ரு கிரக பாவகத்தில் அசுபத்தன்மை அடைந்த கிரகம் சேருவதைக்கொண்டு அந்த ஜாதகர் எதற்கு சரிப்பட்டு வரமாட்டார் என்பதைக் கண்டறியலாம். கடந்த இதழ்களில் ஆறாம் பாவம்வரை பார்த்தோம். இனி தொடர்ந்து காண்போம்.

ஏழாமிடமும் அசுப கிரக சம்பந்தமும்

ஏழாமிடம்+சூரியன்: சூரியன் கெட்டு ஏழாமிடத்தில் சோர்ந்துபோய் இருப்பின், ஜாதகர் திருமணம், வியாபாரம், தந்தை, சொற்படி நடக்கும் மனைவி, பிறரை அதிகாரம் செய்தல் போன்றவை எதற்குமே சரிப்பட்டு வரமாட்டார். காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளை வணங்கவும்.

dd

Advertisment

ஏழாமிடம்+சந்திரன்: சந்திரன் அசுபராகி ஏழாமிடம் ஏறிட, அமைதியான திருமண வாழ்க்கை, நிரந்தர வியாபாரம், தீர்க்கமான- தெளிவான முடிவுகள், பிற ஊர் செல்வது, துணிந்து எந்த விஷயத்திலும் பங்குபெறுவது என இவை எதற்குமே இந்த ஜாதகர் சரிப்பட மாட்டார். திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில் சென்று வழிபடவும்.

ஏழாமிடம்+செவ்வாய்: செவ்வாய் சீர்கெட்டு ஏழாமிடம் செல்ல, இனிய இல்வாழ்வு, வெளிப்படையான வாழ்வுத் தன்மை, நிறைந்த வியாபாரம், அமைதியான பங்காளிகள், பங்குதாரர்கள், நல்ல சந்தர்ப்பங்கள் போன்ற எவையுமே இந்த ஜாதகருக்கு சரிப்படாது. ஈரோடு சங்கமேஸ்வரர் கோவில் சென்று வழிபடவும்.

ஏழாமிடம்+புதன்: புதன் பொலிவிழந்து ஏழாமிடம் போய்ச்சேர, இவர்கள் எந்த விஷயத்திற்கும்- குறிப்பாக திருமண விஷயத்துக்கு சரிப்பட்டு வரமாட்டார்கள். காஞ்சிபுரம் பச்சைவண்ணப் பெருமாளை வணங்கவும்.

ஏழாமிடம்+குரு: குரு குறுகி ஏழாமிட சம்பந்தம் பெற, இல்லற சுகம், நிதி நிர்வாகம், அனைவரையும் அனுசரித்துச் செல்லுதல், பெருந்தன்மை, தெய்வீக கட்டுப்பாடு போன்றவை எதற்கும் ஜாதகர் சரிப்பட மாட்டார். தஞ்சை மாவட்டம், திருலோக்கி சுந்தரரை வழிபடவும்.

Advertisment

ஏழாமிடம்+சுக்கிரன்: சுக்கிரன் சுணங்கி ஏழாமிடம் சேர, சந்தேகமில்லா தாம்பத் திய இல்லறம், பிணக்கில்லாத வாழ்வு, அடிப்படையில் திருமணமாதல், திருமணமான பிறகு சபலமில்லாமல் இருத்தல் என இவை எதுவும் ஜாதகருக்கு சரிப்பட்டு வராது. தெற்குநோக்கிய விநாயகரை வழிபடவும். பட்டீஸ்வரம் அருகிலுள்ள உடையாளூர் சுக்கிர தோஷநிவர்த்தி தலத்தை வணங்கலாம்.

ஏழாமிடம்+சனி: சனி சங்கடமாகி ஏழில் சங்கமிக்க, திருமணமென்ற ஒன்று நடப்பது- திருமணமானாலும் பிரியாமல் வாழ்வது, பலரையும் பகைத்துக்கொள்ளாமல் வாழ்வது, வியாபாரத்தில் அடிமையாக இல்லாமல் இருப்பது போன்ற எதற்கும் ஜாதகர் சரிப்பட மாட்டார். திருப்புகலூர் அக்னீஸ்வரர் ஆலயம் சென்று வழிபடவும்.

எட்டாமிடமும் அசுபகிரக சம்பந்தமும்

எட்டாமிடத்தில் பாவர்கள் மறையும்போது, "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்னும் தத்துவப்படி சிலபல யோகங்கள் கிட்டும்தான். எனினும் ஜாதகர் சில விஷயங்களுக்கு சரிப்பட மாட்டார்.

