பொதுவான செய்தி யாதெனில், லக்னத் திற்கோ, சந்திரனுக்கோ 10-க்குடையவன் சூரியனா கில் தந்தையின் செல்வம் கிடைக்கப்பெறும். சந்திர னாகில் தாய் செல்வமும், புதனாகில் பகைவர்கள் செல்வமும், குருவானால் உறவினர் செல்வமும் கிடைக்கப்பெறும். சுக்கிரனானால் மனைவி யின் செல்வம் கிடைக்கப் பெறும். சனியாகில் அடிமைச் செல்வமும் வந்துசேரும். ஒன்பதாம் இடத்தோன் 6-ஆமி டத்தை அடைந்திருந்தால் மாமனார் செல்வமும் வந்துவிடும். ஒன்பதாம் இடத்தோன் குருவாகி 6-ஆமிடத்தில் நின்றால் மாமியார் பொருள் வரும்.

மேற்கூறியவை ஜோதிட உண்மைகள். ஆனால் அவர்கள் செல்வச் சீமான்களாக இருக்கவேண்டும். அவ்வாறு அமைந்தால்தான் அதிர்ஷ்டம் சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும். மேற் சொன்னவற்றுக்கு உள்ளங்கை அமைப்பு துணைபுரிந்து நிச்சயத் தன்மையை உறுதிப் படுத்தும். உங்கள் உள்ளங்கையைப் பாருங்கள். உண்மை புலப்படும்.

கை அமைப்பும் நிலசுவான்தாரும் கைகளில் எல்லா மேடுகளும் உச்சநிலையில் காணப்பட்டவேண்டும். திடமான விதிரேகை, ஆயுள் ரேகை மற்றும் சூரிய மேட்டில் சூரிய ரேகை அமையப் பெறும், பெருவிரல் முதல் அங்குலாஸ்தியில் கோதுமை ரேகை காணப்படும், உள்ளங்கை மத்திம பாகம் முக்கோணம் காணப்படும். (இவர்கள்தான் சிக்கனமானவர்கள்.) விதி ரேகை திடமாக இருக்கவேண்டும். சுண்டுவிரல் மோதிர விரலை நோக்கி வளைந்து காணப்பட்டால், பலவகையிலும் பூமி பாக்கியம் கிடைக்கப்பெறும்.

ss

சுனபா யோகம் என்றால் என்ன?

சூரியமேடு சனி மற்றும் புதன்மேடு உச்சம் மற்றும் மூன்றிலும் சீரான ரேகை காணப்படும்.

பலன்: கூலி வேலை செய்யும் சாதாரண தினக்கூலி செய்வோர் நல்ல வசதியுடன் வாழ்வார்கள், இவர்கள் புத்திசாலியாகவும், தந்திரசாலியாகவும் இருப்பார்கள். இவர்களுடைய கணிப்புகள் கச்சிதமாக அமையப்பெறும். எனவே வாழ்நாள் முழுவதும் கவலையின்றி வாழ்வார்கள்.

புதன் மேடுமடும் உச்சம் பெற்றால் கலையார்வம் கூடுதலாக இருக்கப்பெறும், இவர்களுக்கு சமூக அந்தஸ்து, கௌரவம் கூடுதலாகக் கிடைக்கப்பெறும். இவர்களுக்காகப் பிறர் உதவி கிடைக்கப்பெறுவதோடு, இவர்களை "நாலுவீட்டு செல்லப்பிள்ளை' என்றே கூறலாம்.

சனி மேடும் சுனபா யோகமும்

இவர்கள் அரசியல் மற்றும் பொதுவாழ்வில் கவனம் செலுத்தலாம். புகழையும் பெறலாம். பொதுவாக இவர்கள் சொத்து சுகங்களைப் பற்றிய கவலையற்றவர்கள். ரகசியங்களைக் காப்பாற்றுவதில் வல்லவர்கள். எதையுமே சாதனைபுரிந்து முடித்தபின் பிறரிடம் கூறும் சுபாவம் காணப்படும். நேரான பாதையை நேசிப்பவர்கள்.

சூரியமேடும் சுனபா யோகமும்

இவர்கள் எவ்வித சிக்கலுமின்றி புகழை நிலைநாட்டுபவர்கள். சூழ்நிலை தான் இவர்களை நல்ல நிலைக்கு அழைத்துச் செல்லும். எத்துறை சார்ந்தாலும் அத்துறையின் பெயரை நிலைநாட்டுபவர்கள். சாதாரண நிலையில் ஆரம்பமாகி, உயர்நிலைக்குச் செல்பவர்கள். வறுமைக் கோட்டிற்குக் கீழ் பிறந்தாலும் யோகத்தைப் பூரணமாக அனுபவிக்கப் பிறந்தவர்கள்.

பர்வத யோகம் என்றால் என்ன?

விதிரேகையின் ஆரம்பம் கங்கண ரேகையைத் தொட்டு உதயமாகியிருக்கும். சனிமேட்டைக் கடந்து நடு விரலின் முதல் அங்குலாஸ்தியைச் சென்றடையும்.

பலன்: எந்தத் துறையில் ஈடுபட்டாலும் எல்லாவற்றிலுமே தங்குதடையின்றி முன்னேற்றம் காணப்படும். கல்வித்துறையில், சாதனை படைப்பதோடு, பல நூல்கள், ஆய்வுகள் செய்து தன்னிகரற்று விளங்கலாம். பல பிரமுகர்களை நேசமாக்கி அதிகப் பலன்பெற்று பெருவாழ்வு வாழலாம்.

