தனுசு லக்னம்

தனுசு லக்னாதிபதி குரு ஆவார். உங்களின் 7-ஆம் அதிபதி புதன். நீங்கள் உபய ராசி வகையைச் சேர்ந்தவர் என்பதால், 7-ஆம் அதிபதி பாதகாதிபதி ஆவார். உங்களின் 7-ஆம் அதிபதி புதன் நீசமானால் உங்களின் திருமண முறிவிற்கு உங்கள் தாயார் அல்லது உங்களின் தொழில் அல்லது உங்கள் வாழ்க்கைத் துணை செய்யும் தொழில் என ஏதோ ஒன்று காரண மாகிவிடும். சந்திரன் நீசமானால் விபத்து, திருட்டு, மனபிறழ்வு, உடல்நல கேடு இவை பிரிவின் காரணமாகும். சூரியன் நீசமா னால் அநியமாக, அதர்மமாக சேர்க்கப்படும் இணை காரண மாகும். சிலருக்கு உங்களின் மூத்த சகோதரனின் கெடுபுக்தி பிரிவை உண்டாகும். சுக்கிரன் நீசமானால் உங்களின் கடன், நோய், நிலையில்லாத வேலை, தொழில் மற்றும் மூத்த சகோதரி யால் மணமுறிவு ஏற்படும். செவ்வாய் நீசமானால் முறையற்ற காதல் துணையுடன் ஊரைவிட்டு ஓடிவிடுவது, சினிமா ஆசையில் குடும்பத்தைவிட்டு ஓடிபோவது, எங்காவது அடிபட்டு நினைவிழப்பது என இம்மாதிரி விஷயங்கள் பிரிவைக் கொடுக்கும். குரு நீசமானால் உங்கள் குடும்பத்தாரும் நீங்களும் பேசும் அடாவடி, அயோக்கித்தனமான பேச்சுக்கள் உங்கள் வாழ்க்கைத் துணையை, "ஆளை விடுடா சாமி' என ஓட செய்யும். மற்றும் வாழ்க்கைத் துணையின் தொழி-ல் ஏற்படும் மிகப்பெரிய சரிவும், பண இழப்பும் மணமுறிவை கொடுக்கும். சனி நீசமானால் உடல்நிலை இயலாமை, விவாகரத்துக்கு வழிவகுக்கும். உங்கள் தனுசு லக்னத்துக்கு, புதன் மற்றும் செவ்வாய் இணைவு, சார பரிவர்த்தனை போன்றவை பெரும்பாலும் விவாகரத்தை கொண்டுவந்துவிடும். நரசிம்மரை வணங்குவது நல்லது.

பரிகாரம்

ஸ்ரீரங்கம், தாயார் சன்னிதி அருகேயுள்ள வில்வ மரத்தின் அடியிலுள்ள துளசி மாடத்தில் நெய் விளக்கேற்றி வைப்பது, தம்பதிகள் பிரியாமல் ஒன்றாக இருக்க உதவும். உங்கள் கல்யாண நாளில், இஷ்ட தெய்வத்திற்கு பாசி பருப்பு பாயசமும், வெள்ளை கொண்டைக் கடலை சுண்டலும் வினியோகம் நல்லது.

ss

மகர லக்னம்

மகர லக்னாதிபதி சனி உங்களின் 7-ஆம் அதிபதி சந்திரன். இந்த இரு கிரக இணைப்புகளும் புனர்பூ யோகம் எனும் மறு திருமண யோகத்தை கொடுக்கும் அமைப்பாகும். உங்கள் ஏழாம் அதிபதி சந்திரன் நீசமானால், உங்கள் தாயார், மூத்த சகோதரன் அல்லது வயது மூத்த பெண்ணிடம் கொள்ளும் மறைமுகத் தொடர்பு என இவை திருமண முறிவிற்கு காரணம். சூரியன் நீசமானால் விபத்து அல்லது அரசாங்கம் தண்டனைகளால் முறிவு ஏற்படும். புதன் நீசமானால் வேலைக்கு செல்லாமல் இருப்பது, உடல்நிலை இய லாமை, தந்தை இவை பிரிவின் காரணமாகும். சுக்கிரன் நீசமானால் தொழில் செய்யும் இடத்தில் உண்டாகும் திருட்டுக் காதல், மாமியார், தொழில் நஷ்டம் இவை முறிவின் காரணமாகும். செவ்வாய் நீசமானால், அங்கு களஸ்திர பெருக்கும் எனும் அமைப்பு உண்டாகிவிடுகிறது. களஸ்திரம் என்பது ஒன்று இருக்கவேண்டும். அது பன்மையில் இருந்தால் நன்றாகவா இருக்கும். இந்த அமைப் புடையோர்தான், நிறைய குடும்பங்களை உருவாக்கி, அனேக ரேஷன் கார்டுகளில் பெயர் பதிவு பெறுகிறார்கள். ரேஷன் கார்டோ, மனைவியோ ஒரு இடத்தில்தான் குடும்பத் தலைவராக இருக்கவேண்டும். பல இடத்தில் இருப்பின், பலமுறை மண முறிவு ஏற்படும்.

