புத்திர காரகன் என்றும், தன காரகன் என்றும் போற்றப்படும் குரு பகவானின் ஆளுமை கொண்டது வாரத்தின் ஐந்தாவது நாளான வியாழக்கிழமை.

"குரு பார்க்க கோடி நன்மைகள் உண்டாகும்' என்பது பழமொழி. அந்த குருவின் நாளான வியாழக்கிழமையைப் பயன்படுத்தி நமது வாழ்வின் மேன்மைக்கும், அழகு மழலையின் வரவுக்கும், நாம் செய்யவேண்டியவற்றைக் காணலாம்.

வியாழக்கிழமை, 3, 12, 21, 30-ஆம் தேதிகள், தனுசு, மீனம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் குருபகவானின் நேரடி ஆளுமையின்கீழ் இருப்பவர்கள்.

"குரு தோஷம் குலநாசம்' என்பார்கள்.

ஏதோவொரு சந்தர்ப்பத்தில் நமக்கு நேர்ந்த குரு தோஷத்திற்காக குழந்தைகள் சார்ந்த பிரச்சினைகளை நாம் அனுபவிக்க நேரிடுகின்றது. மேலும் குருவின் பலமில்லாதவர்களுக்கு ஒரு நல்ல வழியை யாராலும் காட்டமுடியாது.

நாம் நிறைய நபர்களுடைய வாழ்க்கைப் பயணத்தைக் கண்காணித்திருப்போம்.

ss

அவர்களில் சிலருக்கு யாரோ ஒருவர் "இது சரி', இது தவறு; என்று ஆலோசனை கூறி வழிநடத்தி வெற்றியும்பெற வைத்திருப்பார்கள். இவர்களின் ஜாதகத்தை ஆராயும்பொழுது இங்கு குருவின் தன்மை சிறப்பாக அமைந்துள் ளது.

தட்சிணாமூர்த்தியும், வியாழபகவானான குருவும் ஒன்றல்ல என்ற சிந்தனை நமக்கு ஆழமாக பொதிந்திருக்கவேண்டும். தட்சிணா மூர்த்தி ஞானத்தை நல்குபவர் இவரை வியாழக்கிழமையன்று மட்டும் வணங்குவதென்பது ஒரு சரியான அணுகு முறை கிடையாது.

Advertisment

எல்லா நாட்களிலும் வணங்கத்தக்க தெய்வ ரூபமாகும் அதேபோன்று கொண்டைக்கடலை மாலை, மஞ்சள் நிற ஆடை ஆகியவை குரு பகவானான பிரகஸ்பதிக்குதானே தவிர தட்சிணாமூர்த்திக்கு உரியதல்ல. ஆகமத்தில் வெண்மை நிற உடை என்றுதான் கூறப் பட்டுள்ளது.

எத்தனையோ வேத ஆகமங்களைத் தன்னுள் அடக்கி, தனித்து மௌனமாய் சனகாதி முனிவர்களுக்கு உபதேசிக்கும் அந்த அருட்பெரும் ஆற்றல் அளப்பரியது என்றாலும், இவர்கள் இருவருக்குமான வேறுபாட்டை அறிவது மிகவும் அவசியத் திலும் அவசியமாகும்.

அதேபோன்று பாதகாதிபதி தசை நடந்தாலும், அஷ்டமாதிபதி தசை நடந்தாலும், குருவின் பார்வை தசாநாதனுக்கும், புக்தி நாதனுக்கோ, இருந்துவிட்டால் அவர்கள் அந்த அளவிற்கு வலியினை அனுபவிப்பதில்லை.

Advertisment

குரு நீசமான ஜாதகங்கள் உள்ள குடும்பங் களில் தந்தைவழி சார்ந்த இணக்கங்கள் அறவே இருப்பதில்லை. மேலும் மாந்தி குருவுடன் தொடர்பு பெறும்பொழுது அந்த குடும்பத்தின் வம்சாவளியில் கோவிலைச் சார்ந்த சொத்துக்களை ஆண்டதற்கான சான்றுகளும், கோவில் நிலத்தை கையகப் படுத்திய குற்றங்களும் காணப்படுகின்றன.

ஒரு ஜாதகத்தில் ஐந்தாம் அதிபதி மற்றும் குருவின் பலம் அற்றிருந்தால் அவர்களுக்கு குழந்தை சார்ந்த பிரச்சினைகள் இருக்கின்றது.

இந்த குருவின் தன்மைதான் கர்ப்பப் பையின் வலிமையும், கருமுட்டை ஒரு குழந்தையாக மாறும் ஆற்றலையும் தன்வயப் படுத்தி வைத்திருக்கிறது. என்னதான் நவீன உலகில் ஒமஒ, ஒயஎ, ஒஈநஊ போன்ற நவீன சிகிச்சைகள் கோலுன்றியிருந்தாலும், அவற்றின் செயல்பாடுகள் ஒரு கருமுட்டையையும், உயிர் அணுவையும், கருப்பைக்குள் கொண்டுசென்று விடும்வரையில் மட்டும்தான்.

