* மலர்விழி, சென்னை.
எனக்கு அரசு வேலை கிடைக்குமா? சொந்த வீட்டுக்கனவு எப்போது நிறைவேறும்?
14-7-1983-ல் பிறந்தவர். மிதுன லக்னம், சிம்ம ராசி, பூர நட்சத்திரம். உங்களுக்கு காலசர்ப்ப யோக ஜாதகம். 6-ஆம் அதிபதி செவ்வாயும் சூரியனும் சேர்ந்திருப்பதால் அரசு வேலை கிடைக்கும். நடப்பு ராகு தசையில் ராகு புக்தி. ராகு 12-ல் இருந்து தசை நடத்துகிறார். எனவே அடுத்த வருட ஆரம்பத்தில், ஏதேனும் செலவழித்தால் அரசுப் பதவி கிடைக்கும் வாய்ப்புள்ளது. எதிர்காலத்தில் வீடு வாங்கும் யோகமுண்டு. கடன் வாங்கி வீடு கட்டுவீர்கள். இவ்விதம் ராகு பகவான் ரிஷப ராசியில் நின்று தசை நடத்தினால், திருநாகேஸ்வரம் சென்று முப்பெரும் தேவியரை, பௌர்ணமி, திங்கள், வெள்ளிக்கிழமைகளில் வணங்க வேண்டும். மேலும் அருகிலுள்ள கோவிலில் துர்க்கைக்கு குங்கும அர்ச்சனைசெய்து வழிபடுவது நல்லது.
* அன்பழகன், ஈரோடு.
எனக்கு முதல் திருமணம் விவாகரத்தாகி விட்டது. இரண்டாவது திருமணம் எப்போது நடக்கும்? குழந்தை பாக்கியம் உண்டா? எந்த வேலையிலும் என்னால் நிரந்தரமாக இருக்க முடியவில்லை. இதற்கு என்ன பரிகாரம்?
21-9-1978-ல் பிறந்தவர். மேஷ லக்னம், ரிஷப ராசி, கார்த்திகை நட்சத்திரம். வேலையைக் குறிக்கும் 6-ஆம் வீட்டில் சூரியன், ராகு சம்பந்தம். இந்த இரு கிரகங்களும் ஒரே நட்சத்திரக் காலில் அமர்ந்துள்ளனர். எனவே கிரகண தோஷம் உள்ளது. அது வேலைசெய்யும் 6-ஆம் வீட்டில் உள்ளதால், உங்களால் ஓரிடத்தில் பொருந்தி வேலைசெய்ய முடியவில்லை. நடப்பு குரு தசையில் கேது புக்தி 2023, ஜூலைவரை. இதில் மிகவும் அலைச்சல் இருக்கும். நிரந்தரமில்லாத்தன்மை இருக்கும். அடுத்துவரும் சுக்கிர புக்தியில் வெளியூர், வெளிநாட்டு வேலைகிட்டும். மறுமணமும் கலப்பு மணமாக நடக்கும். இதுபோல் நல்ல வேலைகிடைக்க அல்லல்படுபவர்கள், திருவண்ணாமலை கிரிவலம் சென்று, அங்குள்ள தேயுநந்தீஸ்வரர் கொம்புகள் வழியே அருணாச்சலேஸ்வரரை தரிசிக்கவேண்டும்.
* மணிகண்டன், தூத்துக்குடி.
என் மகன் லோகேஸ்வரனுக்குத் திருமணம் எப்போது நடக்கும்? சில ஜோதிடர்கள் இவனுக்கு வியாழநோக்கம் ஏற்படுவது சிரமம் என்கின்றனர். இவனுக்கு திருமணம் ஆகுமா ஆகாதா என்று கூறுங்கள்.
