ந்திரன், செவ்வாய், புதன் லக்னத்தில் இருந்தால், செலவுகள் அதிகமாக இருக்கும். கெட்ட சிந்தனைகள் இருக்கும். ஜாதகர் பாவச் செயல்களைச் செய்வார்.

Advertisment

அதன்காரணமாக பெயர் கெடும். தரமற்ற மனிதர் களுடன் உறவு இருக்கும். அனைவரையும் ஏமாற்றும் குணமிருக்கும். அதன்மூலம் பணவரவு இருக்கும்.

Advertisment

சந்திரன், செவ்வாய், புதன் 2-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் ஆளுக்கு ஏற்றாற்போல பேசுவார். பணக்காரராக இருப்பார். வாழ்க்கையின் முற்பகுதியில் கஷ்டங்கள் இருக்கும். பெண் மோகம் இருக்கும். சிலருக்கு படிப்பு விஷயத்தில் பிரச்சினை இருக்கும். சிலர் அதிகமாக பயணம் செய்வார்கள். கடுமையாக பேசுவார்கள்.

சந்திரன், செவ்வாய், புதன் 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். பயணம் செய்வார். சகோதரர்களுடன் சுமாரான உறவு இருக்கும். தர்மச் செயல்களில் ஈடுபாடு இருக்காது. பணவரவு இருக்கும்.சொந்தவீடு இருக்கும். வாகனம் இருக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் இருக்கும்.

Advertisment

எனினும், ஏதாவது பிரச்சினைகள் இருந்து கொண்டேயிருக்கும்.

சந்திரன், செவ்வாய், புதன் 4-ஆம் பாவத்தில் இருந்தால், இல்வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும்.

ssa

சிலருக்கு தாமதமாக திருமணம் நடக்கும். சிலர் அதிகமாக பேசி, வாழ்க்கையைக் கெடுத்துக்கொள்வார்கள். சிலர் மனைவியுடன் சண்டை போடுவார்கள். சிலர் பணத்திற்காக பல தொழில்களைச் செய்வார்கள். நன்கு படித்தவர்களாக இருப்பார்கள்.

சந்திரன், செவ்வாய், புதன் 5-ஆம் பாவத்தில் இருந்தால், பெயர், புகழ் இருக்கும். பிள்ளைகள் நல்லவர்களாக இருப்பார்கள். பெண் மோகம் அதிகமாக இருக்கும். பணவரவு இருக்கும். பயணம் செய்ய வேண்டியதிருக்கும். சிலர் நில வர்த்தகத்தில் இருப்பார்கள்.

சந்திரன், செவ்வாய், புதன் 6-ஆம் பாவத்தில் இருந்தால், கோபம் அதிகமாக வரும். சிலருக்கு சிறுநீரகம், ஈரல் ஆகியவற்றில் பிரச்சினை இருக்கும். சிலர் பெண் மோகத்தில் சொத்துகளை இழந்து விடுவார்கள். சிலர் உணவை அதிகமாக சாப்பிடுவார்கள்.

சந்திரன், செவ்வாய், புதன் 7-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலர் வெளியூரில் தொழில்செய்து, பணம் சம்பாதிப்பார்கள். சிலர் கமிஷன் ஏஜெண்டாக இருப்பார்கள். சிலருக்கு ரத்த அழுத்த நோய் இருக்கும்.

சந்திரன், செவ்வாய், புதன் 8-ஆம் பாவத்தில் இருந்தால், வாழ்க்கையின் முற்பகுதியில் உடல்நலம் கெடும். அதிகமாக கோபம் வரும். சிலருக்கு திருமண விஷயத்தில் தடை இருக்கும். சிலருக்கு தாமதமாக திருமணம் நடக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். பணம் சம்பாதிப்பதற்காக கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். பணவரவு இருக்கும். அதற்கேற்றபடி செலவுகளும் அதிகமாக இருக்கும்.

சந்திரன், செவ்வாய், புதன் 9-ஆம் பாவத்தில் இருந்தால், தந்தையுடன் சுமாரான உறவு இருக்கும். சிலர் அதிகமாக பேசுவார்கள். குடும்பத்தில் சண்டை இருக்கும். சிலருக்கு படிப்பில் பிரச்சினை இருக்கும். சிலர் பெரிய பணக்காரர்களாக இருப்பார்கள். மற்றவர்களின் சொத்துகளை அபகரிக்க நினைப் பார்கள்.

சந்திரன், செவ்வாய், புதன் 10-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். தைரியசாலியாக இருப்பார். பிள்ளைகளால் சந்தோஷம் இருக்கும். கோப குணம் இருக்கும். சிலர் அரசியல்வாதிகளாக இருப்பார்கள். தொழில்செய்து, பணத்தைச் சம்பாதிப்பார்கள்.

சந்திரன், செவ்வாய், புதன் 11-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நல்ல பண வசதி கொண்டவராக இருப்பார். பல தொழில்கள் அறிந்தவராக இருப் பார். சிலர் கைத்தொழிலில் ஆற்றல் உள்ளவர்களாக இருப்பார்கள். கோப குணம் இருக்கும். கணவன்- மனைவி உறவு சரியாக இருக்காது. சிலருக்கு வாரிசு உண்டாவதில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு அதிகச் செலவுகள் உண்டாகும்.

சந்திரன், செவ்வாய், புதன் 12-ஆம் பாவத்தில் இருந்தால், இல்வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலர் அதிகமாக உணவு உட்கொள்வார்கள்.

அதிக செலவுகள் உண்டாகும். சிலருக்கு சிறுநீரகத்திலோ அல்லது வயிற்றிலோ நோய் இருக்கும். சிலருக்கு தூக்கம் அதிகமாக வரும். சோம்பேறித்தனம் இருக்கும். அதிகமாக பயணம் செய்ய வேண்டிய திருக்கும். ஜாதகர் பணம் சம்பாதிக் கும் சிந்தனையு டனே எப்போதும் இருப்பார்.

செல்: 98401 11534