"அஞ்சலியுடன் காதல் இருக்கு, சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்குவோம்' என சொன்னார் ஜெய். ஆனால், அஞ்சலியோ, ""அப்படியெல்லாம் எதுவும் இல்ல.
அதுவும் ஜெய்யுடன் கண்டிப்பாக கல்யாணம் இல்ல, எங்களுக்குள் நட்புதான் இருக்கு'' என்றார்.
ஏன்னா... ஜெய்யின் யோக்கியதை அஞ்சலிக்குத் தெரியும். சரக்கு ஓவராகி, எக்குத்தப்பா போதை ஏறி, காரைக்கொண்டுபோய் அடிக்கடி பாலத்தில் முட்டுவார் ஜெய்.
பார்த்தார் அஞ்சலி, இவரு நமக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்ற முடிவுக்கு வந்து ஜெய்யின் லவ்வுக்கு ஆப்பு வைத்து விட்டார்.
"அங்காடித் தெரு' படத்தில் ஹீரோ வாக அறிமுக மான மகே ஷுக்கு ஹை கிளாஸ் காஸ்ட் யூம்கள், ஃபைவ் ஸ்டார் ஓட்டல் களில் விருந்து வைத்து தனது பாதுகாப்பிலும், பாதுகாப்புக்காகவும் வைத்திருந்தார் அஞ்சலி. காரணம், சினிமாவில் மகேஷ் நல்ல பொஸிசனுக்கு வருவார் என்ற நம்பிக்கையில் பணத்தை வாரி இறைத்தார். ஆனால், மகேஷின் சினிமா கேரியரோ சொல்லிக் கொள்ளும்படி இல்லாததால் மகேஷைக் கை கழுவினார் அஞ்சலி.
மகேஷைக் கைகழுவி, ஜெய்யின் லவ்வை ஊத்தி மூடிய அஞ்சலி, இப்போது அமெரிக்காவில் இருக்கும் ஆந்திர தொழிலதிபர் ஒருவரை மடக்கியிருக்காராம்.
அஞ்சலியின் கதை அப்படின்னா... ஜெய்யின் கதையோ வேறமாதிரி இருக்கு. எஸ்.ஏ. சந்திரசேகரின் கடைசிப் படமான கேட்டால், "கேப்மாரி'-யில் அதுல்யா ரவியும் வைபவி சாண்டில்யாவும் ஜெய்க்கு ஜோடி போட்டிருந்தார்கள். பெட்ரூம் சீன்களில் ஜெய்யுடன் ரொம்ப... ரொம்ப... நெருக்கமாக நடித்து சூடு கிளப்பியிருந்தார் அதுல்யா ரவி. அந்தமாதிரி சீன்களைப் பார்த்த தெலுங்கு தயாரிப்பாளர்கள் பலர், படுகிளாமரான, கிட்டத்தட்ட ஷகிலா டைப் படங்களில் நடிக்க பல லட்சங்களுடன் அதுல்யா ரவியை முற்றுகையிட்டனர்.
கோயம்புத்தூரைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான அதுல்யா ரவி, ""என்னோட சொந்தக்காரங்க, என்னை அந்தமாதியான நடிகைன்னு நினைச்சுக்குவாங்க. இருந்தாலும் என்னோட அப்பா- அம்மாகிட்ட கேட்டுட்டு சொல்றேன்'' எனச் சொல்லிவிட்டாராம்.
ஆனால், அதுல்யாவின் தோழிகள் வட்டாரமோ, ""இனிமே பெரிய ஹீரோக்களுடன் நீ நடிக்கப் போறதில்ல! நடிக்க சான்ஸும் வராது. அதனால காசு சம்பாரிச்சு செட்டில் ஆகுற வழியப்பாரு'' என தூண்டில் போட்டு வருகிறார்களாம்.
இதற்கிடையே "கேப்மாரி'-க்கு அடுத்தும் ஜெய்யுடன் ஒரு படத்தில் நடித்துவருகிறார் அதுல்யா ரவி. அஞ்சலி தன்னை திராட்டில் விட்டதால் நொந்து கிடக்கும் ஜெய், இப்போது அதுல்யா ரவிக்கு பிராக்கெட் போடலாமா என தீவிர யோசனையில் இருக்காராம்.
ஜெய்யின் லவ் மேட்டர் சமாச்சாரம் அப்படியென்றால், சம்பள சமாச்சாரம் அதைவிட மோசம். அதாவது ஜெய்யின் உதவியாளர்களுக்கு தயாரிப்பு நிறுவனம் சரியாக சம்பளத்தைக் கொடுத்தாலும், அதை உதவியாளர் களுக்கு கொடுக்காமல் அவர்களை நோகடிக்கிறாராம் ஜெய். இதனால் கடுப்பாகி, பல உதவியாளர்கள், வேறு ஹீரோக்களைத் தேடி ஓடிவிட்டார்களாம்.
ஜெய்யைப்போலவே உதவியாளர் கள் சம்பளத்தை அமுக்குவதில் யோகிபாபுவும் கில்லாடியாம். கணக்கு வழக்குகளை கரெக்டாக வைத்திருக்கும் சில கம்பெனிகள், "உங்க உதவியாளர்களின் அக்கவுண்ட் நம்பரைக் கொடுங்க, சம்பளத்தை பேங்ல போட்டுர்ரோம்' என யோகிபாபுவிடம் கேட்டால், அவர்களுக்கு பேங்ல அக்கவுண்ட் கிடையாது. அதனால அவர்களின் சம்பளத்தை என்னிடம் கொடுத்துருங்க'' எனச் சொல்லிவிடுவாராம் யோகிபாபு.
யோகிபாபுவிடம்போன சம்பளம் போனதுதான். நம்ம சம்பளத்தை வசூல் பண்ணியே ஆகவேண்டும் என்ற முடிவுடன் இருக்கிறார்கள் உதவியாளர்கள்.
-ஈ.பா. பரமேஷ்வரன்