ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

கிரக பாதசாரம்:

Advertisment

சூரியன்: உத்திரட்டாதி- 2, 3, 4.

செவ்வாய்: ரோகிணி- 2, 3, 4.

புதன்: பூரட்டாதி- 1, 2, 3, 4, உத்திரட்டாதி- 1.

Advertisment

குரு: அவிட்டம்- 2.

சுக்கிரன்: உத்திரட்டாதி- 1, 2, 3.

சனி: உத்திராடம்- 4.

ராகு: ரோகிணி- 3.

கேது: கேட்டை- 1.

கிரக மாற்றம்:

25-3-2021- மீன புதன்.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மிதுனம்.

23-3-2021- கடகம்.

25-3-2021- சிம்மம்.

27-3-2021- கன்னி.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், ராகு, 12-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால், பேச்சில் பொறுமையுடன் இருப்பதும், பணவிஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பதும் நல்லது. பொருளாதார நிலை ஏற்ற- இறக் கமாக இருந்தாலும் குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்துவிடமுடியும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொண்டால் வீண்விரயங்களைத் தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும் என்பதால், ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை சற்று குறையும். கணவன்- மனைவி வாக்குவாதங்களைத் தவிர்ப்பது உத்தமம். உற்றார்- உறவினர்களால் தேவையற்ற மன சஞ்சலங்கள் உண்டாகும் என்பதால், அவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனமாக செயல்பட்டால் விரயங்களைத் தவிர்க்கலாம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு மந்தநிலை காணப்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். சிவ வழிபாடு, முருக வழிபாடு செய்வது, பிரதோஷ விரதமிருப்பது நல்லது.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

உங்கள் ராசிநாதன் சுக்கிரன், சூரியன் சேர்க்கைப்பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும், பாக்கிய ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு. எனவே நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும் இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும். எதிர்ப்புகள், பிரச்சினைகள் யாவும் குறையும். எதிர்பாராத திடீர் தனவரவுகள் உண்டாகி குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். விட்டுகொடுத்து நடந்துகொண்டால் ஒற்றுமை குறையாது. அசையும்- அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் சாதகப்பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உற்றார்- உறவினர் ஓரளவுக்கு சாதகமாக நடந்துகொள்வார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங் களைப் பெறமுடியும். தொழில், வியாபாரத்திலும் எதிர்பார்த்த வாய்ப்புகளைப் பெறலாம். வெளியூர், வெளிநாடு தொடர்புடையவற்றால் லாபங்கள் கிட்டும். விநாயகர், துர்கையம்மன் வழிபாடு நல்லது.

weekrasi

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

உங்கள் ராசிநாதன் புதன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும், 10-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு. எனவே சகல விதத்திலும் முன்னேற்றங்களை அடைவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். பணவரவு தாராளமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். செய்யும் தொழில், வியாபாரத்தில் சிறப் பான லாபம் அமையும். போட்டி, பொறா மைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும் ஆதரவும் அபிவிருத்தியைப் பெருக்க உதவும். பயணங்களாலும் அனுகூலங்கள் உண்டாகும். சிறப்பான பணவரவால் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் குறையும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத் துக்கொள்வது நல்லது. பிள்ளைகளால் மகிழ்ச்சி நிலவும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமையும். சிலருக்கு அசையும்- அசையா சொத்துகள் வாங்கும் நோக்கம் நிறைவேறும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சிறப்பான நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வு கிடைக்கும். சனிக்குரிய பரிகாரங்கள் செய்யவும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நல்லது.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதும், 9-ல் சுக்கிரன், 11-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு. எடுக்கும் முயற்சியில் வெற்றி, கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றும் யோகம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் லாபகரமான நிலை ஏற்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். கிடைக்கவேண்டிய லாபங்களும் தடையின்றிக் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் ஏற்படும். பணவரவில் சிறப் பான நிலையிருக்கும். தேவைகள் அனைத் தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தபட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். உற்றார்- உறவினர் களிடம் விட்டுக்கொடுத்து நடப்பது உத்தமம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள். புதிய பூமி, மனை வாங்கும் விஷயங்களில் அனுகூலப் பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். சிலருக்கு வெளிநாடுகளில் பணிபுரியும் வாய்ப்பும் அமையும். விஷ்ணு பகவானையும், விநாயகரையும் வழிபட்டால் நற்பலன் கிடைக்கும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

உங்கள் ராசிக்கு 6-ல் சனி, 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம். எனவே ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வதுடன் உணவு விஷயத்திலும் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்யும் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றிபெறுவீர்கள். கணவன்- மனைவியிடையே சுமுகமான உறவிருக்கும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமாக இருப்பது நல்லது. நம்பியவர்களே துரோகம் செய்ய முயற்சிப்பார்கள் என்பதால், முடிந்தவரை பெரிய தொகைகளை யாருக்கும் கடனாகக் கொடுப்பதைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அனுகூலப் பலன் உண்டாகும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைக்கப்பெறும். சிவ வழிபாடு, மகாலட்சுமி வழிபாடு செய்தால் மேன்மைகள் உண்டாகும்.

