ஸ்ரீராம பிரானின் ஜென்ம ஜாதகம். கடக லக்னம், கடக ராசி. இந்த ஜாதகத்தில் குரு, சனி, செவ்வாய், சுக்கிரன், சூரியன் ஆகிய ஐந்து கிரகங்களும் தங்களது உச்ச வீட்டில் அமர்ந்துள்ளனர்.

ருசக யோகம்

Advertisment

செவ்வாய் தனது உச்ச வீட்டில் அமர்ந்துள்ளார். தைரியமும், அதிக வ-மையும் உடையவர்.

ஹம்ச யோகம்

குரு உச்ச வீட்டில் அமர்ந்திருப்பது ஹம்சம் என்பது அன்னம் ஆகும். இவருடைய கைகளில், கால்களில் சங்கு, தாமரை, மீன், அங்குசம் போன்ற ரேகைகள் உண்டு.

மாளவ்ய யோகம்

மால் என்பது சுக்கிரனை குறிப்பது. சுக்கிரன் உச்சமடைவது மாளவ்ய யோகம் ஆகும். செல்வ செழிப்பு உடையவர்.

சச யோகம்

சனி தனது உச்ச ராசியில் இருப்பது சச யோகம் ஆகும். தலைமைப் பண்பு உடையவர்.

சுப வாஷி யோகம்

Advertisment

சூரியனுக்கு 12-ல் சுபகிரகம் அமைவது. இது புகழ், செல்வம், சுதந்திரம் இவை தரும். ஸ்ரீராமரது ஜாதகத்தில் சூரியனுக்கு 12-ல் சுக்கிரன் அமர்ந்துள்ளார்.

கஜகேசரி யோகம்

குருவுக்கு கேந்திரத்தில் சந்திரன் அமைவது. ஸ்ரீராமரது ஜாதகத்தில் லக்னத் தில், குருவும், சந்திரனும் சேர்க்கை. இவர் சிங்கம்போல, தன் எதிரிகளை அழிப்பார்.

அமலா யோகம்

லக்னம் அல்லது சந்திரனுக்கு 10-ல் சுபர் அமைவது. இது நேர்மையான குணத்தை தரும். ஸ்ரீராமரது ஜாதகத்தில், லக்னம், சந்திரன் இரண்டுக்கும் 10-ல் சூரியனும், புதனும் அமர்ந்துள்ளனர்.

ஸ்ரீ லட்சுமி யோகம்

Advertisment

9-ஆம் அதிபதியும், சுக்கிரனும் உச்சம். அல்லது ஆட்சி வீடுகளில் அமையவேண்டும். ஸ்ரீராமரது ஜாதகத்தில், சுக்கிரன் மற்றும் 9-ஆம் அதிபதி குரு உச்சம். இவர்கள் செல்வத்தின் அதிபதியான ஸ்ரீலட்சுமியின் அருள்பெற்றவர்கள். யானை, குதிரை, பல்லக்கு போன்ற வாகனம் உடையவர்கள்.

ramar

கௌரி யோகம்

9-ஆம் அதிபதியும், சந்திரனும் ஆட்சி அல்லது உச்ச வீடுகளில் அமர்வது. ஸ்ரீராமரது ஜாதகத்தில் 9-ஆம் அதிபதி குரு உச்சம். சந்திரன் ஆட்சி. இந்த யோகம் அரசர் ஆகும் யோகம் தரும்.

சரஸ்வதி யோகம்

சுக்கிரன், குரு, புதன் இவர்கள் கேந்திரம், கோணம் அமர, குரு ஆட்சி, உச்ச வீட்டில் அமர்வது சரஸ்வதி யோகம். ஸ்ரீராமர் ஜாதகத்தில் சுக்கிரன் உச்சமாகி, கோணத்திலும், புதன் கேந்திரத்திலும், குரு உச்சமும் அடைந்து உள்ளார். மிகுந்த புத்திசாலி. கணிதம் போன்றவற்றில் உலக புகழடைவது.

ஸ்ரீகண்ட யோகம்

லக்னாதிபதி, சூரியன், சந்திரன் கேந்திரம், கோணம் ஏறுவது, ஸ்ரீராமரது ஜாதகத் தில், லக்னாதிபதி சந்திரன், சூரியன் கேந்திரம் பெறுகிறார். சாதுக்களை உபசரிப்பவர்.

ஸ்ரீநாத யோகம்

சுக்கிரன், புதன் மற்றும் 9-ஆம் அதிபதிகள் கேந்திரம். கோணம், ஆட்சி, உச்சம்பெறுவது. ஸ்ரீராமர் ஜாதகத்தில் புதன் கேந்திரமும், சுக்கிரன் திரிகோணத்திலும், 9-ஆம் அதிபதி குரு உச்சமும் ஏறி நின்றனர். செல்வம் மிக உடையவர். இவரது கைகளில் சங்கு, சக்கரம் ரேகைகள் காணப்படும்.