எட்டாமிடம்+சூரியன்: சூரியன் கெட்டு எட்டாமிடம் ஏகிட, தந்தையின் அரவணைப்பு, நல்ல கண்பார்வை, நீண்ட ஆயுளுடைய தந்தை, பூர்வீக குலதெய்வ ஆதரவு, அரசு உதவி போன்றவற்றுக்கு ஜாதகர் சரிப்பட்டு வரமாட்டார். திருமீயச்சூர் லலிதாம்பிகையை வழிபடவும்.

எட்டாமிடம்+சந்திரன்: சந்திரன்

அசுபராகி எட்டாமிடம் சாய்ந்திட, ஆயுள் பற்றிய எண்ணம், மனக்குழப்பம் இல்லாமை, பைத்தியம் பிடிக்காத- தெளிவான மனநிலை, தண்ணீரில் கண்டம் இல்லாமை, நல்லவிதமான தாயார் அமைதல்- முதலில் தாயார் இருத்தல் போன்றவற்றுக்கு ஜாதகர் சரிப்பட மாட்டார். மேட்டுப்பாளையம்- இடுகம்பாளையம் ஆஞ்சனேயரை திங்கட்கிழமை வழிபடலாம்.

எட்டாமிடம்+செவ்வாய்: செவ்வாய் சீர்கெட்டு எட்டாமிடம் சேர, விபத்தில்லா வாழ்வு, உறுதியான மாங்கல்ய பலம், ஒற்றுமை மிகுந்த தாம்பத்தியம், ரத்தம் சிந்தா ஆரோக்கிய வாழ்வு, நிறை ஆயுள் போன்றவற்றுக்கு ஜாதகர் சரிப்பட மாட்டார். மதுரை தென் திருவாலவாய் ஆலயம் அல்லது வைத்தீஸ்வரன் கோவில் சென்று வழிபடவும்.

எட்டாமிடம்+புதன்: புதன் கெட்டு எட்டாமிடம் புக, நுணுக்கமான அறிவு, நேர் மறையான ஜோதிட பரிகார ஆலோசனை, தீர்க்கமான சட்ட அறிவுரை, நல்லவர்களுக்கு அறிவுமூலம் உதவுவது, குழந்தைகளுக்கு நன்மைபுரிவது போன்ற எதற்குமே ஜாதகர் சரிப்பட மாட்டார். திருவாரூர்- திருத்துறைப்பூண்டி வழியிலுள்ள திருக்காரவாசல் சென்று வழிபடவும்.

எட்டாமிடம்+குரு: குரு குறுகி எட்டாமிடம் சேர்ந்திட, நல்ல குழந்தைகள் இருப்பது, ஆன்மிக வேடம் போடாமலிருப்பது, குடிக்காமல்- புகைபிடிக்காமல்- போதை இல்லாமல் கௌரவமாக காலம் கழிப்பது, கவலையில்லா நிறைவாழ்வு போன்ற எதற்குமே ஜாதகர் சரிப்பட மாட்டார்.

திருநெல்வேலி மாவட்டம், புளியறை யோக தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

எட்டாமிடம்+சுக்கிரன்: சுக்கிரன் சுருங்கி எட்டாமிடம் போய்விட, திருமணமாகி பாதியில் பிரிந்துபோகாமல் இருப்பது, திருமண வாழ்க்கை நிறைவு, வாகனம் கிடைப்பது, "பிளாட்'டில் பிரச்சினை வராமலிருப்பது, வசதியாக வாழ்வது, கலைநுட்பம் மேன்மை யடைவது என எதற்கும் ஜாதகர் சரிப்பட்டு வரமாட்டார். கும்பகோணம்- திருச்சத்தி முற்றம் சென்று வழிபடவும்.

எட்டாமிடம்+சனி: எட்டாமிடத்தில் சனி என்பது ஏற்புடையதுதான். இருந்தா லும் சனிபகவான் எட்டில் அமர்ந்தால் விஷத்தால் பயமில்லாமல் இருப்பது, கிருமி தொந்தரவால் பாதிக்காமல் வாழ்வது, மாங்கல்யம் பலமாக அமைவது, விரக்தி யடையாமல் வாழ்க்கை நகர்வது, பெயர் தெரியாத நோய்த்தாக்கம் இல்லாமல் ஆரோக்கியம் பேணுவது போன்ற எதற்குமே ஜாதகர் சரிப்பட மாட்டார். அறந்தாங்கி- எட்டியத்தளி சென்று அகத்தீஸ்வரரை வழிபடவும்.