* என். மணி, சிதம்பரம்.
"பாலஜோதிட' அதிதீவிர ரசிகர்களுள் நானும் ஒருவன். பலருக்கு பலன்களைக்கூறி நல்வழி காட்டி அனைவரின் வாழ்விலும் ஒளியேற்றும் தங்களையும் தங்கள் குடும்பத்தையும் இறைவன் எவ்விதக் குறையுமின்றி வாழவைப்பான். எனக்கு 65 வயது. ஒரு மகன், ஒரு மகள். மகளுக்குத் திருமணமாகி நன்றாக இருக்கி றாள். மகனுக்கு 36 வயது. இன்னும் திருமண மாகவில்லை. வேலையும் இல்லை. அவனது கவலையே எனக்கு! ஒரு பெண்ணைக் காதலிப்பதாகக் கூறுகிறான். ஆனால் எங்களுக்கு அதில் உடன்பாடில்லை. அவன் ஜாதகப்படி எப்படிப்பட்ட பெண் முடியும்? அரசுவேலை கிடைக் குமா? அரசு வேலைக்கு ஒருவரிடம் பணம்கொடுத்து ஏமாந்துவிட்டோம்.
மகன் பரணி நட்சத்திரம், மேஷ ராசி, மிதுன லக்னம். லக்னத் தில் ராகுவும் 7-ல் கேதுவும் இருப்பது நாகதோஷம். ராசிக்கு 7-க்குடைய சுக்கிரன் நீசம். அத்துடன் சனி சம்பந்தம். ராசிக்கு 8-ல் உள்ள செவ்வாயை சனி மூன்றாம் பார்வை பார்ப்பதால் கலப்புத் திருமணம், காதல் திருமணம் என்பதை உறுதிப்படுத்துகிறது. உங்களுக்குப் பிடிக்கி றதோ பிடிக்கவில் லையோ- மகன் விரும்பும் பெண்ணுக்கு விருப்பமிருந்தால் அந்தப் பெண்ணையே திருமணம் செய்து வைக்கலாம். ஜாதகருக்கு தற்போது ராகு தசை நடப்பதால் அரசு வேலைக்கு இடமில்லை. தனியார் பணி அல்லது சுயதொழில் யோகமுண்டு. அடுத்துவரும் குரு தசை முதல் தொழில் மேன்மை, சம்பாத்தியம் பெருகும். மகன் விரும்பும் பெண் கும்ப ராசி, தனுசு லக்னம். ஜாதகப் பொருத்தம் உள்ளது.
* வி. கந்தசாமி, செஞ்சி.
எனது மகனுக்கு எப்போது திருமணம் நடக்கும்? தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறான். இது தொடருமா? வேறு வேலை அமையுமா?
மகனுக்கு மகர ராசி, அவிட்ட நட்சத்திரம், கடக லக்னம். நடப்பு வயது தெரியவில்லை. ஏனென்றால் ராசிக்கட்டம், நவாம்சக்கட்டம், தசை இருப்பு எல்லாம் எழுதிய நீங்கள் பிறந்த தேதி எழுத மறந்து விட்டீர்கள். இருப்பினும் சனியின் சஞ்சாரத்தை வைத்து 30 வயதாகும் என்று கணிக்கலாம். ராகு- கேது தோஷம், களஸ்திர தோஷம் இருப்பதால், அடுத்த ராகு- கேது பெயர்ச்சிக்குப்பிறகு திருமண முயற்சிகள் எடுக்கலாம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Q&A_32.jpg)
* ஆர். கிருஷ்ணன், சென்னை.
சந்திர தசையில் சுக்கிர புக்தி நடக்கிறது. அடுத்துவரும் புக்திகள் எப்படியிருக்கும்?
மேஷ லக்னம், மீன ராசி, பூரட்டாதி நட்சத்திரம். 81 வயது முடிந்து 82 ஆரம்பம். அடுத்துவரும் செவ்வாய் தசை லக்னாதிபதி தசை. பயமில்லை. 90 வயதில் வரும் ராகு தசையே அந்திம தசை. செவ்வாய் தசை தொடங்கும்போது ஆயுஷ் ஹோமும், தன் வந்திரி ஹோமமும், நவகிரக ஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்துகொண்டால் நல்லது.
* எஸ். கேசர்- கவிதா, ஆரணி.
என் மகள் எம்.டெக் (ஐ.டி.) முடித்து தென்காசியில் கோச்சிங் சென்டரில் வேலை செய்கிறாள். அவளுக்கு அரசு வேலை கிடைக்குமா? திருமணம் எப்பொழுது நடைபெறும்?
சித்திரை நட்சத்திரம் 2-ஆம் பாதம், கன்னி ராசி, தனுசு லக்னம். 24 வயது முடிந்து 25 ஆரம்பம். ஜாதகக் குறிப்பும் தசாபுக்தி இருப்பும் எழுதவில்லை. எப்படிப் பதில் சொல்வது?
