திருமணமென்பது ஒவ்வொரு நபரின் வாழ்வில் ஒரு இனிமையான அனுபவம். மகிழ்வான பகுதி. வாழ்வில் இன்னொரு பரிமாணம். அதனால்தான் இரு குடும்பத்தினரும் உற்றார்- உறவினர், நண்பர்கள் புடை சூழ கொண்டாப்படும் கலகலப்பான நிகழ்ச்சி யாக திருமணம் திகழ்கிறது.
ஒரு ஆணும் பெண்ணும் வாழ்வில் இணைந்து ஈருடல் ஓருயிராய் சங்கமித்து, வாழ்க்கை என்ற கடும் பயணத்தினை சாதனையாக்கி நிறைவு செய்கின்றனர்.
அதேசமயம் காலத்தின் போக்கும் மனிதன் எதையோ தேடியலையும் பரபரப்பான வேகமும் கலகலப்பான இந்த வாழ்வினை கைகலப்பான வாழ்க்கையாக்கிவிட்டது. கசந்து பிரியும் உறவுகளும் கசப்பை சகித்தே வாழ்ந்து முடிக்கும் தம்பதி களும் ஏராளமாகிவிட்ட னர். "அன்பும் அறனும் உடைத் தாயின் இல் வாழ்க்கை பண்பும் பயனும் அது' என்பதை நாம் இன்று பலரும் மறந்தேவிட்டோம்.
திருமணங்கள் பொருத் தத்தில் நிச்சயிக்கின்றனர்.
மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டுக்குச் சென்று பெண் பார்த்தபின்பு அவர்களுக்குப் பிடித்துவிட்டால், அடுத்து பெண்வீட்டார் மாப்பிள்ளை வீட்டுக்குப்போய் பார்க்கின் றனர். அவர்களுக்கும் மாப்பிள்ளை விட்டார் களைப் பிடித்துவிட்டால் பிறகு இருவருக்கும் ஜாதகப் பொருத்தம் உள்ளனவா என்பதை ஆராய்ந்து, பின் திருமணம் முடிக்கின்றனர்.
பெரும்பாலானோர் வெறும் நட்சத்திரப் பொருத்தம் மட்டும் பார்த்து திருமணம் செய்கின்றனர். இது தவறு. ஜாதகரீதியாகப் பொருத்தம் பார்ப்பது மிகவும் அவசியம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/porutham.jpg)
ஜோதிடரீதியாக ஒருவருக்கு திருமண பாக்கியமானது, அவர்களுடைய ஜாதகத்தில் லக்னத்திற்கு 7-ஆம் பாவம், களத்திரகாரகன் சுக்கிரன் ஆணுக்கு, செவ்வாய் பெண்ணுக்கு, 7-ல் அமையும் கிரகங்களின் நிலைகளைப் பொருத்து கணவன்- மனைவி அமையும் நிலைகளை அறியமுடியும். சந்திரன் நிலையையும் ஆராயவேண்டும். இவர்களின் வலிமை நிலைகளை ஆராயவேண்டும்.
இவர்களின் நிலைகளை நவாம்சத்திலும் ஆராயவேண்டும். திருமணக் காலம் வந்து விட்டால் திருமணப் பொருத்தம் பத்து மட்டும் பார்த்து திருமணத்தை முடிவெடுத்து விடக்கூடாது. ஜாதகரீதியான சில நிலை களை கவனிக்கவேண்டும்.
பொருத்தங்கள் பத்து
1. தினம்: ஜாதகர், ஜாதகியின் ஆயுள், ஆரோக்கியம்.
2. கணம்: குணாதிசயங்கள்.
3. மகேந்திரம்: குழந்தை பாக்கியம்.
4. ஸ்திரீதீர்க்கம்: லட்சுமி கடாட்சம்.
5. யோனி: தாம்பத்திய சுகம்.
6. ராசி: ஜாதகர், ஜாதகியின் உடல்நிலை.
7. ராசியாதிபதி: உறவு நிலை.
8. வசியம்: விருப்பு- வெறுப்பு.
9. ரஜ்ஜு: தாலி பாக்கியம்.
10. துக்க நிலை (நிவர்த்தி)
இந்த அனைத்துப் பொருத்தங்களும் எல்லோருக்கும் அமையாது. 5, 6, 7- மத்திமம்; 8, 9, 10- உத்தமம் என்பார்கள்.
மேலே கண்டவை நட்சத்திரப் பொருத் தம் மட்டுமே. இது போதுமென்று பெரும் பாலான பெற்றோர்கள் நினைக்கின்றனர். ஜாதகரீதியான பொருத்தம் அவசியம்.
இருவரின் ஜாதகத்தில் கிரகங்கள் அமைந் துள்ள நிலைகளை ஆராய்ந்து பின் இருவரையும் இணைக்கவேண்டும்.
இருவருடைய ஜாதகத்தில் குடும்ப நலம் தரும் 2-ஆம் பாவமும், 2-ஆம் அதிபதியும், 2-ஆம் பாவ காரக கிரகங்களும் நலமுடன் அமையவேண்டும். இருவருடைய ஜாதகத்தில் வீடும், சுகம், பூமி, வாகனம் தரும் 4-ஆம் பாவம், 4-ஆம் அதிபதி, 4-ஆம் பாவ காரக கிரகங்களின் நிலைகளை ஆராயவேண்டும்.
