கடக லக்னம்

கடக லக்னாதிபதி சந்திரன் உங்களின் ஏழாம் அதிபதி சனி. இந்த கடக லக்னத் துக்கு மட்டும் லக்னாதிபதியான சந்திரனும், 7-ஆம் அதிபதியான சனியும் ஒரே இடத்தில் சேர்ந்திருந்தாலோ அல்லது சம்பந்தம் பெற்றாலோ அங்கு புனர்பூ, யோகம் எனும் இருதார யோகம் வந்துவிடும். உங்களின் 7-ஆம் அதிபதி சனி நீசமாகி இருந்தால், தொழிலின் மிகப்பெரிய நஷ்டம் அல்லது உடல்நிலை இவை திருமண பிரிவிற்கு காரண மாகிவிடும். அல்லது கருத்து வேற்றுமை பிரிவிற்கு வித்திடும். சூரியன் நீசமாகி யிருந்தால் உங்கள் தாயாரின் வரம்பு மீறிய பேச்சு அல்லது வீடு, வாகன விஷயங்கள் சண்டை இழுத்துவிடும். புதன் நீசமாகியிருந் தால், உங்கள் மாமனாரும், உங்கள் தந்தையும் சண்டை போட்டு, பிரிவை ஏற்படுத்திவிடுவர். சுக்கிரன் நீசமானால், உங்கள் கூடபிறந்த அக்கா, தங்கைகள், விவாகரத்து வாங்கிக் கொடுத்துவிட்டுத்தான் மறுவேலை செய்வர். செவ்வாய் நீசமானால், உங்கள் காதல் விஷயம், திருமணத்தை முடிவுக்கு கொண்டுவந்துவிடும். குரு நீசமானால், உங்கள் வாழ்க்கைத் துணையின் நோய் அல்லது கடன் விஷயமாக பிரிவு உண்டாகும். உங்கள் 7-ஆம் அதிபதி சனி, ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரங்களில் நின்றாலும், திருமண வாழ்க்கையை சேதாரம் இல்லாமல் காப்பாற்ற முயற்சி எடுக்கவேண்டும்.

பரிகாரம்

திருவையாறு, திருக்கூடலூர், ஸ்ரீஜகத்ரட்சகப் பெருமாள் ஆலயம் சென்று வணங்கவும். உங்கள் திருமணநாளில் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுங்கள். கடக லக்னத்தார், திருமணத்திற்குமுன்பு நாகை மாவட்டம், திருவேள்விக்குடி சென்று பரிகாரம் செய்துகொள்வது சிறப்பு.

ss

சிம்ம லக்னம்

சிம்ம லக்னாதிபதி சூரியன் உங்களின் ஏழாம் அதிபதி சனி ஆவார். எப்போதுமே சனிக்கும், சூரியனுக்கும் சரிப்பட்டு வராது. அதனால்தான் சிம்ம ராசியினரின் திருமண வாழ்வு சோபிப்பதில்லை. வெளியே இருந்து யாரும் வந்து, இவர்களின் மணவாழ்வை கெடுக்கவேண்டாம். இவர்களின் பிரிவிற்கு புருசன், மனைவியே போதும். 7-ஆம் அதிபதி சனி நீசமானால், எப்போதும் குறை கண்டு பிடித்து, சண்டை பிடிப்பதாலும், இவரின் பெற்றோரின் தூண்டுதலாலூம் பிரிவு ஏற்படும். புதன் நீசமானால், இவர்களின் மறைமுகத் தொடர்புகள், பிரிவைக் கூட்டி வந்துவிடும். புதன் நீசமானால் குடும்பங்கள் பன்மை நிலையில் இருக்கும். சுக்கிரன் நீசமானால், இளைய சகோதரி மற்றும் மாமியார் திருமண முறிவுக்கு காரணமாவர். செவ்வாய் நீசமானால், வீட்டில் தங்காமல் அடிக்கடி காணாமல் போவதாலும், அதிர்ஷ்ட மில்லாதவர் எனும் சுய பச்சாதாபத்தில் விலகுவதாலும், பிரிவு ஏற்படும். குரு நீசமா னால், மறைவான காதல் வெளிவருவது, நோய், விபத்து என இவை காரணங்களாகும். சந்திரன் நீசமானால், பிறழ்ந்த மனநினைவுகள் காரணமாகும். சூரியன் நீசமாகி, நீச பங்கமாக இருந்தால், ஒரு நல்ல டாக்டரின் பரிசோதனை செய்தபின் திருமண செய்யவே முன்முடிவு எடுக்கவேண்டும்.

