கால ஓட்டத்தின் சலசலப்பில், கை சேரும் சில நிகழ்வுகள், நம்மை அறியாமலேயே பல பாடங்களை நமக்கு புகட்டி செல்கின்றது.
காலங்கள் நகர்ந்த பின்பு அதன் விளைவுகளையும், தகவல்களையும் சேகரித்தால் அந்த நிகழ்விற்கும் நம் வாழ்விற்கும் ஏதோ ஒரு தொடர்புள்ளதை மிக எளிதில் நம்மால் உணரமுடிகின்றது.
இதற்கு ஆகச் சிறந்த காரணமாக நட்சத்திரங்களின் சாபங்கள் என்று கையாளும்பட்சத்தில் அதன் தன்மை உண்மை என்கின்ற தெளிவு அதீத சதவிகிதத்தை நம்மிடம் தந்துசெல்கின்றது.
அதனைத் தொடர்ந்து அடுத்த மூன்று நட்சத்திரங்களான புனர்பூசம், பூசம், ஆயில்யத்தை காணலாம்.
புனர்பூசம்
காலபுருஷனுக்கு மூன்று மற்றும் நான்காம் இடமான மிதுனம் மற்றும் கடகத்தில் தன்னைப் பிரித்து அளித்து பயணிக்கும் புனர்பூசம், சனிபகவானின் சாபத்தைக்கொண்ட நட்சத்திரமாகும்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனிபகவான் மிதுனத்திற்கு எட்டு மற்றும் ஒன்பதாம் இடத்திற்கும், கடகத்திற்கு ஏழு மற்றும் எட்டாம் இடத்திற்கும் பொறுப்பேற்று அமர்கின்றார்.
இவர்களின் வாழ்வில் தொழில், பணி, சார்ந்த பிரச்சினைகள் எப்பொழுதுமே தொடர்ந்துகொண்டே இருக்கும்.
மேலும் திருமணம், தந்தைவழி சுகம், ஆயுள் சார்ந்த பயம், முதலீடு வலிகளில் நஷ்டம் போன்றவற்றை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு இவர்களை சார்ந்ததே.
கடகத்திற்கு ஆருயிர் நட்புகூட காலப் போக்கில் மிக எளிதில் எதிரியாக மாறிவிடும் சூழல் அமையும்.
தொழில் சார்ந்த விஷயத்தில் கூட்டாளி கள் அல்லாத தொழிலை அமைத்துக் கொள்வதே இவர்களுக்கு நன்மை பயக்கும்.
கூட்டாளிகளுடன் தொழில் அமைத்துக் கொண்டால் அபிவிருத்தி இல்லாமல் தொழில் முடங்குவதைவிட, மனரீதியான பிரச்சினைகளை உருவாக்கி தொழிலில் பிரிவினை ஏற்படும்.
இவர்களுக்கு முதுகு தண்டு, பாதம், செரிமான உறுப்பு போன்றவற்றில் சில பிரச்சினைகளைக் காணமுடிகின்றது.
தொழிலாளர்கள் இவர்களுக்கு இணக்கமாக அமைவது மிகக் கடினமாக இருக்கும். மேலும் சனி என்றால் முதியவர்கள் மற்றும் உடல்ரீதியான குறைபாடுகள் உள்ளவர்களை காரகமாக காட்டும். இவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யும்பொழுது இந்த சனியின் சாபம் குறைய தொடங்கும்.
மேலும் துப்புரவு தொழிலாளர்களுக்கு உணவு, தண்ணீர் போன்றவற்றை அடிக்கடி வழங்கிவர சில பிரச்சினைகளில் இருந்து மிக எளிதில் விடுபட முடியும்.
இவர்கள் வாணியம்பாடி அதிதீஸ்வரர் ஆலயத்திற்கு உங்களின் பிறந்த நட்சத்திரத் தன்று சென்று உங்களின் வயது பூர்த்தியாகி அடுத்த வயதிற்கு உண்டான எண்ணிக் கையில் தீபம் ஏற்றி அன்னதானமும், தண்ணீர் தானமும், வழங்கிவர மாபெரும் இடரிலிருந்து காக்கப்படுவீர்கள்.
அதேபோன்று சனி பகவானின் ஆலயங்களான திருநள்ளாறு மற்றும் குச்சனூர் சென்று வழிபடு வதும் பிரச்சினையின் தீவிரத்தை மிக எளிதில் குறைக் கும்.
உத்தியோகம் புருஷ லட்சணம் என்பது பழ மொழி. இந்த உத்தியோகத்தில் வருகின்ற அத்தனை இடர் பாடுகளையும் மேற்கூறிய வழிபாட்டின்மூலம் மிக எளிதில் கலைந்துவிட முடியும் என்பது கண்கண்ட உண்மை யாகும்.
அதோடு திருமணம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் ஆயுள் பயம் இவர்களை எப்பொழுதுமே பற்றிக் கொண்டே இருக்கும். மேற்கூறிய வழிபாட்டினை பின்தொடர்ந்து விளைவு களை குறைத்து வாழ்வில் வளம்பெறலாம்.
பூசம்
கடகத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட சனி பகவானின் நட்சத்திரமான பூசம், பிரம்மாண்ட நாயகன் ராகுவின் சாபத்தை பெற்ற நட்சத்திரமாகும்.
ராகு என்றால் மூதாதையர் என்பது அனைவரும் அறிந்ததே. இவர்களின் ஜாதகத்தை ஆய்வு செய்யும்பொழுது அதீத பித்ரு தோஷமும், பிரேத தோஷங்களும், மிக எளிதில் நமது கண்களுக்கு புலப்படுகின்றது.
