ப்போதெல்லாம் நைட் ஷிப்ட் சாதாரணமாகி விட்டது. வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு இந்தியாவிலிருந்து வேலைசெய்வதால் அவர்கள் நேரப்படி நாம் பணத்திற்காக அல்லது வசதிக்காக அல்லது வேறு ஏதாவதொரு காரணத்திற்காக என இரவில் வேலைசெய்வது தவிர்க்கமுடியாததாகி விடுகிறது.

"ஜ்ர்ழ்ந் ச்ழ்ர்ம் ட்ர்ம்ங்' என வீட்டிலிருந்து வேலைபார்க்கும் முறை வந்தபிறகு...

இது இன்னும் வேறுமாதிரி போய் விட்டது...

சாதாரணமாக இப்போது வீட்டில் இருப்பவர்கள்கூட இரவு நேரத்தில் கண்விழித்து டிவி பார்ப்பது, படுக்கையில் இருந்தபடி மொபைலைத் தடவுவது என, சூரியன் உதிக்கும்போது உறங்கச் சென்றுவிட்டு... எழுந்த சில மணி நேரத்தில் தூக்கமில்லை என்று புலம்புவார்கள்.

Advertisment

tt

"தூக்கத்தின் ஒரு கால் குறைந்தால் துக்கம்' என்று கவிதை நடையில் சொன்னாலும், சோறு இல்லாமல்கூட இருந்துவிடலாம்- ஆனால் தூக்கமில்லாமல் இருக்கமுடியாது.

கண்களை மூடி கனவுகளைக் காண முடியாவிட்டாலும், கண்கள் ஓய்வெடுக்கும்போதுதான் மற்ற உறுப்புகள் வேலைசெய்யத் தொடங்குகின்றன. தூக்கம் கண்களைத் தழுவினால்தான் நெஞ்சில் அமைதி நிலவும்.

தூக்கமின்மைக்கு கடன் தொல்லை, காதல் கனவு என பல காரணம் சொன்னா லும், தூக்கம் சொல்லும் ஜோதிடக் குறிப்பு களைத் தெரிந்துகொள்ள வேண்டாமா?

மாத்திரை போட்டாலும் தூக்கமில்லையென்று சொல்பவர்களும், "மெத்தை வாங்கினேன் தூக்கத்தை வாங்கவில்லை' என்று ஏங்குபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்..

அது சரி... அதை எப்படித் தெரிந்துகொள்வது?

தூக்கத்தை தொலைத்தவரா... தூக்கத்தில் திளைத்தவரா என்பதை, ஜாதகக் கட்டத்திலுள்ள 12-ஆமிடத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். 12-ஆமிடம் சுகமாக இல்லையென்றால், தூக்கத்தை விலைகொடுத்துதான் வாங்கவேண்டியது இருக்கும். விலைகொடுத்தாலும் கிடைக்காத தூக்கத்தை என்ன செய்ய? 12-ஆமிடத்தில் சர்ப்ப கிரகமோ, அதன் சேர்க்கையோ இருந்துவிட்டால் அவர்கள் அநேகமாக நைட் ஷிப்ட் பேர்வழியாக இருப்பார்கள்.

6, 4-க்கு உரியவர்கள் இங்கே இருந்துவிட்டால் அவர்கள், திடீர் திடீரென தூக்கத்தில் விழித்துக் கொள்வார்கள். 2-க்குரியவன் 12-ல் இருந்தால் கனவுத் தொல்லையில் தூக்கத்தைத் தொலைப்பார்கள்.

செவ்வாய் அல்லது சனி சயன ஸ்தானத்தைப் பார்த்தால்போதும்; "தூக்கமே உன் விலை என்ன?' என்று கேட்பார்கள்.

தூக்கத்தில் எழுந்து தண்ணீர் குடிப்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? இன்னும் சிலர் தலைமாட்டில் ஒரு சொம்பில் தண்ணீர் வைத்துக்கொண்டு விடுவார்கள். இவர்களுக்கு 12-ஆம் அதிபதி சந்திரன் தொடர்பிருக்கும்.

"அட... தூக்கத்தில் இருக்குதா இத்தனை சுகம்' என்று கேட்கும் உங்கள் எண்ணம் புரிகிறது. உண்மைதான். தூக்கம் என்பது ஆரோக்கியத்திற்குக் கிடைத்த உரம். அது நிம்மதியான ஆழ்ந்த தூக்கமாக அமைந்துவிட்டால் அதுவே அவருக்குக் கிடைத்த வரம்.

