ஜாதகத்தில் மிக முக்கியமானது, நாம் பிறந்த நட்சத்திரத்தை வைத்துக் காணும் தாரா பலனாகும்.
நட்சத்திர அடிப்படையில் இன்று நம் வாழ்க்கையில் இது தான் நடக்குமென்று தெரிவிப்பதே தாரா பலன். இப்பலனை நாம் எப்படித் தெரிந்துகொள்வது? இதற்கு முக்கியமானது நாம் பிறந்த நம்முடைய ஜென்ம நட்சத்திரமாகும்.
உதாரணத்திற்கு, இருபத்தேழு நட்சத்திரங் களுக்கும் முதல் நட்சத்திரமான அசுவினி நட்சத்திரத்தை எடுத்துக்கொள்வோம்.
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முதல் நட்சத்திரமாக அசுவினியை எழுதிக் கொள்ளுங்கள்.
அசுவினியி-ருந்து அடுத்து வரும் நட்சத்திரங்களை ஒவ்வொன் றாக எழுதிவாருங்கள். அப்படி எழுதி வரும்போது-
1. அசுவினி, 2. பரணி, 3. கிருத்திகை, 4. ரோகிணி, 5. மிருகசீரிடம், 6. திருவாதிரை, 7. புனர்பூசம், 8. பூசம், 9. ஆயில்யம் என்று ஒன்பது நட்சத்திரங்கள் முடிந்திருக்கும். இந்த ஒன்பது நட்சத்திரங்களைத் தொடர்ந்து, அடுத்து வரும் நட்சத்திரங்களை மீண்டும் 1--ருந்து 9-க்குள் வரிசைப்படுத்துங்கள்.
1. மகம், 2. பூரம், 3. உத்திரம், 4. அஸ்தம், 5. சித்திரை, 6. சுவாதி, 7. விசாகம், 8. அனுஷம், 9. கேட்டை என்று, இந்த இரண்டாவது சுற்றில் அடுத்த ஒன்பது நட்சத்திரங்கள் முடிந்திருக்கும்.
இருபத்தேழு நட்சத்திரங்களில், மேலும் ஒன்பது நட்சத்திரங்கள் இருக்கின்றன. அவற்றையும் இதேபோல் தொடர்ந்து வரிசைப்படுத்துங்கள்.
1. மூலம், 2. பூராடம், 3. உத்திராடம், 4. திருவோணம், 5. அவிட்டம், 6. சதயம், 7. பூரட்டாதி, 8. உத்திரட்டாதி, 9. ரேவதி என்று எழுதி முடித்த நிலையில், இப்போது உங்கள் ஜென்ம நட்சத்திரத்தில் தொடங்கி மூன்று சுற்றுகளிலும் இருபத்தேழு நட்சத்திரங்கள் அடங்கியிருக்கும்.
இதில், 1-ஆம் எண்ணுக்குள் வருகின்ற மூன்று நட்சத்திரங்கள் அசுவினி, மகம், மூலம் ஆகியவையாகும். இந்த மூன்று நட்சத்திரங்களும் உங்கள் ஜென்ம தாரைக்குரிய கேது பகவானின் நட்சத்திரங்களாகும்.
இந்த ஜென்ம தாரைக்குரிய நட்சத்திரங் களை நீங்கள் கவனித்தால், முதல் வரிசையில் வருகின்ற மூன்று நட்சத்திரங்களும் உங்கள் நட்சத்திரத்தின் கிரகத்திற்குரிய நட்சத்திரங் களாகவே இருக்கும்.
ஜென்ம தாரைக்குரிய நட்சத்திர நாட்களில் நமக்கு மனக்குழப்பம் அதிகரிக்கும். அதனால் செயல்களில் தடுமாற்றங்கள் உண்டாகும். எந்தவொரு முடிவையும் எடுக்கமுடியாமல் குழப்பமும், தடைகளும் ஏற்படும் என்பதால், இந்த மூன்று நட்சத்திர நாட்களிலும் நிதான மாக செயல்படவேண்டும். புதிய முடிவுகளை, முயற்சிகளை இந்த நாட்களில் எடுத்திடக் கூடாது.