மேலும் இவரது தாயாரும் இதற்கு ஒத்து ஊதுவார். குரு நீசமானால், உடல் இயலாமை, வெகு தூர பிரிவு, வீட்டில் நிலையாக இருக்க முடியாதது, இளைய சகோதரம் இவை மண முறிவிற்கு காரணமாகும். சனி நீசமானால், உங்கள் தாயார் பேச்சைக் கேட்டு பிரிவு உண்டாக்கி விடுவீர்கள். உங்கள் குடும்பத்தினரும், பண விஷயமும் இதற்கு பக்க பலமாகும்.

பரிகாரம்

மகர லக்னத்தார், நாகை மாவட்டம் திருவேள்விக்குடி சென்று பரிகாரம் செய்த பிறகு திருமணம் செய்யவேண்டும். திங்கட் கிழமைதோறும் சிவனை வணங்கவும். உங்கள் திருமணநாளில், தெரிந்தவர்களுக்கு ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுங்கள்.

கும்ப லக்னம்

கும்ப லக்னாதிபதி சனி. ஏழாம் அதிபதி சூரியன். இந்த இரு கிரகங்களுக்குமிடையே எப்போதும் சரிப்பட்டு வராது. இதனால் கும்ப லக்னத்தாரின் மணவாழ்வு நூறு சதவிகிதம் வெற்றிபெறும் என்று சொல்ல இயலாது. சனி, உத்திராட நட்சத்திரத்தில் நின்றாலோ, சூரியன் பூச நட்சத்திரத்தில் நின்றாலோ, நல்ல பலன் கொடுக்காது. 7-ஆம் அதிபதி சூரியன் நீசமானால், உங்கள் திருமண முறிவுக்கு, உங்கள் பெற்றோர் காரணமாகிவிடுவர். புதன் நீசமானால், உங்களின் மறைமுக காதல் மற்றும் வேண்டாத செயல்களின் பண இழப்பும் பிரிவின் காரணமாகும். சுக்கிரன் நீசமானால் பயணங்களில் ஏற்படும் விபத்து பிரிவிற்கு காரணமாகிவிடும். செவ்வாய் நீசமானால், உடல் இயலாமை, வேலை இழப்பு, இளைய சகோதரம், தொழில் நஷ்டம் இவை மண முறிவிற்கு காரணமாகும். குரு நீசமானால் பண இழப்பும், இரண்டாவது துணையும் பிரிவை கொண்டுவரும். லக்னாதிபதி சனி நீசமானால் காணாமல் போய்விடுவதால் பிரிவு ஏற்படும். அல்லது அரசு தண்டனையால் உண்டாகும் விலகல் பிரிவு கொண்டுவரும். சந்திரன் நீசமானால், வேலை, தொழில் எதுவுமின்றி ஒரே இடத்தில் முடங்கிபோவது அல்லது பெரிய வியாதி ஏற்பட்டு படுத்த படுக்கை ஆவது இவை மண முறிவின் காரணமாகும்.

பரிகாரம்

கும்பகோணம் அருகில் திருச்சக்தி முற்றம் எனும் திருத்தலம் சென்று வணங்கலாம். திருவண்ணாமலை சென்று தம்பதிகளாக தரிசனம் செய்யவும். திருமணநாளில் வெண்பொங்கல் விநியோகம் செய்யவும். சனீஸ்வரருக்கு விளக்கேற்றுவதை வழக்கமாக்கி கொள்ளவேண்டும்.