குடும்பம் பெரிதாக, பாகப்பிரிவினை, வில்லங்கம் யாருக்கு வரும்?

4, 5-ஆமதிபதிகள் பரிவர்த்தனை பெற 8-ஆமதிபதி ஆட்சி பெறுவது மற்றும் 2, 4, 5-ஆமதிபதி, புதன் ஆட்சிபெற, சுக்கிரன், சந்திரன், குரு, கேந்திரம், திரிகோணம் பெறுவதால் குடும்பத்தில் வாரிசுகள் அதிகமாகி அசையா சொத்து மற்றும் வியாபாரம் போன்றவற்றில் பாகப்பிரிவினைக் காலத்தில் வீணான பகையுணர்வு தோன்றி குடும்பம் சிதறும். இதன் அறிகுறி மூத்த செல்வந்தர் உள்ளங்கையில் சுக்கிர மேட்டில் பல சதுர அமைப்பு தோன்றியிருக்கும். கீழ் செவ்வாய் மேட்டிலிருந்து ரேகை சனி மேட்டிற்குச் செல்லும். வழக்காடி குடும்பம் சுமூகநிலை அடையும்.

அத்தை மகளைத் திருமணம் செய்து சொத்துவரும் யோகம்

2, 7, 11-ஆமதிபதிகள் சுக்கிரனோடு கூடியிருக்க 9-ஆமதிபதி குரு வீட்டில் இருந்தால் சொத்து வரும் அறிகுறி. திருமண ரேகை நேராக ஆயுள் ரேகையைக் கடந்து சுக்கிரமேட்டை அடைந்திருக்கும்.

சொந்தமாக சொத்து சேரும் அதிர்ஷ்டம்

4, 9-ஆமதிபதிகள் நற்பலன் பெற்று இணைந்து, 12-ஆமதிபதிக்கு 2-ல் இருப்பதுபோதுமானது. மற்றொன்று சந்திரனுக்கு 12-ஆமதிபதி உச்சம்பெற்று 3, 4-ஆமதிபதிகளுடன்கூடி 12-ஆமதிபதிக்கு 12-ல் இருப்பதும். ஜாதக வலிமைபெற்று செல்வந்தராக இருப்பார். அவர்களால் வாரிசுகள் வளம்பெறுவர். சந்திரனுக்கு 2-ல் சனிபகவான் இருக்கப் பெற்றால் பூர்வீக சொத்தை விற்கும் நிலை ஏற்படும். அதன் அறிகுறி சனிமேட்டில் கரும்புள்ளி காணப்படும். இல்லயேல் விதிரேசை சனி மேட்டில் இணையுமிடத்தில் பெருக்கல் அடையாளம் தென்படும்.

இருக்கிற சொத்தை தர்மம் செய்து குடும்ப கௌரவம் சேர்ப்போர் ஜாதகம்

குருபகவான் 11-ல் இருக்க, 11-ஆமதிபதி ராகுவுடன்கூடி 4-ல் இருந்தால் சம்பாதித்த சொத்தை தர்மம் செய்யும் மனநிலை தோன்றும். ஆனால் இவர்கள் ஜாதகத்தில் 8-ல் சனி இருந்தால், கொடுப்பவர் வாங்குபவர்கள் இன்னனுக்கு உட்படுவர்.

யாருக்கு தாய்க்கு கண்டத்தால் சொத்து பாகப்பிரிவினைக்கு தடையேற்படும்

4-ஆமதிபதிக்கு 5, 9-ல் சனி இருந்தால் தாய்க்கு கண்டம் ஏற்பட்டு மனவேதனை வரும். மகனுடைய உள்ளங்கையில் சந்திர மேட்டில் கரும்புள்ளி காணப்பட்டால், அதுதான் சான்றாக அமையும்.

மற்றொன்று, 4, 9-ஆமதிபதிகள் இருவரும் ஒன்றாக இணைந்து ஜாதக நிலை காணப்பட்டால் தாய்- தந்தை இருவரும் ஒரே தருணத்தில் இன்னலுக்கு உட்படுவர். இதய ரேகை கீழ்செவ்வாய் மேட்டை அடைந்திருக்கும்.

கோடிக்கணக்கான சொத்து சுகம் இருந்தும் சந்ததிகள் யாவற்றையும் இழந்து வறுமை, நோய் தொற்றும் ஜாதக அமைப்பு

2, 4, 12-ஆமதிபதிகள் மற்றும் சுக்கிரன் நீசம், அஸ்தமனம்பெற, அவர்களுடன் 6, 8, 12-ஆமதிபதிகள் சம்பந்தம்பெற ஜாதகர்கள் குடும்பமின்றி வாழும் நிலை ஏற்படும்.

உள்ளங்கையில் நடுபாகம் மிகப்பள்ளமாக நீசம்பெற்றுக் காணப்படும். கீழ் செவ்வாய் மேட்டில் மற்றும் ஆயுள்ரேகை இறுதியில் கரும்புள்ளி காணப்படும்.

ஊழ்வினைப் பரிகாரம்

ஆலமர வேரின் கீழ் மண்பாகத்தில் பாலும் சர்க்கரையும் கலந்தூற்றி மண்ணைக் கிளறி அம்மண்ணை திலகமிடல் வேண்டும். காலபைரவரை வணங்குவது நற்பலனைத் தரும்.

செல்: 94456 14843