இருவருடைய ஜாதகத்தில் துணைவர்கள், காம களத்திரம் தரும் 7-ஆம் பாவம், 7-ஆமதிபதி, 7-ஆம் பாவ காரக கிரகங்களின் நிலைகளை ஆராயவேண்டும்.
அயன-சயன சுகம்தரும் 12-ஆம் பாவம், 12-ஆமதிபதி, 12-ஆம் பாவ காரக கிரகங்களின் நிலைகளை ஆராயவேண்டும்.
1, 3, 5, 7, 11-ஆம் பாவங்கள், அடுத்து 2, 4, 8, 10-ஆம் பாவங்கள், அடுத்து 8-12-ஆம் பாவங்களின் நிலைகளை ஆராயவேண்டும்.
ஆண்கள் ஜாதகத்தில் ஆண் கிரகங்கள் பலம்பெற்று அமைவது வாழ்வில் நலம்தரும். பெண்கள் ஜாதகத்தில் பெண் கிரகங்கள் பலம்பெற்று அமைவது நலம் தரும்.
குரு நீசம், வக்ரம், பகை, அஸ்தங்கம், பாவிகள் இணைவு, பார்வை பெறாமல் இருந்தால் நலம் தரும். குரு தோஷம் பெற்றால் சமுதாய மதிப்பிழந்து மானம்கெட வைக்கும்.
சுக்கிரன் நீசம், வக்ரம், பகை, பாவிகளின் இணைவு, பார்வை பெறாமலிருந்தால் நலம்தரும். சுக்கிர தோஷம் சிற்றின்ப வசமாக்கி வாழ்வை நாசமாக்கும்.
சிற்றின்ப நாட்டத்திற்கும். பேரின்ப நாட்டத்திற்கும் காரணம் மனமே. மனதை ஆள்பவர் சந்திரன். சந்திரன் ஜாதகத்தில் சுப பலம் பெறுவது நன்று. சனி வீட்டில் சுக்கிரன் அமைந்திருந்தாலும், சனியின் பார்வை பெற்றாலும் நலமற்ற கணவர்- மனைவி அமைவார்கள்.
செவ்வாய் வீட்டில் சுக்கிரன் இருந்து செவ்வாய் பார்த்தால் நலமற்ற மனைவி அமைவாள்.
7-ல் செவ்வாய் இருந்தால் சுய தேர்வில் திருமணம். சுபர் பார்த்தால் பெற்றோர் தேர்வில் அமையும். சூரியன் அல்லது செவ்வாய் நின்ற ராசிக்கு 7-ல் சனி இருந் தால் ஜாதகர்- ஜாதகி விவகாரங்கள், வம்பு வழக்குகளிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவற்றில் பாதிப்பும் தோல்வியும் ஏற்படும்.
செவ்வாய் சனி வீட்டில் இருந்தாலும், சனியின் பார்வை பெற்றாலும் நலமற்ற கணவன் அமைவார். சுக்கிரன், செவ்வாய் இணைந்திருந்தால் தரங்கெட்ட துணைவர் கள் அமைவார்கள்.
7-ஆமதிபதி களத்திர காரகன் 6-ல் அமைந்து, சனி அல்லது செவ்வாய் பார்வை பெற்றால் கலங்கமுள்ள துணை அமைவார்கள். லக்னத்தில் செவ்வாய் உள்ள ஜாதகர் மனைவிமீது சந்தேகப்படுவார். 7-ல் சனி இருந்தால் இரண்டு திருமணம் அமையும். மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய ராசிகளில் ஒன்றில் சுக்கிரனிருந்து, சனி அல்லது குரு வக்ரம் பெற்றுப் பார்த்திருந்தால் ஜாதகர்- ஜாதகிக்கு உறுதியாக ஒருமுறைக்கு மேல் திருமணம் ஆகும்.
ஜாதகத்தில் 1, 2, 6, 8-ல் சனி இருந்தால் ஜாதகர்- ஜாதகிக்கு திருமணமாவதில் தடை, தாமதம், பிரச்சினைகள் ஏற்படும். கட்டாயத்தின் பேரில் திருமணமாகும்.
9-ல் சனி பெண்கள் ஜாதகத்தில் இருந்தால் ஒருமுறை திருமணம் நின்று மறுபடியும் திருமணமாகும். 2, 4, 7, 10-ல் சனி வக்ரம் இருப்பினும் ஜாதகி- ஜாதகர் பிற பாலாரிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இராவிடில் ஏமாற்றப்பட்டுவிடும் நிலை உருவாகும்.
3, 5, 7-ஆமதிபதிக்கு ராகு- கேது இணைவு அல்லது பார்வை இருக்குமாயின், ஜாதகிலி ஜாதகரின் வாழ்கைத் துணையால் அவமானம், தலைகுனிவை ஏற்படுத்திவிடக்கூடும்.
செல்: 96006 07603
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-07/porutham-t.jpg)