குரு+செய்வாய்

"கோட்சார குரு உங்கள் பிறப்பு ஜாதகத்தில் செவ்வாய் இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 7, 2, 12-ஆவது ராசிகளில் கோட்சார நிலையில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் உங்கள் சகோதரர்கள் வாழ்வில் உயர்வு ஏற்படும். உடன்பிறந்த சகோதரர்கள், பங்காளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள், பகை மறைந்து உறவு நெருக்கமாகும். சகோதரர்களாலும் உங்களுக்கு நன்மைகள் உண்டாகும்.

வீட்டிலும் அலுவலகத்திலும் சில நேரங்களில் வாக்குவாதம், சண்டை, சச்சரவுகள், உண்டாகக்கூடிய சூழ்நிலை அமையும். இதற்கு காரணம் உங்கள் முன்கோப குணம்தான். இந்த கோப குணத்தால் இரத்த அழுத்தம் அதிகமாகும். எனவே, எதற்கும் எப்போதும் கோபப்படாமல், உணர்ச்சிவசப்படாமல் பொறுமையாக இருங்கள். எந்த காரியம் செயலையும் உடனே முடிக்கவேண்டும், உடனே முடியவேண்டும் என அவசரப்படாதீர்கள். பொறுமையைக் கடைப் பிடியுங்கள்.

மற்றவர்களுக்கு ஜாமீன் பொறுப்பு ஏற்றுக்கொள் ளாதீர்கள். யாருக்கும் வாக்கு கொடுத்துவிடாதீர்கள். பின் நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போகலாம். சரீரத்தில் நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்துவந்த நோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளவேண்டும் என்றால் இப்போது செய்துகொள்ளலாம். தற்போது நான் சொல்வதைதான் மற்றவர்கள் கேட்கவேண்டும், எதனையும் செய்யவேண்டும் என்ற அகங்காரம், ஆணவ குணம் உண்டாகும். தான் என்ற அகந்தை குணம் தோன்றிவிடும். நீங்கள் சொல்வதை பிறர் கேட்கவில்லை, செய்யவில்லை என்றால் அந்த பொறுப்பில் இருந்து எப்படியோ போகட்டும் என விலகிவீடுவீர்கள். இதனால் உங்களுக்கு அவப்பெயர், மரியாதை குறைவு உண்டாகும். மனதில் ஆணவம், அகங்காரம் எதுவும் உண்டாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

உங்கள் சுய உழைப்பால் பூமி, நிலம் வாங்குவீர்கள். பூமி, மண், கட்டடம் சம்பந்தமான தொழில் விருத்தியையும், லாபத்தையும் தரும். குடும்பத்தில் பூமி, வீடு, சொத்து சம்பந்தமான பங்கு பாகப் பிரிவினைகளில் இருந்த தடைகள், பிரச்சினைகள் தீரும். உங்களுக்கு கிடைக்கவேண்டிய பாக சொத்துகள் முறையாக கிடைக்கும். கணவன்- மனைவி பாசம் கூடும்.

கணவன்மீது வெறுப்புடன் இருந்த பெண்கள் கணவன்மீது பாசம் கொள்வார்கள். மதித்து வாழ்வார்கள். ஏதாவது ஒரு காரணத்தால் கணவனைப் பிரிந்து விலகி வாழ்ந்த பெண்கள் இப்போது கணவருடன் சேர்ந்து சந்தோஷமாக வாழத் தொடங்குவீர்கள். பிரிவுகள் உறவாகும்.

பிறப்பு ஜாதகத்தில் சிம்மத்தில் செவ்வாய் அமர்ந்து, பிறந்துள்ள பெண் ஜாதகர்களுக்கு இதுவரை இருந்த திருமணத் தடை, தாமதங்கள் ஏற்பட்டு திருமணமாகாமல் இருந்தால் இப்போது திருமணம் நிச்சயக்கப்பட்டு திருமணம் கூடி சிறப்பாக நடந்தேறிவிடும். பெண்களுக்கு குருவின் அருளால் கணவனை காணும் காலம், கணவனை அடையும் நேரம், கழுத்தில் மாங்கல்யம் தொங்கும் யோகம் இப்போது அமைந்துவிடும்.

இதுவரை எவ்வளவோ பரிகாரம் செய்தும் தோஷநிவர்த்தி செய்தும் ஆயிரக்கணக்கில் பணம் செலவுசெய்தும் தடைப்பட்டு வந்த பெண்ணின் திருமணம் இப்போது நடைபெற்றுவிடும். இப்போது நடைபெறும் உங்கள் பெண்ணின் திருமணம், எதிர்கால குடும்ப வாழ்க்கையை ஏற்றமாக- இன்பமாக அமைத்து வைத்துவிடும்.

பரிகார நிவர்த்தி

கோபத்தை குறைத்துகொள்ளுங்கள். பொறுமையுடன் வாழ கற்றுக்கொள்ளுங்கள். குடும்பத்தினரிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்; போதும்.

guru

குரு+புதன்

கோட்சார குரு உங்கள் பிறப்பு ஜாதகத்தில் புதன் இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 7, 2, 12-ஆவது ராசிகளில் கோட்சார நிலையில் சஞ்சாரம் செய்யும் வருடங்களில் இந்த குரு புதன் இணைவில் கல்வி மேம்பாடு, கல்விக் கூடங்கள், கல்வி சம்பந்தமான தொழில் செய்பவர்களுக்கு தொழி-ல் மேன்மை உண்டாகும். தொழி-ல் இதுவரை இருந்துவந்த தடை, தாமதம், தேக்க நிலைமாறும். கல்வி சம்பந்தமான அலுவலகம், பள்ளி, கல்லூரிகளில் பணிபுரிபவர்களுக்கு பணியி-ருந்து வந்த தடைகள் விலகி பணி உயர்வு உண்டாகும். நல்ல திறமையான ஆசிரியர்கள் கௌரவிக்கப்படுவார்கள்.