Advertisment

பரிகாரம்

திருச்செங்கோடு, அர்த்தநாரீஸ்வரரை சென்று சேவிக்கவேண்டும். கும்பகோணம், திருவலஞ்சுழி ஆலயம் சென்று வணங்கவும். வெண் பொங்கல் தயாரித்து, உங்கள் திருமணநாளில் இஷ்ட தெய்வக் கோவிலில் விநியோகிக்கலாம். சிம்ம லக்னத்தார், சிம்ம ராசியார் நிறைய விளக்கேற்றி வழிபடுவது நல்லது. தப்பித் தவறியும் மாற்றுத் திறனாளி களிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள்.

கன்னி லக்னம்

Advertisment

உங்கள் லக்னாதிபதி புதன் உங்கள் 7-ஆம் அதிபதி குரு. உங்களின் உபய ராசிக்கு, குரு பாதகாதிபதி ஆவார். மேலும் உங்கள் லக்னாதிபதி ஏழாம் வீட்டில் நீசமாகும் வாய்ப்புண்டு. இவ்விதம் புதன், உங்களது 7-ஆம் வீட்டில் நீசமாகி இருந்தால், தம்பதிகளுக்குள் ஈகோ பிரச்சினை, இணக்கமின்மை, கெமிஸ்ட்ரி சுத்தமாக ஒத்து வராதது என பிரிவுக்கு கதவு எந்த பக்கம் உள்ளது என சதா தேட வைத்துவிடும். சுக்கிரன் நீசமானால், ஒழுங்கற்ற வார்த்தை பிரயோகம், இறுக்கமான பணவரவு என பிரிவு ஏற்படும். செவ்வாய் நீசமானால், தாம்பத்திய ஈடுபாடு குறைவு அல்லது மூத்த சகோதரியின் நச்சரிப்பு தம்பதிகளை பிரித்துவிடும். குரு நீசமானால் எப்போதும் சுகக்குறைவு, ஆரோக்கிய குறைபாடு, கண்ணியக் குறைவான பழகும்விதம் இவை பிரிவுக்கு வழிவழுக்கும். சனி நீசமா னால், நோயுள்ளவரை மறைத்து திருமணம் நடத்தி இருப்பர். அது தெரிந்தவுடன், திரும ணம் ரத்தாகும். சந்திரன் நீசமானால் மூத்த சகோதரி அல்லது ரகசிய தொடர்புகள் காரணமாக பிரிவு உண்டு. சூரியன் நீசமானால், குடும்ப செலவுக்குரிய பணத்தை, சூதாட்டம், குடி என கண்டபடி செலவு செய்வதால் ஏற்படும் சண்டை, ஒரு கட்டத்தில் விவாகரத்து வாசல் படியை மிதித்து விடும்.

பரிகாரம்

நாமக்கல் அருகில் மோகனூர் சென்று வழிபடலாம். சங்கர நாராயணரை வழிபடவும். மஞ்சள் வாழை பழங்களை விநியோகம் செய்யலாம். திருமணநாளன்று, சிவன் அல்லது தட்சிணாமூர்த்திக்கு, மஞ்சள் வஸ்திரம் சாற்றி வணங்கவும்.

