சென்ற இதழ் தொடர்ச்சி...
சனி, ராகு, கேதுவுடன் செவ்வாய் தனித்தனியே இணைந்து தரும் பலனை இங்கு காணலாம்.
ராகு
பெண்களுடைய ஜாதகத்தில் கணவனைக் குறிப்பிடும் உதாரண கிரகமான செவ்வாய் இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 2, 7-ஆவது ராசிகளில் பாவகிரகமான ராகு இருந்தால், திருமணம் தடை, தாமதமாகும். கணவனுக்கு கண்டம், கஷ்டங்கள், விபத்துகள் ஏற்படலாம். மூத்த சகோதரன், மூத்த ஆண்மகனுக்கு பாதிப்புகளைத் தந்துவிடும். கணவனை மதிக்கமாட்டாள். தரக்குறைவாகப் பேசுவாள். கணவனை மிஞ்சி காரியம் செய்வாள். ஆணவம், அலட்சியம், அகங்காரம், பிடிவாதம், முன்கோபம், மறுத்து, எதிர்த்துப் பேசுதல், ஆதிக்க குணமிருக்கும். பிறரை அடக்கியாள நினைப் பவள். கணவன் வீட்டாரை வெறுப்பாள். விவாகரத்து, பிரிவு ஏற்படலாம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/chevaidosham.jpg)
பெண் ஜாதகத்தில் செவ்வாய் வக்ரம் பெற்று, அதற்கு 4, 8, 12-ஆவது ராசிகளில் ராகு இருந்தால், அவள் கணவன் அவளைவிட்டுப் பிரிந்து சென்று விடுவான்.
பெண் ஜாதகத்தில் செவ்வாய் பரிவர்த்தனை பெற்றிருந்தால், இந்த பரிவர்த்தனையால் செவ்வாய் தன் சொந்த வீடுகளான மேஷம் அல்லது விருச்சிகத்திற்கு வந்துவிடும். இந்த ராசிகளுக்கு 1, 5, 9, 2, 7-ஆவது ராசிகளில் ராகு இருந்தால், கணவன் அவளைவிட்டுப் பிரிந்து சென்றுவிடுவான். மேற்படி அமைப்பில் சுக்கிரன் (மனைவி) கிரகத்தைத் தவிர சந்திரன், புதன் இருந்தால், இவளைவிட்டு கணவன் பிரிந்துசென்று, வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்வான் அல்லது வேறு பெண்ணை வைப்பாட்டியாக வைத்துக்கொள்வான்.
பெண் ஜாதகத்தில், பரிவர்த்தனை பெற்ற செவ்வாய் இருக்கும் மேஷம், விருச்சிகத்திற்கு 4, 8, 12-ஆவது ராசிகளில் ராகு இருந்தால், கணவன் இந்தப் பெண்ணைவிட்டுப் பிரிந்துசெல்வான் அல்லது இந்தப் பெண் தன் கணவனை விட்டுப் பிரிந்துசெல்ல நேரிடும்.
பெண் ஜாதகத்தில், செவ்வாய் இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 2, 7-ஆவது ராசிகளில் சந்திரன், புதன் இருந்தால் இவளின் கணவன்- மனைவியைத் தவிர வேறு பெண்களுடன் உறவு வைத்திருப்பான். இதனால் குடும்பத்தில் பொருளாதாரக்குறைவு உண்டாகும்; நிம்மதி இருக்காது.
பெண் ஜாதகத்தில், சுக்கிரன் இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் சந்திரனும் ராகுவும் இருந்தால், அந்தப் பெண் வீட்டைவிட்டு வெளியேறி, தன் விருப்பம்போல் திருமணம் செய்துகொள்வாள். அல்லது தன் விருப்பம்போல் வாழ்வாள். இந்தப் பெண்ணின் வம்ச முன்னோர்கள் காலத்திலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்திருக்கும்.
பெண்கள் ஜாதகத்தில் ராகு- கேதுக்களுக்கு ஒருபுறம் செவ்வாய் இருந்து, அதற்கு மறுபுறம் சுக்கிரன் (மனைவி) இருந்தால், கணவன் அல்லது மனைவி இருவரில் யாராவது ஒருவர் மற்றவரைப் பிரிந்துசெல்ல நேரிடும்.
