சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், கோப குணம் இருக்கும். தந்தையுடன் சரியான உறவு இருக்காது. பணவரவு குறைவாக இருக்கும். அதிக எதிரிகள் இருப்பார்கள். மனநோய் இருக்கும்.
சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், இளமையில் பல கஷ்டங்கள் இருக்கும். பித்தநோய் இருக்கும். ஜுரம் இருக்கும். பணப்பிரச்சினை இருக்கும். சிலர் வெளியூரில் வாழ்வார்கள். சகோதரர்களுடன் சுமாரான உறவு இருக்கும்.
சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், தைரிய குணம் இருக்கும். பல சிக்கல்கள் இருக்கும். பெண் மோகம் இருக்கும். சகோதரர்களுடன் உறவு சரியாக இருக்காது. சிலர் வெளியூரில் வாழ்வார்கள். அதர்ம பாதையில் பயணிப்பார்கள்.
சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி 4-ஆம் பாவத்தில் இருந்தால், பூர்வீக சொத்தில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு தந்தை இருக்கமாட்டார். இதயத்தில் படபடப்பு இருக்கும். கோபம் அதிகமாக வரும். சிலருக்கு மறுமணம் நடக்கும். கடுமையான உழைப்பு இருக்கும். பெரிய அளவில் சம்பாத்தியம் இருக்காது.
சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி 5-ஆம் பாவத்தில் இருந்தால், படிப்பு விஷயத்தில் பிரச்சினை இருக்கும். வயிற்றில் நோய் இருக்கும். அதிக எதிரிகள் இருப்பார்கள். பெண்களுக்கு கர்ப்பப் பையில் பிரச்சினை இருக்கும். ஒரு வாரிசு இருக்கும். கடுமையான உழைப்பு இருக்கும். எனினும், புகழ் கிடைக்காது. வாழ்க்கை சாதாரணமாக இருக்கும்.
சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி 6-ஆம் பாவத்தில் இருந்தால், பல நோய்கள் இருக்கும். பல பிரச்சினைகள் இருக்கும். மன கஷ்டம் இருக்கும். கடுமையாக உழைத்தும், பணவரவு இருக்காது. இல்வாழ்க்கையில் சிக்கல்கள் இருக்கும். சிலர் வெளியூரில் வாழ்வார்கள். காலில் அடிப்படும். 36 வயதிற்குப்பிறகு, பரவாயில்லாத வாழ்க்கை இருக்கும்.
சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி 7-ஆம் பாவத்தில் இருந்தால், சிலருக்கு மறுமணம் நடக்கும். திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் இருக்கும். கோபம் அதிகமாக வரும். ஜாதகருக்கு கள்ளத் தொடர்பு இருக்கும். பணவரவு இருக்கும். பூர்வீக சொத்தில் பிரச்சினை இருக்கும்.
சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி 8-ஆம் பாவத்தில் இருந்தால், ஆயுளில் பிரச்சினை இருக்கும். பல நோய்கள் இருக்கும்.
திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் இருக்கும். சிலருக்கு தாமதமாக திருமணம் நடக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். ஜாதகர் தரமற்ற பெண்களுடன் பழகி, தன் பெயரைக் கெடுத்துக்கொள்வார்.
சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் போதைக்கு அடிமையாக இருப்பார். தந்தையுடன் சுமாரான உறவு இருக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். கோபம் வரும். முதுகுத்தண்டில் பிரச்சினை இருக்கும். சிலர் துறவியைப்போல வாழ்வார்கள்.
சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி 10-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கும். சிலர் துறவியைப்போல வாழ்வார்கள். கோப குணம் இருக்கும். அதன் காரணமாக பல காரியங்களைக் கெடுத்துக்கொள்வார்கள். அரசியலில் ஈடுபாடு இருக்கும். ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். சிலர் டாக்டர்களாக இருப்பார்கள்.
சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி 11-ஆம் பாவத்தில் இருந்தால், நல்ல பண வசதி இருக்கும். அதிக கோபம் வரும். பெண்ணுக்கு கர்ப்பப் பையில் பிரச்சினை இருக்கும். தந்தையுடன் உறவு சரியாக இருக்காது. பயணம் அதிகம் இருக்கும். தூக்கம் சரியாக வராது. வயிற்றில் பிரச்சினை இருக்கும். மனதில் சந்தோஷம் இருக்காது.
சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி 12-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் இருக்கும். இளமையில் பல கஷ்டங்கள் இருக்கும். தைரிய குணம் இருக்கும். குறைவான சந்தோஷமே இருக்கும். பல தொழில்கள் இருக்கும். எனினும், சேமிப்பு இருக்காது.
செல்: 98401 11534