துலா லக்னம்

துலா லக்னாதிபதி சுக்கிரன் உங்களின் 7-ஆம் அதிபதி செவ்வாய். செவ்வாய், சுக்கிரன் எவ்விதத்திலாவது சம்பந்தப்பட்டால், மண வாழ்க்கை நீடித்து நிலைக்கும். 7-ஆம் அதிபதி செவ்வாய் நீசமானால், தொழிலில் ஏற்படும் நஷ்டம், பணவரவை கெடுத்து, கௌவரத்தையும் குலைப்பதால் திருமண முறிவு ஏற்படும். சிலருக்கு உடல்நலக் குறைவும் பிரிவை ஏற்படுத்திவிடும். குரு நீசமானால் குடும்ப வாழ்க்கைக்கு தகுதியற்றவர் அல்லது உடலில் தீராத நோய் இவை காரணமாக உறவு பிரியும். சனி நீசமானால், காதல் விவகாரம் விவாகரத்தைக் கொடுத்து விடும். சுக்கிரன் நீசமானால், விபத்து அல்லது ஏற்படும் ஒரு அவமானம் இவை பிரிவிற்கு காரணமாகும். புதன் நீசமானால், வேலைக்கு போகாமல், வீட்டில் சும்மா தூங்கிக்கொண்டிருப்பது, வீட்டிலுள்ள பொருட்களை, விற்றுவிடுவது என இவை விவாகரத்துக்கு காரணமாகும். சந்திரன் நீசமானால் நீர் சார்ந்த நோய் காரணமாக பிரிவுண்டு. சூரியன் நீசமானால் உங்கள் மணவாழ்வின் பிரிவிற்கு, உங்களின் இரண்டாவது துணை காரணமாக அமையும்.

பரிகாரம்

வள்ளி- தெய்வானையுடன்கூடிய முருகரை வணங்கவேண்டும். கும்பகோணம் திருலோகி சென்று வணங்கலாம். உங்கள் திருமண நாளில், மகாலட்சுமி தாயாருக்கு குங்கும அர்ச்சனையும், தாமரை மலர்களும்கொண்டு அர்ச்சிகவும். உங்கள் இஷ்ட தெய்வத்திற்கு, பருப்பும், இனிப்பும் கலந்த இனிப்புகளை வழங்கவும்.

விருச்சிக லக்னம்

விருச்சிக லக்னாதிபதி செவ்வாய் உங்களின் 7-ஆம் அதிபதி சுக்கிரன். உங்கள் ஏழாம் அதிபதியே, 12-ஆம் அதிபதியும் ஆவதால், எப்போதடா பிச்சுக்கொண்டு ஓடலாம் எனும் நிலை எப்போதும் துரத்தி வரும். சுக்கிரன் நீசமனால் களஸ்த்திர பெருக்கமே, விவாகரத்துக்கு வழிவகுக்கும். புதன் நீசமானால், விபத்து, உடல்நலக் குறைவு, மறைமுக தொடர்பு என இதில் ஏதோ ஒன்று விவாகரத்தை கொடுத்துவிடும். சந்திரன் நீசமானால் உங்களின் ஒழுங்கீனம், திருட்டுத்தனம், அதர்ம செயல்கள் என இவை மண முறிவைத் தரும். சூரியன் நீசமானால் கௌரவ குறைவான செயலை எதிர்கொள்ள இயலாமல் பிரிவு உண்டாகும். செவ்வாய் நீசமானால் அதிக கடன் பிரச்சினை, வேலையில் ஏற்படும் பெரும் பின்னடைவு இவை மண பிரிவுக்கு காரணமாகும். குரு நீசமானால் அதிக போதையும். அதிக காம களியாட்டம் அல்லது ஒன்றுமே இயலாமல் இருப்பது என இதில் ஒன்று விவாகரத்தின் காரணமாகிவிடும். சனி நீசமானால் பெரிய நோய் தாக்கம் அல்லது ஆண்மைக் குறைவு இவை திருமண வாழ்க்கைக்கு வேட்டு வைத்துவிடும். விருச்சிக லக்னத்தை பொறுத்தவரை ஒன்று ஓவராக ஜாலியாக இருப்பது அல்லது பைசா பிரயோசனமில்லாமல் இருப்பது என இவை முக்கிய காரணமாக தெரிகிறது.

பரிகாரம்

வள்ளி- தெய்வானை முருகரை வணங்கவும். திருச்சாத்த மங்கை எனும் ஸ்தலம் சென்று வணங்கவும். முருகருக்கு கடலை மாவும், இனிப்பும் சேர்ந்த பிரசாதம் படைத்து விநியோகம் செய்யவும்.

(தொடரும்)