"உடம்பார் அழியில் உயிரார் அழிவார்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே''.
-திருமூலர்
பொருள்: உயிர்களின் உடல் அழிந்து விட்டால் அதனுள்ளிருக்கும் உயிரும் விலகி விடும். உறுதியான உடல் வலிமை சீர்குலைந் தால், பிறவிப் பயனை அடைய உடலை ஒரு கருவியாகப் பயன்படுத்த முடியாது. உடலை உறுதியாக வைத்து வளர்க்கும் வழியை அறிந்து, உடலை வளர்த்து அதனுள்ளிருக்கும் உயிரையும் வளர்பதே சிறந்தது.
தேவர்களுக்கு கேட்டதையெல்லாம் தரும், காமதேனு, கற்பக விருட்சம், அட்சய பாத்திரத்தை தந்ததுபோல் மனிதர்களுக்கும் கொடுக்கப்பட்ட வரமே, ஆரோக்கியமான உடலும், அமைதியான மனமும், ஆழ்ந்த அறிவுமாகும். அறிவே ஞானப் பாலினைத் தரும் காமதேனு. மனமே, எதை கேட்டாலும் தரும், கற்பக விருட்சம். உடலே, அள்ளக் குறையாத அமுத சுரபி. அறிவின் துணை கொண்டு, செய்யும் காரியங்களில் யுக்தியும், மன உறுதியும் உண்டானால், அவர்களுக்கு வானமும் கைவசப்படும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vasuthu.jpg)
உடலின் வாஸ்து பரிகாரம்
ஒருவரின் ஜனன ஜாதகத்தை மாற்ற முடியாததுபோல், இயற்கைக் கொடுத்த உடலையும் மாற்றிக்கொள்ள முடியாது. எல்லாரும், ஏதோ ஒரு தோஷத்துடன் பிறக்கிறார்கள். முன்வினைப் பயனே, நம் உடலின் தோற்றத்திற்குக் காரணமாகிறது. காரண தேகமே, ஸ்தூல தேகம் உருவாவதற்கு விதையாக செயல்படுகிறது. சில எளிய பரிகாரங்களால் நம்முடைய குறைகளை நீக்கி, நிறைவான வாழ்க்கை வாழலாம்.
தோப்புக் கரணம்
கால்களுக்கு இடையில் அரை அடி அளவு இடவெளிவிட்டு நிற்க வேண்டும். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக்கொண்டு மூச்சை இழுத்துக்கொண்டே அமர்ந்து, அமர்ந்த நிலையில் ஒரு மூச்சுவிட்டு பிறகு எழ வேண்டும். பிறகு, நின்ற நிலையில் ஒரு மூச்சுவிட வேண்டும்.
பலன்கள்
* தோப்புக் கரணம் போடும்போது நமது காது மடல்களைப் பிடித்துக்கொள்கிறோம். "ஓம்' எனும் பிரணவ மந்திரத்தின் வடிவத்தில் அமைந்துள்ள காது மடல்களில் உடலின் எல்லா உறுப்புகளையும் இணைக்கிற வர்ம புள்ளிகள் இருக்கின்றன.
* தோப்புக் கரணப் பயிற்சியால் மூளையிலுள்ள நரம்புக் கலங்கள் சக்தி பெறும்
* தோப்புக் கரணத்தை தொடர்ந்து செய்யும்போது மன இறுக்கம், மன அழுத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் குறையும்.
* தோப்புக் கரணம் போடுவதால், உடலின் தசைகள் வலுப்பெறுதல், மூளையின் செயல்பாடு மேம்படும்.
* ஞாபக சக்தியின் திறன் கூடும். மாணவர்களுக்கும் அறிவாற்றல் செயல் பாட்டை மேம்படுத்தும்.
உறங்கும் திசை
* தெற்கு திசை: தெற்கு திசையில் தலைவைத்து தூங்கினால், புகழ், செல்வம், வெற்றி போன்றவை கிடைக்கும்.
* கிழக்கு திசை: கிழக்கு திசையில் தலை வைத்து தூங்கினால், உடலும் மனமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
* வடக்கு திசை: வடக்கில் தலைவைத்து தூங்கக்கூடாது. வடக்கில் தலைவைத்து தூங்கினால் எதிர்மறை விளைவுகள் ஏற்படும்.
உணவு உண்ணும் திசை
* கிழக்கு நோக்கு அமர்ந்து சாப்பிட் டால், மன அழுத்தம் குறையும். நோய்வாய்ப் பட்டவர்கள் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிடுவது மிகவும் நல்லது.
* வடக்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் செல்வம் சேரும்.
* மேற்கு திசையில் அமர்ந்து சாப்பிடுவதால், தொழிலில் முன்னேற்றம் காணலாம்.
* தெற்கு நோக்கி அமர்ந்து சாப்பிடக் கூடாது. இது எமனுக்குரிய திசை என்பதால் இந்த திசையை தவிர்ப்பது நல்லது.
தலைப்பாகை அணிதல்
உடலின் வாஸ்து சாத்திரத்தில், தலை, தெற்கு திசையைக் குறிக்கும். அதுவே, ஞானத்தின் கடவுளாகிய தட்சிணா மூர்த்தியின் இருப்பிடம். தலைப்பாகை அல்லது தொப்பி அணிவதால், தலைமை பொறுப்பு தேடிவரும். தெற்கு திசை காவலன், எமதருமன், தென் திசையாகிய தலை பாகத்தை மூடியிருப்பது நல்லது.
இடது காலை முன்வைத்து பயணத்தைத் தொடங்குதல் உடலின் வலது பாகம் கேதுவைக் குறிக்கும். இடது பாகம், ராகுவைக் குறிக்கும். சுப காரியங்களுக்கு வலது காலை முன் வைத்து, பயணத்தைத் தொடங்குதல் மரபு. வழக்கு, தேர்வு, போட்டி போன்றவற்றிற்கு செல்லும்போது, இடது காலை முன்வைத்து பயணத்தைத் தொடங்கினால், வெற்றி கிடைக்கும். இராணுவ மற்றும் காவல் துறை அணிவகுப்புகளில் இடது காலை முன்வைத்தே, (கஊஎப& தஒஏஐப) பயிற்சியைத் தொடங்குகிறார்கள்.
அன்றாட வாழ்க்கையில், மூச்சுப்பயிற்சி, சூரிய நமஸ்காரம், மூன்றாம்பிறை சந்திர தரிசனம் போன்றவற்றை கைபிடித்தால் வாழ்க்கையில் சோதனைகள் நீங்கி சாதனை புரியலாம்.
(நிறைவு)
செல்: 63819 58636
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2025-04/vasuthu-t.jpg)