● பி. கேசவன், கரூர்.
எனக்கு 48 வயது. பயன்படாத பூர்வீக சொத்து. பிடிக்காத வேலையில் 30 வருடம் அனுபவம்- சேமிக்க முடியாத சம்பளம். 30 வருட அனுபவத் தொழிலை சுயமாகத் தொடங்க முதலீடு இல்லை; கடன் வாங்க பயம். என் மகள் +2 படிக்கிறாள். அவள் மேற் படிப்பு, என் எதிர்காலம் எப்படியிருக்கும்?
கடக லக்னம், மகர ராசி, உத்திராட நட்சத்திரம். 9-க்குடைய குரு 10-ல் இருப்பதால் தர்மகர்மாதிபதி யோகம். கடைசிவரை வறுமை, தரித்திரத்துக்கு இடமில்லை. ஆனால் குரு பார்வை ராசி, லக்னத்துக்கு இல்லை என்பதால், போராட்டமான வாழ்க்கை. குரு தசை, சந்திர புக்திமுதல் முன்னேற்றம், சுயதொழில் யோகம் எதிர்பார்க்கலாம். மகளுக்கு கும்ப ராசி, அவிட்ட நட்சத்திரம், கன்னியா லக்னம். படிப்பு யோகம் நன்றாகவே உள்ளது. தொழிற்கல்வி (டெக்னிக்கல்) படிக்கலாம். மேற்படிப்புக்கு வங்கிக்கடன் உதவி கிடைக்கும். திருமணம் 25 வயதுக்குமேல் நடக்கும். செவ்வாய், சனி, கேது சேர்க்கை என்பதால் காதல் திருமணம்- கலப்புத் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் நடக்கும்.
● கந்தசாமி, செங்குந்தபுரம்.
எங்கள் ஒரே மகன் வெளிநாட்டில் வசித்துவருகிறார். அவர் இங்கு வர வாய்ப்பில்லை. வயதான காலத்தில் நானும் என் மனைவியும் தனியே வாழ்ந்துவருகிறோம். எங்கள் மகனுடன் சென்று சேர்ந்து வாழமுடியுமா? கடந்த ஆண்டு வெளிநாடு செல்ல எல்லா முயற்சி களும் மேற்கொண்டு, கொரோனா காரணமாகத் தடைப்பட்டுவிட்டது.
10-12-1950-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், தனுசு ராசி, பூராட நட்சத்திரம். 2-ல் சனி, கேது. 8-ல் ராகு. சனி லக்னத்தின் 8-ஆமிடத்தைப் பார்ப்பதால் தீர்க்காயுள் ஜாதகம். செவ்வாய் உச்ச வர்க்கோத்தமம். தற்போது ஏழரைச்சனி. நடப்பு குரு தசை. இதில் சந்திர புக்தி 2023, நவம்பர்வரை. இந்தக் காலகட்டத்திற்குள் தாங்கள் ஒருமுறை உங்கள் மகனுடன் சேரும், வெளிநாடு செல்லும் யோகமுண்டு. அடுத்துவரும் செவ்வாய் புக்தி உங்களை வீட்டில் இருத்தி வைக்கும். குரு தசை, ராகு புக்தியில் உடல்நலத்தில் கவனம் தேவை. அந்த காலகட்டத்தில், உங்கள் மகன் உங்களுடன் இருக்கும் வாய்ப்புள்ளது. இவ்விதம் இருக்கும் வயதானவர்கள். அன்னூர் அருகே காளகாலேஸ்வரர் திருக்கோவில் சென்று வணங்கலாம். இது கோவையி-ருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் உள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Q&A_25.jpg)
● கே. நடராஜன், புதுக்கோட்டை.
என் மகளுக்குத் திருமணம் எப்போது நடைபெறும்? சொந்தமா? அந்நியமா? ஜாதகங்கள் வருகின்றன. ஆனால் பொருந்தவில்லை. ஜோதிடர்கள் சொன்ன எல்லா பரிகாரங்களையும் செய்து விட்டோம்.
நித்யஸ்ரீ 15-8-1994-ல் பிறந்தவர். கன்னி லக்னம், விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரம். லக்னாதிபதி புதன் 12-ல் மறைவு. சந்திரன் நீசம். லக்னத்துக்கு 2-ல் ராகு, 8-ல் கேது. ராசிக்கு 8-ல் செவ்வாய். மேலும் 7-ல் சனி தனது 3-ஆம் பார்வையால் மாங்கல்ய ஸ்தானத்தைப் பார்க்கிறார். ராசியில் சுக்கிரன் நீசம். எனவே இத்தனை தோஷங்களுள்ள ஜாதகிக்கு திருமணம் சற்று தாமதமாகத்தான் செய்யும். சிறு வயதில் திருமணமாகியிருந்தால் இரு தாரம் ஆகியிருக்கும். 2022, ஜூன் மாதத்திலிருந்து கேது தசை ஆரம்பம். இதில் 2022 கடைசியில் சுக்கிர புக்தியில் திருமணம் நடக்கும். இந்தப் பெண்ணின் வேலையில் எப்போதும் வெளிநாட்டு சம்பந்தம் இருக்கும். நிறைய பரிகாரங்கள் செய்தும் திருமணம் நடைபெறாத நிலையில் உள்ளவர்கள், சிவகங்கை- திருப்பத்தூர் திருத்தனிநாதர் ஆலயத்திலுள்ள யோக பைரவரை வணங்க, திருமணம் கூடிவரும்.