இந்த பூச நட்சத்திரத்தில் பிறப்பெடுத்தவர்கள் தாத்தா வழி சொத்துக்காக பெரும் பாடுபட்டு பின்பு அதை அடையும் சூழலும் அல்லது தாத்தாவழி சொத்து எளிதில் கிடைத்து விட்டால் அதனால் ஏற்படும் பிரச்சினைகளை அனுபவிக் கும் தன்மையையும் உருவாகி இவர்களை உருகுலையே செய்கின்றது.
தனக்கென்று சொந்தமாக வீடு அற்ற இந்த ராகுபகவான் ஒரு ஜாதகத்தில் எந்த பாவகத்தில் அமருகின்றாரோ அந்த பாவகம் சார்ந்த வலியையும், வேதனைகளையும், மிக எளிதில் ஜாதகரின் வசம் சேர்த்துவிடுவதைக் காண முடிகின்றது.
குறிப்பாக ஏழாம் இடம் என்றால் திருமணம் தாமதமாவது அல்லது திருமணம் முடிந்தபின்பு இவர்களின் தாம்பத்திய வாழ்வில் பல பிரச்சினைகளை அளிப்பது போன்றவற்றை நிதர்சனத்தில் காண முடிகின்றது.
இவர்களுக்கு வெளிநாடு சார்ந்த பயணத்தில் இணக்கமற்ற சூழல் உருவாகும். முன்னோர் களின் ஆசி இவர்களை நெருங்குவது சற்று கடினமாகும்.
அதோடு இவர்களின் வம்சா வழியில் சர்பத்தினால் பிரச்சினைகளை அனுபவித்தவர்கள் மற்றும் சர்பத்தினால் இறந்தவர்களின் எண்ணிக்கைகள் காணப்படுகின் றது. ஒரு சிறிய விஷயத்தை மிக பிரம்மாண்டமாகக் காட்டி அதன் மூலம் ஏமாறும் தன்மை பூசத்தைச் சார்ந்தது.
இவர்கள் ராகு அமர்ந்த இடம் சார்ந்த பிரச்சினைகளையும், உறவுகளுக்கும், சற்று விட்டுக்கொடுத்து செல்வது சிறப்பினைத் தரும்.
பட்டுக்கோட்டை விளங்குளம் அட்சய புரீஸ்வரர் ஆலயத்திற்கு உங்களின் ஜென்ம நட்சத்திரத்தன்று சென்று, பூர்த்தியாகும் வயதிற்கு அடுத்த எண்ணிக்கையில் தீபமேற்றி, அன்னதானமும், தண்ணீர் தானமும், வழங்கு வதோடு ராகுவிற்கான ஸ்தலங்களுக்கும் சென்று வருவது சிறப்பு அளிக்கும் ஆயில்யம் புதனின் முதல் நட்சத்திரமான ஆயில்யம் சூரியனின் சாபத்தை பெற்ற நட்சத்திரமாகும்.
தந்தையின் வழியில் சில இன்னல்களையும், இடர்பாடுகளையும் அனுபவிக்கும் ஆயில்யம் தந்தைவழி உறவுகளாலும் வஞ்சனை மட்டுமே பெற்றிருக்கும்.
மேலும் கடகத்திற்கு இரண்டாம் பாவகமாக சூரியனின் சிம்மம் அமைவதால் வருமானம், குடும்பம் சார்ந்த விஷயத்தில் சுனக்கம் ஏற்படும்.
இவர்களின் பேச்சு வெளியில் அனல் பறக்குமே ஒழிய குடும்பத்தில் சற்றும் எடுபடாது.
நல்ல கல்வி இவர்களுக்கு இருந்தும் அந்த கல்வியின் பயனான வருமானம் இவர் களுக்கு கிடைப்பது அரிது. அரசு, அரசாங்க உத்தியோகம், இவர்களுக்கு அலைச்சலாகவும், எட்டாக்கனி யாகவும் அமைந்துவிடுகின்றது.
கொடுத்த வாக்கினை காப்பாற்ற பெரும் பாடுபட வேண்டிய சூழல் இவர்களுக்கு இருக்கும்.
மற்றவர்களுக்காக ஜாமீனுக்கு செல்வது இவர்களின் தரத்தை குறைத்து அதனால் பிரச்சினைகளை அனுபவிக்கும் சூழலை ஏற்படுத்தி விடுகின்றது. இவர் களின் தந்தைவழி உறவுகளில் ஒரு இனம் காணமுடியாத ரத்தம் சார்ந்த நோய் ஒன்று காணப்படுகின்றது.
கும்பகோணம்
திருதேவன்குடி கற்கடகேஸ்வரர் ஆலயத் திற்கு சென்று இவர்களின் ஜென்ம நட்சத் திரத்தன்று வயது பூர்த்தியாகி அடுத்த எண்ணிக்கையிலுள்ள தீபத்தை ஏற்றுவ தோடு, அன்னதானம் மற்றும் தண்ணீர் தானம் அளிப்பது சிறப்பு அளிக்கும்.
மேற்கூறிய பரிகாரங்கள் மட்டுமல்லாமல் எந்த கிரகத்தின் சாபம் அமைந்துள்ளதோ அந்த கிரகத்தின் காரக உறவுகளிடம் விட்டுக் கொடுத்து செல்வதும், அவர்களுக்கு உதவி செய்வதும் உங்களுக்கு சிறப்பானதொரு வாழ்க்கையை அளிக்க வழி வகுக்கும்.
அடுத்து: புனர்பூசம், பூசம், ஆயில்யம்
செல்: 80563 79988