சூரியன், புதன், குரு, சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், இரக்க குணம் இருக்கும். ஜாதகருக்கு பல சாஸ்திரங்கள் தெரிந்திருக்கும்.தர்மச் செயல்களில் ஈடுபாடு இருக்கும். சிறந்த பேச்சாற்றல் இருக்கும். நல்ல பண வசதி இருக்கும். நல்ல வாரிசு இருக்கும். நல்ல மனைவி அமைவாள். தைரிய குணம் இருக்கும்.

சூரியன், புதன், குரு, சுக்கிரன், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், நல்ல பேச்சாற்றல் இருக்கும். உடல்நலம் நன்றாக

இருக்கும். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும். சிலர் வைத்தியராகவோ டாக்டராகவோ இருப்பார்கள். சிலர் குருநாதராக இருப்பார்கள். 31 வயதிற்குப்பிறகு, வாழ்க்கை நன்றாக இருக்கும். பெயர், புகழ் இருக்கும்.

சூரியன், புதன், குரு, சுக்கிரன், சனி 3-ஆம் பாவத்தி-ருந்தால், அரசரைப்போல வாழலாம். தைரிய குணம் இருக்கும். நல்ல பேச்சாற்றல் இருக்கும். சிலர் அரசியல்வாதியாக இருப்பார்கள். பல தொழில்கள் இருக்கும். நல்ல வாரிசு இருக்கும். சிலர் தொழிலதிபராக இருப்பார்கள். ஒரு காலில் அல்லது கையில் சிறிய பிரச்சினை இருக்கும்.

ss

சூரியன், புதன், குரு, சுக்கிரன், சனி 4-ஆம் பாவத்தில் இருந்தால், பூர்வீக சொத்தில் பிரச்சினை இருக்கும். இதயத்தில் படபடப்பு இருக்கும். ஜாதகர் நல்ல குணம் படைத்தவராக இருப்பார். பலருக்கும் நன்மைகள் செய்வார். பலரும் ஜாதகரை ஏமாற்றுவார்கள்.

சூரியன், புதன், குரு, சுக்கிரன், சனி 5-ஆம் பாவத்தில் இருந்தால், நல்ல படிப்பு இருக்கும். பெயர், புகழ் இருக்கும். சிலர் அரசாங்கத்தில் நல்ல பதவியில் இருப்பார்கள். சிலர் இசை மேதையாக இருப்பார்கள். சிலர் நல்ல நடிகராக இருப்பார்கள்.

Advertisment

சூரியன், புதன், குரு, சுக்கிரன், சனி 6-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார்‌. காலில் அடிபடும். இல்வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். பெண் தொடர்பு இருக்கும். வயிற்றில் நோய் வரலாம். நல்ல பண வசதி இருக்கும். நல்ல வாரிசு இருக்கும்.

சூரியன், புதன், குரு, சுக்கிரன், சனி 7-ஆம் பாவத்தில் இருந்தால், அழகான மனைவி இருப்பாள். ஜாதகர் பணக்காரராக இருப்பார். பல தொழில்கள் தெரிந்தவராக இருப்பார். அதிக பயணங்கள் இருக்கும். நல்ல வாரிசு இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

சூரியன், புதன், குரு, சுக்கிரன், சனி 8-ஆம் பாவத்தில் இருந்தால், பல நோய்கள் இருக்கும். இளமையில் பல கஷ்டங்கள் இருக்கும். பூர்வீகச் சொத்து இருக்கும். சிலர் விவசாயியாக இருப்பார்கள். சிலர் தியானம் தெரிந்தவராக இருப்பார்கள். சிலர் அறிவாளியாக இருப்பார்கள்.

Advertisment

சூரியன், புதன், குரு, சுக்கிரன், சனி 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் துணிச்சல் குணம் கொண்டவராக இருப் பார். தர்ம காரியங்களைச் செய்வார். அதற்காக பணத் தைச் செலவிடுவார். கடவுள் பக்தி இருக்கும். இல்வாழ்க்கை நன்றாக இருக்கும். நீண்ட ஆயுள் இருக்கும்.

சூரியன், புதன், குரு, சுக்கிரன், சனி 10-ஆம் பாவத்தில் இருந்தால், முன் னோரின் சொத்து இருக்கும். நல்ல பணவசதி இருக்கும். தர்ம காரியங்களில் ஈடுபாடு இருக்கும். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும். ஜாதகர் கடுமையான உழைப்பாளியாக இருப்பார். கடவுள் பக்தி இருக் கும். இரக்க குணம் இருக்கும்.

சூரியன், புதன், குரு, சுக்கிரன், சனி 11-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நல்ல பண வசதியுடன் இருப்பார். பல சாஸ்திரங்களைக் கற்றவராக இருப்பார். பல பட்டங்கள் பெற்றவராக இருப்பார். சிலருக்கு வெளிநாட்டில் வர்த்தகம் இருக்கும். சிலர் அரசு தூதர்களாக இருப்பார் கள். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

‌சூரியன், புதன், குரு, சுக்கிரன், சனி 12-ஆம் பாவத் தில் இருந்தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப் பார். இளமையில் கஷ்டங்கள் இருக்கும். சிலர் வெளியூரில் வாழ்வார்கள். அங்கு பண வரவு இருக்கும். சிலர் தர்ம உபதேசம் செய்வார்கள். சிலர் போதைக்கு அடிமை யாக இருப்பார்கள்.

செல்: 98401 11534