● பி. திருமலை, சேலம்-8.
இத்துடன் என் மகன், மருமகள் ஜாதக நகலை இணைத்துள்ளேன். இவர்களுக்கு 2-12-2019-ல் திருமணம் நடந்தது. இதுவரையில் குழந்தை இல்லை. ஒருமுறை கருகூடி கலைந்துவிட்டது. இவர்களுக்கு எப்போது மழலை பாக்கியம் கிடைக்கும்?
கணவர் வினோத்குமார் 9-7-1989-ல் பிறந்தவர். மீன லக்னம், கன்னி ராசி, அஸ்த நட்சத்திரம். இவரின் 5-ஆமிடத்தில் செவ்வாய் நீசம் மற்றும் 8-ஆமதிபதி சுக்கிரன் உள்ளார். 5-ஆமதிபதி சந்திரன் சனியின் பார்வையில் இருக்கிறார். புத்திர காரகர் குருவும் சனியின் பார்வையில் மற்றும் 6-ஆமதிபதி சூரியனுடன் அமர்ந் துள்ளார். 11-ல் இருந்து ராகு தசை நடக்கி றது. இதில் 2023, ஜூனில் ஆரம்பிக்கும் செவ்வாய் புக்தி இவருக்கு குழந்தை பாக்கியம் கொடுக்கும். அம்சத்தில் செவ்வாய் உச்சமென்பதால் இது நடக்கும். மனைவி ப்ரீத்தா, 28-2-1992-ல் பிறந்த வர். சிம்ம லக்னம், தனுசு ராசி, பூராட நட்சத்திரம். இவரின் லக்ன குரு 5, 7, 9-ஆமிடங்களைப் பார்வையிடுகிறார். இவரின் 5-ஆமிடத்தில் ராகுவும், விரயாதிபதி சந்திரனும் இணைந்து அமர்ந்துள்ளனர். இதனால் இவரின் கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் இருக்க வாய்ப்புள்ளது. அதனால் கர்ப்பம் தரிக்க இயலாமலும், கர்ப்பம் தரித்தாலும் நிலைக்க முடியாமலும் உள்ளது. இவர் சித்த அல்லது ஆயுர்வேத மருத்துவரை நாடுவது நல்லது. நடப்பு செவ்வாய் தசை. இதில் 2022, செப்டம்பர் தொடங்கும் சூரிய புக்தி அல்லது அடுத்துவரும் சந்திர புக்தியில் கர்ப்பம் தரிக்கும்; நிலைக்கும். செவ்வாய் தசை முடிவதற்குள் 2023, செப்டம்பருக்குள் குழந்தை பாக்கியம் கிடைத்துவிடும். பெண்ணிற்கு 5-ல் ராகு இருப்பதால், புலிப்பாணி முனிவரின் கூற்றுப்படி, 48 நாட்கள் அரச மரத்தடி விநாயகரை நிறைய பட்சணங்கள்கொண்டு வணங்கி, அதனை சிறுவர், சிறுமியருக்கு கொடுத்து விடவேண்டும். இவ்விதம் குழந்தை பாக்கியம்பெற விரும்புவோர், திருப்புல்லாணி கல்யாண ஜெகந்நாதருக்கு இரவில் நைவேத்யமாகப் படைக்கப்படும் பாயசத்தை தம்பதியர் பக்தியோடு வாங்கி உண்ண விரைவில் குழந்தை பாக்கியம் பெறுவர்.
● ஆர். மணிமாறன், பொன்னமராவதி.
கடைநிலை அரசு ஊழியராக பதினெட்டு ஆண்டுகளாகப் பணி புரிகிறேன். பதவி உயர்வுக்கான தகுதிகள் அனைத்தும் கூடுதலாக இருந்தும், இதுவரை கிடைக்கவில்லை. என் தயார் எனக்கு எழுதிக் கொடுத்த சொத்தை மற்றொருவர் உரிமை கொண்டாடி வருகிறார். அந்த பிரச்சினை தீர்ந்து சொத்து எனக்கு எப்போது கிட்டும்?
19-4-1967-ல் பிறந்தவர். கடக லக்னம், கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம். லக்னத் தில் உச்ச குருவும், சந்திரனும் உள்ளனர். 9-ல் புதன் நீசபங்கம். சூரியன் உச்சம். உங்கள் 10-ஆமதிபதி செவ்வாயும், பதவி உயர்வுக்குரிய 11-ஆமதிபதி சுக்கிரனும் சனியால் பார்க்கப்பட்டதால், பணியில் திருப்தியின்மை, பதவி உயர்வும் கிடைக்க வில்லை. தற்போது செவ்வாய் தசை முடிந்து ராகு தசை ஆரம்பிக்கப் போகிறது. (ஜூலை 2022). இந்த ராகு தசை, ராகு புக்தியில் உங்களுக்கு அரசுசார்ந்த பதவி உயர்வு உண்டு. பின் வீடு வில்லங்கம் தீர்ந்து, அதுவாகவே கைக்கும் கிடைக்கும். செவ்வாய், சனி பார்வை இருப்பதால் நாகை, சீர்காழியிலுள்ள சட்டைநாத சுவாமி கோவிலிலுள்ள அஷ்ட பைரவரை வணங்க, துன்பம் குறையும். பதவி உயர்வு வேண்டுவோர் விழுப்புரம் அருகிலுள்ள பரிக்கல் சென்று வணங்கவேண்டும்.
செல்: 94449 61845
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-07/Q&A-t.jpg)