சூரியன், செவ்வாய், குரு, சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். அறிவாளியாக இருப்பார். பணக்காரராக இருப்பார். சகோதரர்கள் இருப்பார்கள். சிலர் துறவியைப்போல வாழ்வார்கள். நல்லவர்களாக இருப்பார்கள். வீடு, மனை, வாகனம் இருக்கும்.
சூரியன், செவ்வாய், குரு, சுக்கிரன், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். கோபக் காரராக இருப்பார். நிறைய படித்தவராக இருப்பார். இளமையில் பல கஷ்டங்கள் இருக்கும். நல்ல பேச்சாற்றல் இருக்கும். அதை வைத்து, ஜாதகர் பணம் சம்பாதிப்பார். சிலர் தொழிலதிபர்களாக இருப்பார்கள். தைரிய குணம் இருக்கும். மனைவியின் உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளவேண்டும்.
சூரியன், செவ்வாய், குரு, சுக்கிரன், சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். துணிச்சல் குணம் இருக்கும். சிலர் கமிஷன் ஏஜன்டாக இருப்பார்கள். சிலர் இன்சூரன்ஸ் ஏஜென்டாக இருப்பார்கள். ஜாதகர் தன் பேச்சை மூலதனமாக வைத்து, பணம் சம்பாதிப்பார். ஜாதகர் பலசாலியாக இருப்பார். மனநோய் இருக்கும். வயிற்றில் பிரச்சினை இருக்கும். சீதளம் பிடிக்கும்.
சூரியன், செவ்வாய், குரு, சுக்கிரன், சனி 4-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் துணிச்சலான மனிதராக இருப்பார். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். திருமணம் தாமதமாக நடக்கும். பூமி, வாகனம் இருக்கும். மனைவியுடன் விவாதம் இருக்கும். பிள்ளை களால் மகிழ்ச்சி இருக்கும். ஜாதகர் பயணம்செய்து பணம் சம்பாதிப்பார்.
சூரியன், செவ்வாய், குரு, சுக்கிரன், சனி 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். அறிவாளியாக இருப்பார். சிலர் ஐ.ஏ.எஸ். அல்லது ஐ.பி.எஸ். படித்தவர்களாக இருப்பார்கள். சிலர் உயர் அரசு பதவிகளில் இருப்பார்கள். சிலர் அரசியலில் பெரிய பதவிகளில் இருப்பார்கள். வீடு, மனை இருக்கும்.
சூரியன், செவ்வாய், குரு, சுக்கிரன், சனி 6-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரிய குணம் உள்ளவராக இருப்பார். கோபம் வரும். திருமண வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும். நல்ல படிப்பு இருக்கும். கம்பீரமான தோற்றம் இருக்கும். ஜாதகர் பலசாலியாக இருப்பார். சிலர் நகை வியாபாரம் செய்வார்கள். சிலர் தொழிற்சாலை வைத்திருப்பார்கள். வீடு, மனை, வாகனம் இருக்கும். வாரிசு இருக்கும்.
சூரியன், செவ்வாய், குரு, சுக்கிரன், சனி 7-ஆம் பாவத்தில் இருந்தால், அழகான மனைவி இருப்பாள். நல்ல பண வசதி இருக்கும். கோப குணம் இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலருக்கு திருமண வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும். பூர்வீக சொத்து இருக்கும். சுய சம்பாத்தியம் இருக்கும். கடவுள் நம்பிக்கை இருக்கும்.
சூரியன், செவ்வாய், குரு, சுக்கிரன், சனி 8-ஆம் பாவத்தில் இருந்தால், உடல் நலத்தில் கவனமாக இருக்கவேண்டும். திருமண வாழ்க்கை யில் சிக்கல்கள் இருக்கும். பூர்வீக சொத்து இருக்கும். நல்ல படிப்பு இருக் கும். சிறிய அளவில் நோய்கள் இருக்கும். 36, 48 ஆகிய வயதுகளில் நோய் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. விபத்து நடக்கலாம்.
சூரியன், செவ்வாய், குரு, சுக்கிரன், சனி 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகருக்கு துணிச்சல் குணம் இருக்கும். கடவுள் நம்பிக்கை இருக்கும். தர்ம காரியங் களுக்காக ஜாதகர் செலவழிப்பார்.
சிலர் புரோகிதர்களாக இருப்பார் கள். சிலர் தர்ம உபதேசம் செய்வார்கள்.
சூரியன், செவ்வாய், குரு, சுக்கிரன், சனி 10-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். சிலர் அரசியல்வாதியாக இருப்பார்கள். சிலர் நீதிபதியாகவோ- வக்கீலாகவோ இருப்பார்கள்.
ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். பணக்காரராக இருப்பார். சிலருக்கு மனநோய் இருக்கும்.
சூரியன், செவ்வாய், குரு, சுக்கிரன், சனி 11-ஆம் பாவத்தில் இருந்தால், தைரிய குணம் இருக்கும். நல்ல பணவசதி இருக்கும். அடிக்கடி பயணம் இருக்கும். கடவுள் நம்பிக்கை இருக்கும். சகோதரர்களுடன் நல்ல உறவு இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். நல்ல வாரிசு இருக்கும்.
சூரியன், செவ்வாய், குரு, சுக்கிரன், சனி 12-ஆம் பாவத்தில் இருந்தால், இளம்வயதில் பல பிரச்சினைகள் இருக்கும். தைரிய குணம் இருக்கும். வீண் பேச்சு இருக்கும். சிலர் துறவியாக இருப்பார்கள். சிலர் வெளியூரில் சென்று வாழ்வார்கள்.