ஆனால் அந்த கருவானது ஊய்க்ர்ம்ங்ற்ழ்ண்ன்ம் என்னும் சுற்று சுவற்றில் தன்னை ஒட்டவைத்து ஒரு முழு வளர்ச்சிபெற குழந்தையாக மாறுவதென்பது குருவின் கையில்தான் உள்ளது.

அதேபோன்று குருவின் ஆட்சி வீடான தனுசு, மீனம் ஆகியவற்றில் தனுசு கால புருஷனுக்கு ஒன்பதாம் வீடாக அமைந்து, எல்லாவித பாக்கியங்களும் அளிக்கக் காத்திருக்கின்றது.

ஒரு தனி மனிதனின் மேன்மை பொருந்திய வாழ்க்கையானது அவன் பெற்றுள்ள பாக்கியத்தைச் சார்ந்தே அமையும்.

மேலும் தான் பெற்ற அனுபவத்தையும், இணைத்து அவன் வாழ்க்கை சிறப்புறும். எனவேதான் குருவிற்கு இத்துணை பெருமைகளும்.

தனுசில் அமையப்பெற்ற முழுமுதல் மூல நட்சத்திரம், ஒரு உயிரின் மூலத்தைத் தன்வயப்படுத்தி பல சூட்சுமங்களை கையகப்படுத்திக்கொண்டு பற்பல நிகழ்வுகளை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றது.

எனவேதான் காலபுருஷனுக்கு ஒன்பதாம் வீடான தனுசில் எந்த கிரகங்களும் பகையோ, நீசமோ பெறுவதில்லை.

செய்யக்கூடியவை வியாழக்கிழமையன்று வங்கி சார்ந்த வேலைகளை முடிப்பது சிறப்பு.

புது நகை வாங்கலாம் ஜீவசமாதி வழிபாடு, மகான்களின் வழிபாடு சிறப்பினைத் தரும்.

செய்யக்கூடாதவை தங்க நகைகள் அடகு வைக்கக்கூடாது.

நெடுநாள் சேமித்த பணத்தை மற்றவர்களுக்கு அளிக்கக்கூடாது.

பயணம் செல்வதைத் தவிர்ப்பது சிறப்பு.

வியாழனன்று துணிகளை துவைக்கக்கூடாது.

வியாழக்கிழமையன்று மாலை 5-30 முதல் 8-30 வரையிலான நேரத்தில் குபேர தீபமேற்றவேண்டும்.

குபேர பகவானுக்கு பால் அன்னம், பால்கோவா போன்ற பிரசாதங்களை வைத்து பூஜிக்கலாம்.

குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு 16 வியாழக்கிழமைகள் உருட்டு மஞ்சளை ஒவ்வொன்றாக எடுத்துச் சென்று நவகிரகத்தில் அமையப்பெற்றுள்ள குரு பகவானிடம் வைத்து வணங்கி, ஒரு மஞ்சள் துணியில் 16 மஞ்சள் சேரும்வரை வைத்து வரவேண்டும்.

இதனை ஊறவைத்து அரைத்து குரு பகவானின் பாதத்தில் பூசி குங்குமப் பொட்டு வைத்து தீப, தூபங்கள் காட்டி பதினாறாவது வாரம் தங்களின் சங்கல்பத்தை முடிக்க அற்புதமான குழந்தை வரம் கிடைக்கும்.

வியாழக்கிழமையன்று பசு மாட்டிற்கு ஏதாவதொரு கிழங்கு வகையை தானமாக வழங்குவதனால் நெடுநாள் குணமாகாத நோய்கள் குணமாகி செல்வவளம் பெருகும்.

வியாழனன்று மாலை இரண்டு பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பச்சைக் கற்பூரம் ஆகியவற்றை ஒரு மண் பாத்திரத்தில் போட்டு எரித்து அந்தப் புகையை வீட்டில் காண்பிக்க வீட்டில் நிலவியிருக்கும் எதிர்மறை ஆற்றலின் தாக்கம் குறைந்து செல்வச் செழிப்பு ஏற்படும்.

வியாழன் இரவு தூங்கச் செல்லும்பொழுது "தனசம்ரத்தி' என்று 27 முறை கண்களை மூடி தியானித்து தூங்கினாள் என்றென்றும் தனக் குறைபாடு இருக்காது.

குருவிற்கு உகந்த வடகிழக்கு மூலையில் ஒரு பித்தளைப் பாத்திரத்தில் வியாழன்தோறும் ஒரு எலுமிச்சம் பழமும், அறுகம் புல்லும் போட்டுவைக்க, கௌரவமான, மேன்மைமிக்க வாழ்வை அந்த வம்சத்தைச் சார்ந்த அனைவரும் அனுபவிப்பார்கள்.

அரசமர குச்சிகளை வியாழனன்று காலை வீட்டில் சாம்பிராணியுடன் சேர்த்துப் புகை போட படிக்கும் குழந்தைகளின் ஆற்றல் அதிகரித்து கல்வியில் கவனத்தைக் குவிப்பார்கள்.

செல்: 80563 79988