இதேபோல், 2-ஆம் எண்ணுக்குள் வருகின்ற மூன்று நட்சத்திரங்கள் பரணி, பூரம், பூராடம்.
இவை சம்பத்து தாரைக்குரிய நட்சத்திரங் களாகும். இந்த நட்சத்திர நாட்களில் பண வரவு அதிகரிக்கும். மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும். நினைப்பவை நடந்தேறும். புதிய முதலீடுகள், நிரந்தர வைப்பு, வங்கிப் பரிமாற்றம், கணக்கு ஆரம்பித்தல், உயில் எழுதுதல், பத்திரப்பதிவு செய்தல், பொன், பொருள் வாங்குதல் போன்றவற்றை இந்த நாட்களில் மேற்கொள்ள நன்மையாகும்.
இதேபோல் 3-ஆம் எண்ணுக்குள் வருகின்ற மூன்று நட்சத்திரங்கள் கிருத்திகை, உத்திரம், உத்திராடம். இவை விபத்து தாரைக்குரிய நட்சத்திரங்களாகும்.
இந்த நட்சத்திர நாட்களில் வெகுதூரப் பயணங்களைத் தவிர்ப்பதும், யாத்திரைகள் மேற்கொள்வதைத் தள்ளிப் போடுவதும், புதிய ஆட்களுடன் வெளியில் செல்வதைத் தவிர்ப்பதும் நன்மையாகும். இயலாதபட்சத்தில் பயணத்தில் அதிகபட்ச கவனம் செலுத்தவேண்டும்.
அடுத்து 4-ஆம் எண்ணுக்குள் வருகின்ற மூன்று நட்சத்திரங்கள் ரோகிணி, அஸ்தம், திருவோணம். இவை சேம தாரைக்குரிய நட்சத்திரங்களாகும். இந்த நட்சத்திர நாட்களில், முயற்சிகள் நன்மையாகும். எதிர் பார்ப்புகள் நிறைவேறும். தமக்காகவும், மற்றவர்களுக்காகவும் வீடு, வாகனம், நகை, சொத்து வாங்கும் முயற்சிகளில் வெற்றியுண்டாகும். சுகமான நிலை என்பவற்றுக்கெல்லாம் இந்த நட்சத்திர நாட்கள் ஏற்றவையாக இருக்கும்.
அடுத்து 5-ஆம் எண்ணுக்குள் வருகின்ற மூன்று நட்சத்திரங்கள் மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம். இவை பிரத்யகு தாரைக் குரிய நட்சத்திரங்களாகும். இந்த நட்சத்திர நாட்களில் நாம் மேற்கொள்ளும் சின்னச்சின்ன முயற்சிகளும் இழுபறியாகும். அதிகபட்ச பிரயாசைப்பட வேண்டியதாக இருக்கும். முயற்சிகள் ஏதேனுமொருவகையில் தள்ளிப்போகும் என்பதால் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காமல் போகும். அதனால் இந்த நாட்களில் அமைதியாக இருப்பதுடன், பணம் உட்பட எந்த ஒன்றையும் யாருக்கும் கொடுக்கக்கூடாது. இந்த ஐந்தாம் தாரைக்குரிய நட்சத்திரக்காரர்களுடன் நட்பு, உறவென்ற நிலை வரும்போது அதனால் பாதகங்களே உண்டாகும்.
அடுத்து 6-ஆம் எண்ணுக்குள் வருகின்ற மூன்று நட்சத்திரங்கள் திருவாதிரை, சுவாதி, சதயம். இவை சாதகத் தாரைக்குரிய நட்சத்திரங்களாகும். இந்த நட்சத்திர நாட்களில் நாம் ஈடுபடும் செயல்கள் நினைத்த படியே நிறைவேறும். எதிர்பார்ப்புகள் எல்லாமே நிறைவேறி நன்மையை ஏற்படுத்தும். வேலையில்லாதவர்கள் புதிய வேலைக்குரிய முயற்சியை மேற்கொள்ளுதல், பெண் பார்க் கும் செயலுக்கு இந்த தாரைக்குரிய நட்சத்திர நாட்கள் சாதகமானவையாக இருக்கும்.