கேது
பெண் ஜாதகத்தில் செவ்வாய் இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 2, 7-ஆவது ராசிகளில் கேது இருந்தால், அவள் திருமணம் தடை, தாமதமாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு, வழக்கு, விவாகரத்து, பிரிவு ஏற்படலாம். கணவனுக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் குறையும். ஆண்மைக்குறைவு நோய் உண்டாகலாம். குடும்பத்தில் பொறுப்பாக இருக்கமாட்டான். சந்நியாசி போன்று இருப்பான். கடன் தொல்லை இருக்கும். கணவன்வழி உறவுகளால் நன்மை இராது. இந்தப் பெண்ணையே குடும்பப் பொறுப்பினை ஏற்கச் செய்துவிடும். கணவனையும் இவள் சேர்த்துக் காப்பாற்றும் சூழ்நிலை உண்டாகும். பெண்களுடைய ஜாதகத்தில் செவ்வாய் (கணவன்) வக்ரம்பெற்று, இந்த வக்ர செவ்வாய் இருக்கும் ராசிக்கு 4, 8, 12-ஆவது ராசிகளில் கேது இருந்தால், கணவன்- மனைவியிடையே பிரிவு ஏற்படும். பெண் ஜாதகத்தில் செவ்வாய் பரிவர்த்தனைப் பெற்றிருந்து, செவ்வாயின் ராசிகளான மேஷம், விருச்சிகத்திற்கு 1, 5, 9-ல் கேது இருந்தால் கணவன்- மனைவியிடையே பிரிவு ஏற்படும். மேற்படி அமைப்பில் சுக்கிரனைத் தவிர சந்திரன், புதன் இருந்தால், கணவன் இவளைவிட்டுப் பிரிந்து வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்வான்.
சனி
பெண் ஜாதகத்தில் செவ்வாய் இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 2, 7-ஆவது ராசிகளில் சனி இருந்தால், திருமணத்தில் தடை, தாமதம் உண்டாகும். கணவனின் தொழில் பாதிப்பு, முடக்கம் உண்டாகும். வருமானம் குறையும். கடன் தொல்லை இருந்துகொண்டே இருக்கும். கணவன் வீட்டாரால் எந்த நன்மையும் கிடைக்காது. கணவனுக்கு எதிரிகளால் தொல்லைகள் இருந்து கொண்டே இருக்கும். செவ்வாய் தோஷத்தை உருவாக்கி சிரமம் தருவதில்லை. செவ்வாயுடன் சனி, ராகு, கேது சேர்வதால்தான் பெண்களுக்கு செவ்வாய் தோஷப்பட்டு பாதிப்புகளைத் தருகிறது. செவ்வாய் தோஷத்திற்குள் சர்ப்ப தோஷம், களத்திர தோஷம், சகோதர தோஷம் போன்ற பல தோஷங்கள் மறைந்திருந்து செயல்பட்டு சிரமங்களைத் தந்துவிடும். இராமாயணக் கதையின் நாயகி, இராமனின் மனைவி சீதை செவ்வாய் தோஷமுள்ளவள். அதனால்தான் இராமன் சீதையை மணந்தபின்பு, மன்னன் மகனாகப் பிறந்தவன் மரவுரிதரித்து மகுடமிழந்து, தன் குடும்பத்தாரால் புறக் கணிக்கப்பட்டு, இறுதியில் மனைவி சீதையை விலக்கிவைத்தான். வாழ்வில் இறுதிவரை இராமனும் சீதையும் ஒன்றுசேர முடியவில்லை. செவ்வாய் தோஷமுள்ள பெண்கள் சீதையின் வாழ்க்கையைப் போன்ற வாழ்வை அடைவார்கள். எனவே ஆண்கள், தங்கள் திருமண சமயத்தில், ஏதேதோ பொருத்தங்களைப் பாராமல், அந்தப் பெண்ணிற்கு செவ்வாய் தோஷம் உள்ளதா என்று மட்டும் கவனமாகப் பார்த்துத் திருமணம் செய்யவேண்டும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-12/chevaidosham-t.jpg)