weekrasi

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 5-ல் குரு, 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் லாபகரமான பலன்கள் உண்டாகும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வரும். வெளியூர், வெளிநாடு தொடர்புடையவற்றாலும் நற்பலனை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பதன்மூலம் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். நல்ல வரன்கள் தேடிவரும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த பிரச்சினையும் ஏற்படாது. அசையும்- அசையா சொத்துகளால் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சிறப்புடன் செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். எதிர்பார்க்கும் உயர்வுகள் மற்றும் இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. சிவ வழிபாடு, முருக வழிபாடு செய்தால் துன்பங்கள் நீங்கி நன்மைகள் பெருகும்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

உங்கள் ராசிக்கு 5-ல் புதன், 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக சாதகமான பலன்கள் ஏற்படும். என்றாலும் 4-ல் குரு, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதிக்குறைவு, வீண் செலவுகள் உண்டாகலாம். பணவரவுகள் ஏற்ற- இறக்கமாக இருந்தாலும், எதிர்பாராத உதவிகளால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். எதிலும் சிக்கனத்துடன் இருப்பதும், ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வதும் நல்லது. பெரிய தொகைகளைப் பிறருக்கு கடனா கக் கொடுப்பதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும். வண்டி வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருப்பது நல்லது. உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வதன்மூலம் ஓரளவு அனுகூலம் உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப் பலன் கிட்டும். அசையும்- அசையா சொத்துகள் வாங்கும் விஷயத்தில் கவனம்தேவை. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்துகொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கிக் கொள்ளமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மனநிம்மதியுடன் பணிபுரிய முடியும். புதிதாக வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. சனிப்பிரீதியாக விநாயகர் மற்றும் அனுமனை வழிபடுவது நல்லது.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

உங்கள் ராசிக்கு 3-ல் சனி, 4-ல் புதன், 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் வளமான பலன்களை அடைவீர்கள். செவ்வாய், ராகு 7-ல் இருப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பணவரவில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன் சுமைகள் குறையும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும், விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வதன்மூலம் ஒருசில ஆதாயங்களை அடையலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும்போது மட்டும் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நிலை உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்வதுடன், எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் இடமாற்றங் களும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். துர்கையம்மன் வழிபாடும், விஷ்ணு வழிபாடும் செய்தால் சிறப்பான பலன்கள் கிட்டும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

உங்கள் ராசிநாதன் குரு 2-ல், சுக்கிரன் 4-ல், செவ்வாய், ராகு 6-ல் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் மேன்மையான பலன்களை அடைவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். பணம் பல வழிகளில் தேடிவந்து பையை நிரப்பும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன் போன்றவை ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வதன்மூலம் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலனைப் பெறுவீர்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணங்கள் நிறைவேறக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். உற்றார்- உறவினர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வுகளையும், பதவி உயர்வுகளையும் பெறமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த தடைகள் மற்றும் மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். எதிர்பார்த்த லாபம் கிட்டும். சிவ வழிபாடும், சனி பகவான் வழிபாடும் செய்தால் மேன்மையான பலன்களை அடையலாம்..

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

உங்களுக்கு ஜென்ம ராசியில் குரு, சனி சஞ்சரிப்பது நெருக்கடிகளை ஏற்படுத்தும் அமைப்பென்றாலும், 2-ல் புதன், 3-ல் சூரியன், 11-ல் கேது சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்றே சோர்வு உண்டானாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். குடும்ப ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். பணவரவுகள் ஏற்ற- இறக்கமாக இருந்தாலும் நெருங்கியவர்களின் உதவியால் எதையும் சமாளித்துவிடுவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. உற்றார்- உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதியவாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்றாலும், கொடுத்த கடன்களை வசூலிப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் தேவையற்ற பிரச்சினைகளைக் குறைத் துக்கொள்ளமுடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைக்கும். தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபமேற்றி வழிபட்டால் சுபிட்சம் உண்டாகும்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், 4-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், பொருளாதாரரீதியாக நெருக்கடி ஏற்படக்கூடிய காலம். எனவே எதிலும் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் குடும்பத்தில் அமைதி நிலவும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருந்து தேவைகள் பூர்த்தியாகும். என்றாலும் குரு பகவான் சாதகமற்று இருப்பதால் வீண்செலவுகளைக் குறைப் பது, பணவிஷயத்தில் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது சிறப்பு. பூமி, மனை, வண்டி, வாகனங்கள் வாங்கும் விஷயத்தில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி, பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்பதால், எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்துச் செல்வதன்மூலம் ஆதாயம் கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. பெரிய முதலீடு கொண்ட செயல்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படலாம். பிரதோஷ காலங்களில் விரதமிருந்து சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், ராகு, 11-ல் குரு, சனி சஞ்சரிப்பதால் பல்வேறு மேன்மைகளை அடையும் யோகம் உண்டு. இருக்கும் இடத்தில் உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். எடுக்கும் முயற்சியில் அனுகூலங்கள் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சூரியன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கிச் சேர்ப்பீர்கள். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சினைகள் சற்றே விலகும். உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச்செலவுகள் ஏற்படாது. தொழில், வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் குறைவதால் எதிர்பார்த்த லாபம்கிட்டும். கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த வாக்கைக் காப்பாற்றமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும், ஊதிய உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. சிவ வழிபாடும், விஷ்ணு வழிபாடும் உத்தமம்.