அடுத்து 7-ஆம் எண்ணுக்குள் வருகின்ற மூன்று நட்சத்திரங்கள் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி. இவை வதை தாரைக்குரிய நட்சத்திரங்களாகும். இந்த நட்சத்திர நாட்களில் முயற்சிகள் நிறைவேறாமல் போவதுடன், அதனால் சங்கடங் களையும் அடையவேண்டியதாகிவிடும். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்கள் நம்மை எல்லாவகையிலும் வாட்டி வதைத்துவிடும். புதிய முயற்சிகளை இந்த நாட்களில் மேற்கொள்ளாம-ருப்பது நன்மையாகும். உடல் பாதிப்பு களும் ஏற்படலாம்.
அடுத்து 8-ஆம் எண்ணுக் குள் வருகின்ற மூன்று நட்சத் திரங்களும் பூசம், அனுஷம், உத்திரட்டாதி. இவை மைத்திர தாரைக்குரிய நட்சத்திரங்களாகும். இந்த நட்சத்திர நாட்களில் நாம் மேற்கொள்ளும் முயற்சிகளும், ஈடுபடும் செயல்களும் நன்மையில் முடியும். எதிர்பார்ப்புகள் எளிதாக நிறைவேறும். புதிய இடம் வாங்குதல், திருமண முயற்சி மேற்கொள்ளுதல், வி.ஐ.பிகளை சந்தித்தல் என்று எல்லாவிதமான செயல்களும் இந்த நட்சத்திர நாட்களில் சாதகமாகும்.
அடுத்து 9-ஆம் எண்ணுக்குரிய மூன்று நட்சத்திரங்கள் ஆயில்யம், கேட்டை, ரேவதி.
இவை பரம மைத்திர தாரைக்குரிய நட்சத்திரங் களாகும். இந்த நட்சத்திர நாட்களில் அத்தியா வசிய முயற்சிகளை மட்டும் மேற்கொள்ளலாம். இன்றே செய்தாகவேண்டும்; அடுத்த நாளில் இச்செயலை செய்வதற்கு இடமில்லை என்பதுபோன்ற செயலை இந்த நட்சத்திர நாட்களில் மேற்கொள்ளலாம். எதை நீங்கள் எதிர்பார்த்து செயல்படுகிறீர்களோ அதை இந்த நட்சத்திர நாட்களில் அடையமுடியும்.
இப்படி நம் ஒவ்வொருவரின் ஜென்ம நட்சத்திரத்தையும் முதலாவதாக வைத்துக் கணக்கிட்டு உங்களுக்குரிய நல்ல நாட்களை யும், பாதகமான நாட்களையும் தெரிந்து கொள்ளலாம்.
ஜென்ம நட்சத்திரம் என்று பார்க்கும் போது அந்த நட்சத்திரம் சூரியன் தொடங்கி கேது வரையிலான ஒன்பது கிரகங்களுக்குள், ஒவ்வொரு கிரகத்திற்கும் மூன்று நட்சத்திரங் கள்வீதம் அடங்கிவிடும்.
சூரியனுக்கு கிருத்திகை, உத்திரம், உத்திராடம்.
சந்திரனுக்கு ரோகிணி, அஸ்தம், திருவோணம்.
செவ்வாய்க்கு மிருக சீரிடம், சித்திரை, அவிட்டம்.
ராகுவுக்கு திருவாதிரை, சுவாதி, சதயம்.
குருவுக்கு புனர்பூசம், விசாகம், பூரட்டாதி.
சனிக்கு பூசம், அனுஷம், உத்திரட்டாதி.
புதனுக்கு ஆயில்யம், கேட்டை, ரேவதி.
கேதுவுக்கு அசுவினி, மகம், மூலம்.
சுக்கிரனுக்கு பரணி, பூரம், பூராடம்.
சூரியனின் நட்சத்திரங்களில் பிறந்தவர் களுக்குத் தாரா பலன்
1. சூரியனுக்குரிய கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த வர்களுக்கு (1) ஜென்ம தாரையாக இந்த நட்சத்திரங்களே வரும்.
2. ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய மூன்றும் சம்பத்து தாரையாகும்.
3. மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய மூன்றும் விபத்து தாரையாகும்.
4. திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய மூன்றும் ஷேம தாரையாகும்.
5. புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய மூன்றும் பிரத்தியகு தாரையாகும்.
6. பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய மூன்றும் சாதக தாரையாகும்.
7. ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய மூன்றும் வதை தாரையாகும்.
8. அசுவினி, மகம், மூலம் ஆகிய மூன்றும் மைத்திர தாரையாகும்.
9. பரணி, பூரம், பூராடம் ஆகிய மூன்றும் பரம மைத்திர தாரையாகும்.
சந்திரனின் நட்சத்திரங்களில் பிறந்தவர் களுக்குத் தாரா பலன்
1. சந்திரனுக்குரிய ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த வர்களுக்கு (1) ஜென்ம தாரையாக இந்த நட்சத்திரங்களே வரும்.
2. மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய மூன்றும் சம்பத்து தாரையாகும்.
3. திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய மூன்றும் விபத்து தாரையாகும்.
4. புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய மூன்றும் ஷேம தாரையாகும்.
5. பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய மூன்றும் பிரத்தியகு தாரையாகும்.
6. ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய மூன்றும் சாதக தாரையாகும்.
7. அசுவினி, மகம், மூலம் ஆகிய மூன்றும் வதை தாரையாகும்.
8. பரணி, பூரம், பூராடம் ஆகிய மூன்றும் மைத்திர தாரையாகும்.
9. கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய மூன்றும் பரம மைத்திர தாரையாகும்.
செவ்வாயின் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்குத் தாரா பலன்
1. செவ்வாய்க்குரிய மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த வர்களுக்கு (1) ஜென்ம தாரையாக இந்த நட்சத் திரங்களே வரும்.
2. திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய மூன்றும் சம்பத்து தாரையாகும்.
3. புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய மூன்றும் விபத்து தாரையாகும்.
4. பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய மூன்றும் ஷேம தாரையாகும்.
5. ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய மூன்றும் பிரத்தியகு தாரையாகும்.
6. அசுவினி, மகம், மூலம் ஆகிய மூன்றும் சாதக தாரையாகும்.
7. பரணி, பூரம், பூராடம் ஆகிய மூன்றும் வதை தாரையாகும்.
8. கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய மூன்றும் மைத்திர தாரையாகும்.
9. ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய மூன்றும் பரம மைத்திர தாரையாகும்.
ராகுவின் நட்சத்திரங்களில் பிறந்தவர் களுக்குத் தாரா பலன்
1. ராகுவுக்குரிய திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு (1) ஜென்ம தாரையாக இந்த நட்சத்திரங்களே வரும்.
2. புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய மூன்றும் சம்பத்து தாரையாகும்.
3. பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய மூன்றும் விபத்து தாரையாகும்.
4. ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய மூன்றும் ஷேம தாரையாகும்.
5. அசுவினி, மகம், மூலம் ஆகிய மூன்றும் பிரத்தியகு தாரையாகும்.
6. பரணி, பூரம், பூராடம் ஆகிய மூன்றும் சாதக தாரையாகும்.
7. கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய மூன்றும் வதை தாரையாகும்.
8. ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய மூன்றும் மைத்திர தாரையாகும்.
9. மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய மூன்றும் பரம மைத்திர தாரையா கும்.
குருவின் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்குத் தாரா பலன்
1. குருவுக்குரிய புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த வர்களுக்கு (1) ஜென்ம தாரையாக இந்த நட்சத்திரங்களே வரும்.
2. பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய மூன்றும் சம்பத்து தாரையாகும்.
3. ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய மூன்றும் விபத்து தாரையாகும்.
4. அசுவினி, மகம், மூலம் ஆகிய மூன்றும் ஷேம தாரையாகும்.
5. பரணி, பூரம், பூராடம் ஆகிய மூன்றும் பிரத்தியகு தாரையாகும்.
6. கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய மூன்றும் சாதக தாரையாகும்.
7. ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய மூன்றும் வதை தாரையாகும்.
8. மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய மூன்றும் மைத்திர தாரையாகும்.
9. திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய மூன்றும் பரம மைத்திர தாரை யாகும்.
சனியின் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்குத் தாரா பலன்
1. சனிக்குரிய பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த வர்களுக்கு (1) ஜென்ம தாரையாக இந்த நட்சத்திரங்களே வரும்.
2. ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய மூன்றும் சம்பத்து தாரையாகும்.
3. அசுவினி, மகம், மூலம் ஆகிய மூன்றும் விபத்து தாரையாகும்.
4. பரணி, பூரம், பூராடம் ஆகிய மூன்றும் ஷேம தாரையாகும்.
5. கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய மூன்றும் பிரத்தியகு தாரையாகும்.
6. ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய மூன்றும் சாதக தாரையாகும்.
7. மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய மூன்றும் வதை தாரையாகும்.
8. திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய மூன்றும் மைத்திர தாரையாகும்.
9. புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய மூன்றும் பரம மைத்திர தாரையாகும்.
புதனின் நட்சத்திரங்களில் பிறந்தவர் களுக்குத் தாரா பலன்
1. புதனுக்குரிய ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் மூன்றில் பிறந்த வர்களுக்கு (1) ஜென்ம தாரையாக இந்த நட்சத்திரங்களே வரும்.
2. அசுவினி, மகம், மூலம் ஆகிய மூன்றும் சம்பத்து தாரையாக வரும்.
3. பரணி, பூரம், பூராடம் ஆகிய மூன்றும் விபத்து தாரையாகும்.
4. கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய மூன்றும் ஷேம தாரையாகும்.
5. ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய மூன்றும் பிரத்தியகு தாரையாகும்.
6. மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய மூன்றும் சாதக தாரையாகும்.
7. திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய மூன்றும் வதை தாரையாகும்.
8. புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய மூன்றும் மைத்திர தாரையாகும்.
9. பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய மூன்றும் பரம மைத்திர தாரையாகும்..
சுக்கிரனின் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்குத் தாரா பலன்
1. சுக்கிரனுக்குரிய பரணி, பூரம், பூராட நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு (1) ஜென்ம தாரையாக இந்த நட்சத்திரங்களே வரும்.
2. கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய மூன்றும் சம்பத்து தாரையாக வரும்.
3. ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய மூன்றும் விபத்து தாரையாகும்.
4. மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய மூன்றும் ஷேம தாரையாகும்.
5. திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய மூன்றும் நட்சத்திரங்களும் பிரத்தியகு தாரையாகும்.
6. புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய மூன்றும் சாதக தாரையாகும்.
7. பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய மூன்றும் வதை தாரையாகும்.
8, ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய மூன்றும் மைத்திர தாரையாகும்.
9. அசுவினி, மகம், மூலம் ஆகிய மூன்றும் பரம மைத்திர தாரையாகும்.
மேலேவுள்ள ஒவ்வொரு கிரகங்களின் பகுதியிலும் 1, 2, 3 என்று எண்களை வழங்கி யிருப்பதற்குக் காரணம் எளிதாக உங்களுக்குரிய பலன்களைத் தெரிந்துகொள்வதற்காகத் தான்.
இவற்றில், 1, 3, 5, 7 பிரிவுகளில் வரும் 12 நட்சத்திரங்களுடைய நாட்களில் மிகவும் கவனமாக செயல்படுவதுடன், அன்றைய நாட்களில் புதிய முயற்சிகளில் ஈடுபடாம-ருப்பது நன்மையாகும்.
திருமணத்திற்கு வரன் பார்க்கும்போதும், தொழி-ல் பங்குதாரர்களைத் தேர்வுசெய்யும் போதும் உங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்கு 1, 3, 5, 7 ஆகிய பிரிவுகளில் வரும் 12 நட்சத்திரத்தினரை யும் ஒதுக்குவது நன்மையாகும். புதிய முயற்சி கள் மேற்கொள்ளும்போதும், சொத்து, வாகனம், நகை வாங்கும்போதும், பயணம் மேற்கொள்ளும்போதும் இந்த நட்சத்திர நாட்களைத் தவிர்ப்பது நன்மையாகும்.
செல்: 94443 93717