரணம்'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-02/kushbu-t.jpg)