Advertisment

மாணவர்கள் கல்வி கற்கும் திறன் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவீர்கள். படித்தது மனதில் அப்படியே தங்கும். ஒருசில காரணங்களால் தடைப்பட்டு நின்றுபோன படிப்பை இப்போது மறுபடியும் தொடர்ந்து படித்து முடித்துவிடுவீர்கள். மேல் படிப்பு படிக்க முயற்சி உள்ளவர்களுக்கு மேல் படிப்பு படிக்கும் யோகம் சூழ்நிலை அமைந்து விடும்.

கதை, காவியம், கவிதை புனையும் எழுத்தாளர்களின் படைப்புகள் பிறரால் ஊக்கம் பெற்று பிரசுரமாகும். இதனையே தொழிலாக கொண்டவர்களுக்கு வருமானம் கூடும். சன்மானம் கிட்டும். உங்கள் படைப்புகள் புகழ்பெறும். மற்றவர்களால் மதித்து பேசப்படும் நீங்களும் கதாசிரியர், கவிஞர்கள் வரிசையில் சேர்த்துக் கொள்ளப்படுவீர்கள்.

செய்தித்துறை, பத்திரிகை துறை, வருவாய் துறை, கணினித் துறை, அஞ்சல் துறை, தொலைத் தொடர்புத் துறை போன்ற செய்தி மக்கள் தொடர்புத் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல உயர்வும், வருமான பெருக்கமும் உண்டாகும். இதுவரை உங்கள் திறமை, உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காமல் உழைத்துக்கொண்டு இருந்த உங்களுக்கு நல்ல நிர்வாகத்தில் வேலை கிடைக்கும். உங்கள் அறிவு, திறமை, உழைப்பிற்கேற்ற ஊதியம், பதவி கிடைக்கும். உங்கள் திறமை வெளிப்படும்.

Advertisment

பைனான்ஸ், பங்குச்சந்தை, எல்.ஐ.சி., வங்கிப்பணி, தரகு, கமிஷன் மண்டி, கடை, வியாபாரம், ஏஜென்சி விநியோகஸ்தர்கள் போன்ற தொழில்களை செய்பவர்களுக்கு தொழி-ல் உயர்வும், வருமானமும் கூடும். புதிய கம்பெனிகளின் தொடர்பும், விநியோக உரிமையும் கிடைக்கும். செய்யும் தொழில்களில் கிளைகள் அமைத்து தொழிலை விரிவுப்படுத்துவீர்கள். இதுவரை தொழில், வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கி தொழில் சிறப்பாக உயரும்.

அறிவு புத்தியால் செயல்படும் ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவார்கள். புகழ்பெறுவார்கள். கம்பெனி ஆலோசகர் களாக தொழில் செய்பவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் கூடும். வருமானம் உயரும். உங்கள் ஆலோசனைகள் வெற்றி யடையும்.

பூமி, பிளாட், தோட்டம் சம்பந்தமான ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் இதுவரை அடைந்த சிரமங்கள் நீங்கி தொழிலை விறுவிறுப்பாக செய்வீர்கள். இதனால் வருமானம் உயரும். இதுவரை தனக்கு சொந்தமாக வீடு இல்லையே, ஒரு மனை இல்லையே என ஏங்கியவர்களுக்கு தோட்டமோ, மனையோ, கட்டிய வீடோ அமையும். இப்போது வாங்கி சொந்தமாக்கி கொள்ளுங்கள். புதிய நிலங்கள், தோட்டங்கள் வாங்கும் வாய்ப்புகள் உருவாகும். வில்லங்கம், விவகாரங்கள் நீங்கிவிடும்.

இளைய சகோதர- சகோதரிகள் வாழ்வில் உயர்வு உண்டாகும். தாய்மாமன் உறவு மேம்படும். தாய்மாமனால் நன்மைகள் உண்டாகும். ஆண்களுக்கு புதிய பெண் நண்பர்கள் அமைவார்கள். பெண்களுக்கு புதிய ஆண் நண்பர்கள் அமைவார்கள். வா-ப வயது ஆண்களும் பெண்களும் இந்த விஷயங்களில் கவனமாக- அடக்கமாக இருந்து கொள்ளவேண்டியது அவசியம். இப்போது உருவாகும் காதல் நிகழ்வுகள் இன்னும் மூன்று வருடங்களில் துன்பம் துயரங்கள் நிறைந்ததாக மாறிவிடும்; ஜாக்கிரதை. காதலர்கள் ஒருவரையொருவர் ஏமாற்றிவிடுவார்கள்; கவனம்.

கட்டிய கட்டடம், வீடு, மனை, பிளாட், வியாபார கடைகள், வாடகைக்கு விட்ட கட்டடங்களில் இதுவரை இருந்துவந்த பிரச்சினைகள், கோர்ட், வழக்கு, வியாஜ்ஜியங் களின் என உண்டான தடைகள் இப்போது விலகும் முடிவு சாதகமாக- நன்மையாக அமை யும். உங்கள் சொத்தின் மதிப்பு உயரும்.

பரிகார நிவர்த்தி

தாய்மாமன், இளைய சகோதர- சகோதரி களுக்கு நன்மை, உதவி செய்யுங்கள். அவர் களுடன் பாசத்துடன் சேர்ந்து வாழ்ந்து வாருங்கள்.

(தொடரும்)

செல்: 93847 66742