முன் காலத்தில் வாகனங்களும் குறைவு, மக்கள்தொகையும் குறைவு, விபத்துகளும் குறைவு. ஆனால் இன்றையநாளில் மக்கள் தொகையைவிட வாகனங்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. வாகனப் போக்குவரத்திற்கு சாலை வசதிகள் செய்தாலும், நாளுக்கு நாள் விபத்துகள் அதிகமாகக்கொண்டே போகின்றது. விபத்துகளுக்கு யார் காரணம்? வாகன ஓட்டிகளா? ஓட்டுபவர்களின் அலட்சியமா? வாகனம் ஓட்டும்போது மது, போதைப் பொருட்கள் அருந்திவிட்டு ஓட்டுவதாலா? வாகனங்களின் கோளாறா? விபத்து நடந்து முடிந்தபின்பு இதுபோன்ற ஏராளமான காரணங்களை ஆய்வுதான் செய்கின்றோம்.
ரிஷிகளின் சப்தரிஷி நாடியில், ஒருவர் பிறக்கும்போதே விபத்தில் பாதிப்படையும் நிலையை அவரின் ஜாதகத்தில் அமைந்துள்ள கிரக நிலையைக்கொண்டு அறிந்து கொள்ளமுடியும் என்று கூறியுள்ளார்கள்.
ஒருவரின் ஜாதகத்தில் லக்னாதிபதி கிரகத்துடன், எட்டுக்குரிய கிரகமும், ராகுவும் இந்த மூன்றும் இணைந்து ஒரு ராசியில் இருந்தால் அவருக்கு விபத்தின்மூலம் மரணம் உண்டாகும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/accident_17.jpg)
லக்னாதிபதி கிரகம் இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் எட்டாவது ராசிக்குரிய கிரகமும், ராகுவும் இருந்தால் விபத்தில் மரணம் உண்டாகலாம்.
லக்னத்திலோ அல்லது லக்னத்திற்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் செவ்வாய், ராகு ஆகிய இரண்டு கிரகங்களும் இருந்தால் ஜாதகருக்கு விபத்தினால் காயமோ, உறுப்பு ஊனமோ அல்லது மரணமோ உண்டாகலாம்.
லக்னாதிபதி கிரகம் நின்ற ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் செவ்வாய் மற்றும் ராகு ஆகிய இரண்டு கிரகங்களும் இருந்தால், ஜாதகருக்கு விபத்து ஏற்படலாம். விபத்தில் மரணமும் உண்டாகலாம்.
லக்னத்திற்கு நான்காமிடத்து கிரகம் நின்ற ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் செவ்வாய் மற்றும் ராகு நின்றிருந்தால் தாய்க்கு விபத்து ஏற்படலாம். விபத்தில் தாய் மரணமும் ஏற்பட வாய்ப்புண்டு.
லக்னத்திற்கு 3-ஆமிடத்திற்குரிய கிரகம் இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் செவ்வாய் மற்றும் ராகு இருந்தால், இளைய சகோதரனுக்கு விபத்து உண்டாகும்.
லக்னத்திற்கு 5-ஆமிடத்திற்குரிய கிரகம் இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் செவ்வாய் மற்றும் ராகு கிரகங்கள் இருந்தால் அவர்களுக்குப் பிறக்கும் முதல் குழந்தைக்கு விபத்து ஏற்பட வாய்ப்புண்டு.
லக்னத்திற்கு 7-வது ராசிக்குரிய கிரகம் இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் செவ்வாய், ராகு கணவன் ஜாதகத்தில் இருந்தால் மனைவிக்கு விபத்து, மரணம் ஏற்பட வாய்ப்புண்டு.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்திற்கு 7-ஆவது ராசிக்குரிய கிரகம் நின்ற ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் செவ்வாய், ராகு இருந்தால் கணவனுக்கு விபத்தும், அதில் மரணமும் அவனுக்கு உண்டாகலாம்.
லக்னத்திற்கு 9-ஆமிடத்திற்குரிய கிரகம் இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் செவ்வாய், ராகு இருந்தால் தந்தைக்கு விபத்து அதில் மரணம் ஏற்படலாம்.
லக்னத்திற்கு 11-ஆமிடத்ததிபதி இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் செவ்வாய், ராகு கிரகங்கள் இருந்தால் மூத்த சகோதரனுக்கு விபத்து ஏற்பட வாய்ப்புண்டு.
