ற்போதைய காலகட்டத்தில், விவாகம் ஆகிறதைவிட, விவாகரத்துக்கள் ஆவதுதான் அதிகமாக உள்ளது.

முதலில் திருமணம் எந்த காலத்தில் நடக்கும்.

7-ஆம் அதிபதியின் தசை புக்திக் காலம்

2-ஆம் அதிபதியின் தசை புக்திக் காலம்

7-ஆம் வீட்டு அதிபதியின் சாரநாதரின் காலம்.

சுக்கிரன் சம்பந்த புக்திக் காலம்

7-ஆம் அதிபதி சம்பந்தம் புக்திக் காலம்

8-ஆம் அதிபதியின் தசா புக்திக் காலம்

12-ஆம் அதிபதியின் தசா புக்திக் காலம்

கோட்சாரத்தில் குரு மேற்கண்ட வீடுகளை பார்ப்பது அல்லது கடப்பது என இவை திருமணத்தை அழைத்துவரும்.

dd

சரி, திருமணம் முடிந்தால், ஒழுங்காக காலம் தள்ளுகிறார்களா என்றால், இல்லையென்ற பதிலே வருகிறது. உப்பு பெறாத காரணங்களுக்கு எல்லாம், விவாகரத்து பெற கிளம்பி விடுகிறார்கள்.

விவாகரத்துக்கான கிரக அமைப்பு

Advertisment

7-ஆமிடத்தில் சனி, ராகு, செவ்வாய், சூரியன் இவர்கள் இருந்தால் மணவாழ்வு சோபிப்பது இல்லை.

2-ஆமிடத்தில் பாவ கிரகங்கள்

2-ஆமிடம் என்பது குடும்பஸ்தானம்.

Advertisment

அதில் பாவிகள் இருப்பது குடும்ப அமைப்பைக் கெடுத்துவிடும்.

7-ஆம் அதிபதி, 11-ஆம் அதிபதி சம்பந்தம்

7-ஆம் அதிபதி களஸ்த்திரம் 11-ஆம் அதிபதி லாபம். எந்த விஷயத்திலும் லாபம், பெருக்கம் இருக்கலாம். ஆனால் திருமண விஷயத்தில், அதுவும் களஸ்த்திர விஷயத்தில் லாபம் என்பது சரிப்பட்டு வராது. விவாகரத்துக்கு இது ஒரு காரணமாகிவிடும்.

7-ஆம் அதிபதி 6-ல்

6-ஆமிடம் என்பது ருண, ரோக, எதிரி ஸ்தானம் மட்டுமல்ல; அது 7-ஆமிடம் எனும் களஸ்த்திர ஸ்தானத்திற்கு விரய பாவமாகும். எனவே இவ்வமைப்பு மண முறிவிற்கு ஏதுவாகும்.

7-ஆம் அதிபதி 8-ல் இவ்வமைப்பு களஸ்த்திரம்மூலம் அவமானமும், அழுகையும், நஷ்டமும், துயரமும் தரக்கூடியது. எனவே, இதுவும் மண பிளவிற்குரியதாகும்.

7-ஆம் அதிபதி சர ராசியில் சர ராசி என்பது வேக வேகமாக ஓடக்கூடியது. பழங்கால ஜோதிடர்கள் சர ராசியை ஓடுகா- ராசி என்பர். ஆயினும் சர ராசியில், 7-ஆம் அதிபதி கெட்டுப்போயிருந்தால் மட்டுமே மண வாழ்வு விலகி ஓடும். ஆட்சி, உச்சம்பெற்றால் இப்பாதிப்பு வராது.

லக்னத்தில் பாவர்

லக்னத்தில் பாவ கிரகங்களான சனி, செவ்வாய், ராகு- கேது இருந்தால் அவர்கள் தனது ஏழாம் பார்வையால், ஏழாம் வீட்டை பார்வையிடுவர். பாவிகள் சதா ஓரிடத்தை பார்த்தால், அந்த இடம் விளங்குமா! எனவே மணமுறிவிற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

சுக்கிரன்+சனி

இவ்வமைப்பு 7-ல் இருப்பின், கலப்பு திருமணம் என்றவகையில், முறையற்ற கல்யாணம் எனும்படி அமையும். கூடவே இது மதுமோகத்தையும் கொடுத்துவிடுமாம். சதா குடித்துக்கொண்டிருப்பவனோடு, எந்த பெண்தான் குப்பை கொட்டுவாள். இதுவே விவாகரத்துவுக்கு வழிவகுத்துவிடும்.

dd

7-ல் சனி+செவ்வாய்

இவ்வமைப்பு எல்லா லக்னத்துக்கும் விருப்பத் திருமணத்தை அமைத்துதரும். சில லக்னத்துக்கு மணமுறிவையும் கொடுக்கும்.