விரிஞ்சி யோகம்

குரு, சனி இவர்கள் கேந்திரம், கோணம் பெற்று, ஆட்சி, உச்சம்பெறுவது. ஸ்ரீராமரது ஜாதகத்தில் சனி, குரு கேந்திரத்தில் உச்சம். வேத ஞான அறிவுடையவர்.

ஆக, ஸ்ரீராமரது ஜாதகத்தில், மேற்கண்ட பல யோகங்கள் பொதிந்துள்ளது.

எனவே பிறந்தது அரச குலம். அரசராகவே வாழ்ந்தார்.

ஸ்ரீராமரது ஜாதகத்தில் குறிப்பிடத்தகுந்த விஷயங்கள் எப்போதும், ஒரு ஜாதகத்தில், உச்சம்பெற்ற கிரகங்கள் இருப்பது மிக மேன்மை. "ஆனாலும் ஒரு உச்ச கிரகத்தை, இன்னொரு உச்ச கிரகம் பார்க்கக்கூடாது. எனில் உச்சனை உச்சன் பார்க்க பிச்சை எடுப்பான்' என்றொரு விதி, அங்கு வந்துவிடும். நீசமடைந்துவிடும்.

இப்போது ஸ்ரீராமரது ஜாதகத்தை எடுத்துக் கொள்வோம்.

1. உச்ச குருவை, உச்ச சனி பார்க்கிறார். அதனால், குரு நீசமடைவார் எனில் குரு நீசமானால், அதனை உச்ச செவ்வாய் பார்க்கிறார். அப்போது குரு நீச பங்கமடைந்துவிட்டார் என எடுத்துக் கொள்ளலாமா?

2. உச்ச சனியும், உச்ச சூரியனும் ஒருவரை யொருவர் பார்க்கிறார்கள் எனில் இருவரும் நீசமாகிவிட்டார்கள் எனில் இருவரும் நீசமாகி விட்டார்கள் எனும் நிலை வந்துவிடும். இதில் நீசமடைந்த சூரியனை, உச்ச செவ்வாய், தனது நாலாம் பார்வையால் பார்ப்பதால், சூரியன் நீச பங்கமாகிவிட்டார் எனலாமா?

3. உச்ச சூரியன், பார்வையிலுள்ள உச்ச சனி நீசமடைவார் எனில் இடம் கொடுத்த சுக்கிரனின் உச்சத்தன்மை சனியின் நீசத்தன்மையை போக்கிவிடாதா?

4. உச்ச குரு பார்வைப்பெற்ற, உச்ச செவ்வாய் நீசம் சரிதானே. இப்போது, இடம் கொடுத்த, சனி உச்சமடைவதால், செவ்வாயின் நீசம் அகன்றுவிடும் வாய்ப்பு உண்டுதானே.

5. ஆக கடைசியில், உச்ச சுக்கிரனை உச்ச குரு பார்ப்பதால், சுக்கிரன் நீசமாகிவிட்டார். இப்போது சுக்கிரனின் நீசம் மட்டும் விடு படும், அகலும் வழி தென்படவில்லை. ஒரு வேளை, சுக்கிரனின் வீட்டில், உச்சமான சனி யால், நீசம் அகலும் என்றாலும், சனியே ரொம்ப கஷ்டப்பட்டு நீசபங்கம் ஆகியுள்ளார்.

ஆகக் கடைசியில், ஸ்ரீராமரது ஜாதகத் தில், சுக்கிரன் நீசம் மட்டும் தெரிகிறது. சுக்கிரன், அவரது ஜாதகத்தில் 4, 11-ஆம் அதிபதி. அரசன் ஆனாலும் ஆண்டி மாதிரி வீடு வாசலின்றி காட்டில் வசித்தார். எல்லா வற்றிற்கும் மேல், சுக்கிரன் மனைவியை குறிப்பார். மனைவியானால் பெரும் இன்னலுக்கு ஆளானார்.

ஆக, ஒரு தெய்வமே, ஸ்ரீமந் நாராயணனே மனிதனாக பூமியில் பிறந்தாலும், அவர் ஜாதகம் அனேக யோகங்களை கொண்டு இருப்பினும், அல்லல்பட வேண்டும் என்பது தெய்வம் வகுத்த நியதி. இதில் தெய்வ அவதாரமும் தப்பிக்க இயலாது அல்லவா! ஸ்ரீராமனை சரணடைய வேண்டியது ஒன்றே வழி.

செல்: 94449 61845