* தமிழ்ச்செல்வி, சேலம்.
என் மகள் ஞானசூரியா +2 படிக்கிறாள். மேற்படிப்பு குறித்து பெரும் கவலையாக உள்ளது. மருத்துவத்துறையில் சேர விரும்புகிறாள். வாய்ப்பு கிடைக்குமா?
அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசி, கும்ப லக்னம். 2023 வரை ராகு தசை. 10-க்குடைய செவ்வாய், கேது- ராகு, குரு சம்பந்தம். மருத்துவப் படிப்புக்கு இடமுண்டு. +2 தேர்வு எழுதுவதற்கு முன்னால் பேராவூரணி அருகில் மருந்துப்பள்ளம் என்ற ஊருக்குச் சென்று மருந்தீஸ்வரருக்கு ஒரு அபிஷேகம், பூஜை செய்யவும். +2-ல் நல்ல மார்க்கும், நீட் தேர்வில் வெற்றியும் கிடைக்கும். மெடிக்கல் சீட்டும் கிடைக்கும்.
* எல். சுரேஷ், சென்னை.
பி.கே. ராஜா- கலைவாணி இருவருக்கும் எப்போது அரசுப் பணி கிடைக்கும்?
2023-ல் அமையலாம். ப் மாரி, நாமக்கல். மகன் முரளி கிருஷ்ணனுக்கு திருமணம் எப்போது நடக்கும்? வேலை நிரந்தரம் எப்போது? கடக லக்னம், கடக ராசி. வேலை நிரந்தரமும் திருமணமும் 2024 பிறகு எதிர்பார்க்கலாம்.
* அருண், மேற்கு மாம்பலம்.
என் மகனுக்கு எப்போது திருமணம் நடக்கும்? 29 வயது நடக்கிறது.
மகர லக்னம். நாகதோஷம் உள்ளது. அதனால் 30 வயது முடிந்து திருமணம் செய்யலாம்.
*சீனிவாசன், சேலம்.
தாயிடமிருந்து பிரிந்தி ருக்கிறேன். மீண்டும் தாய்- மகன் உறவு கூடுமா? மனை விக்கு ஆயுள் பலம் எப்படி?
உங்கள் மனைவிக்கு 2023-க்குள் கண்டம் வரலாம். அதையொட்டி தாயார் வந்து சேரலாம். அப்படியே வரா விட்டாலும் கவலைப்பட வேண்டாம். நம் எல் லாருக்கும் இறைவன் ஒருவனே தாயும் தந்தை யும் உறவும் ஆவான். அவனையே நம்பலாம்.
* முருகன், சென்னை.
கடன் தொல்லை அதிகம். என் வயது 62. வயதிற்கேற்ற தொழில் அல்லது வேலை செய்யலாம் என்று நினைக்கிறேன். விசாக நட்சத்திரம், துலா ராசி, கடக லக்னம். ஏழரைச்சனி முடிந்தும் விமோசனம் பிறக்க வில்லை. என் மகனுக்கு பெயர் ராசிப் பொருத்தம் பார்த்துதான் திருமணம் செய்தோம். திருமணமானதில் இருந்தே சிரமம்தான். மருமகள் வந்த நேரம் சரியில்லையோ?
மகன் திருமணத்துக்கும் மருமகள் வந்த நேரத்துக்கும் எந்தக் குறையும் இல்லை. சம்பந்த மும் இல்லை. அவர்கள்மீது பழிபோட வேண்டாம். உங்கள் நேரம்தான் சரியில்லை. ஏழரைச்சனி ஒரு காரணம். கடக லக்னத்துக்கு சுக்கிர தசை பாதகாதிபதி தசை. வயதிற்கேற்ற வேலை என்றால் "செக்யூரிட்டியாக' போகலாம். சொந்தத் தொழில் என்றால் டீக்கடை, மிக்சர் கடை (உணவு சம்பந்தம்) பெட்டிக்கடை வைக்கலாம்.
* பழனியப்பன், தென்காசி.
திருமணப் பொருத்தம் பார்க்கும்போது பத்துப் பொருத்தங்களில் எது மிகமிக முக்கியமானது?
தினம், ராசி, யோனி, ரஜ்ஜு, வேதை ஆகிய ஐந்தும் மிக முக்கியம். மற்றவை இருந் தாலும் இல்லாவிட்டாலும் கவலையில்லை. அதே சமயம் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமராகு தசையோ கேது தசையோ நடந்தால் பத்துப் பொருத்தம் இருந்தாலும் சேர்க்கக் கூடாது. சமதசை சனி தசையும் அல்லது ஏழரைச்சனியும் அட்டமச்சனியும் நடந்தால் பரிகாரம் செய்துவிட்டுத் திருமணம் செய்யலாம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-08/Q&A-t_2.jpg)