ஒரு மனிதனின் ஆரோக்கியம் அவரின் தூக்கத்தில்தான் இருக்கிறது. வரமாகப் பெறும் தூக்கத்தை சாபமாக ஏற்றுக் கொள்ளக்கூடாது.

"சரிங்க ஐயா; இப்போ தூக்கம் வர ஏதாவது டிப்ஸ் சொல்லுவீங்களா?' என்று ஆவலுடன் காத்திருப்பவர்களுக்கு சில டிப்ஸ் சொல்கிறேன்... முயற்சி செய்து பாருங்கள்...

Advertisment

tt

சிலர் "ஒன்று, இரண்டு என எண்ணிக்கொண்டு வாருங்கள்' என்பார்கள், சிலர், "புத்தகம் படியுங்கள்' என்பார்கள். இன்னும் சிலர் "இனிமையான இசையைக் கேளுங்கள்' என்று சொல்வார்கள். இப்படி ஒவ்வொன்றும் இருக்கும்போது நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் என்று யோசிக்கிறீர்கள்.

தமிழால் தூங்கவைக்க முடியும் என்று சொன்னால் உங்களுக்கு ஆச்சரியமாகத் தான் இருக்கும். ஆனால் அது உண்மை என்பதைப் புரிந்துகொண்டால் இன்பமாக இருக்கும்.

ஆழ்ந்து மூச்சைவிட்டு, நெடில் எழுத்தை நீட்டி குறில் எழுத்தைச் சேர்த்து சொல்லிப்பாருங்கள்; தூக்கம் உங்களைத் தேடிவரும்.

அத்துடன் சில பழக்கங்களைக் கைவரப் பழகிக்கொண்டால் போதும்...

இரவு உணவுக்கும் உறக்கத்திற்கும் இடையில் குறைந்தபட்சம் ஐந்து மணிநேரம் இடைவெளி இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

வாய்ப்பு கிடைப்பவர்கள் தூங்குவதற்கு முன்பாக ஒரு குளியல் போட்டுத் தூங்கச் செல்லுங்கள்.

படுக்கையில் தலையணை மட்டுமே இருக்கட்டும். செல்போன் வேண்டாம். படுக்கையில் படுத்துக்கொண்டு சமூக வலையில் மேயக்கூடாது.

இன்று இரவு நிம்மதியாகத் தூங்கவேண்டுமென்று விரும்பினால், அன்று அதிகாலையில் எழுந்து கொஞ்ச நேரம் சூரிய ஒளியில் நடமாடுங்கள்...

சின்ன குழந்தையாக இருந்தால் அம்மா தாலாட்டு பாடுவார்கள். பெரிய குழந்தைகளுக்கு என்ன செய்ய..?

அதற்குதான் இருக்கு தமிழ்ப் பாட்டு.

ஒரே ஒரு திருப்புகழ் போதும். உங்களுக்குப் பிடித்த திருப்புகழ் ஒன்றைப் பொருள்புரிந்து அமைதியான சூழலில் பாடுங்கள்; பாடியபிறகு உறக்கத்திற்குச் செல்லுங்கள். பல திருப்புகழ்ப் பாடல்கள் சிறிய அளவில், குறைந்த நேரத்தில் படித்துப் பாடும்படியாகவே இருக்கும்.

இதில், தினமும் ஒரே திருப்புகழைப் படிப்பதற்கு பதிலாக, தினம் ஒரு திருப்புகழ் என பழக்கத்திற்குக் கொண்டுவாருங்கள். இதற்காகவே காலையில் அல்லது முதல் நாளில் அந்தத் திருப்புகழைப் படித்து பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

நீங்கள் நிம்மதியாக- அமைதியாகத் தூங்கியிருக்கிறீர்கள் என்பது, நீங்கள் எத்தனை உற்சாகமாக எழுந்திருக்கிறீர்கள் என்பதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

தமிழ் உங்களை நிம்மதியான உறக் கத்திற்கு அழைத்துச்செல்லும். தமிழால் முடியாதது எதுவுமில்லை என்பதை உறுதியாக நம்புங்கள். அது மொழி மட்டுமல்ல; மருந்தும்கூட என்பதைப் புரிந்துகொண்டால், தூக்கம் உங்களைத் தேடிவரும்.