7-ல் குரு+சந்திரன்v குரு தர்மம் மற்றும் காலபுருஷ விரயாதிபதி. சந்திரன் 4-ஆமிடம் எனும் சுக ஸ்தானாதிபதி மற்றும் தாய் ஸ்தானத்தைக் குறிப்பவர். எனவே இந்த அமைப்பு சன்யாச யோகம் தந்துவிடும்.

7-ல் ராகு

இவ்வமைப்பு இருப்பவர்கள். 33 வயது நான்கு மாதம் சென்றபிறகு, திருமணம் முடித்தால், ஒரு திருமணத்தோடு இருக்கலாம்.

12 லக்னத்துக்கும் திருமண முறிவிற்கான காரணம்

மேஷ லக்னம்

செவ்வாய் 7-ஆம் அதிபதி சுக்கிரன். இந்த சுக்கிரன் 6-ஆமிடத்தில் நீசம் பெற்றால், சண்டை மற்றும் கடன் பிரச்சினையால் விவாகரத்து ஏற்படும். செவ்வாய் கடக ராசியில் நீசமாகி, புனர்பூச நட்சத்திரம் பெற்றால், மணவாழ்க்கையில் பிரிவு ஏற்பட வாய்ப்புண்டு. மேஷ லக்ன ஆண்களுக்கு 3-ஆம் அதிபதி புதன், நீசமாகி, ரேவதி நட்சத்திரத்தில் நின்றால், உடல்நிலை கோளாறு காரணமாக, விவாகரத்து ஆகிவிடும். மேஷ லக்னத் தாரின் 7-ஆமிடமான, துலாத்தில் சூரியன் நீசம்பெற்றால், விவாகரத்துக்கு ஒழுக்கக் கேடு காரணமாகும். மேஷ லக்னாதிபதி, துலாத்தில் எந்த நட்சத்திரத்தில் இருப்பினும், தம்பதிகளுள் ஒருவர் பிரியும் நிலை உண்டு. இது அந்தந்த தசாபுக்தி காலத்தில் அமையும். சந்திரன் நீசமாகி இருப்பின், இவர்கள் தாயார் செய்யும் வஞ்சகச் செயல் தம்பதிகளின் பிரிவுக்கு காரணமாகும். சனி, துலா ராசியில் உச்சம்பெற்றால், களத்திர பெருக்கம் காரணமாக, திருமண பிரிவுண்டு.

மேஷ லக்னத்தாரின் ஜாதகத்தில், மேற்கண்ட அமைப்பு இருப்பின், அந்த தசா புக்தியில் வெகுகவனமாக இருக்கவேண்டும். நீங்கள் எப்போதும் வள்ளி, தெய்வானையுடன்கூடிய முருகரை வழிபடுவது, நீடித்த மணவாழ்க்கைத் தரும். உங்கள் திருமணநாளில், உங்கள் இஷ்டதெய்வக் கோவிலில் இனிப்பு விநியோகம் செய்யவும். அது சாக்லேட் போன்றும் இருக்கலாம்.

ரிஷப லக்னம்

ரிஷப லக்னம் அதிபதி சுக்கிரன் 7-ஆம் அதிபதி செவ்வாய். இவர்கள் 6, 8, 12 தவிர மற்ற இடங்களில் சம்பந்தம் பெற்றிருப்பின், மணவாழ்க்கை அது பாட்டுக்கு சிறு, சிறு சண்டை, சச்சரவுடன் ஓடிவிடும்.