மீன லக்னம்

மீன லக்னாதிபதி குரு. உங்களின் 7-ஆம் அதிபதி புதன். மீன லக்னம் ஒரு உபய ராசி. அதன் ஏழாம் அதிபதி அதன் பாதகாதிபதியும் ஆவார். இதில் இன்னொரு விஷயம் உங்கள் லக்னத்தில் உங்கள் ஏழாம் அதிபதி நீசமாவார். இதனால் உங்கள் திருமண வாழ்வை, ஒரு கண்ணாடி பாத்திரத்தை கையாள்வது போல், வெகு பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும். உப்பு பெறாத விஷயத்துக்கெல் லாம், டைவர்ஸ் ஆகிவிடும்; கவனம் தேவை.

7-ஆம் அதிபதி புதன் நீசமானால், திருமண முறிவிற்கு உங்களின் தாயாரும், உங்களின் வௌங்காத தொழிலும் காரணமாகும். சுக்கிரன் நீசமானால் சிறு தூரப் பயணங்களில் ஏற்படும் விபத்து அல்லது உங்களின் இளைய சகோதரி திருமண பிரிவின் காரணமாகும். செவ்வாய் நீசமானால் பழைய காதல், பண விஷயம் மற்றும் உங்கள் தந்தை கூடவே சூதாட்டத்தில் பணம் இழப்பது இவையும் மணமுறிவின் காரணமாகும். குரு நீசமா னால், உங்கள் திருமண பிரிவிற்கு நீங்களே காரணமாகிவிடுவீர்கள். உங்களின் அரசியல் தோல்வி, தொழில் நஷ்டம் மற்றும் மூத்த சகோதரர் இவை உங்களின் திருமணத்தை முறிக்கும் காரணமாகும். சனி நீசமானால் வெளிநாட்டிற்கு சென்று, பணத்தை தொலைப்பது அல்லது மனைவியை தொலைப்பது அல்லது இரண்டாவது திருமணம் இவை கல்யாணத்தை காணாமல் ஆக்கிவிடும். சந்திரன் நீசமானால் காதல் விஷயம் மற்றும் உங்கள் பெற்றோர் மண முறிவின் காரணமாவர். சூரியன் நீசமானால் நோய், அரசு தண்டனை, விபத்து இவை காரணமாகும். சங்கரன் கோவில் சென்று சங்கர நாராயணரை வணங்கவும். திருமண நாளில் பாசிபயறு பாயசமும், வெள்ளை கொண்டைக் கடலை சுண்டலும் செய்து விநியோகம் செய்யவும். அருகிலுள்ள சிவா விஷ்ணு கோவில் சென்று மஞ்சள் அல்லது பச்சை வஸ்திரம் சாற்றி, தீபமேற்றி வழிபடவும்.

மேற்கண்ட கிரகங்களில் ராகு- கேது பற்றி குறிப்பிடவில்லை. ராகு- கேது லக்னம், ராசியில் அல்லது 2, 8-ல் இருப்பின் அது நாக தோஷமாகும். இதேபோல் நாக தோஷமுள்ள வரணை சேர்க்கும்போது, தோஷம் சமமாகி, தோஷ சாம்பம் ஆகிவிடுகிறது. எனினும் திருமணமாகியவுடன் ராகு அல்லது கேது தசை ஆரம்பித்தால் சற்று கவனமாக இருப்பது அவசியம். பாம்புகள், தம்பதிகளுக் குள் கருத்து வேறுபாடு, சந்தேகத்தை உண்டாக்கி விடுவர். அதனால் தம்பதிகளுக் குள் பிரிவு உண்டாக வாய்ப்புண்டு.

பரிகாரம்

கூடியமட்டும் ஜாதகத்தில் எந்த தோஷ முள்ளது என கண்டுபிடித்து, அதற்குரிய பரிகாரம் செய்துவிட்டு திருமண ஏற்பாடு களில் இறங்குங்கள். திருமண முறிவு இந்த காலத்தில் மிகவும் சகஜமாகவும், எளிதாக வும் ஆகிவிட்டது. ஆனால் அதற்கு பிறகு வரும் வாழ்க்கையை, கணவன்- மனைவி இருவரும் ரொம்ப யோசியுங்கள்.உங்கள் ஜாதகத்தில் எந்த கிரகம் நீசமாகி உள்ளதோ அவை சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக, நீச கிரகங்களின் தசாபுக்தி காலங்களில் கூடுதல் கவனமாக இருந்து, திருமண வாழ்வை காப்பாற்றி கொள்ளுங்கள். உங்கள் வாழ்வு உங்கள் கைகளில் உள்ளது.