விபத்து என்பது வாகனங்களால் மட்டும் ஏற்படுவதில்லை. ஒருவர் திடீரென சில மணித்துளிகளில் எதிர்பாராமல் இறப்பதும் விபத்துதான். இயற்கை நிகழ்வுகளான இடி, நெருப்பு, காற்றால், நீரினால், விஷத்தால், தற்கொலை, பிறரால் கொலை செய்யப்படுதல் போன்ற எதிர்பாராத நிலையில் சட்டென பாதிக்கப்பட்டு இறப்பதும் விபத்துதான்.
விபத்துகள், திடீர் மரணங்கள், துர்மரணங்கள், பாதகமான தசை புக்திகள் நடக்கும் காலத்திலும், குறிப்பிட்ட வயது காலங்களில் நடக்காத கோட்சார நிலையில் பிறப்பு ஜாதகத்தில் செவ்வாய், ராகு கிரகங்கள், ரிஷிகள் கூறியுள்ள கிரகங்களுடன் சம்பந்தப்பட்டு சஞ்சரிக்கும் காலத்தில் ஏற்பட்டு பாதிப்பைத் தரும். ரிஷிகள் தசை, புக்தி, அந்தரம் கணக்கீட்டிற்கு முக்கியம் தருவதில்லை. கிரக கோட்சாரகால நிலைக்குத் தக்கபடிதான் நன்மை- தீமை பலன்கள் உண்டாகும் எனக் கூறுகின்றார் கள்.
விபத்தினால் பாதிப்படையும் கிரக நிலையில் உள்ளவர்கள் தங்கள் பிறப்பு ஜாதகத்தின்மூலம் குடும்ப உறவுகளில் யாருக்கு பாதிப்புத் தரும் என்பதை துல்லியமாக அறிந்து, அதற்கு சரியான பரிகாரங்களைச் செய்து விபத்து பாதிப்புகளைத் தடுத்துக் கொள்ளவேண்டும்.
ஒருவரின் ஜாதகத்தில் வாகன விபத்தைத் தரும் கிரக பாதிப்பு இல்லாவிட்டாலும், அவர்கள் புதிதாக மோட்டார் சைக்கிள், கார், வேன், பஸ், லாரி போன்ற வாகனங்கள் வாங்க பதிவு செய்யும் நாட்கள், புதிய வாகனங் களை வாங்கி வீட்டிற்கு கொண்டுவரும் நாள், விபத்து பாதிப்பைத் தரும் கிரக அமைப்புடன் இருந்தால் அந்த வாகனம், விபத்தில் பாதிக்கப்பட்டு அதில் பயணம் செய்பவர்களுக்கு பாதிப்பு, மரணத்தை ஏற்படுத்தும். ஆதலால் புதிய வண்டி, வாகனம் வாங்கும்போதும் முதன்முதலாக கம்பெனியிலிருந்து வாங்கி வீட்டிற்கு வரும் நாள் விபத்து தரும் கிரக அமைப்பில்லாத நாட்களாக பார்த்து வாகனம் வாங்கவேண்டும்.
லக்னம் தனுசு, லக்னாதி பதி குரு, 8-ஆமதிபதி சந்திரன், எட்டுக் குடைய சந்திரன் லக்னாதிபதியுடன், மரணத்தைக் குறிக்கும் ராகு இணைத்துள்ளதால் கோட்சார நிலையில் ராகு கும்ப ராசியில் சஞ்சாரம் செய்யும்போது, ஜாதகன் 23 வயதில் எதிர்பாராத விபத்தில் மரணம் அடைந்தான்.
ஒருவருக்கு விபத்துகள், அவரவர் ஜாதகப்படியும் உண்டாகலாம். அல்லது தாய்- தந்தை ஜாதகப்படி மகன், மகள்களும், புத்திரர்கள் ஜாதகப்படி பெற்றோர்களுக்கும், சகோதரர்- சகோதரிகள் ஜாதகப்படியும் விபத்துகள் உண்டாகலாம்.
இதுபோன்று வாகன விபத்து, நீர், நெருப்பு, ஆயுதம், தூக்கு போவற்றால், திடீர் மரணமடையும் கிரக அமைப்பு உள்ள ஜாதக அமைப்பு உடையவர்கள், அதை துல்லியமாக அறிந்து அவரவர்க்குரிய முறையான பரிகாரங்களை செய்தால் மரணத்தை தடுத்துக்கொள்ளலாம்.
செல்: 93847 66742
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2025-04/accident-t.jpg)