லோகேஸ்வரன் 10-6-1991-ல் பிறந்தவர். கன்னி லக்னம், ரிஷப ராசி, பரணி நட்சத்திரம். இவரின் 7-ஆம் அதிபதி குரு உச்சம். அவருடன் நீசபங்கம் பெற்ற செவ்வாய் உள்ளார். சனியின் பார்வை இவர்களுக்குக் கிடைக்கிறது. ஜாதகத்தில் சனி, செவ்வாய் பார்வையிருப்பதால் இஷ்ட திருமண வாய்ப்புள்ளது. நடப்பு ராகு தசையில் சனி புக்தி. இந்த சனி புக்தியில் திருமணம் நடந்தால் பிரச்சினை உண்டாகும். எனவே அடுத்து 2023 மே மாதத்திற்குப்பிறகு ஆரம்பிக்கும் புதன் புக்தியில் திருமணம் நடத்துவது நல்லது. இவ்விதம் 7-ஆம் அதிபதி பெருக்கும் ஸ்தானமான 11-ல் இருப்பவர் கள், கண்டிப்பாக தாலிதானம் செய்ய வேண்டும். மேலும் சனி, செவ்வாய் பார்வை இருப்பதால் சீர்காழி, சட்டைநாதர் கோவிலிலுள்ள அஷ்ட பைரவரை வணங்க, நல்ல வேலையும் கிடைக்கும்; திருமணமும் நல்லமுறையில் நடக்கும்.
* இராமதாஸ், கோவில்பட்டி.
என் அண்ணன் மகன் அரவிந்த் ஜாதகம் அனுப்பியுள்ளேன். அவனுக் குத் திருமணம் தாமதமாகிறது. வேலையிலும் நிம்மதியில்லை. இவை பற்றிக் கூறுங்கள்?
அரவிந்த் 18-7-1992-ல் பிறந்தவர். துலா லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம். 7-ஆம் அதிபதி செவ்வாய் 8-ல் அமர்வதால், செவ்வாய் தோஷமுள்ளது. இவருக்கு செவ்வாய் தோஷமுள்ள பெண்ணாகப் பார்க்கவும். நடப்பு சனி தசையில் சனி புக்தி 2023, ஆகஸ்ட் வரை. இதில் திருமணம் நடந்து விடும். அடுத்துவரும் புதன் புக்தியில் வேலையில் மாற்றமும் ஏற்றமும் கிடைக்கும். இவ்விதம் செவ்வாய் தோஷமுள்ளவர் கள்- அதுவும் 8-ஆமிடத்தில் செவ்வாய் இருந்து, அதற்கு வீடு கொடுத்தவரும். சாரநாதரும் 10-ஆமிடம் எனும் கர்மஸ்தானத்தில் இருப்பவர்கள் திருச்சி திருப்பைஞ்ஞீ- சென்று கல்வாழை பரிகாரம் செய்யவேண்டும். கல்வாழைக்கு ஆடை அணிவித்து, மஞ்சள்கயிறு காப்புகட்டி, பரிகார பூஜை செய்யவேண்டும். சுமங்கலிக்குப் புடவை, தாம்பூலம் கொடுக்கவேண்டும்.
* கிருஷ்ணன், நாகர்கோவில்.
என் மகன் ஜெகன்னாதனுக்கு முதல் திருமணம் விவாகரத்தாகிவிட்டது. இரண்டாவது திருமணம் எப்போது நடைபெறும்?
ஜெகன்னாதன் 16-5-1990-ல் பிறந்தவர். தனுசு லக்னம், மகர ராசி, திருவோண நட்சத்திரம். லக்னத்துக்கு 2-ஆமிடத்தில் சனி, சந்திரன், ராகு இணைவு. இது புனர்பூ யோகம் கொடுக்கிறது. நடப்பு குரு தசை, சனி புக்தியில் திருமணமும் விவாகரத்தும் நடந்துள்ளது. எனவே 2024, ஏப்ரல் மாதத்திற்குப் பின்வரும் புதன் புக்தியில் மறுமணம் செய்யவும். அப்போதுதான் மறுமண வாழ்க்கை சிறப்பாகவும் நீடித்தும் அமையும். இவ்விதம் இருதார தோஷம், மாங்கல்ய தோஷமுடையவர்கள் நாகப்பட்டினம், திருவேள்விக்குடி சென்று வணங்கவும். மேலும், இவ்விதம் மாங்கல்ய ஸ்தானாதி பதி சந்திரன், சனி மற்றும் ராகுவுடன் இந்த ஜாதகருக்கு அமைந்திருப்பதுபோல் இருப்பின், யாராவது ஏழைப் பெண்களின் அடகுவைத்த மாங்கல்யத்தைத் திரும்ப வாங்கிக் கொடுப்பது நல்லதொரு பரிகாரமா கும்.