ந்திரன், செவ்வாய், புதன், குரு, சனி லக்னத்தில் இருந்தால், ஜாதகர் நல்லவராக இருப்பார். அறிவாளியாக இருப்பார். நல்ல நண்பர்கள் இருப்பார்கள். பண வசதி இருக் கும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும்.

சந்திரன், செவ்வாய், புதன், குரு, சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். சிலர் வைத்தியராக அல்லது டாக்டராக இருப்பார்கள். சிலர் வியாபாரியாக இருப்பார்கள். சிலர் தர்ம காரியங்களைச் செய்வார்கள். சிலர் தலைமை பீடத்தில் இருப்பார்கள். நல்ல வாரிசு அமையும். நல்ல மனைவி இருப்பாள்.

சந்திரன், செவ்வாய், புதன், குரு, சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், தைரிய குணம் இருக் கும். அதிக பயணங்கள் இருக்கும். நல்ல படிப்பு இருக்கும். தர்ம காரியங்களில் ஈடுபாடு இருக்கும். நல்ல வாரிசு இருக்கும். அழகான மனைவி அமைவாள். சீதளம் பிடிக்கும்.

ss

சந்திரன், செவ்வாய், புதன், குரு, சனி 4-ஆம் பாவத்தில் இருந்தால், அன்னையால் சந்தோஷம் இருக்கும். வீடு, மனை, வாகனம் இருக்கும். இல்வாழ்க்கையில் சில பிரச் சினைகள் இருக்கும். சிலருக்கு தாமதமாக திருமணம் நடக்கும்.

சந்திரன், செவ்வாய், புதன், குரு, சனி 5-ஆம் பாவத்தில் இருந்தால், பெரிய பதவி இருக்கும். நல்ல படிப்பு இருக்கும். நல்ல வாரிசு இருக்கும். சிலர் ஆலோச கர்களாக இருப்பார்கள். பெண்களுக்கு வயிற்றில் நோய் இருக்கும். சிலர் உயர்ந்த அரசு அதிகாரியாக இருப்பார்கள்.

சந்திரன், செவ்வாய், புதன், குரு, சனி 6-ஆம் பாவத்தில் இருந்தால், வலது கா-ல் நோய் இருக்கும். நல்ல படிப்பு இருக்கும். நல்ல மனைவி அமைவாள். கனமான சரீரம் இருக்கும். சிலர் நல்ல வியாபாரியாக இருப்பார்கள். நல்ல வாரிசு இருக்கும்.

சந்திரன், செவ்வாய், புதன், குரு, சனி 7-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் துணிச்சல் குணம் கொண்டவராக இருப்பார்.

யாரையும் நம்பமாட்டார். சிலருக்கு மறுமணம் நடக்கும். நல்ல படிப்பு இருக்கும். பல தொழில்கள் இருக்கும். சிலர் தொழிலை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். மனைவி யுடன் அவ்வப்போது விவாதம் நடக்கும்.

சந்திரன், செவ்வாய், புதன், குரு, சனி 8-ஆம் பாவத்தில் இருந்தால், இளமையில் உடல்நல பாதிப்பு இருக்கும். மனச் சிக்கல்கள் இருக்கும். தீவிர ஜுரம் வரும். வாழ்க்கையின் பிற்பகுதி நன்றாக இருக்கும். நல்ல பணவசதி இருக்கும்.

சந்திரன், செவ்வாய், புதன், குரு, சனி 9-ஆம் பாவத்தில் இருந்தால், பூர்வீக சொத்து கிடைக்கும். பண வசதி இருக்கும். ஆணவ குணம் இருக்கும். தர்ம காரியங்களில் ஈடுபாடு இருக்கும். அதற் காக ஜாதகர் பணத்தைச் செலவழிப்பார். நல்ல படிப்பு இருக்கும். நல்ல வாரிசு அமையும். பயணங் கள் இருக்கும்.

சந்திரன், செவ்வாய், புதன், குரு, சனி 10-ஆம் பாவத்தில் இருந்தால், சிலர் அரசியல்வாதியாக இருப்பார்கள். சிலர் தர்ம குருவாக இருப்பார்கள். சிலர் நீதிபதியாக இருப்பார் கள். சிலர் மருத்துவர்களாக இருப்பார்கள். ஜாதகர் பணக்காரராக இருப்பார். யாரையும் நம்பமாட்டார். பலரால் ஏமாற்றப்படுவார். பெயர், புகழ் இருக்கும். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும்.

சந்திரன், செவ்வாய், புதன், குரு, சனி 11-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பண வசதி உள்ள வராக இருப்பார். நிறைய படித்தவராக இருப்பார். நல்ல தொழில் இருக்கும். நல்ல வாரிசு இருக்கும். நல்ல மனைவி அமைவாள். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும். சீதளம் பிடிக்கும்.

சந்திரன், செவ்வாய், புதன், குரு, சனி 12-ஆம் பாவத்தில் இருந்தால், இளமையில் சில பிரச் சினைகள் இருக்கும். ஜாதகர் நன்கு சாப்பிடுவார். திருமண வாழ்க்கையில் பல சிக்கல்கள் இருக்கும். ஜாத கர் அதர்ம செயல்களில் ஈடுபடுவார். பிறரிடம் வாங் கிச் சாப்பிடும் பழக்கம் ஜாத கருக்கு இருக்கும்.

செல்: 98401 11534