உங்கள் லக்னாதிபதி சுக்கிரன், நீசமாகி இருந்தால், பிரிவுக்கு உங்கள் ஒழுக்கத்தின்மீது உண்டாகும் சந்தேகமும் சண்டையும் காரணமாகும். 7-ஆம் அதிபதி செவ்வாய் நீசமாகி இருந்தால், மணவாழ்வின்மீது ஈடுபாடு இல்லாதது காரணமாகும். உங்கள் புதன் நீசமாகி இருந்தால், சின்ன வூட்டு சமாச்சாரம் பிரிவுக்கு காரணமாகும். சந்திரன் நீசமானால் உடன்பிறந்த சகோதரி, பிரிவுக்கு காரணமாவார். சூரியன் நீசமா னால், உங்கள் அம்மா கிளப்பிவிடும். சண்டை அல்லது வீடு விஷயமான கடன் பிரிவுக்கு ஏதுவாகிவிடும். குரு நீசமானால், உங்கள் பிரிவுக்கு மூத்த சகோதரன் அல்லது தந்தை ஒரு விபத்து பிரிவுக்கு காரணமாகிவிடும். சனி நீசமாகி இருந்தால், உடல்நிலை காரணமாகிவிடும் அல்லது உங்கள் மாமியார் காரணமாகிவிடுவார்.

இவ்விதம் அமைப்பு ஏதோ ஒன்று இருப்பினும், திருமணக்கோல முருகர், சிக்கல் சிங்கார வேலர் சென்று வணங்கவும்.

திருவையாறு அருகில் பெரும்புலியூர் உமா சமேத மூர்த்தியை வணங்கவும். உங்கள் திருமணநாளில் பருப்பும், சர்க்கரையும் சேர்த்த இனிப்பை, உங்கள் இஷ்டதெய்வக் கோவிலில் விநியோகம் செய்யவும்.

மிதுன லக்னம்

உங்கள் லக்னாதிபதி புதன் ஆவார். உங்கள் 7-ஆம் அதிபதி குரு ஆவார். உங்கள் லக்னம் உபய ராசி வகையைச் சேர்ந்தது.

அதன் பாதகாதிபதி 7-ஆம் அதிபதி ஆவார். அனேகமாக, மிதுன லக்னத்தாருக்கு வெளியில் இருந்து, பிரிவு தொல்லை குறைவாகவே வரும். உங்களுக்குள்ளேயே அவ்வப்போது பிராண்டல் வரும்.

உங்கள் ஏழாம் அதிபதி குரு நீசமானால், அவருடைய உடல்நிலை கவனிக்கப்பட வேண்டும். சந்திரன் நீசமானால், உடல்நோய் அல்லது கடன் பிரச்சினை பிரிவைத் தரும். அல்லது எட்டூரு சண்டை போடுவதை சகிக்க முடியாமல், வாழ்க்கைத்துணை எஸ்கேப் ஆகிவிடுவார். சூரியன் நீசமானால், இல்வாழ்க்கைக்கு தகுதி இல்லாத நிலை இருக்கக்கூடும். உங்கள் லக்னாதிபதி புதன் நீசமானால், தொழில், வேலை விஷயம், வீடு பற்றிய செய்தியின் பொய்மை, திருமணத்தை முறித்துவிடும். சுக்கிரன் நீசமானால், முடிந்துபோன காதல் பிரச்சினை, மீண்டும் தலைதூக்கி, பிரிவு உண்டாகும். செவ்வாய் நீசமானால் அதிக கோப வார்த்தைகள், சண்டை, கடன் மற்றும் வேறு தொடர்பு இவை சார்ந்து பிரிவு ஏற்படும். சனி நீசமானால், விபத்து அல்லது மறைமுகத் தொடர்பு இவை பிரிவிற்கு தள்ளிவிடும். உங்கள் 7-ஆம் அதிபதி பரணி, பூரம் நட்சத்திரத்தில் குரு நிற்பின் சற்று பிரிவின் சதவிகிதம் அதிகமாகும்.

சங்கரநாராயணரை வணங்கவேண்டும். உங்கள் திருமணநாளன்று, பாசி பருப்பு பாயசம் அல்லது வெள்ளை கொண்டைக் கடலை சுண்டலை, உங்கள் இஷ்ட தெய்வக் கோவிலில் வினியோகம் செய்யலாம்.

(தொடரும்)